My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Tuesday, November 4, 2014

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் -2014

Print Friendly and PDF




நடப்பு நிகழ்வுகள் (1 அக்டோபர் 2014)
  1. இந்தியா மற்றும்  அமெரிக்கா செவ்வாயில் எதிர்காலத்தில் மேற்க்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு ஒத்துழைக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இது தொடர்பாக உடன்பாடிக்கையில் டொராண்டோவில் நாசாவின் நிர்வாகி சார்லஸ் போல்டன் மற்றும் இஸ்ரோ தலைவர் கே ராதாகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
  2. இந்தியாவின் 100 ஸ்மார்ட் நகர திட்டத்தை உக்குவிக்கும் விதமாக அமெரிக்க அரசு இந்தியாவில் மூன்று நகரங்களை  ஸ்மார்ட்  நகரமாக்க உதவி செய்ய முன்வந்துள்ளது. இதில் அலகாபாத்அஜ்மீர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய மூன்று நகரங்கள் ஆகும்.
  3. ராஜீவ் அவர்களை புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக தற்காலிகமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் புதிய தலைமை ஆணையர் பதவி ஏற்கும் வரை இந்த பதவியில் இருப்பார்.
  4. ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் தங்க பதக்கம் வென்றது முதல் இந்திய பெண் எம் சி மேரி கோம் ஆவர்.
  5. கூகிள் தனது சமூக வலைத்தளமான “ஆர்குட்” யை 30 செப்டம்பர் 2014 அன்று நிரந்தரமாக முடியாது.
  6. ஆப்கானிஸ்தான் நாட்டில் சில அமெரிக்க படைகள் வரும் 2015 வரை இருக்க அனுமதிக்கும் நோக்கத்துடன் அமெரிக்க நாட்டுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில்  கையெழுத்திட்டுள்ளது.
  7. அகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கு ரூ 65,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் டி.வி. சதானந்த் கவுடா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் பொது மற்றும் தனியார் பங்குதாரர் பங்களிப்புடன் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள தடங்களை ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் இயக்கும் வகையில் பலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  8. மகாத்மா காந்தி அவர்களின் புத்தகம் “My Experiments with Truth “ தற்போது காஷ்மீரி மற்றும் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  9. ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டின்டு லேகா அவர்கள் வெள்ளி பதக்கம் வென்றார்.
  10. ஆசிய விளையாட்டுகுத்துச்சண்டை போட்டியில் நடுவர்கள் தனக்கு அநீதி இழைத்தாக எண்ணிய சரிதா தேவி,வெண்கலப்பதக்கத்தை திருப்பி கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
  11. ஷின்கான்சென் எனஜப்பான் மொழியில் அழைக்கப்படும் ஜப்பானின் அதிவேகபுல்லட் ரயில் சேவை துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. இது கடந்த 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் (2 & 3 அக்டோபர் 2014)
  1. இந்தியாவில் முதல் முதலாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆலிவ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அக்டோபர் 2014 அன்று தொடங்கப்பட்டது. “ராஜ் ஆலிவ் ஆயில்” என்ற பிராண்ட் பெயரில் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆலிவ் ஆயில் விற்ப்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. ஆஸ்திரேலிய ஜெட் போர் விமானங்கள்ஈராகில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் சேர்ந்துள்ளது.
  3. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 57 பதக்கங்களுடன் எட்டாவது இடத்தை பிடித்தது.
  4. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி ஏழாவது முறையாக தங்கம் வென்றது மற்றும் பெண்கள் கபடி அணியும் தங்கப்பதக்கம் வென்றது.
  5. பெண்கள் 4 x 400 ரிலே போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரியங்கா பவார், மந்தீப் கவுர், டின்டு லேகா, பூவம்மா ராஜூ ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.


நடப்பு நிகழ்வுகள் (4 அக்டோபர் 2014)
  1. 10,000 கி.மீ தொலைவு உள்ள இலக்கை தாக்கவல்ல ஆணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்க கூடிய மேம்படுத்தப்பட்ட DF-31 என்ற ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்தது.
  2. “மான் கி பாத்” என்ற அகில இந்திய வானொலி நிகழ்ச்சி முலம் மக்களிடம் அக்டோபர் 32014 அன்று உரையாற்றினார்.
  3. ஐஎஸ்ஐஎஸ் திவிரவாதிகள் பிரிட்டன் நாட்டை சேர்ந்த “ஆலன் ஹெனிங்” அவர்களின் தலையை துண்டிக்கப்படும் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.
  4. பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் அக்டோபர் 3 ம் தேதி நடந்த ராம் லீலா விழாவில் கூட்ட நெரிசலில் 32 பேர் உயிர் இறந்தனர்.


நடப்பு நிகழ்வுகள் (5 & 6 அக்டோபர் 2014)
  1. இந்த ஆண்டிற்கானமருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆண்டு தோறும் இயற்பியல்வேதியியல்மருத்துவம் உட்படபல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்குநோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில்மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டபிரிட்டன் - அமெரிக்கரானஜான் ஓ கீப்நார்வே தம்பதியரானஎட்வர்டு மோஸர் மற்றும் மேபிரிட் மோஸர் ஆகிய மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  2. நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட இந்தியாவின் செவ்வாய் மிஷன் மீதான இனவாதத் கார்ட்டூனுக்கு அந்த பத்திரிக்கை மன்னிப்பு தெரிவித்துள்ளது.
  3. இந்தியாசீனாஜப்பான்அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் துவங்கியிருக்கின்றன. தொலைதூர பால்வெளிமண்டலத்தைக்கூட துல்லியமாக காட்டவல்ல புதிய தொலைநோக்கி இது ஆகும்.
  4. சீன ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஷரபோவா-கிவிடோவா ஆகியோர் நேருக்கு நேர் மோதினர். இதில் ரஷியாவின் ஷரபோவா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவி இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்-தாமஸ் பெர்டிஸ் ஆகியோர் நேருக்கு மோதினர். இதில் ஜோகோவிச் 6-06-2 என்ற நேர் செட்டில் தாமஸ் பெர்டிச்சை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.


