My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Thursday, October 9, 2014

நடப்பு நிகழ்வுகள் - செப்டம்பர் 2014

print this page

நடப்பு நிகழ்வுகள் (1 செப்டம்பர் 2014)
  1. 31 ஆகஸ்ட் 2014 அன்று அபிஷேக் பச்சன் சொந்தமான “ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்” (JPPஅணி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் புரோ கபடி லீக் முதல் பட்டத்தை வென்றார்.
  2. இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த  பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1 செப்டம்பர் 2014 அன்று முதல் செயல்படத் தொடங்கியது.
  3. மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவை கவுரவிக்கும் வகையில் அமெரிக்கா அஞ்சல் துறை வரும் 20-ம் தேதி அவரது அஞ்சல் தலையை வெளியிடவுள்ளது.
  4. ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை 31 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி தோற்கடித்துள்ளது.
  5. ஆந்திர மாநில அரசு கோயில் நகரமான திருப்பதியில் மெட்ரோ இரயில் சேவையை கொண்டுவர திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (2 செப்டம்பர் 2014)
  1. லிபிய பாராளுமன்றம் செப்டம்பர் 12014  ம் தேதி பிரதமர் அப்துல்லா அல் தீன்னி அவர்களை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளது.
  2. மூத்த கதக் நடனக் கலைஞர் மாயா ராவ் அவர் தனது 86 வயதில் 1 செப்டம்பர் 2014 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.
  3. 1 செப்டம்பர் 2014 அன்று கடனில் மூழ்கியுள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதன் உரிமையாளர் விஜய் மல்லையா வேண்டுமென்றே கடனை கட்ட தவறினர்கள் என்று யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
  4. 1 செப்டம்பர் 2014 அன்று இந்தியா (RBI) ரிசர்வ் வங்கி கடன்கள் வழங்க எடுத்துக்கொள்ள ஆகும் காலக் கோட்டை நிர்ணயம் செய்யுமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
  5. ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு 31 ஆகஸ்ட் 2014 அன்று ஜூனியர் ஆண்கள் ஹாக்கி வீரருக்கான விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் அவர்களை தேர்வு செய்துள்ளது.
  6. டெஸ்சி தாமஸ் மற்றும் வி ரவீந்தரநாத் ஆகிய இருவரும் ஐஐடி கவுன்சிலின் முதல் பெண் இயக்குனர்கள் ஆவர். இவர்கள் 1 செப்டம்பர் 2014 அன்று இந்த பதவியில் இணைந்தனர்.
  7. 29 ஆகஸ்ட் 2014 அன்று ஈக்வேடார் நாடு உலகின் முதல் டிஜிட்டல் நாணயத்தை வெளியிட உள்ள திட்டத்தை வெளியிட்டது.
  8. முன்னாள் வெளியுறவு துறை செயலர் AP வெங்கடேசன் அவர்கள் தனது  84 வயதில் 2 செப்டம்பர் 2014 அன்று இறந்தார்.
  9. முன்னாள் அட்டர்னி ஜெனரல் வஹன்வதி அவர்கள் 2 செப்டம்பர் 2014 அன்று மும்பையில் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 65  ஆகும்.

நடப்பு நிகழ்வுகள் (3 செப்டம்பர் 2014)
  1. இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி எச்.எல். தத்து அவர்களை நியமனம் செய்யப்பட உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் ஆர்.எம்.லோதாவின் பதவிக்காலம் வருகிற 27ந் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து இவர் வரும் 2015 வரை இந்த பதவியில் இருப்பார்.
  2. உலக பொருளாதார மன்றம்  வெளியிட்ட “The Global Competitiveness Report 2014-15” இன் படி இந்திய 71 வது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையில் முதல் முன்று இடத்தை சுவிச்சர்லாந்துசிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
  3. இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மீண்டும் சந்திரசேகரன் அவர்களை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. இவர் இந்த பதவியில் 5 ஆண்டுகள் (வரும் 2019 வரை) இருப்பார்.
  4. சிறந்த பத்திரிகையாளர் மற்றும் அவுட்லுக் குழுமத்தின் ஆசிரியர்குழு தலைவரான வினோத் மேத்தா அவர்கள் “ஜி.கே. ரெட்டி நினைவு விருது 2014” க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  5. 2 செப்டம்பர் 2014 அன்று ஜம்மு காஷ்மீர் (J & K) மாநில அரசு திருநங்கைகளின் நலனுக்காக நல வாரியம் ஒன்றை அமைத்துள்ளது.
  6. 2 செப்டம்பர் 2014 அன்று ஜப்பான் நாட்டில் உள்ள நாகசாகி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 30 நிமிடங்கள் எபோலா வைரஸ் இருப்பது கண்டறியக் கூடிய “RT-LAMP” என்று ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.

நடப்பு நிகழ்வுகள் (4 செப்டம்பர் 2014)
  1. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி சதாசிவம் அவர்கள் கேரள  மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. இந்திய ஜனாதிபதி அவர்கள் இந்திய இசைக்கலைஞர்கள் எட்டு பேரின் ஞாபகார்த்தமாக அவர்களின் அஞ்சல் தலைகளை வெளியிட்டார்.
