My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Friday, January 2, 2015

நடப்பு நிகழ்வுகள் - நவம்பர் 2014

Print Friendly and PDF

நடப்பு நிகழ்வுகள் (1 நவம்பர் 2014)
  1. ஏ.டி.எம். கார்டை மாதம் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கும் முறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல் மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த விதிமுறை பணம் எடுப்பதற்கு மட்டுமின்றிபணம் இருப்பு குறித்து அறிவதற்கும் பொருந்தும். 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விதிமுறை சென்னைபெங்களூரு உள்ளிட்ட 6 பெருநகரங்களில் நவ.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  2. லோகேஷ் சந்திரா 27 அக்டோபர் 2014 அன்று “India Council for Cultural Relations” (ICCR) இன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  3. மத்திய அமைச்சரவை கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை திருத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
  4. 29 அக்டோபர் 2014 அன்று அகில இந்திய வானொலி செய்திகள் சேவைகள் பிரிவு மக்களுக்கு செய்திகளை வழங்க மேலும் நான்கு மொழிகளில் இலவச எஸ்எம்எஸ் சேவையை தொடங்கியுள்ளது. தமிழ்குஜராத்தி, மலையாளம் மற்றும் அஸ்ஸாமி ஆகிய நான்கு மொழிகள் ஆகும்.
  5. 31 அக்டோபர் 2014 அன்று மத்திய நிதி செயலாளராக “ராஜீவ் மெரிஷ்” அவர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
நடப்பு நிகழ்வுகள் (2 & 3 நவம்பர் 2014)
  1. புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சதாசிவ் அமரபுர்கர் (64) நுரையீரல் தொற்று காரணமாக மும்பையில் நேற்று காலமானார்.
  2. இந்தியா “Visa on Arrival scheme” என்ற திட்டத்தின் கீழ் மொரிஷியஸ் நாட்டை சேர்க்க முடிவு செய்துள்ளது.
  3. ஜப்பான் நாட்டின் மிகஉயர்ந்த விருதாக கருதப்படும் தேசிய விருதுக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா - ஜப்பான் உறவுக்கு அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் தேசிய விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை மன்மோகன் சிங் பெற உள்ளார். கடந்த 35 ஆண்டுகளாக "இந்தியா - ஜப்பான் இடையே உறவுகளை விரிவாக்கம் செய்யவும்நட்புறவை அதிகரிக்கவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்திய மன்மோகன் சிங்கிற்கு 'தி கிராண்ட் கார்டன் ப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா ப்ளவர்ஸ்என்ற விருது வழங்கப்படுகிறது. என்று ஜப்பான் நாட்டு தூதகரம் தெரிவித்துள்ளது.
  4. துலீப் கோப்பையை போட்டியில் மத்திய மண்டல அணி, தென் மண்டல அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  5. இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது
  6. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 356 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் முலம் டெஸ்ட் போட்டியில் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பாக்கிஸ்தான் பிடித்துள்ளது.
  7. ஹாக்கி இந்தியாவின் தலைவர் “நாரிந்தர் பத்ரா” அவர்கள் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH)  செயற்குழு உறுப்பினர் ஆனார்.
  8. தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள ராமானுஜம் ஓய்வு பெற்றதையடுத்துபுதிய டி.ஜி.பி.,யாக அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராமானுஜம்  தமிழக அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. ராஜேந்திரசோழன் முடிசூட்டிக்கொண்டதன் 1000-ஆவது ஆண்டை முன்னிட்டு, இந்திய கடற்படை அதனை நினைவுகூறும் வகையில் சென்னை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை கப்பல் ஒன்றை இயக்கியது. இதனை தமிழ்நாடு மாநில ஆளுநர் கே ரோசைய்யா அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இது சோழர் கடற்படை சாதனைகளை நினைவு கூறும் வகையில் நடத்தப்பட்டது ஆகும்.
நடப்பு நிகழ்வுகள் (4 நவம்பர் 2014)
  1. 4 நவம்பர் 2014 அன்று ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அமைச்சரவை தில்லி சட்டமன்றத்தை கலைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. லோக் சபாவின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் மூன்று உறுப்பினர்களை கொண்ட தலைமை தகவல் ஆணையர் (சிஐசி) குழுவின் உரிப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டார். அந்த குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் (தலைவராக) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் உள்ளனர்.
  3. இந்திய - இலங்கை கூட்டு இராணுவ பயிற்சி இலங்கையில் உள்ள மித்ர சக்தி என்னும் இடத்தில் தொடங்கியுள்ளது. இது வரும் 23 நவம்பர் அன்று முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் உலக வர்த்தக மைய கட்டடம் மீண்டும் வர்த்தக பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
  5. “The National Council of Applied Economic Research” நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது,
  6. பில் கேட்ஸ் அவர்கள் மலேரியா நோயை கட்டுபடுட்ட 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
  7. 3 நவம்பர் 2014 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி A.P.ஷா தலைமையிலான சட்ட ஆணைக்குழு மேலும் 73 காலாவதியான சட்டங்களை அகற்ற பரிந்துரைத்துள்ளது. இதன் உடன் சேர்த்து மொத்தம் 258 சட்டங்களை அகற்ற பரிந்துரைகப்பத்துள்ளது.