நடப்பு நிகழ்வுகள் (7 அக்டோபர் 2014)
  1. உலகளவில் வேலை செய்ய மிகவும் விரும்பத்தக்க இடங்களுக்காண பட்டியலில் இந்தியா 18 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க முதல் இடத்தில் உள்ளது மற்றும் பிரிட்டன்கனடாஜெர்மனி மற்றும் சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகள் அதற்க்கு அடுத்த அடுத்த இடத்தை பிடித்துள்ளன.
  2. இந்திய பொருளாதாரம் வரும் 2015-16 நிதியாண்டில் 6.4% வளர்ச்சி பெரும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
  3. 18 முறை ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ் அவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதன் காரணமாக வரும்  2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்த நிக்கப்பட்டுள்ளார் மற்றும் அமெரிக்கா நீச்சல் துறை ஆறு மாதங்களுக்கு தடை விதித்துள்ளது.
  4. சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனத்தின் ஆலை வரும் நவம்பர் 1 முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (8 அக்டோபர் 2014)
  1. இந்த வருடத்தின் இயற்பியலுக்கான நோபெல் பரிசு 1990களின் ஆரம்பத்தில் நீல நிற எல் ஈ டி (Light Emitting Diode) விளக்கை கண்டுபிடித்ததற்காக ஜப்பானிய விஞ்ஞானிகளான பேராசியர்கள் இசாமு அகாசகி ஹிரோஷி அமானோஅமெரிக்க விஞ்ஞானியான ஷூஜி நக்கமுரா ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. அமெரிக்காவை சேர்ந்த எரிக் பெட்சிக் மற்றும் வில்லியம் மொயர்னர்ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெபான் ஹெல் ஆகியோர் வேதியியல் பிரிவில் 2014 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். இவர்கள் ஆப்டிக்கல் மைக்ரோஸ்கோப்பை புளுரோசென்ட் மூலக்கூறுகள் மூலம் நானோ பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சாதனைக்காகவே இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. இந்தியா நடப்பு நிதியாண்டில் 5.6% வளர்ச்சி பெரும் என்றும் மற்றும் வரும் 2015 ஆம் ஆண்டில் 6.4% வளர்ச்சி பெரும் என்று சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.
  4. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதல் இந்து மத மதகுருவாக பார்த்திமா  தாரம் அவர்களை நியமித்துள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (9 அக்டோபர் 2014)
  1. 2014 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ வென்றுள்ளார். நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் தனது நாட்டின் அதன் விளைவு பற்றி தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்ததற்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  2. மத்திய நிதி அமைச்சகம்மேற்கு வங்காளம் மாநிலத்தில் வேளாண்மை விளைபொருட்களுக்கு கிடங்கு கட்டமைப்பை உருவாக்க நபார்டு வங்கிக்கு 520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
  3. ரயில்வே துறையின் வருவாய் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுக்கது.
  4. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் புது தில்லிக்கு வந்துள்ளார்.
  5. இந்தியாவில் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 600 மில்லியன் பிராட்பேண்ட் பயனாளர்கள் இருப்பார்கள் என்று எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  6. மூத்த பத்திரிகையாளரும்பிரசார் பாரதி அமைப்பின் முன்னாள் தலைவருமான எம்.வி.காமத் காலமானார். அவருக்கு வயது 94. உடல்நலக் குறைவு காரணமாக எம்.வி.காமத் 9 அக்டோபர் 2014 அன்று அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் மணிபாலில் பிரிந்தது. நரேந்த்ர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த, “Narendra Modi — The Architect of a Modern State” என்ற புத்தகத்தை 2009-ல் எழுதியுள்ளார்.
  7. எபோலா எதிர்கொள்ள நிதி வழங்கிய நாடுகளில் இந்திய முதல் ஐந்து இடத்தில் உள்ளது என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  8. பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோள் வரும் 16-ஆம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்த ஏவப்பட உள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (10 அக்டோபர் 2014)
  1. 2014-ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசினை பாகிஸ்தானிய சிறார் கல்விச் செயற்பாட்டாளர் மலாலா யூஸஃப்சாய் மற்றும் இந்திய சிறார் உரிமைச் செயற்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் வென்றுள்ளனர். 17 வயதான மலாலா தான் மிகவும் சிறிய வயதில் இந்த விருதினை வென்றவராவார்.
  2. இந்தியாவின் மன நல ஆரோக்கியத்துக்கான முதல் தேசிய கொள்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  3. கிராமங்களில் குறைந்த செலவில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்தமைக்காக இந்திய இளைஞர் அனூப் ஜெயினுக்கு`குளோபல் சிட்டிசன்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 60 லட்சம்) ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது. இவர் 2011ம் ஆண்டு பிஹாரில் `ஹியூமேன்யூர் பவர்எனும் அமைப்பைத் தொடங்கி,அதன் மூலம் இந்தியக் கிராமங்களில் சுகாதாரமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தரத் தொடங்கினார்.
  4. சங்கீத நாடக அகாதெமி தலைவர் பதவியில் இருந்து லீலா சாம்சன் ராஜிநாமா செய்துள்ளார். இத்தகவலை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் தெரிவித்தார்.
  5. அமைதி காக்கும் நடவடிக்கைக்காக 110 மில்லியன் டாலர் ஐ.நா. இந்தியாவிற்கு தந்துள்ளது.
  6. குஜராத் அரசாங்கம் கலாச்சார தலைநகராக “வதோதராவை” ஊக்குவிக்க ஒரு சிறப்பு திட்டத்தை வகுத்துள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (11 அக்டோபர் 2014)
  1. உலக பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் 11 அக்டோபர் 2014 அன்று அனுசரிக்கப்பட்டது.
  2. கிராமங்களை வளர்ச்சி அடையச் செய்வதற்காக சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா’ என்னும் மாதிரி கிராமங்களை எம்.பி.க்கள் உருவாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  3. தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதம் 0.4% சரிவு ஏற்ப்பட்டுள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (12 & 13 அக்டோபர் 2014)
  1. இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையின் ஆற்றல்அதனை முறைப்படுத்துவது குறித்த மிகச் சிறந்த ஆய்வுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  2. சில்லரை விலை பணவீக்கம் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 6.46% ஆக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. காசா பகுதியை மறுகட்டமைக்கும் பணிக்காக இந்தியா 4 மில்லியன் டாலர் உதவி வழங்குவதாக வாக்களித்துள்ளது.
  4. வரும் ஜனவரி 2015 ல் தில்லியில் முதல் ஆசிய வில்வித்தை கோப்பை போட்டி நடத்தப்படும் என்று இந்திய வில்வித்தை சங்கம் (AAI) தெரிவித்துள்ளது.
  5. பங்குச்சந்தை விதிமுறைகளை மீறியற்காக நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப்மற்றும் அந்நிறுவன தலைவர் கே.பி.சிங் 3 ஆண்டுகளுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) தடை விதித்துள்ளது. பங்கு வெளியீடு மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்புபங்கு பரிவர்த்தனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவேஇந்த தடை விதிக்கப்படுவதாக செபி தெரிவித்துள்ளது.
  6. ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது மற்றும் இந்தியா 3 வது இடத்திற்கு சரிந்தது.
  7. சக்தி வாய்ந்த வொங்ஃபாங் (Vongfong) என்னும் புயல்  ஜப்பான் நாட்டை தாக்கியது. இந்த புயல் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் விசியது. இதில் 30 நபர்கள் காயம் அடைந்தனர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் விசிய மிகவும் சக்தி வாய்ந்த புயல் இது ஆகும்.
  8. ஹுத்ஹுத் என்ற சக்தி வாய்ந்த புயல் இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான விசாகப்பட்டிணத்தை தாக்கியது. 180 கிமீ வேகத்தில் காற்று விசியது மற்றும் ஆந்திரம்ஒரிஸ்ஸா கரையோரப் பகுதிகளில் வாழும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் உறைவிடமும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
  9. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில்,பிரான்சின் கில்ஸ் சைமனை தோற்கடித்தார். இரட்டையர் பிரிவில்அமெரிக்காவின் பாப்மைக் பிரையான் ஜோடி 6376 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஜூலியன் பென்னடியுரோஜர்வாசலின் ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது.