  3. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா பகுதியில் அமைய உள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் 4செப்டம்பர் 2014 அன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
  4. மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட 7 சதவீத அக விலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு 4 செப்டம்பர் 2014 அன்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும்50 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
  5. ராஜஸ்தான் மாநிலத்தின் 20-வது ஆளுநராக உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் 4 செப்டம்பர் 2014 அன்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுனில் அம்பானி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
  6. இந்தியாவிலிருந்து கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு சிக்கிம் வழியாக புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்காகபாதுகாப்பான புதிய பாதையை ஏற்படுத்தித் தர சீனா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  7. ஐஎன்எஸ் சுமித்ரா என்ற இந்தியாவின் மிகப்பெரிய கண்காணிப்பு கப்பல் நாட்டுக்கு சென்னையில் நடந்த அட்மிரல் ஆர்.கே. தோவன் அர்ப்பணித்தார்.
  8. ஜப்பான் நாட்டை சேர்ந்த “Kei Nishikori” அவர்கள் 96 ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் பங்குபெறும் முதல் மனிதர் அவர்.

நடப்பு நிகழ்வுகள் (5 செப்டம்பர் 2014)
  1. ரிது ராணி அவர்கள் ஆசிய விளையாட்டு 2014 இல் பங்கு பெரும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் அணித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  2. இந்திய மற்றும் நேபால் ராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சியான “சூர்யா கிரண்-VII” பித்தோகார்கில் ஆகஸ்ட் 31, 2014 அன்று முடிவு பெற்றது. இது ஏழாவது கூட்டு பயிற்சி ஆகும்.
  3. மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி சிஎஸ் தர்மாதிகாரி தலைமையில் ஆனா குழு 1 செப்டம்பர் 2014 அன்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் பெண்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து மற்றும் குற்ற விகிதத்தை குறைக்க ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் நடன பார்கள் நடத்த முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. இந்தியாஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்தில்லியில் 5 செப்டம்பர் 2014 அன்று கையெழுத்தானது.இந்தியா வந்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
  5. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாயு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்று தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். இதற்கு முன்இந்தியாவின் மகேஷ் பூபதியுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆடியுள்ள சானியா2009-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியிலும்2012-ஆம் ஆண்டு பிரென்ச் ஓபன் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
  6. உலக மாஸ்டர்ஸ் பளுதூக்குதல் போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக இந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல் சுதாகர் ஜெயந்த் (45) தங்கம் வென்றார். இத்தாலியில் 2013இல் நடைபெற்ற இப்போட்டியில்மொத்தம் 192 கிலோ எடை தூக்கி சுதாகர் தங்கம் வென்றார். அதற்கு முன்னர்2012இல் உக்ரைனில் நடைபெற்ற இப்போட்டியிலும் சுதாகர் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிகழ்வுகள் (6 செப்டம்பர் 2014)
  1. உலக சுகாதார அமைப்பு (WHO) 5 செப்டம்பர் 2014 அன்று எபோலா வைரஸ் நோயை தடுக்க (EVD எபோலா நோய் பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களின் ரத்தத்தை பயன்படுத்தி நோய் தடுப்பு மருந்தை உருவாக்க அனுமதி வழங்கி உள்ளது.
  2. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் “நோபல் உச்சி மாநாட்டில்” பங்குபெற தலாய் லாமா அவர்களுக்கு அந்நாடு விசா வழங்க மறுத்துள்ளது.
  3. Indian Institute of Advanced Study (IIAS)” யின் முதல் பெண்கள் தலைவராக “Chandrakala Padia “அவர்கள் 4 செப்டம்பர் 2014 அன்று நியமிக்கப்பட்டார்.
  4. 4 செப்டம்பர் 2014 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) தற்கொலை தடுப்பது குறித்து அதன் முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  5. ராஜஸ்தானில் உள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு உலை 765 நாட்கள் தொடர்ந்து இயங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (7 & 8 செப்டம்பர் 2014)
  1. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அஸ்ஸாமில் உள்ள காண்டா மிருகங்களை பாதுகாக்க ஒரு சிறப்பு காண்டா மிருக பாதுகாப்பு படை ஒன்றை அறிவித்துள்ளார்.
  2. 121 ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவான தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம் மசோதா2014 13 மார்ச் 2014 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  3. ஒரு மிகப் பெரிய 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அழிந்து எரிமலை ஒன்று பசிபிக் பெருங்கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  4. ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு 33.33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  5. உலக எழுத்தறிவு தினம் 8 செப்டம்பர் 2014 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் இந்தாண்டின் கருப்பொருள் “Literacy and Sustainable Development” என்பது ஆகும்.
  6. வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1100 கோடியை மத்திய அரசு ஏற்கெனவே அனுமதித்துள்ள நிலையில் கூடுதலாக ரூ.1000 கோடி சிறப்பு நிவாரண உதவியை பிரதமர் மோடி அறிவித்தார்.
  7. தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகளை ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தார்.நடனமாடும் சிவன் சிலை மற்றும் அர்த்தனாரீஸ்வரர் சிலை ஆகியவைதான் அந்தச் சிலைகள். சுமார் 11 அல்லது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிற இந்தப் புராதனச் சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்தன.