  8. மத்திய அரசு நிதி சேவை செயலராக “Hasmukh Adhia” அவர்களை நியமனம் செய்துள்ளது. இதற்க்கு முன் இப்பதவியில் ஜி.எஸ். சாந்து அவர்கள் இருந்தார். தற்போது ஜி.எஸ். சாந்து அவர்கள் இரசாயன ஆயுதங்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் (5 நவம்பர் 2014)
  1. 4 நவம்பர் 2014 அன்று ஹாக்கி இந்தியா தலைவர் நாரிந்தர் பத்ரா அவர்களுக்கு மொரோக்கோவில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (ஹாக்கி) மூலம் கெளரவமிக்க “President's Award” வழங்கப்பட்டது.
  2. கர்நாடகா ஹம்பியில் ஹரப்பா நாகரிகம் சார்ந்த 20 ஓவியங்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  3. 4 நவம்பர் 2014 அன்று இத்தாலிய இயற்பியலாளர் “Fabiola Gianotti” அவர்கள் சிஈஆர்என் இன் முதல் பெண் தலைமை அதிகரியாக நியமிக்கப்பட்டார்.
  4. 4 நவம்பர் 2014 அன்று இந்திய-அமெரிக்கரான “நிக்கி ஹேலி” அவர்கள் அமெரிக்காவில் உள்ள தென் கரோலினாவில் கவர்னராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  5. எபோலா தடுப்பு மருந்து விலங்கு ஒன்றின் மீது வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்ட்டுள்ளதாக டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  6. இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் மும்பையில் அதிகமாக உள்ளனர் என்று “Internet & Mobile Association of India (IAMAI)” தெரிவித்துள்ளது. மும்பையில் 16.4 மில்லியன் பயனாளர்களும், தில்லி 12.15 மில்லியன் பயனாளர்களும் மற்றும் கொல்கத்தாவில் 6.27 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (6 நவம்பர் 2014)
  1. சச்சின் டெண்டுல்கர் அவர்களின் சுயசரிதை “Playing It My Way” என்ற புத்தகம் மும்பையில் 5 நவம்பர் 2014 அன்று வெளியிடப்பட்டது.
  2. 2014ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிக்கான ஐசிசி கனவு அணியின் கேப்டனாக இந்தியாவின் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராத் கோஹ்லிரோகித் ஷர்மாமுகமது ஷமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர்களில் எவரும் ஐசிசி டெஸ்ட் அணிக்கு தேர்வு பெறவில்லை.
  3. 3 நவம்பர் 2014 அன்று இந்தோனேஷியா அரசு சீன தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிறுவ அந்நாட்டு அரசு ஆதரவு தரும் என்று அறிவித்துள்ளது.
  4. பிரதமர் நரேந்திர மோடி 5 நவம்பர் 2014 அன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜெயப்பூர் என்ற கிராமத்தை “ஒரு எம்.பி.,ஒரு கிராமம் திட்டத்தின்” கீழ் தத்தெடுத்தார்.
  5. சஞ்சய் பவேஜா அவர்கள் “Flipkart” நிறுவனத்தின் தலைமை நிதிய அதிகாரியாக (CFO) 5 நவம்பர்2014 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. 5 நவம்பர்2014 அன்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் அவர்கள் 2014 ஆம் ஆண்டில் ஐசிசி டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் செய்தித்தாள்உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. போர்ப்ஸ் செய்தித்தாள்உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில்ரஷிய அதிபர் விளாதிமிர் புட்டீன் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாசீன அதிபர் ஜி ஜின்பிங்போப் ஆண்டவர் பிரான்சிஸ்ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி15 ஆவது இடத்தில் உள்ளார்.
  8. ஏர்டெல் நிறுவனம், லூப் மொபைல் நிறுவனத்துடன் போட்டுக்கொண்ட 700 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது.
  9. சீன கணினி தயாரிப்பு லெனோவா 2014 அக்டோபர் 30 அன்று கூகிள் இருந்து மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்தியது.
நடப்பு நிகழ்வுகள் (7 நவம்பர் 2014)
  1. 3 நவம்பர் 2014 அன்று வடகிழக்குப்பகுதி மேம்பாட்டு அமைச்சகம் 2014-15 ஆம் ஆண்டிற்க்கான அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு சாலை திட்டங்களுக்கு 90 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. மூத்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி அனிதா கபூர் அவர்கள்  5 நவம்பர் 2014 அன்று நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
  3. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நாடு முழுவதும் நவம்பர் 7 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
  4. ஹைதெராபாத் போக்குவரத்து பிரச்சினைகளை தடுக்க “H-TRIMS” என்னும்  நாட்டின் முதல் நுண்ணறிவு சமிக்ஞை அமைப்பு ஒன்றை அமைத்துள்ளது.
  5. கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்கள் 2013-14 ஆம் ஆண்டிற்க்கான ஐரோப்பிய கோல்டன் பூட் விருதை பெற்றார்.