நடப்பு நிகழ்வுகள் (14 அக்டோபர் 2014)
  1. 11 அக்டோபர் 2014 அன்று ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி பதவி நீக்கப்பட்டார்.
  2. 13 அக்டோபர் 2014 அன்று பிரபல கவிஞர் சமீர் அவர்களுக்கு 2012-13 ஆம் ஆண்டிற்க்கான தேசிய கிஷோர் குமார் விருது வழங்கப்பட்டது
  3. அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் எம்.பி.யான கபில் கிருஷ்ணா தாகூர் அவர்கள் நுரையீரல் பாதிப்பு காரணமாக தனது 73 வயதில் கொல்கத்தாவில் 2014 அக்டோபர் 13 ம் தேதி அன்று இறந்தார்.
  4. 12 அக்டோபர் 2014 அன்று பிரிட்டிஷ் ஃபார்முலா ஒன் (F1) வீரர் லூயிஸ் ஹாமில்டன் ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் போட்டியை வென்றார்.
  5. நெதர்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் சாம்பி்யன் பட்டத்தை கைப்பற்றினார். நேற்று நடந்த பைனலில்இந்தோனேஷியாவின் முஸ்தோபாவை தோற்கடித்தார்.
  6. ஏமன் நாட்டின் புதிய பிரதமராக ஐ.நா. தூதர் காலீத் பகாக்கை அந்நாட்டு அதிபர் நியமித்துள்ளார்.
  7. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. பாலஸ்தீனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் "தனி நாடு தீர்வைவலியுறுத்திஇந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  8. கடல் மட்டம் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக அதிகரித்து வருகின்றது என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
  9. நுகர்வோர் விலை குறியீட்டின் பணவீக்கம் செப்டம்பர் 2014 இல் 6.46 சதவீதமாக குறைந்துள்ளது மற்றும் இது கடந்த ஆகஸ்ட் மாதம் 7.3 சதவிகிதமாக இருந்தது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (15 அக்டோபர் 2014)
  1. ஆஸ்திரேலிய எழுத்தாளர் “ரிச்சர்ட் ஃபிளானகன்” அவர்கள் 2014 ஆம் ஆண்டிற்க்கான மேன் புக்கர் விருதை வென்றார்.
  2. 14 அக்டோபர் 2014 அன்று கவுதம் ராய் அவர்கள் சென்னை “பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்“ நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக (MDநியமிக்கப்பட்டுள்ளார்.
  3. 15 அக்டோபர் 2014 அன்று உலகளாவிய கை கழுவுதல் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  4. 14 அக்டோபர் 2014 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் விலங்குகள் மீதி சோதனை செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
  5. பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் வரும் 20 – 26 பிப்ரவரி 2015 இல் இந்தியாவில் நடைபெறும் என்று சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் 13 அக்டோபர் 2014 அன்று தெரிவித்தார்.
  6. Standing Conference of Public Enterprises டைரக்டர் ஜெனரல் “Dr UD Choubey “ அவர்கள் எழுதிய “Untold Story of the Indian Public Sector” என்ற புத்தகத்தை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி அவர்கள் 14 அக்டோபர் 2014 அன்று வெளியிட்டார்.
  7. திலிப் டிசோசா எழுதிய “Final Test: Exit Sachin Tendulkar” என்ற புத்தகம் 15 அக்டோபர் 2014 அன்று வெளியிடப்பட்டது.
  8. 12 அக்டோபர் 2014 அன்று மத்திய நிதி அமைச்சர் பணக்கொள்கை கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
  9. இமயமலையின் காரகோரம் பகுதியில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் படி அங்கு உள்ள பனிக்கட்டிகள் உருகாமல் அதற்க்கு பதிலாக விரிவடைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர் மற்றும் அந்த பகுதியில் பனிபொழிவு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
  10. கோடக் மகேந்திரா வங்கி பேஸ்புக் சார்ந்த “KayPay” என்ற பணப்பரிமாற்றம் முறையை அறிமுகம் செய்துள்ளது.
  11. மத்திய நிதி அமைச்சகம் 1546 கோடி ரூபாய் மதிப்பிலான 25 அன்னிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (16 அக்டோபர் 2014)
  1. இண்டிகோ விமான சேவை நிறுவனம் Airbus Group” நிறுவனத்திடம் இருந்து 250 A320neo விமானங்களை வாங்க ஒருபுரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  2. மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியது ஐதராபாத் காவல்துறை. சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர். சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவன் 'Terminally-ill' நோயாளி ஆவார்.
  3. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1சி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.விசி26 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  4. இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் (இஸ்ரோ) இந்த வருடத்திய மிக பெரிய திட்டத்தில் ஒன்றான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தும் திட்டம் இன்னும் 45 நாட்களில் நடைபெறும் என இஸ்ரோவின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.
  5. இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதி  செப்டம்பர் 2014 இல் 2.73 சதவீதம் அதிகரித்துள்ளது 28.90 பில்லியன் அமெரிக்க டாலருக்கு என்ற அளவிற்கு உள்ளது என்று வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  6. தெலுங்கு எழுத்தாளர் துர்கா ஜானகி ராணி அவர்கள் ஹைதராபாத்தில் தனது 80 வயதில் இறந்தார்.