  8. மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர். இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம்வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  9. டார்ஜீலிங் பகுதியில் உள்ள மகைபாரி தேயிலை ஒரு கிலோ ரூ. 1.12 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. டார்ஜீலிங் மகைபாரி தேயிலைக்கு உலகம் முழுவதும் மிகுந்த கிராக்கி உள்ளது. இந்த ஆண்டு இது மிக அதிகபட்ச விலையை எட்டியுள்ளது. ஒரு கிலோ தேயிலை 1,850 டாலர் விலைக்கு ஜப்பான் முன் பதிவு செய்துள்ளதாக தேயிலை வாரியத் தலைவர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
  10. அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியை 6-36-3 என்ற நேர் செட்களில் வென்று அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார். இதன் மூலம் மார்டினா நவ்ரதிலோவா மற்றும் கிறிஸ் எவர்ட் லாய்ட் என்ற டென்னிஸ் பெருந்தகைகள் பட்டியலில் செரினா இணைந்துள்ளார். மேலும் செரினா வில்லியம்ஸ் வெல்லும் 18வது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன் பட்டமாகும் இது.

நடப்பு நிகழ்வுகள் (9 செப்டம்பர் 2014)
  1. பிரணாப் முகர்ஜி சர்வதேச எழுத்தறிவு தின விழாவில் “சாக்ஷர் பாரத் விருது 2014”  யை 11 நபர்களுக்கு வழங்கினர். அதில் குறிப்பிடத்தக்கவர் ஆந்திர  மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்ட ஆட்சியர் G.S.R.K.R. விஜயகுமார் ஆவர். இவர் மொத்த கல்வியறிவு திட்டத்தின் கீழ் ஒன்பது மாதத்தில்  எழுத்தறிவு இல்லா 4.75 லட்சம் மக்களை எழுத்தறிவு உள்ளவர்களாக மாற்றி உள்ளார்.
  2. இந்திய திரைப்படம் “Court” 71 ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக பட விருதை பெற்றது.
  3. இந்திய ரிசர்வ் வங்கி அதன் முக்கிய பணிகளுக்கு தேவையான திறமை ஆட்களை தேர்வு செய்ய வரும் 2015 முதல் ஒரு பொதுவான தேர்வு முறையை ஏற்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  4. வானிலை மாற்றங்களுக்கான காரணங்கள்பல் உயிரி பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்திய விஞ்ஞானி கமல் பாவாவுக்கு (படம்) ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் "மிடோரி விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
  5. லத்தீன் அமெரிக்க நாடான நிகராகுவா நாட்டின் தலைநகரான மனாகுவா நகரத்தில் செப்டம்பர் 2014 அன்று ராட்சத விண்கல் ஒன்று விழுந்தது. சுமார் 20 மீட்டர் விட்டம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று விழுந்தது. இதனால் அந்த இடத்தில் சுமார் 39 அடி பெரிய பள்ளம் உருவானது. இதற்க்கு “2014 ஆர்.சி.” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  6. அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் குரேசிய வீரர் மாரின் சிலிச்ஜப்பான் வீரர் நிஷிகோரியை நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

நடப்பு நிகழ்வுகள் (10 செப்டம்பர் 2014)
  1. ஆர்க்டிக் கடலில் காணாமல் போன கப்பல் 169 வருடம் கழித்து கண்டுபிடிப்புகடந்த 1845-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளரான சர் ஜான் பிராங்க்ளின் 128 அதிகாரிகளுடன்  வடமேற்கு பாதை வழியாக பயணம் மேற்கோளும் போது காணாமல்போன கப்பலை 9 செப்டம்பர் 2014 அன்று கனடிய ஆர்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
  2. கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இன்டெல் நிறுவனம் 9 செப்டம்பர் 2014 தரவு மையங்களில் (data centres) செயல்திறனை  மேம்படுத்த வேகமாக இயங்கவல்ல “Xeon E5-3” என்ற புதிய பிராசஸர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
  3. பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிகோல் இந்தியா,என்.எச்.பி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் 5 சதவீத பங்குளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  4. திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அறிவித்து பீகார் அரசு 9 செப்டம்பர் 2014 அன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அறிவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  5. சத்தீஸ்கரில் நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மண்டலத்தில் தேசியப் பழங்குடியினப் பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  6. காஷ்மீரில் லடாக் பகுதியில் 28 சாலை திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  7. பங்கஜ் அத்வானி அவர்கள் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

நடப்பு நிகழ்வுகள் (11 செப்டம்பர் 2014)
  1. சூரிய குடும்பத்துக்கு வெளியே நீர் நிறைந்த பனி மேகங்கள் சூழ்ந்த “Brown dwarfs “ என்ற குள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “Jacqueline K. Faherty” அவர்கள் தலைமையில் ஆனா விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளன.
  2. 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கவல்ல அக்னி-1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை இன்று காலை ஒடிஸா ஏவுகணை தளத்திலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  3. 10 செப்டம்பர் 2014 அன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA) 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு அங்கமாக காபி வாரியத்தின் முலம் “ஒருங்கிணைந்த காபி மேம்பாட்டு திட்டத்தை” (ICDP) செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
  4. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசும் அனைத்து பந்துகளும் முறையற்றதாக இருப்பதாகத் தெரிவித்துசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)அவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடை நீக்கம் செய்தது.