  6. ஒசாமா - பின் - லாடனைபாகிஸ்தானில் மூன்று ஆண்டுகளுக்கு முன்சுட்டுக் கொன்ற அமெரிக்க அதிரடிப்படை, 'சீல்வீரர் ராபர்ட் ஓ நீல் என்ற வீரர் என்ற மிக ரகசியமான தகவல் வெளியாகியுள்ளது.
  7. முதல் முறையாக விஞ்ஞானிகள் ஆண்டிபயாடிக்குகள் மாற்றாக “Staphefekt” என்ற புதிய மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
  8. தெலுங்கானா மாநிலத்தின் நிதி அமைச்சர் ராஜிந்தர் அவர்கள் அம்மாநில சட்டமன்றத்தில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நடப்பு நிகழ்வுகள் (8 நவம்பர் 2014)
  1. சுஸ்லான் எனர்ஜி லிட் நிறுவனம் கட்ச்சில் உலகின் உயரமான ஹைப்ரிட் காற்றாலை ஒன்றை அமைத்துள்ளது.
  2. இந்தியா மற்றும் பூடான் நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்க புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
  3. Havells India Limited” நிறுவனத்தின் தலைவர் “Qimat Rai Gupta” அவர்கள் 7 நவம்பர் 2014 அன்று இறந்தார்.
  4. கோவா மாநில முதல்வராக லட்சுமி காந்த் பர்ஷேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளளார். கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிகர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய முதல்வரை இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  5. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க சிங்கப்பூர் அரசு ஆர்வமாக உள்ளது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
  6. உலக செஸ் சாம்பியன்ஷிப் 2014 சோசிரஷ்யாவில் தொடங்கியுள்ளது. 
நடப்பு நிகழ்வுகள் (9 & 10 நவம்பர் 2014)
  1. பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 52% குறைக்க பரிசிலித்து வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  2. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில்4 கேபிடன் அமைச்சர்கள் உள்பட 21 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார்.
    புதிய அமைச்சர் -
    மனோகர் பாரிக்கர் - பாதுகாப்பு அமைச்சர்,
    சுரேஷ் பிரபு - ரயில்வே அமைச்சர்,
    டி வி சதானந்த கவுடா - சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி,
    ரவி சங்கர் பிரசாத்: தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்,
    ஜகத் பிரகாஷ் நட்டா- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை,
    வீரேந்திர சிங் - ஊரக வளர்ச்சி
    பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் மற்றும் கழிப்பறை அமைச்சர்,
    டாக்டர் ஹர்ஷ்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    புவி அறிவியல்
  3. இந்தோ-இஸ்ரேல் கூட்டு திட்டமான “Long Range Surface-to-Air Missile LR-SAM” வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  4. இந்தியா - ஆஸ்திரேலிய ஆண்கள் ஹாக்கி அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்தியா தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன் தொடரையும் கைப்பற்றியது
  5. 2000 கி.மீ தொலைவு செல்லக்கூடிய அணுசக்தி திறன் அக்னி- II ஏவுகணை ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
  6. பிரேசிலியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை 29 வயதுடைய ஜெர்மன் வீரர் “Nico Rosberg” அவர்கள் வென்றார்.
  7. இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்று கைப்பற்றியது. தொடர்ச்சியாக இலங்கையை 6-வது ஒருநாள் தொடரில் இந்தியா வீழ்த்தியுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (11 நவம்பர் 2014)
  1. ஜாவேத் உஸ்மானி உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாகமியான்மர் நாட்டுக்கு சென்றார். மியான்மர் நாட்டில்,இந்தியா - "ஆசியான்இடையேயான 12-ஆவது உச்சி மாநாடுகிழக்கு ஆசிய அமைப்பின் உச்சி மாநாடு ஆகியவையில் பங்கேற்க  பிரதமர் நரேந்திர மோடி மியான்மருக்கு சென்றுள்ளார்.
  3. ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டநோக்கியா என்ற பெயர் நீக்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான லூமியா 535 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  4. சச்சின் டெண்டுல்கர் அவர்களின் சுயசரிதை புத்தகம் “Playing It My Way” இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று “Hachette India” தெரிவித்துள்ளது. இந்த புத்தகம் மராத்திஹிந்திகுஜராத்திமலையாளம்கன்னடம்தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. “பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜ்னா” என்ற திட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் லக்னோ பாராளுமன்ற உறுப்பினரான ராஜ்நாத் சிங் அவர்கள் லக்னோ மாவட்டத்தில் பேட்டி என்ற கிராமத்தை தத்து எடுத்துள்ளார்.
  6. மன்னன் குமார் மிஸ்ரா மற்றும்  எஸ்.பிரபாகரன் ஆகியயோர் இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மற்றும் துணை தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  7. நாட்டிலுள்ள கோடிக்கணக்கான அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் ஜீவன் பிரமான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார். இதன்படி ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மின்னணுச் சான்று வழியாக அரசுக்கு உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தற்போது ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அரசு அலுவலகங்களில் நேரில் ஆஜராகி தங்கள் இருப்பை பதிவு செய்வது கட்டாயமாக உள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (12 நவம்பர் 2014)
  1. ஆறாவது உலக ஆயுர்வேத காங்கிரஸ் (WAC) மாநாடு நவம்பர் 6 முதல் நவம்பர் 9 2014 வரை புது தில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் தீம் "Health Challenges and Ayurveda" என்பது ஆகும்.