நடப்பு நிகழ்வுகள் (17 அக்டோபர் 2014)
  1. இந்திய-அமெரிக்கரான பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மூன்று ஆண்டு காலத்துக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. உலக உணவு தினம் அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  3. "தீனதயாள் உபாத்யாய ஷிரமேவ ஜெயதே' (உழைப்பே வெல்லும்) என்ற செயல்திட்டத்தின் கீழ்பல்வேறு துணைத் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்தார். தொழிலாளர் வைப்பு நிதியை எளிதில் மாற்றிக் கொள்ள ஏதுவாக நிரந்தரக் கணக்கு எண்தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்துடன் தொடர்புகொள்ள ஒற்றைச் சாளர இணையதள வசதிதொழிலக ஆய்வுத் திட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
  4. இந்தியாவில் பிறந்த விஞ்ஞானி “சஞ்சய ராஜாராம்” அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான உலக உணவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  5. இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நார்வே நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
  6. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரண்டு ஆண்டுகளுக்கு அங்கோலாமலேஷியாநியூசிலாந்து,ஸ்பெயின் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் 16 அக்டோபர் 2014 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  7. 17 அக்டோபர் 2014 அன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  8. உருளைக்கிழங்கு விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முதல் முறையாக உருளைக்கிழங்குகளை இருக்குமதி செய்துள்ளது.
  9. மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக பணியாற்றி வந்த அரவிந்த் மாயாரம் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ராஜீவ் மெரிஷ் அவர்கள் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  10. சிங்கப்பூரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிஞர் கே.டி.எம்.இக்பால் (வயது 74). இவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கலாசார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூர் வானொலி நிலையத்திற்காக கடந்த 1970 முதல் 1980 வரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடல்களை எழுதி உள்ளார்.