  5. வலுவான சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்தச் சூரியப் புயல் மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் (அதாவது 4.02மில்லியன் கிலோ மீட்டர் வேகம்) என்ற மித வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
  6. 9 செப்டம்பர் 2014 அன்று புதுச்சேரி காவல் துறை “Rape Crisis Intervention Centre” ஒன்றை தொடங்கியுள்ளது. கற்பழிப்பு மற்றும் பாலியில் சம்பவங்களில் பாதிப்பு அடையும் பெண்கள் அல்லது குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய தொடங்கி உள்ளது.
  7. மத்திய அரசு பள்ளிகள் கல்லூரிகளில் விரிவுரைகள் மேற்கொள்வதை விஞ்ஞானிகளுக்கு கட்டாயமாக்கியுள்ளது.
  8. ஏ.டி.எம். மற்றும் டெபிட் கார்டுகள் இன்றி நெட் பாங்கிங்மூலம் ஏ.டி.எமில் பணம் எடுக்கும் முறையினை ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 10 ஆயிரம் ஏ.டி.எம்.களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (12 செப்டம்பர் 2014)
  1. சுதந்திர போராட்ட வீரர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் ஜிதேந்திர சந்திர பால் அவர்கள் 11 செப்டம்பர் 2014 அன்று தனது 101 வயதில் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள B.R. அம்பேத்கர் மருத்துவ கல்லூரியில் இறந்தார்.
  2. நீரில் வாழும் மிகபெரிய டைனோசரின் எலும்பு ஒன்று மொரோக்கோவில் வெளியிடப்பட்டது. 50 அடி அளவு நீளம் கொண்ட இந்த டைனோசர் “Spinosaurus aegyptiacus” வகையை சேர்ந்தது மிகபெரிய தாவர உண்ணி என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
  3. இந்திய ரிசர்வ் வங்கி தனியார் துறை வங்கிகளின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் உச்ச வயது வரம்பு 70 ஆகா உயர்த்தி உள்ளது.
  4. ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  5. 12 செப்டம்பர் 2014 அன்று ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு ரஷியன் அரசியல்வாதிகள் மற்றும் ரஷியன் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவது ஆகியவை அடங்கும்.
நடப்பு நிகழ்வுகள் (13 செப்டம்பர் 2014)
  1. Rays Power” நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் 50 மெகாவாட் சூரிய சக்தி பூங்கா ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.
  2. Chitresh Tatha” ஆசிய விளையாட்டு 2014 போட்டியில் பங்கு பெரும் இளம் இந்திய கப்பல் ஓட்டும் வீரர் அவர்.
  3. பாரத ஸ்டேட் வங்கி இலங்கையில் தனது வங்கியை தொடங்கி 150 ஆண்டுகளை கொண்டாடுகிறது.
  4. ஆசிய அபிவிருத்தி வங்கிராஜஸ்தான் மாநிலத்தில் உயர் அழுத்த மின்கம்பிகளை அமைக்க 150 மில்லியன் கடன் வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது.
  5. லத்தீன் அமெரிக்க நாடான “பெரு” கனிமங்கள் மற்றும் அந்நாட்டில் உற்பத்தி செய்யும் உலோகங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய தடையற்ற வணிக ஒப்பந்தத்தில் இந்தியா உடன் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது.
  6. நாட்டில் உள்ள உணவுப் பொருட்களின் பணவீக்கம் 9.4% அளவில் நிலையாக உள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (14 & 15 செப்டம்பர் 2014)
  1. கேரள மாநில அரசு வரும் நவம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கொச்சியில் ஹைடெக் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் பற்றிய ஒரு கண்காட்சி மற்றும் உலக விவசாய மாநாடு (Global Agro meet) ஆகியவை நடத்த உள்ளது.
  2. விஞ்ஞானி ரகுநாத் ஆனந்த் மஷில்கர்அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் அவர்கள் பிரதமரின் "ஸ்வச் பாரத்" என்ற தேசிய சுகாதார திட்டத்தை செயல்படுத்தும் 19 நபர்கள் கொண்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. கோவா முதல்வர்திரு மனோகர் பாரிக்கர் அவர்கள் மிராமர் பீச் பனாஜியில் “சுத்தமான கோவா அழகான கோவா” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  4. தூர்தர்ஷன் தனது சேவையை தொடங்கி 55 ஆண்டுகள் நிறைவடைந்தாதை செப்டம்பர் 15 அன்று கொண்டாடியது. தூர்தர்ஷன்செப்டம்பர் 151959 அன்று தொடங்கப்பட்டது.
  5. சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு (ஏஐபிஏ)இந்திய குத்துச் சண்டை அமைப்பின் நிர்வாகிகள் தேர்வை அங்கீகரித்தது. இதனால்ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்வீராங்கனைகள் தேசியக் கொடியின் கீழ் பங்கேற்கலாம்.
  6. இந்தோனேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ப்ரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில்இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் அவர் இந்தோனேசியாவின் ஃபிர்மன் அப்துல் கோலிக்கை வீழ்த்திமுதல்முறையாக பட்டம் வென்றுள்ளார்.