  2. “பிரதான் மந்திரி ஜன தண் யோஜனா” (PMJDY) திட்டத்தின் கீழ் கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலும்வங்கி கணக்குகள் தொடங்கிய நாட்டின் முதல் மாநிலமாக மாறியது. இதன் முலம் கேரளா மாநிலத்தில் 13 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கி ரூ 326 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
  3. மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.
  4. புகைப்படங்களை பகிர உதவும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை இணைத்துக்கொண்டார். அவர் இணைந்த பத்தே நிமிடத்தில் 35000 பேர் அவரை பின்தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
நடப்பு நிகழ்வுகள் (13 நவம்பர் 2014)
  1. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு (2015) மே 2324 தேதிகளில் உலக முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்துறை தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
  2. அணு ஆயுதங்களை தாங்கி 1,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இலக்கை தாக்க வல்ல பாலிஸ்டிக் ஏவுகணையான “ஷாஹீன்-IIஅல்லது Hatf VI” என்று அழைக்கப்படும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்து பார்த்தது.
  3. புதுதில்லியில் இந்திய பொருளாதார உச்சி மாநாடு நவம்பர் 4, 2014 முதல் நவம்பர் 62014 வரை இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் உலக பொருளாதார மன்றம்  ஆகியவை இனைந்து நடத்தியது.
  4. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே மிக அதிகமாக 264 ரன்களைக் குவித்து இந்திய வீரர் ரோஹித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார் மற்றும் ஒருநாள் போட்டியில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்தார் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
  5. இந்தியாவின் பெருமைமிக்க மைதானமான ஈடன் கார்டன்ஸூக்கு இந்த வருடத்தோடு 150 வயது. அதற்குச் சிறப்பு சேர்ப்பதற்காகத்தான் இந்தியாஇலங்கை இடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி இங்கு நடைபெற்றது.
நடப்பு நிகழ்வுகள் (14 நவம்பர் 2014)
  1. நாசா 3பிரிண்டர் முலம் உருவாக்கிய ராக்கெட் என்ஜின் பாகங்களை சோதனை செய்து பார்த்தது.
  2. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர்  ரத்தன் டாடா அவர்கள் இன்டர்போல் பவுண்டேஷனின் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. அதிக எடையை அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிருத்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 350 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கவல்ல இந்த ஏவுகணை சாந்திப்பூர் இருந்து சோதனை செய்யப்பட்டது
  4. குழந்தைகள் தினம் நவம்பர் 14 அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் குழந்தைகள் தினம் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாலான நவம்பர் 14  அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இது ஜவகர்லால் நேரு அவர்களின் 125 ஆவது பிறந்தநாள் ஆகும்.
  5. சத்தீஸ்கரில் அரசு சார்பில் நடத்தப்பட்ட கருத்தடை சிகிச்சை முகாமில்அலட்சியமாக செய்யப்பட்ட கருத்தடை சிகிச்சை காரணமாக  12 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள்.
  6. பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் ராட்சத கருந்துளை (Black hole) இனம்புரியாத அதி-ஆற்றல் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து அனுப்புவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  7. சுமார் 14 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் பல் ஒன்று ஆய்வாளர்களால் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தாவிர உண்ணி வரிசையைச் சேர்ந்த பறவை இடுப்புடைனோசர் வகை உயிரினத்தின் பல் என்று கூறப்படுகிற‌து.
  8. விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் முதல்முறையாகவால்நட்சத்திரம் ஒன்றில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கும் முயற்சியின் இறுதிக் கட்டத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ரொசெட்டோ விண்கலத்திலிருந்து67பி/சுரியுமொவ்-கெராசிமென்கோ என்ற வால் நட்சத்திரத்தில் தரையிறக்குவதற்காக ஃபைலி ஆய்வுக்கலம் தனியே பிரிக்கப்பட்டுவிட்டது.
  9. ஐக்கிய அரபு நாடுகளின் எமிரேட்ஸின் துபாய் நகரில் பொதுமக்கள் போக்குவரத்துக்காக டிராம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் டிராம் சேவையை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது.
  10. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டிஐசிசி தலைவர் என்.சீனிவாசன்அவருடைய மருமகன் குருநாத் மெய்யப்பன்ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ராஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன் ஆகியோர் தவறிழைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
நடப்பு நிகழ்வுகள் (15 நவம்பர் 2014)
  1. ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரத்தில் தொடங்கியது. இந்த மாநாடு 15 மற்றும் 16 நவம்பர் 2014 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது. இது ஒம்பதாவது மாநாடு ஆகும்.
  2. நிலமற்ற விவசாயிகளுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வகுத்துள்ளது.