நடப்பு நிகழ்வுகள் (18 அக்டோபர் 2014)
  1. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 'நிர்பய் ஏவுகணை'யை இந்தியா இன்று வெற்றிகரமாக ஒடிஸாவின் பாலாசோரில் இருந்து 17 அக்டோபர் 2014 அன்று பரிசோதனை செய்தது. நிலம்போர் விமானம்கப்பல்,நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றில் இருந்து தாக்கக்கூடிய வகையில் நிர்பய் ஏவுகணை உருவாக்கப்படுகின்றது.
  2. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் ரகுராம் ராஜன் அவர்களுக்கு 10 அக்டோபர் 2014 அன்று வாஷிங்டனில் 2014 ஆம் ஆண்டிற்க்கான யூரோமனியின் மத்திய வங்கியின் ஆளுநர் விருது (Euromoney’s Central Bank Governor of the Year Award 2014) வழங்கப்பட்டது.
  3. நைஜீரியா நாடு மற்றும் போக்கோ ஹரம் திவிரவாத அமைப்புடன் பெண்கள் விடுதலை செய்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது.
  4. 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் யுரேனஸ் கிரகத்தை ஒத்த புதிய கிரகம்  ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
  5. ஸ்டார் இந்தியா மற்றும் ஸ்டார் மத்திய கிழக்கு ஆகிய நிறுவனத்துக்கு ஐசிசி 2015-2023  வரை ஒளிபரப்பு உரிமைகளை வழங்கியுள்ளது
  6. கர்நாடகாவிலுள்ள12 நகரங்களின் பெயரை மாற்றுவதற்காகமாநில அரசு விடுத்த கோரிக்கைக்குமத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு உத்தரவின்படிபெங்களூர் -- பெங்களூருமங்களூர் - -மங்களூருபெல்லாரி - -பல்லாரி,பிஜாப்பூர் -- விஜயபுராபெல்காம்- - பெலகாவிகுல்பர்கா- - கலபுர்கிமைசூர்-- மைசூருஹாஸ்பெட் - -ஒசபேட்டை,ஷிமோகா-- சிவமுகாஹூப்ளி- - ஹூப்பளிதும்கூர் - -தும்கூருசிக்மகளூர்- - சிக்மகளூரு எனபெயர் மாற்றம் அடைந்துள்ளன.


நடப்பு நிகழ்வுகள் (19 அக்டோபர் 2014)
  1. பாரதிய ஜனதா கட்சி (BJP) 19 அக்டோபர் 2014 அன்று அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் ஹரியாண மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தனி பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ளது.
  2. ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் “அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன்” (AIMIM) கட்சி மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட முதல் முறையில் இரண்டு இடங்களை கைப்பற்றி உள்ளது.
  3. ஐ.நா. பெண்கள் 18 அக்டோபர் 2014 அன்று இந்தியாவில் பாலின சமத்துவம் தொடர்புடைய “HeForShe” என்ற அதன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  4. உலக எலும்புருக்கி நோய் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  5. மகாராஷ்டிரா லோக்சபா இடைத்தேர்தலில்மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் புதிய சாதனையை படைத்துள்ளார்.  6 லட்சத்து 96 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரீதம் முண்டே புதிய சாதனை படைத்துள்ளார்.
  6. நைஜீரியா நாட்டில் கடந்த 42 (ஆறு வாரங்கள்) நாட்களாக எபோலா  வைரஸ் தாக்கம் இல்லாத காரணத்தால், உலக சுகாதார அமைப்பு (WHO) நைஜீரியா நாட்டை “எபோலா இல்லா நாடு” என்று அறிவித்துள்ளது.
  7. ஜோக்கோ விடோடோ ஜவான் குடிசைப் பகுதியில் பிறந்த சாதாரண மனிதர் இந்தோனேஷியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
  8. போலீஸ் துறையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலத்தையும் கேட்டுள்ளது.
  9. இந்தியாவின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தி 'ஹூட்ஹூட்புயல் மற்றும் சில மாநிலங்களில் மழை குறைவு காரணமாக காரீப் பருவம் பாதிப்பு ஆகியவையின் காரணமாக 100 மில்லியன் டன் என்ற அளவிற்கு குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  10. இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர உற்பத்தி நிறுவனமான “ஹீரோ மோட்டோகார்ப்” ரூ 5000 கோடி முதலீட்டில் புதியதாக தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளது, இதில் கொலம்பியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாட்டிலும் அமைக்க முடிவு செய்துள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (20 அக்டோபர் 2014)
  1. இந்தியாவின் மிக உயர்ந்தஎவரெஸ்ட் மலைச் சிகரத்தில்கடல் மட்டத்தில் இருந்து18,200 (5554 மீ.,) அடி உயரத்தில் உள்ள, 'காலா பத்தர்சிகரத்தைஆறு வயது இந்திய சிறுவன் :”ஹர்ஷித் சவுமித்ரா” வெற்றிகரமாக சென்றடைந்துமுந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளான்.
  2. எகிப்டில் புதிய சூயஸ் கால்வாய் அமைக்க ஆறு சர்வதேச நிறுவனங்களுடன் எகிப்து அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
  3. மலேசியாவில் நடைபெற்ற 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. மலேசியாவின் ஜோகர் பாக்ரு நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணிபிரிட்டனை எதிர்த்து விளையாடியது. இந்திய அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
  4. அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் பகுதி 1 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  5. மத்திய அரசு “நேரடி மானியம் திட்டத்தை” (Direct Benefit Transfer (DBT) scheme) மீண்டும் செயல்படுட்ட முடுவு செய்துள்ளது.
  6. மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் “ஆரோக்கிய கிராம் யோஜனா கரிம வேளாண்மை திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் வணிகரீதியாக மற்றும் மருத்துவத்துக்கு பயன்படும் நறுமண மற்றும் மருத்துவ தாவரங்கள் பயிரிட ஜம்மு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
  7. இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான தொடரை 2-1 என்று வென்றது.


