My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Thursday, September 4, 2014

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் - 2014

நடப்பு நிகழ்வுகள் (1 ஆகஸ்ட் 2014)
  1. ரிசர்வ் வங்கி புதிய துணை கவர்னராக எஸ் எஸ் முந்திரா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வங்கிகள் மேற்பார்வைநாணய மேலாண்மைநிதி ஸ்திரத்தன்மை மற்றும் கிராமப்புற கடன் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்த பதவியில் மூன்று ஆண்டு காலத்துக்கு இருப்பார்.
  2. முன்னாள் வெளிவிவகார துறை அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான “கன்வர் நட்வர் சிங்” அவர்கள் எழுதிய சுயசரிதை புத்தகமான “One Life is Not Enough” என்ற புத்தகம் ஆகஸ்ட் 1, 2014 அன்று வெளியிடப்பட்டது.
  3. 30 ஜூலை 2014 அன்று கன மழை காரணமாக புனே அருகே உள்ள மாலின் கிராமத்தில் ஏற்ப்பட்ட நிலச்சரிவு காரணமாக 41 நபர்கள் உயிர் இழந்தனர்.
  4. ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வருகின்ற காமன்வெல்த் விளையாட்டுக்கள் இடம்பெற்ற ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்திய விராங்கனை தீபா கர்மாகர் வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார்.இதன் மூலம் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனைப் பெயரைப் அவர் பெற்றுள்ளார்.இப் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த வீராங்கனை கிளாடிய முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும் கனடாவைச் சேர்ந்த எலிசபெத் வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.முன்னர் 2010 ஆம் ஆண்டு இந்திய வீரர் ஆஷிஷ் குமார் ஜிம்னாஸ்டிக் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  5. தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் நெக்சால் சாந்துநேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை 31 ஜூலை 2014 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏற்றார்.
  6. பச்சேந்தரி பால்மவுண்ட் எவரெஸ்ட்டை ஏறிய முதல் இந்திய பெண் அவர்களுக்கு பெங்காலி கிளபின் மிக உயர்ந்த விருதான “பாரத் கவுரவ்”  விருது வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (2 ஆகஸ்ட் 2014)

  1. இந்த ஆண்டின், 'ராஜீவ் சத்பாவனாவிருதைபிரபல பாலிவுட் இயக்குனர்முசாபர் அலி69பெறுகிறார். மத நல்லிணக்கம்அமைதி போன்றவற்றிற்காக வழங்கப்படும் இந்த விருதுடன்ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். இவர், 'உம்ராவ் ஜான்போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இந்த விருதை இதற்கு முன்அன்னை தெரசாமுன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்உஸ்தாத் பிஸ்மில்லா கான்பாடகி லதா மங்கேஷ்கர்நடிகர் சுனில் தத் போன்றோர் பெற்றுள்ளனர்.
  2. இந்திய ரிசர்வ் ஹைதெராபாத்தில் இயங்கும் வாசவி கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் என்ற வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
  3. 2010 காமன்வெல்த்தில் வெள்ளி பதக்கம் வென்ற வட்டு எறிதல் வீரரான விகாஸ் கவுடா காமன்வெல்த் 2014 இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி 63.64 மீ்ட்டர் தொலைவுக்கு வன்தட்டை எறிந்து தங்க பதக்கம் வென்றார். ஆண்கள் தடகள விளையாட்டு பிரிவில் 56 ஆண்டுகளுக்கு பிறகு தங்க பதக்கம் வென்ற முதல் நபர் இவர் ஆனார். இதற்க்கு முன்பாக மில்கா சிங் கடந்த 1958 ஆம் ஆண்டு தங்கம் வென்ற முதல் இந்தியார் ஆவர்.
  4. 1 ஆகஸ்ட் 2014 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் நாட்டின் குற்றவியல் நீதி வழங்க துரிதமான ஒரு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
  5. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ ரூ 50 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான எஸ்.கே. ஜெயின் உட்பட ஆறு நபர்களை கைது செய்துள்ளது. வங்கி விதிகளை மீறி சில நிறுவனங்கள் கடன் வரம்பை அதிகரிக்க இவர் லஞ்சம் பெற்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (3 & 4 ஆகஸ்ட் 2014)