  3. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் டெல்லியில் “பால் சுவட்ச் மிஷன்” யை தொடங்கி வைத்தார். பால் சுவட்ச் மிஷன் என்பது தூய்மையான இந்தியாவை உருவாக்கும் திட்டமான ஸ்வச் பாரத் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
  4. “தேஷ் கா அப்னா சேனல்” என்ற குறிசொல்லைக் (Tagline) கொண்டு “டிடி நேஷனல்” தொலைகாட்சி சேனல் மீண்டும் தொடங்கப்படும் என்று பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.
  5. பசுமை பருவநிலையை உருவாக்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் 3 பில்லியன் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
  6. மத்திய அரசு பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வரும் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய அகதிகளுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
  7. தெற்காசியாவுக்கான ஐ.நாவின் பெண்கள் அமைப்பின் நல்லெண்ண தூதராக இந்தி நடிகர் பர்ஹான் அக்தர் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  8. இந்தியா தனுஷ் ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் ஒரு கடற்படை கப்பல் இருந்து 14 நவம்பர் 2014 அன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
  9. “இந்திய குத்துச்சண்டை (Boxing India)”  சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (16 & 17 நவம்பர் 2014)
  1. ஜி 20 உச்சி மாநாடு வரும் 2015 ஆம் ஆண்டு துருக்கி நாட்டிலும், 2016 இல்  சீனாவிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. ருமேனியா நாட்டின் புதிய அதிபராக “Klaus Werner Iohannis” அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  3. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் “சிட்னி ஆல்போன்ஸ் அரினா அரங்கில்” உரையாற்றினர்.
  4. இந்தியா, தென் கொரியா நாட்டுடன் ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு எர்ப்படுத்திக்கொள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
  5. செயில் தலைவர் சிஎஸ் வர்மா அவர்களுக்கு சிறந்த பெருநிறுவன தலைமைக்காக “ஜே.ஆர்.டி டாட்டா விருது” வழங்கப்பட்டுள்ளது.
  6. என். சீனிவாசன் அவர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று முத்கல் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  7. இந்தியா ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவைசையில் மிண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
  8. “வேர்ல்டு டூர் பைனல்ஸ்” தொடரில்உலகின் நம்பர்1’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்“ஹாட்ரிக்” பட்டம் வென்றார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஜர் பெடரர் விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக (201214) சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் ஹாட்ரிக்’ பட்டம் வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.
  9. வேர்ல்டு டூர் இரட்டையர் பிரிவு பைனலில்அமெரிக்காவின் பாப்மைக் பிரையன் ஜோடி 6762107 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவான் டோடிக்பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியை வீழ்த்திநான்காவது முறையாக (2003040914) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  10. சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் சாய்னா நேவாலும்ஆடவர் பிரிவில் கிடம்பி ஸ்ரீகாந்தும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
நடப்பு நிகழ்வுகள் (18 நவம்பர் 2014)
  1. கிசான் விகாஸ் பத்திரத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் நேற்று அறிமுகம் செய்தனர். இது ரூ.1,000ரூ.5,000ரூ.10,000ரூ.50,000 மதிப்புகளில் கிடைக்கும்.
  2. இந்தியா- அவுஸ்திரேலியா நாடுகளிடையே தண்டனை கைதிகள் பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத்துறை உட்பட ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரு நாட்டு பிரதமர்களிடையே கென்பராவில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஐந்து உடன்படிக்கைகள் - சமூக பாதுகாப்பு உடன்படிக்கை, தண்டனை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தமானது, போதைப்பொருள் ஆட்கடத்தலை முறியடித்தல் மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்தல், கலை மற்றும் கலாச்சாரத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது, சுற்றுலாத்துறை
  3. மூத்த கிளாசிக்கல் இசை கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்பதுக்காக “சுமித்ரா சாரத் ராம் விருது 2014”  17 நவம்பர் 2014 அன்று வழங்கப்பட்டது.
  4. முன்னாள் இந்திய மட்டைபந்து அணி கேப்டன் “திலிப் வெங்சர்க்கார்” அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டின் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
  5. 10 முதல் 24 வயது கொண்ட 356 மில்லியன் இளைஞர்கள் கொண்டு உலகில் அதிமான இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்று ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்த இடத்தை சீனா பிடித்துள்ளது.
  6. நிதி சேவைகள் துறையின் செயலாளரான “Hasmukh Adhia” அவர்களை மத்திய அரசு  ரிசர்வ் வங்கியின் “Central Board of Directors” இன் இயக்குனராக நியமித்துள்ளது.
  7. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த “Hashoo Group “ என்னும் தொழில்துறை குழுக்கலின் தலைவரான சத்ருத்தின் ஹஸ்வனி அவர்கள் எழுதிய “Truth Always Prevails” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
  8. Myntra.com அதன் விளம்பரத் தூதராக கங்கனா ரனாத் அவர்களை நியமனம் செய்துள்ளது.
  9. அசாம் அரசு 17 நவம்பர் 2014 அன்று கவுகாத்தியில் நடந்த விழாவில் மாநிலத்தின் முதல் வீரதீர விருதை 15 வயதான குஞ்சன் சர்மா என்பவர்க்கு வழங்கியது.