நடப்பு நிகழ்வுகள் (21 அக்டோபர் 2014)
  1. பார்சிலோனா கால்பந்து அணி வீரர் லூயிஸ் சுவாரஸ் அவர்களுக்கு அக்டோபர் 162014  அன்று ஐரோப்பிய கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது.
  2. உலக புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆஸ்கார் டி லா ரென்டா அவர்கள் 20 அக்டோபர் 2014 அன்று உயிர் இழந்தார்.
  3. இந்திய வீரர் விராத் கோஹ்லி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
  4. 17 அக்டோபர் 2014 அன்று இங்கிலாந்து அரசாங்கம் ஆண்டுகளில் இங்கிலாந்து-இந்தியா உறவை வலுப்படுத்த பணிபுரிந்த தனிநபர்களை பெருமை படுத்தும் விதமாக முதல் “தாதாபாய் நவரோஜி விருதுகளை” அறிவித்தது. இந்த விருதை இங்கிலாந்து இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர் பாட்ரிசியா ஹெவிட், கல்விக்காக இந்தியாவை சேர்ந்த கல்வியாளர் டேம் ஆஷா கெம்கா மற்றும் கலாச்சார துறைக்கு நடிகர் மாதவ் சர்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  5. உலகளாவிய “ஐயோடின் குறைபாடு அறிகுறிகள் தடுப்பு தினம்” அக்டோபர் 21 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  6. ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹரியானா சட்டமன்ற குழு தலைவராக மனோகர் லால் கட்டர் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் பாஜக தரப்பில் பதவி ஏற்கும் முதல் முதலமைச்சர் இவர் ஆவார்.
  7. இந்தியாவின் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  8. காதலியைக் கொன்ற வழக்கில்தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பாராலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது அந்நாட்டு நிதிமன்றம்.


நடப்பு நிகழ்வுகள் (22 அக்டோபர் 2014)
  1. நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் நடைபெற்ற தேர்தலில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு 2015 முதல் 2017 வரை மீண்டும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  2. இந்தியா மற்றும் நேபால் ஆகிய இரண்டு நாடுகளும் மின் வர்த்தக ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளனர்.
  3. 21 அக்டோபர் 2014 அன்று இந்திய-அமெரிக்கரான அனிதா எம் சிங் அவர்கள் அமெரிக்க நீதித்துறையின் தேசிய பாதுகாப்பு பிரிவின் (NSD) தலைமை அதிகரி மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. அமெரிக்க வாழ் இந்திய மாணவரான சகீல் தோஷிக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபிட்ஸ்பர்க் பகுதியில் குடியேறியிருக்கும் இவர் மின் பாதுகாப்பு சாதனத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்,
  5. ஆசிய விளையாட்டில் பதக்க்கததை ஏற்கமறுத்த குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி மற்றும் அவரது பயிற்சியாளர்கள்  குர்பகஷ் சிங் சாந்து ஆகியோரை ஏ.ஐ.பி.ஏ. தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
  6. இந்தியாவின் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் அவர்கள் தனது ராஜினாமாவை திரும்ப பெற்றுள்ளார்.


நடப்பு நிகழ்வுகள் (23 அக்டோபர் 2014)
  1. மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இரண்டு வயதான பெண் குழந்தைக்கு எபோலா வைரஸ் பதிப்பு ஏற்ப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம்  23 அக்டோபர் 2014 அன்று உறுதி செய்துள்ளது.
  2. கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் அமைந்துள்ள அந்நாட்டு பாராளுமன்றத்துக்குள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி துப்பாக்கியுடன் ஒருவர் நுழைந்தார். மேலும்அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியல் சுட்டார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார்அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்தனர். எனினும்இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.  தாக்குதல் நடத்திய அந்த நபரை போலீசார் சுட்டுவீழ்த்தினார்கள்.
  3. 22 அக்டோபர் 2014 அன்று கூகுள் “Inbox"  எனப்படும் தனது புதிய மின்னஞ்சல் சேவையை தொடங்கியுள்ளது. இந்த புதிய மின்னஞ்சல் சேவையில் மிகவும் பயனுள்ள தகவலாக விமான முன்பதிவு விபரங்கள், நினைவூட்டல்கள் மற்றும் தொகுப்பு விநியோகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
  4. மத்திய அரசு சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தெற்கு பகுதியான “Bailadilla Hills”  அமைந்துள்ள இந்தியா மிகப் பெரிய பொதுத்துறை இரும்பு தாது எடுக்கும் இடத்துக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
  5. ராணுவத்திற்கான போர் விமானம் சுகோய் -30 கடந்த 14-ம் தேதி புனேயில்பயிற்சியின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்திற்குள்ளானது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 5 விபத்துக்கள் நடந்துள்ளன.இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட சுகோய் -30 விமானங்கள் டில்லி ராணுவவிமான தளத்தில் நிறுத்திட உத்தரவிடப்பட்டுதீவிர பரிசோதனை நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையின் போது தொழில்நுட்பத்திறன் இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