  7. தன்னைத் தானே படம் பிடித்துக் கொள்ளும் "செல்ஃபீமுறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் புகைப்படம்பிரிட்டனில் 70,000 பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.70 லட்சம்) வாங்கப்பட்டுள்ளது.
  8. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்ஒரு வார காலத்துக்கு தனது தலைமை அலுவலகத்தை விட்டுவிட்டு நுலுன்பை என்ற பழங்குடியின கிராமத்தில் குடிசைப் போட்டு தங்கியுள்ளார். 
நடப்பு நிகழ்வுகள் (16 செப்டம்பர் 2014)
  1. சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் 16 செப்டம்பர் 2014 அன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
  2. G-20 நாடுகள் கூட்டமைப்பின் “தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரத்தில் நடைபெற்றது.
  3. இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி ஆகஸ்ட் மாதம் 2.35% குறைந்து 26.95 பில்லியன் டாலர்கள் ஆளவுக்கு சரிவு பெற்றது.
  4. ஆந்திராவில் புதிய கிரீன்ஃபீல்ட் ஆலை ஒன்றை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ 1,600 கோடி முதலீட்டில் தொடங்க உள்ளது.
  5. என்.டி.பி.சி நிறுவனம் ஆந்திராவில் 1000 மெகாவாட்  திறன் கொண்ட ரூ 7,000 கோடி மதிப்பிலான பெரிய சூரிய சக்தி பூங்கா ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (17 செப்டம்பர் 2014)
  1. பாஜகவின் முக்கியத் தலைவரான லலிதா குமாரமங்கலம்தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த இவர்,பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக செயலாற்றி வந்தவர். இவர்முன்னாள் பாஜக எம்.பி. ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி ஆவார்.
  2. இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) தமிழ்நாடு பிரிவுக்கான மாநில ஆலோசனைக் குழுத் தலைவராக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அண்மையில் செய்துள்ளது.
  3. மக்களவைக்கான நெறிமுறைகள் குழுவின் புதிய தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நியமிக்கப்பட்டார்.கடந்த மக்களவையில்,நெறிமுறைகள் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்ராவ் கவிட் இருந்தார்.
  4. உத்தரகண்ட் மாநிலத்தையொட்டிய இமயமலை அடிவாரத்தில், "யுத் அப்யாஸ் 2014என்ற பெயரில் இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டுப் போர்ப் பயிற்சியை 17 செப்டம்பர் 2014 முதல் தொடங்கியுள்ளனர். இம்மாதம் 30ஆம் தேதி வரைஇந்தப் பயிற்சி நடைபெறும். இதில் இந்திய ராணுவத்தின் மலைப்பிரிவான கருடா பிரிவு வீரர்களும்அமெரிக்காவின் தரைப்படை வீரர்களும் சம அளவில் கலந்து கொண்டுள்ளனர் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. ஒவ்வொரு வருடமும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் அடுத்த 24 மணி நேரத்தில் இறந்துவிடுவதாக ஐ.நா. அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. யுனிசெஃப் நிறுவனம் 2014-ஆம் ஆண்டில் 'சிசு உயிர் பாதுகாப்புஎன்ற நோக்கத்தோடு உலகம் முழுவதிலும் உள்ள பிறந்த குழந்தைகள் நலன் குறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  6. உலக வங்கி எபோலா பாதிப்பு அடைந்த நாடுகளுக்கு 105 மில்லியன் டாலர் மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  7. சீன அதிபர் 1.4 பில்லியன் டாலர்  மதிப்பிலான கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
  8. தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்துகுத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்கும் பரிந்துரையைமத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்றுள்ளது..
  9. இந்தியாவில் வரும் 2030 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி நாடக விளங்கும் என்று எச்எஸ்பிசி அறிக்கை தெரிவித்துள்ளது.
  10. ஒடிஸா தலைநகர் புவனேசுவரம் முழுவதும் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக மாநில தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரணாப் பிரகாஷ் தாஸ் தெரிவித்தார்.
  11. ஸ்பெயினின் கிரனடாவில் நடைபெற்று வரும் 51-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்இந்தியாவின் பிரதீப் வெண்கலப் பதக்கம் வென்றார். 
நடப்பு நிகழ்வுகள் (18 செப்டம்பர் 2014)
  1. இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI)  கோவாவில் நிரந்தரமாக நடக்கும் இடமாக 17 செப்டம்பர் 2014 அன்று யூனியன் தகவல் அமைச்சகம் மற்றும் கோவா அரசாங்கம் புரிந்துணர்விற்கான உடன்படிக்கை கையெழுத்திட்டுள்ளன.
  2. சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக “லி யுசெங்” அவர்களை நியமனம் செய்துள்ளார்.
  3. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் “FASTag “ என்னும் பிராண்ட் பெயரில் இந்தியாவில் மின்னணு சுங்கவரி சேகரிப்பு மையங்களை அமைக்கும் திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது
  4. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் வியட்நாம் நாட்டில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க “வெட் சி சுரங்கத்தை” பார்வையிட்டார்.
  5. இந்திய ரிசர்வ் வங்கி,  பொதுத்துறை வங்கிகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (CMD) பதவியை இரண்டாக பிரிக்க புதிய வரையறையை முன்மொழிந்துள்ளது.