  10. TSR சுப்ரமணியம் குழு சூழலில் சட்டத்தின் மீதான அறிக்கையை சமர்ப்பித்தது.
  11. 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை மாநில முதல்வர் ஆனந்திபென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் இன்று சமர்பித்தது.
  12. அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை 2013-14-ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது மேலும் இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் சீனாவில் இருந்து  வருகின்றனர் அதற்க்கு அடுத்து இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்துக்கு மேல் மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர்.
  13. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அவர்களுக்கு பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.
  14. இந்தியாசீனா கூட்டு இராணுவ பயிற்சியை " Hand-in-Hand" புனேவில் தொடங்கியது.
நடப்பு நிகழ்வுகள் (19 நவம்பர் 2014)
  1. 2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்குஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
  2. உலக கழிவறை தினம் 19 நவம்பர் 2014 அன்று கடைபிடிக்கப்பட்டது. உலகில் 2.5 பில்லியன் மக்கள் சரியான சுகாதார வசதிகள் இல்லை என்று ஐநா தெரிவித்துள்ளது.
  3. இந்தியா பிஜி நாட்டுக்கு மின் உற்பத்தி மற்றும் சர்க்கரை தொழிற்சாலை மேம்படுத்த 75 மில்லியன் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது மற்றும் அந்நாட்டு கிராமங்களை முனேற்ற 5 மில்லியன் நிதி வழங்கியுள்ளது, மேலும்  பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாடும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
  4. சர்வதேச பெளத்த மாநாடு 2014 லும்பினிநேபாலத்தில் 15 நவம்பர் 2014 முதல் 18 நவம்பர் 2014 வரை நடைபெற்றது.
  5. இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்ய மற்றும் பணம் திரும்ப பெற ஒரு ஸ்மார்ட் சேவை மையத்தை தொடங்கியுள்ளது.
  6. ஆந்திரா வங்கி 10 முதல் 15 வயது உடைய குழந்தைகள் வங்கி கணக்கு தொடங்க “AB லிட்டில் ஸ்டார்ஸ” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
  7. Verse” என்னும் தனது புதிய  மின்னஞ்சல் சேவையை ஐபிஎம் தொடங்கியுள்ளது.
  8. இந்திரா காந்தி ராஜ்பாஷா விருதை ரப்பர் வாரியம் பெற்றது.
  9. அமெரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 18 வயதான பெண் குழந்தை நேஹா குப்தாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதி பரிசு அளிக்கப்பட்டது
  10. ஆசிய அபிவிருத்தி வங்கி மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள  சாலைகளை மேம்படுத்த 350 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  11. 'அமுல் நிறுவனம் மேற்கு வங்கத்தில் ரூ 200 கோடி மதிப்புள்ள புதிய அலை ஒன்றை அமைக்க உள்ளது.
  12. இந்திய ஹாக்கி பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  13. மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் இருந்து டெல்லி வந்த வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடப்பு நிகழ்வுகள் (20 நவம்பர் 2014)
  1. கோடக் மகேந்திரா வங்கிஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் அனைத்து பங்குகளையும் வாங்கும் தனது முடிவை அறிவித்தது.
  2. எஸ்பிஐ வங்கி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க “அதானி குரூப்” நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர்கள் கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது.
  3. இந்தியாவின் டெக் மஹிந்திரா நிறுவனம் அமெரிக்கவை சேர்ந்த “Lightbridge Communications Corporation (LCC)” நிறுவனத்தை 240 மில்லியன் டாலர்க்கு கையகப்படுத்தியது.
  4. இந்தியாவின் 45-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது.
  5. அழிவின் விளிம்பில் உள்ள காட்டு பன்றி இனமான “பிக்மி ஹாக்” என்னும் பன்றியை கொண்ட உலகில் உள்ள ஒரே மிருகக்காட்சிசாலை அசாம் உயிரியல் பூங்கா ஆகும்.
நடப்பு நிகழ்வுகள் (21 நவம்பர் 2014)
  1. இந்தியா ரயில்வே துறை 26 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலையை ராஜஸ்தானில் அமைக்க முடிவு செய்துள்ளது.
  2. இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று ஒபாமா அவர்கள் வரும் 2015 குடியரசு தினவிழாவில் பங்கேற்க வர உள்ளார்.
  3. Think in India” என்ற புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் முலம் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய யோசனைகளை வெளிகொண்டு வர மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  4. தில்லி பங்குச் சந்தையில் ஏற்ப்பட்ட முக்கிய ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் தொடர்பாக பங்குசந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) அமைப்பு அதன் அதிகாரத்தை ரத்து செய்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (22 நவம்பர் 2014)
  1. தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களை மின்மயமாக்க ரூ 43,033 கோடி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. பிரதான் மந்திரி ஜன தண் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில், 74% கணக்குகள் “zero balance (பணம் ஏதும் இல்லாமல் உள்ளது)” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் உடைக்கும் பணி தொடங்கியுள்ளது.