நடப்பு நிகழ்வுகள் (24 அக்டோபர் 2014)
  1. Total” என்னும் பிரஞ்சு எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரான “Christophe de Margerie” அவர்கள் தனியார் விமானம் விபத்தில் காலமானார்.
  2. திரிபுரா மாநிலத்தில் உள்ள இந்தியா-வங்காளம் எல்லையான ஜீரோ லைன் பகுதியில் “BORDER HATT” என்னும் பொதுவான வியாபார சந்தை ஒன்று திறக்கப்பட்டது.
  3. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த “மலாலா யூசுப் சாய்க்கு” லிபர்டி விருது 2014 வழங்கப்பட்டது.
  4. Mayank Ashar” அவர்கள் “Cairn India” நிறுவனத்தின் நிவாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்,

நடப்பு நிகழ்வுகள் (25 அக்டோபர் 2014)
  1. 57 வயதான கூகிள் துணைத்தலைவர் ஆலன் எஸ்டேஸை அவர்கள் பாராசூட் உதவியுடன் 1,35,908 அடி உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை புரிந்து உள்ளார். இவர் 1,28,000 அடி குதித்த ஆஸ்திரிய ஃபெலிக்ஸ் அவர்களின் சாதனையை முறியடித்துள்ளனர்.
  2. சுதந்திர போராட்ட வீரர் ஜெகதீஷ் ஷரன் பாண்டே அவர்கள் 95 வயதில் உடல் நலக்குறைவு காரணமான உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோராவில் மரணம் அடைந்தார். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஆசாத் ஹிந்த் படையில் பணியாற்றியவர் ஆவர்.
  3. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர்ஜார்கண்ட் மாநிலங்களில் ஜனவரி மாதத்துடன் சட்டப்பேரவைக்கான காலம் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி விவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டுள்ளார்.
  4. ரூ.80,000 கோடி மதிப்பு கொண்ட பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.50,000 கோடி மதிப்புள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  5. வட கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 21 அனல் மின் நிலையங்களுக்கு கங்கை நதி வழியாக நிலக்கரி கொண்டு செல்லும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளன என்று இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
  6. ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது
  7. ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
  8. கவுஷல்லை ஸ்ரீவத்சவா அவர்கள் “Central Board of Excise and Custom” யின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  9. மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் அடுத்தாண்டு மத்தியில்மீன்கள் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.
  10. பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந் திரன் அவர்கள் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
  11. உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றுள்ளார். 29 வயது நிரம்பிய பங்கஜ் அத்வானி வென்றிருக்கும் 11ஆவது உலக சாம்பியன் பட்டம் இதுவாகும்.


நடப்பு நிகழ்வுகள் (26 அக்டோபர் 2014)
  1. ஹரியாணா மாநில முதல்வராக மனோகர் லால் கத்தார் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மாநில சட்டசபைத் தேர்தலில் 47 இடங்களைக் கைப்பற்றி பாஜக பெரும்பான்மை பலம் பெற்றதைத் தொடர்ந்துசட்டசபை பாஜக குழு தலைவராக மனோகர் லால் கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முதல்வராக அவர் நேற்று பதவியேற்றார்.
  2. எஃகு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்த ஆண்டில் முதல் ஒம்பது மாதத்தில் இந்தியா 62.41 மில்லியன் டன் உற்பத்தி செய்து உலகில் நான்காவது இடத்தில் உள்ளது, முதல் முன்று இடத்தில் சீனாஜப்பான் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது.
  3. பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள்மருத்துவமனைகளை சீரமைக்க ரூ 745 கோடி நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.
  4. பாரத ஸ்டேட் வங்கி “mPassBook” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள்State Bank Anywhere என்ற அப்ளிகேஷனை தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால் நடப்புக்கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு குறித்த விவரங்களை ஃபோனிலேயே பார்த்துக்கொள்ள முடியும்.
  5. உலக வங்கிக்கு போட்டியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian infrastructure bank)சீனாவின் ஆதரவில் துவங்கப்பட்டுள்ளது. இதில்சீனாஇந்தியா உட்பட 21 நாடுகள் இணைந்துள்ளன.
  6. எபோலா வைரஸ் பாதிப்பு அடைந்த மேற்கு ஆப்பிரிக்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1 பில்லியன் யூரோக்கள் வழங்கி அதன் உதவியை இரட்டிப்பாகியுள்ளது.
  7. ரியர் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் அவர்கள் தெற்குக் கடற்படையின் தளபதியாக பதவி ஏற்றார்.
  8. சிங்கப்பூரில் நடந்த உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
  9. ஹாக்கி இந்தியா லீக் தொடரில் விளையாடும் ராஞ்சி ரேஸ்’  அணியை கிரிக்கெட் கேப்டன் டோனி வாங்கியுள்ளார். ஹாக்கி இந்தியா  லீக் தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரியில்  நடைபெற உள்ளது. இந்த தொடரில் புதிதாகக் களமிறங்கும் ராஞ்சி  ரேஸ்’ அணி உரிமத்தை சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்துடன்  இணைந்து டோனி வாங்கியுள்ளார்.