  6. புற்றுநோய் வளர்ச்சிக்கு உதவுகின்ற புரதத்தை தடுக்கக்கூடிய “BQU57” என அழைக்கப்படும் ஒரு புதிய சேர்மத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
  7. 18 செப்டம்பர் 2014 அன்று இன்போசிஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன்ஹிட்டாச்சி டேட்டா சிஸ்டம்ஸ் (HDS) மற்றும் சீனா சார்ந்த ஹவாய் ஆகிய மூன்று நிறுவங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் (19 செப்டம்பர் 2014)
  1. 18 செப்டம்பர் 2014 அன்று மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் 13 ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  2. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மாவை அதிபர் ஒபாமா நியமித்தார்.
  3. சீனாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை லி நா32. தரவரிசையில் 6வது இடத்திலுள்ள இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
  4. உச்ச நீதிமன்றம் “தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர், மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர்” நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுள்ளது.
  5. இந்தியாவின் முதல் திருநங்கை தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் என்ற பெருமையை “பத்மினி பிரகாஷ்” அவர்கள் பெற்றார். கோவையை மையமாக கொண்டு செயல்படும் “Lotus News Channel Studios” என்னும் தொலைகாட்சி நிறுவனத்தில் இவர் பணியாற்றுகிறார்.
  6. கர்நாடக துளு சாகித்ய அகாடமி கணினியில் பயன்படுத்தும் வகையில் துளு மொழி யுனிகோட் பதிப்பை வெளியிட்டுள்ளது.
  7. ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் “டாங் விருதை” தைவான் அதிபர் 18 செப்டம்பர் 2014 அன்று தைவான் அதிபர் மா யிங் ஜியாவ் அவர்கள் வழங்கினர்.
  8. பூமா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் அபிஷேக் கங்குலி அவர்களை புதிய நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது.
  9. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் 19 செப்டம்பர் 2014 அன்று ஐந்து இந்திய மொழிகளில் “All India Radio” வின் இலவச செய்தி எஸ்எம்எஸ் சேவையை தொடங்கி வைத்தது.
  10. பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கல்லீரல் பிரச்சினை தொடர்பாக 19 செப்டம்பர் 2014 அன்று உயிரிழந்தார்.
  11. 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் 19 செப்டம்பர் 2014 அன்று தொடகியது. 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4-ம் தேதி நிறைவடைகிறது.
நடப்பு நிகழ்வுகள் (20 செப்டம்பர் 2014)
  1. 17 ஆசியன் விளையாட்டு தென்கொரியாவில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டு போட்டியில்  இந்திய வீரர் ஜிது ராய் பிஸ்டல் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று உள்ளார்.
  2. வரலாற்று சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.2,727 கோடி ஒதுக்கியுள்ளது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
  3. அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான 'டைம்', இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் அலோக் ஷெட்டி (28) அவர்களுக்கு 'நாளைய உலகின் தலைவன்'என்று பட்டம் சூட்டி கவுரவப்படுத்தியுள்ளது.
  4. தனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்காட்லாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. இதில்55% வாக்குகள் ஸ்காட்லாந்துகிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. 
நடப்பு நிகழ்வுகள் (21 & 22 செப்டம்பர் 2014)
  1. ஜோன் கீ அவர்கள் மூன்றாவது முறையாக நியூசிலாந்து நாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2008 முதல் நியூசிலாந்து நாட்டு பிரதமராக இருக்கின்றார்.
  2. அஷ்ரப் கானி அவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  3. தென் பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றானபிஜியில்எட்டாண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில்முன்னாள் ராணுவ தளபதிபைனிமராமா அவர்கள் பிரதமர் பதவியேற்க்க உள்ளார்.
  4. 19 செப்டம்பர் 2014 அன்று உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிர்பயா (Nirbhaya)  மையங்களை திறக்க முடிவு செய்துள்ளது. இதன் முலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மற்றும் வழக்கு பதிவு செய்வதை எளிதாக்க தொடங்க உள்ளது.
  5. நாசா அனுப்பிய மேவன் விண்கலம்கிட்டத்தட்ட 10 மாத பயணத்திற்குப் பின்னர் 21 செப்டம்பர் 2014 அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது. இந்த மேவன் விண்கலமானதுசெவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
  6. இந்திய டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி ஏற்பாடு செய்து வரும் சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் தொடருக்கான (ஐபிடிஎல்நவ. 28 - டிச. 13) இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்துஅவருக்கு பதிலாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த அனுபவ வீரர் ரோஜர் பெடரர் இந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மகேஷ் பூபதி நேற்று தெரிவித்தார்.
  7. 20 செப்டம்பர் 2014 அன்று ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் “UN Mission for Ebola Emergency Response” என்ற ஒரு புது திட்டத்தை உருவாக்க அறிவிப்பை வெளியிட்டார்.
நடப்பு நிகழ்வுகள் (23 செப்டம்பர் 2014)
  1. அடுத்த பிரவசி பாரதிய திவாஸ், குஜராத் தலைநகர் காந்திநகர் நடைபெறும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. வி.ஜி. மேத்யூ அவர்கள் சவுத் இந்தியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  3. 2015- ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியின் சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 'லையர்ஸ் டைஸ்' (Liar's Dice) அனுப்பப்பட உள்ளது.