  4. குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காகஐக்கிய நாடுகள் மன்றம் முதன்முறையாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் உலகின் பல நாடுகளில் குழந்தைத் திருமண நடவடிக்கைகள் பெருமளவு தடுக் கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  5. ஆனந்த்-கார்ல்சன் இடையே நேற்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்று ஆட்டம் மிக பரபரப்பாக நடந்தது. இதில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
நடப்பு நிகழ்வுகள் (23 & 24 நவம்பர் 2014)
  1. தீபக் குப்தா அவர்கள் யு.பி.எஸ்.சி யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்க்கு முன் இப்பதவியில் ரஜினி ரஸ்தான் அவர்கள் இருந்தார்
  2. பதினெட்டாம் சார்க் மாநாடு நேபால் தலைநகரமான காத்மாண்டுவில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு தேதிகளிலும் நடைபெறுகின்றது.
  3. மூத்த காங்கிரஸ் தலைவர் முரளி தியோரா அவர்கள் மரணம் அடைந்தார்.
  4. ஆஸ்திரேலியா,  தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்து ஒருநாள் போட்டிகள் சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.
  5. டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டியில்பிரான்ஸ் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. நேற்று நடந்த முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சுவிஸ் வீரர் பெடரர் 6-26-26-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் ரிச்சர்ட் காஸ்கேவை வீழ்த்தினார்.
  6. லூயிஸ் ஹாமில்டன் அவர்கள் அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் ஃபார்முலா ஒன் பட்டத்தை வென்றார்.
  7. ஹுசைன் சாகர் ஏரியைச் சுற்றிலும் 40 முதல் 60 கட்டிடங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது. மேலும் சஞ்சீவய்யா பூங்கா அமைந்துள்ள இடத்தில் உலகின் மிக உயரமான கட்டிடத்தைக் கட்ட முடிவெடுத்துள்ளது தெலங்கானா அரசு.
  8. கேரளத்தைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் இலியாஸ் சவராகன்னியாஸ்திரி யூஃப்ரேசியா ஆகியோருக்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வழங்கினார்.
  9. 20 நாடுகள் பங்கேற்கும் அம்மா உலக கோப்பை’ கபடிப் போட்டி வரும் பிப்ரவரி மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
  10. ஆசிய பீச் கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. தாய்லாந்தின் புகெட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்திய அணி 61-28 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
நடப்பு நிகழ்வுகள் (25 நவம்பர் 2014)
  1. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சி.கே. பிரசாத் அவர்கள் இந்திய பிரஸ் கவுன்சிலின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திபதி மார்க்கண்டேய கட்ஜுக்கு பிறகு இப்பதவிக்கு வருவர்.
  2. கோடக் மகிந்திராவுக்கு “பொது காப்பீட்டு வணிகத்தில் நுழைய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
  3. பிரதமர் மோடி  அவர்கள் சார்க் உச்சிமாநாட்டில் பங்குபெற நேபால் நாட்டுக்கு சென்றுள்ளார்.
  4. அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் “சக் ஹெகல்” அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  5. புகழ்பெற்ற கதக் நடன கலைஞர் “சித்தாரா தேவி” அவர்கள் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது 94 வயதில் மரணமடைந்தார்.
  6. நேபால் நாட்டு அரசு 1 பில்லியன் மதிப்புள்ள 900 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின் நிலையம் அமைக்க இந்திய நிறுவனமான “Satluj Jal Vidyut Nigam (SJVN)” க்கு அனுமதி வழங்கியுள்ளது.
  7. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  8. தில்லி - சென்னை இடையே அதிவேக புல்லட் ரயில் சேவைக்கான வழித்தடம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயவும்,தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் இந்திய ரயில்வேயின் உயர்நிலைக் குழுவினர்சீனாவுக்கு சென்றுள்ளனர்.
  9. மேற்கு வங்க ஆளுநர் கே.என் திரிபாதி அவர்கள் பீகார் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநில ஆளுநராக கூடுதலாக கவனிக்க உள்ளார்.
  10. ஷாருக் கான் அவர்கள் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான “DHFL” இன் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  11. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்’ பிலிப் ஹியுஸ் வேகப்பந்துவீச்சால் தலையில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் (26 நவம்பர் 2014)
  1. நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) 18-ஆவது உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி சார்க் அமைப்பில் உள்ள நாடுகளைச் சேர்ந்தோருக்குஉடனடி மருத்துவ விசா3 முதல் 5 ஆண்டுகள் வரை வர்த்தக விசா உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
  2. மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தில்லி சிறப்பு போலீஸ் அமைக்க சட்ட மசோதா2014 நிறைவேற்றப்பட்டது. சிபிஐ தலைவர் நியமனத்தில் இந்த மசோதா முலம் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
  3. ஹரியானா அரசு அம்மாநிலஅரசு உழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ல் இருந்து 58 ஆக குறைத்துள்ளது.
  4. சானியா மிர்சா அவர்கள் தெற்காசியாவுக்கான ஐ.நா. பெண்கள் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. குத்துசண்டை வீரர் மனோஜ் குமார் அவர்களுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்த் சோனாவால் அவர்கள் மதிப்புமிக்க அர்ஜுனா விருதை வழங்கினர்.