நடப்பு நிகழ்வுகள் (27 அக்டோபர் 2014)
  1. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் முறையாகவும் தற்போதைய ஜனாதிபதி டில்மா ரூசேப் (Dilma Rousseff) அமோக வெற்றி பெற்றுள்ளார்.
  2. இந்தியா நடப்பு நிதி ஆண்டில் 5.6% வளர்ச்சி பெரும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மேலும் வரும் 2015-16 இல் 6.4 சதவீதமும், 2016-17 இல் 7 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
  3. வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலைமத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதில், 'டாபர் இந்தியாநிறுவனத்தின் தலைவர் பிரதீப் பர்மன்கோவாவைச் சேர்ந்தசுரங்க நிறுவனத்தின் இயக்குனர் ராதா சதீஷ் டிம்ப்லோகுஜராத்தை சேர்ந்த பங்கஜ் சிமன்லால் லோதியா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
  4. 68 வது காலாட்படை தினம் 27 அக்டோபர் அன்று போர்வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனுசரிக்கப்பட்டது.
  5. தென் ஆப்ரிக்க கால்பந்து அணியின் கேப்டன் சென்சோ மெய்வா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  6. வியட்நாம் பிரதமர் நகுயென் டான் டங்2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருக தந்துள்ளார்.
  7. கிராண்ட்ஸ்லாம் போட்டி நிறைவடைந்த பிறகுஆண்டின் இறுதியில் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி 44-வது பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது. ஒற்றையர் பிரிவில்தரவரிசையில் முதல் 8 இடங்களை வகித்த வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா)4-ம் நிலை நட்சத்திர வீராங்கனையான சிமோனா ஹலேப்பும் (ருமேனியா) அவர்களை வென்று பட்டத்தை வென்றார்.


நடப்பு நிகழ்வுகள் (28 அக்டோபர் 2014)
  1. மகராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  2. கடல் பகுதியிலிருந்து எண்ணெய்இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் கப்பல் போக்குவரத்து குறித்த இந்தியா - வியட்நாம் இடையிலான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
  3. பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது கிளையை வியட்நாம் நாட்டில் தொடங்க உள்ளது.
  4. ஜப்பானைச் சேர்ந்த இன்டர்நெட் மற்றும் டெலிகாம் நிறுவனமான சாப்ட்பேங்க்இந்தியாவின் முக்கிய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீலில் 62.7 கோடி டாலர் (ரூ. 3,847 கோடி) முதலீடு செய்திருக்கிறது. மேலும் டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனமான ஓலா (Ola) நிறுவனத்தில் 21 கோடி டாலர்( ரூ. 1,260 கோடி) முதலீடு செய்திருக்கிறது.
  5. உலகப் பொருளாதார மன்றத்தின் 2014 பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா 13 இடங்கள் பின்தள்ளி மொத்தம் 142 நாடுகளுள் 114 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 101 ஆவது இடத்தில் இருந்தது.


நடப்பு நிகழ்வுகள் (29 அக்டோபர் 2014)
  1. சூரிய பிரகாஷ் அவர்கள் மூன்று ஆண்டு காலத்துக்கு “பிரசார் பாரதியின்” குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
  3. சீக்கிய மனித உரிமை அமைப்பு தொடர்ந்த மனித உரிமை மீறல் வழக்கில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது,டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அப்போது இந்திரா காந்தியின் குடும்ப நண்பரான அமிதாப் பச்சன் கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
  4. பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் பிரிவதற்கு காரணமான 1971-ம் ஆண்டு போரின்போதுமனித உரிமைகளை மீறிய வகையில்போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக வங்காள தேசத்தைச் சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி தலைவரான மதியூர் ரஹ்மான் நிஜாமி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
  5. தென் ஆப்ரிக்கா 115 புள்ளிகளுடன்  ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது மற்றும் முன்றாவது இடத்துக்கு சரிந்துள்ளது.


நடப்பு நிகழ்வுகள் (30 அக்டோபர் 2014)
  1. மலால யூசுபாய் அவர்களுக்கு அக்டோபர் 29, 2014 அன்று 2014 ஆம் ஆண்டிற்க்கான உலக குழந்தைகள் பரிசு வழங்கப்பட்டது.
  2. SunEdison” நிறுவனம் 5000MW சூரிய மின் திட்டம் அமைக்க ராஜஸ்தான் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  3. ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (இசிஓஎஸ்ஓசி) உறுப்பினர் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளுடன் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது
  4. “ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ்” என்ற தலைப்பில் இந்த ஆண்டுக் கான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவும் 189 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 53.97 புள்ளிகளுடன் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 52.78 புள்ளிகளுடன் 140-வது இடத்தில் இருந்தது.
  5. சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன (ஐஎஸ்எஸ்எப்) வீரர்கள் கமிட்டியின் தலைவராக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.


நடப்பு நிகழ்வுகள் (31 அக்டோபர் 2014)
  1. நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் சுதந்திர போராட்ட தலைவர்களி்ல் ஒருவருமான சர்தார் வல்லபாய் படேலின் 139வது பிறந்த தினம் நாளை 31-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளை “தேசிய ஒருமைப்பாட்டு தினமாக”  மத்திய அரசு கொண்டாடியது.
  2. தேவேந்திரா ஃபெட் நவிஸ் மகாராஷ்டிரா மாநில முதல் பிஜேபி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
  3. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 350 சுங்கசாவடிகள் எலக்ட்ரானிக் வரி வசூல் முறை வரும் டிசம்பர் 31 க்குள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ரூ 34,000 கோடி வரை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. கைக்குழந்தைகள் ஒரு வயது வரை இலவச சிகிச்சை பெரும் வகையில் ராஜஸ்தான் மாநில அரசு “ஜனனி சிசு சுரக்ஷா யோஜனா (JSSY)” என்ற திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
  5. பங்கஜ் அத்வானி அவர்கள் ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 30 அக்டோபர் 2014 அன்று வென்றார்.
  6. பல்லாயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சன் மரணம் அடைந்தார்.

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....