  4. பத்திரிகைகள் விற்பனையை கண்காணிக்கும் 2014-2015-ஆம் ஆண்டிற்கான ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ஏபிசி) அமைப்பின் புதிய தலைவராக அமித் மாத்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமித் மாத்யூ பிரபல மலையாள மனோரமா பத்திரிகை குழுமத்தின் இயக்குநராவார்.
  5. கூகுள் நிறுவனம் இந்தியாவில் பெண்கள் ஆன்லைன் சேவையை பெற உதவும் வகைளில் புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  6. துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார்.
  7. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு (இன்டெர் சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ்) புதிய தலைமை இயக்குநராக ரிஸ்வான் அக்தர் அறிவிக்கப்பட்டுள்ளார்.ஐ.எஸ்.ஐ. தலைவராக இருக்கும் ஜாகிர் உல் இஸ்லாம் வரும் அக்டோபர் 1-ம் தேதி ஓய்வுபெறுகிறார். இதையொட்டி தற்போது ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தில் இருக்கும் ரிஸ்வான் அக்தர்மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுஐ.எஸ்.ஐ. தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் (24 செப்டம்பர் 2014)
  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி 24 செப்டம்பர் 2014 அன்று காலை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
  2. தனியார் துறை வங்கியான  ஐசிஐசிஐ வங்கி 10 வயது குறைந்தவர்கள் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க வழிவகை செய்துள்ளது.
  3. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் போட்டிகளை அக்டோபர் 23 முதல் 30 வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
  4. யாகூ நிறுவனம் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த BookPad என்னும் நிறுவனத்தை வங்கியுள்ளது.
  5. ஆந்திர மாநில அரசு அரசு துறை பணியாளர் தேர்வுக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்தி உள்ளது.
  6. ஹிந்தி எழுத்தாளர் கோவிந்த் மிஸ்ரா அவர்களின் “Dhool Paudhon Par” என்னும் நாவலுக்கு சரஸ்வதி சம்மான் 2013 விருதை பெற்றார்.
  7. ஐ.நா. வின் காலநிலை மாற்ற மாநாடு 2014 நியூயார்க் நகரத்தில் நடந்தது
நடப்பு நிகழ்வுகள் (25 செப்டம்பர் 2014)
  1. மாவன் அத்தப்பத்து இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ISIS தீவிரவாதிகள் இயக்கத்தில் மற்ற நாட்டை சேர்ந்த குடிமக்கள் சேர்வதை தடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. அமெரிக்க அரசு அந்நாட்டில் உள்ள அமெரிக்க பழங்குடியினர்களான நவாஜோ பழங்குடி மக்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு  வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  4. ரஜத் சர்மா அவர்கள் செய்திகள் ஒளிபரப்பு சங்கத்தின் (News Broadcasting Association) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  5. மத்திய பிரதேச அரசு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு வரும் அக்டோபர் மாதம் இந்தூரில் நடத்த உள்ளது.
  6. மத்திய அரசு நகர்ப்புறங்களில் "ஸ்வச் பாரத்" திட்டத்தை தொடங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இது வரும் அக்டோபர், 2 2014 அன்று தொடங்க உள்ளது.
  7. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகிய இருவரும் “பிராட்மேன் ஆனர் – 2014” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  8. மத்திய அமைச்சரவை நேபால் நாட்டுடன் மின்சார கிரிட் இணைப்பை ஏற்ப்படுத்த ஒப்பந்தத்தை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  9. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா.சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெறுகிறது.
நடப்பு நிகழ்வுகள் (26 செப்டம்பர் 2014)
  1. மேற்கு ஆப்ரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் நிவாரணத்திற்கு உதவி வரும் ஐ.நா. சபைக்கு12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கும் முடிவுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
  2. தீன் தயாள் உபாத்யாயா அந்த்யோதையா யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது
  3. தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கக் கூடியகுறுகிய தொலைவு "ஹதஃப் 9 நஸர்ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்தது.
  4. சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரேசில்ரஷியாஇந்தியாசீனாதென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய "பிரிக்ஸ்அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
  5. சீனா அதன் உற்பத்தி திறனை தக்க வைத்து கொள்ளசீனா பிரச்சாரத்தில் கொடுக்கும் தொடங்கப்பட்டது
  6. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2014 அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஆர் இன் 72 ஆவது தொடங்கிய நாளின் கொண்டாட்டத்தின் போது 10 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  7. சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில்மொபைல் போன் மற்றும் லேப்டாப் மூலமாக இலவசமாக வை-ஃபை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  8. முதன்முறையாகசார்க் நாடுகளின் கலாச்சார தலைநகராக 2015 - 16ம் ஆண்டுக்கு ஆப்கானிஸ்தானின் " பாமியான் " நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷின் " டாக்கா " நகரம் 2016 - 17ம் ஆண்டின் சார்க் நாடுகளின் கலாச்சார தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2016 - 17ம் ஆண்டை சார்க் நாடுகளின் கலாச்சார ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் டெல்லியில் நடைபெற்ற சார்க் நாடுகளின் கலாச்சாரத் துறை அம்மைச்சர்களின் மாநாட்டில் எடுக்கப்பட்டது. பாமியன் மலை குன்றுகளில் அமைந்துள்ள புத்தர் சிலைகள் உலகப்புகழ்பெற்றது.