  1. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அந்நாட்டுடன் இந்தியா 3ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. முதல் ஒப்பந்தம்நேபாளத்துக்கு அயோடின் கலந்த உப்பு வழங்குவது தொடர்பானது. இதற்காக நேபாள ரூபாய் மதிப்பில் 69 மில்லியன் (இந்திய ரூபாயில் சுமார் 4.5 கோடி) நிதி உதவி வழங்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இரண்டாவது ஒப்பந்தம், பஞ்சேஸ்வர் பன்னோக்குத் திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உடன்பாட்டில் இரு பிரிவுகளில் திருத்தம் கொண்டுவருவதாக இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டமானதுஇந்திய-நேபாள எல்லைப் பகுதியில் மஹாகாளி நதியின் குறுக்கே அமையவுள்ள நீர் மின் திட்டம் தொடர்புடையதாகும். மூன்றாவதுதூர்தர்ஷன் மற்றும் நேபாள அரசின் தொலைக்காட்சி நிறுவனம் இடையேயான பரிமாற்றம் குறித்த ஒப்பந்தமாகும்.
  2. சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆங்கில திறனறிதல் தொடர் பான மதிப்பெண்கள்மாணவர் கள் அடுத்த கட்டத் தேர்வில் பங்கேற்பதற்கான தரப்படுத்து தல் மற்றும் தகுதி மதிப்பீட் டிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது என்று மத்திய அரசு அறிவித் துள்ளது.
  3. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, கிளாஸ்கோவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடுவர் வீரேந்திர மாலிக்கை இடை நிக்கம் செய்துள்ளது.
  4. கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் 2014 முடிவு பெற்றது. இந்தியா 64 பதக்கங்களை பெற்று 5 வது இடத்தை பிடித்தது.

நடப்பு நிகழ்வுகள் (5 ஆகஸ்ட் 2014)

  1. மத்திய அரசாங்கம் கன்டெய்னர் கார்பரேசன் ஒப் இந்தியா லிமிடெட் (CONCOR) நிறுவனத்துக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. நாசா, செவ்வாயில் உயிர்கள் வாழும் சுழல் குறித்து ஆராய  “Mars 2020 rover mission” என்ற புதிய ரோவரை வரும் 2020 அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
  3. மம்தா சர்மாபெண்கள் தேசிய ஆணையத்தின் (NCW) தலைவர் 2014 ஆகஸ்ட் 1 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் இந்த பதவியில் முன்று ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
  4. அரவிந்த் குப்தாமுன்னாள் இந்திய வெளியுறவு துறை அதிகாரி4 ஆகஸ்ட் 2014 அன்று துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (NSA) நியமிக்கப்பட்டார்.

நடப்பு நிகழ்வுகள் (6 ஆகஸ்ட் 2014)

  1. பிரசார் பாரதி மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த “Deutsche Welle” ஆகிய இரண்டு நிறுவனங்களும்  தூர்தர்ஷன் சேனலை வெளிநாட்டுகளில் ஒளிபரப்ப புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
  2. சாசா சவுதாரி மற்றும் சாபு போன்ற காமிக் புத்தக கதாப்பாத்திரங்களை உருவாக்கிய பிரபல கார்ட்டூனிஸ்ட், பிரான் குமார் சர்மா அவர்கள் 6 ஆகஸ்ட் 2014 அன்று இறந்தார்.
  3. சீனா வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் பெய்ஜிங் நகரத்தில் நிலக்கரி பயன்படுத்த தடை செய்ய முடிவு செய்துள்ளது.
  4. 6 ஆகஸ்ட் 2014 அன்று எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசி அவர்கள் 145 ஆண்டு கால பழைய வரலாற்று சிறப்பு மிக்க சூயஸ் கால்வாயுடன் இணைந்து ஒரு புதிய சூயஸ் கால்வாயை உருவாக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நடப்பு நிகழ்வுகள் (7 ஆகஸ்ட் 2014)