  6. அமெர்க்காவின் நிச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் அவர்கள் 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஆண் தடகள வீரர் என்ற விருதை பெற்றார்.
நடப்பு நிகழ்வுகள் (27 நவம்பர் 2014)
  1. 18” ஆம் சார்க் உச்சிமாநாடு காட்மாண்டுவில் முடிவடைந்தது. அடுத்த உச்சிமாநாடு வரும் 2016 இல் இஸ்லாமாபாத்தில் நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. சார்க் நாடுகளுக்கு இடையே தடையற்ற மின்சார கட்டமைப்பு அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  3. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் தலையில் ஏற்ப்பட்ட காயங்கள் காரணமாக இறந்தார்.
  4. முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி சி.கே. பிரசாத் அவர்கள் இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக பொறுப்பேற்றார்.
  5. சமஸ்கிருத கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை முன்றாவது மொழி பாடமாக இருக்கும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  6. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் “The Dramatic Decade on 1970s era” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
  7. பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கபடமாட்டாது என்று தெரிவித்துள்ளது.
  8. பிக்ஸிங்கில் என பல முறைகேடுகளில் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நீக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
  9. டிவி நிகழ்ச்சி ஒன்றில் மதத்தை அவமதித்தாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நடிகை வீணா மாலிக்அவரது கணவர் மற்றும் டிவி சேனல் உரிமையாளர் ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது
நடப்பு நிகழ்வுகள் (28 நவம்பர் 2014)
  1. இந்தியா, மொசாம்பிக் நாட்டுடன் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒத்துழைப்பு மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  2. உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் அனூப் மிஸ்ரா அவர்கள் மக்களவையின் புதிய பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 18 ஆவது மாவட்டமாக “நம்சாய்” 25 நவம்பர் 2014 அன்று அதிகாரப்பூர்வமாக அம்மாநில முதலமைச்சர் நபம் துகி அவர்கள் தெரிவித்தார்.
  4. சேதுசமுத்திரத் திட்டத்தை பாம்பன் பகுதி வழியாக நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
  5. நாட்டின் பொருளாதார வளர்ச்சி செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 5.3 சதவீதத்தை எட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் இது 5.7 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிகழ்வுகள் (29 நவம்பர் 2014)
  1. தங்கம் மீது 80:20 என்ற விதிமுறையை மத்திய அரசு இதுவரை விதித்திருந்தது. இந்த விதிமுறையை ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தியுள்ளது. தங்க இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த விதி கொண்டுவரப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பில் 20 சதவீதம் கட்டாயம் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வேலையிடங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் போன்ற உட்புற பொது இடங்களில் புகை பிடித்தல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  2. ஜெனரல் எஸ் பத்மநாபன் அவர்கள் எழுதிய “Next China-India War - World's First Water War – 2029” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இவர் ஆபரேஷன் பராக்கிரம் இல் முக்கிய பங்கு வகித்தவர் ஆவர்.
  3. நாசா செவ்வாய்க்கு “மரைனர் 4” என்ற முதல் செவ்வாய் பயணத்தை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடியது.
  4. ஜி.கே.வாசன் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கியுள்ளார்.
  5. இந்தியா நேபால் இடையே முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இது முதல் கட்டமாக டெல்லி – காத்மாண்டு வரை தொடங்கப்பட்டுள்ளது.
  6. மேகாலயா மாநிலத்தை ரயில்வே வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் வகையில்முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அசாம் மாநிலத்தின் கவுகாத்தி மேகாலயாவின் மெண்டிபதார் இடையே இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயிலை கவுகாத்தியில் இருந்தப்படி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நடப்பு நிகழ்வுகள் (30 நவம்பர் 2014)
  1. திட்டக்கமிஷனை கலைத்துவிட்டு புதிதாக பிரதமர் தலைமையில் “Inter-State council, plan evaluation office, UIDAI and DBT” ஆகிய நான்கும் பிரிவுகள் உடைய புதிய அமைப்பை மத்திய அரசு அமைக்க உள்ளது.
  2. 2014-ஆம் ஆண்டிற்கான 'டைம்ஸ்இதழின் சிறந்த நபருக்கான இறுதிப்பட்டியலில் பிரதமர் மோடி அவர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
  3. ஆஸ்திரேலியா கிரிக்கெட்  வாரியம் அந்நாட்டு வீரர்கள் பிலிப் ஹியூஸ் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை ஒத்தி வைத்துள்ளது.
  4. உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில்இந்தியாவின் நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானியை சீனாவின் 14 வயதுடைய இளம் வீரர் யான் பிங்டாவ் வீழ்த்தினார்.
  5. மக்காவு ஓபன் பாட்மின்டன் தொடரில் இளம் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று நடந்த பைனலில்,கனடாவின் லி மிச்செல்லியை வீழ்த்தினார்.
  6. இஸ்ரேல் நாட்டில் அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 60 வயதான ஹிலல் ஆஸ்கர் நடுவராக பணியாற்றினார். பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தபோதுஅதிலிருந்து அவர் தப்பிக்க முயன்ற போதுபந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் கீழே விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....