My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Tuesday, October 13, 2015

TNPSC Group 2A - 2015 (TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியில் 1862 காலியிடங்கள்)


Print Friendly and PDF


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர், பெர்சனல் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 1862 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான குரூப் 2 ஏ தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் உள்ளதுபோல் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என்ற மூன்று கட்டத் தேர்வு முறை இதற்கு கிடையாது. ஒரே ஒரு எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, இளநிலை பட்டப் படிப்பை படித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்.விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். இந்தப் பணிகளில் 20 சதவீதப் பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நிதித்துறையில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் லோயர், ஹையர் என இரு நிலைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சட்டம் மற்றும் நிதித்துறை அல்லாத பிற துறைகள், டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சட்டப்பேரவை போன்றவற்றில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் லோயர், ஹையர் என இரு நிலைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வருவாய்த்துறை ஆணையாளர் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஓஎல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ, சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஎம் படித்தவர்களும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.லிட். படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, தொழிலாளர் துறை, நெடுஞ்சாலைத் துறை, வரலாற்று ஆவணத்துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 
அனைத்துப்பணிகளுக்கும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.பொதுப்பிரிவினர் அல்லாத பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பின், அவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. வேறு அரசு நிறுவனங்களில் பணி அமர்த்தப்படாத நிலையில் டான்சி நிறுவனத்தில் ஆட்குறைப்பை எதிர்கொள்ளும் ஊழியர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு எப்படி இருக்கும்?

இதற்கான எழுத்துத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு ஜெனரல் ஸ்டடீஸ் ஆகும். இதில் பட்டப்படிப்புத் தரத்தில், ஜெனரல் ஸ்டடிஸ் பிரிவில் 75 கேள்விகள், எஸ்எஸ்எல்சி தரத்தில் மென்டல் எபிலிட்டி பிரிவில் 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

ஜெனரல் ஸ்டடிஸில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். டேட்டா கலெக்ஷன், டேட்டா டேபிள்ஸ், கிராப்ஸ், அனலிட்டிக்கல் இட்னர்பிரட்டேஷன் டேட்டா, சிம்ப்ளிபிக்கேஷன், சதவீதம், நேரம், தூரம், ரீச னிங், வரைபடம் உள்பட பல்வேறு மென்டல் எபிலிட்டி பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாவது பிரிவு எஸ்எஸ்எல்சி தரத்தில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகும். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும்.தமிழ்ப் பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள், அவர்களின் தமிழ்த் தொண்டு ஆகிய பாடப்பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள்.நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. கேள்விகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிழற்படம், கையெழுத்து ஆகியவற்றை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டும். இ மெயில் முகவரி, தொடர்பு கொள்ள மொபைல் எண்ணும் அவசியம். இப்பணிகளுக்கான விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் 125 (அதாவது தேர்வுக் கட்டணம் ரூ.75, விண்ணப்பக் கட்டணம் ரூ.50). ஒரு முறை பதிவு முறையில் ஏற்கனவே, ரூ. 50 செலுத்தி, விண்ணப்பித்து பதிவு எண் பெற்றவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். ஆப்லைன் முறையில் என்றால் இந்தியன் வங்கி அல்லது ஏதேனும் ஒரு தலைமை தபால் நிலையம் மூலமாக கட்டணம் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தப் பிறகு, அந்த ஃபைலை ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிரிண்ட் அவுட்டையோ, அதன் நகல்களையோ எதையும் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வு நடைபெற இருப்பதற்கு, ஒருவாரம் முன்னதாக இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தகுதிகள் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்தும் முறை குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2015, இரவு 11.59 வரை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015

விவரங்களுக்கு: www.tnpscexams.net, www.tnpsc.gov.in

தொலைபேசி:

044 2530 0300

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....