நடப்பு நிகழ்வுகள் (27 செப்டம்பர் 2014)
  1. மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  2. இங்கிலாந்து பாராளுமன்றம் ISIS திவிரவாதிகளுக்கு எதிரான ஈராக்கில் வான்வழி தாக்குதல் நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
  3. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக எச்.எல். தத்து பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  4. எஸ்பிஐ கொரியா நாட்டு வங்கியான எக்சிம் வங்கியின் மூலம் 500 மில்லியன் டாலர் கடன் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.
  5. ஆசிய விளையாட்டு போட்டி: வில்வித்தைஸ்குவாஷில் தங்கம் வென்று வரலாறு படைத்தது.
  6. ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிரான வான்வழி தாக்குதல் பணியில் சவூதி இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் முதல் பெண் விமானி மரியம் அல் மன்சோவ்ரி களம் இறங்கியுள்ளனர்.
  7. 2014- குழந்தைகள் அமைதிக்கான சர்வதேச விருது :- இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு வழங்கபடுகிறது.
நடப்பு நிகழ்வுகள் (28 செப்டம்பர் 2014)
  1. பகத் சிங் அவர்களின் 107 ஆவது  பிறந்த நாள் விழா 28 செப்டம்பர் 2014 அன்று அனுசரிக்கப்பட்டது.
  2. நாட்டின் 42-வது தலைமை நீதிபதியாக  எச். எல்.தத்து பதவியேற்றார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைமை நீதிபதி எச். எல்.தத்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. மோடி இந்தியாவிற்கு வருகை தரும்படி நியூ ஜெர்சி மாகாண கவர்னரான கிறிஸ் கிறிஸ்டி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
  4. சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி ஐ.நா சபையில் வலியுறுத்தியுள்ளார்.
  5. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப்பட்டுள்ளது.
  6. செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டிஅங்குள்ள மவுன்ட் ஷார்பில் ஆய்வுக்காக முதல் துளையிட்டது. ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த டிரில்லர் 2.6 அங்குல அளவு ஆழத்திற்கு ஒரு துளையிட்டு அதிலிருந்து சில துகள்களை ஆய்வுக்காக எடுத்துள்ளது.
  7. ஆசிய விளையாட்டு ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்
  8. 7வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு நடைப்போட்டியில் இந்தியாவின் குஷ்பிகர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடை போட்டியில் குஷ்பிகர் கவுர் இரண்டாவது இடம் பிடித்தார்.
நடப்பு நிகழ்வுகள் (29 செப்டம்பர் 2014)
  1. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.
  2. உலக இருதய தினம் 29 செப்டம்பர் 2014 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  3. புலம்பெயர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் விசா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
  4. ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி அஹ்மட்ஸாய் பதவி ஏற்றார்.
  5. பிளாஸ்டிக் முலம் செய்யப்படுகிறது தேசிய கொடிகளை விற்பனை செய்ய தடை விதிக்கவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
  6. உலகின் மிகப்பெரிய மின் வர்த்தக நிறுவனமான அலிபாபா சீனாவில் புதிய தனியார் வங்கி அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளது.
  7. குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான நிதி கட்டமைப்பை பற்றி ஆய்வு செய்ய ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் கே.வி.காமத் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
  8. ஜப்பான் நாட்டில் உள்ள Mount Ontake என்னும் எரிமலை வெடித்தது. இதில் 30 க்கு அதிகமானவர்கள் உயிர் இழந்தனர் என்றும், பலர் படுகாயம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  9. மலேசிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்போலந்தின் மார்கின் மாட்கோவ்ஸ்கி ஜோடி பட்டம் வென்றது.
நடப்பு நிகழ்வுகள் (30 செப்டம்பர் 2014)
  1. பீபீ பிரகாஷ் கவுர்தியாகி பகத் சிங் அவர்களின் சகோதரி கடந்த 28 செப்டம்பர் 2014 அன்று இறந்தார்.
  2. இந்தியா ரிசர்வ் வங்கி 30 செப்டம்பர் 2014 அன்று நான்காவது இரு-மாத நிதி கொள்கை அறிக்கையை வெளியிட்டது. இதில்  வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் 8% சதவிகிதத்தை வைத்துள்ளது.
  3. 29 செப்டம்பர் 2014 அன்று ஆந்திர மாநில அரசு “டிஜிட்டல் ஆந்திர திட்டத்துக்கு” கூகுள் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  4. உத்தரகண்ட் மாநிலத்தையொட்டிய இமயமலை அடிவாரத்தில், "யுத் அப்யாஸ் 2014என்ற பெயரில் இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டுப் போர்ப் பயிற்சி நிறைவு பெற்றது.
  5. 29 செப்டம்பர் 2014 அன்று மத்திய வர்த்தக அமைச்சகம் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்எஸ்ஸார் மற்றும் அதானி உள்பட ஒன்பது சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (SEZ) அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

1 comment:

Please suggest your valuable comments here....