  1. ஜனாதிபதி அவர்கள் மிசோரம் மாநில கவர்னர் “கமலா பெனிவல்” அவர்களை ஆகஸ்ட் 2014 அன்று பணி நீக்கம் செய்துள்ளார். அவரது பதவி காலம் முடிய இரண்டு மாதங்கள் இருக்கும் முன்பு அவர் பதவி நிக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  2. ஆகஸ்ட் 2014 3 ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வுஅனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுகளை பெண் குழந்தைகள் கருக்கொலை பற்றி தகவல்களை தர உத்தரவு பிறப்பித்துள்ளது.
  3. சுகாதார துறை அமைச்சகம் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை எபோலா வைரஸ் சோதனை நிலையங்களை விமான நிலையத்தில் அமைக்க கேட்டுள்ளன.
  4. மேற்க்கத்திய நாடுகளில் இருந்து விவசாயம் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்ய விளாடிமிர் புட்டின் அவர்கள் தடை விதித்துள்ளார்.
  5. நீதிபதி Dr. மஞ்சுளா செல்லூர் அவர்கள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். மேற்கு வங்க கவர்னர் கேஷரி நாத் திரிபாதி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
  6. மத்திய அமைச்சரவை பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை 26 சதவீதமாக இருந்து 49 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
  7. எபோலா வைரஸ் காரணமாக லைபீரியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (8 ஆகஸ்ட் 2014)

  1. எட்வார்ட் ஸ்னோவ்டென் அவர்களை ரஷ்யாவில் மூன்று ஆண்டு வசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  2. ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரொசெட்டா வின்கலம்சி ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் 67பி/சுரிமோவ்-கெரசிமென்கா வால் நட்சத்திரத்தை அடையும் முதல் வின்கலம் ஆகும். இந்த வால் நட்ச்சத்திரம் கடந்த 1969 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வின்கலம் 10 ஆண்டுகள்ஐந்து மாதங்கள் மற்றும் நான்கு நாட்கள் விண்வெளியில் பயணம் செய்து அந்த வால் நட்சத்திரத்தை அடைந்து உள்ளது.
  3. 7 ஆகஸ்ட் 2014 அன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்கள் பாராளுமன்ற பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் தலைமையில் குழுவை நியமித்தார்.
  4. மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா என்ற ஆட்கொல்லி வைரஸ் குறித்து சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  5. முன்னாள் இந்திய கிரிக்கெட் ஆணி வீரர் கபில் தேவ் அவர்கள் 7 ஆகஸ்ட் 2014 அன்று அர்ஜுனா விருது தேர்வு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடப்பு நிகழ்வுகள் (9 ஆகஸ்ட் 2014)
  1. SHERLOC, நாசா செவ்வாய்க்கு அனுப்பும் “Mars 2020 rover mission” இல் அனுப்ப உள்ள ஏழு ஆய்வு கருவிகளில் இதுவும் ஒன்று. SHERLOC - Scanning Habitable Environments with Raman & Luminescence for Organics and ChemicalsSHERLOC ஒரு ஸ்பெக்ட்ரோமீட்டர், இது புற ஊதா கதிர்களை பயன்படுத்தி துல்லியமாக படம் எடுக்க முடியும். SHERLOC - செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் ராமன் ஸ்பெக்ட்ரோமீட்டர் இது ஆகும்.
  2. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ரகசியத்தை பாதுகாக்க "டோட்டலைசர்என்ற நவீன இயந்திரத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம்மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தத் தகவலை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
  3. ஜப்பானின் நாகசாகி நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 69-வது ஆண்டு நினைவுதினம் 9 ஆகஸ்ட் 2014 அன்றுஅனுசரிக்கப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் (10 & 11 ஆகஸ்ட் 2014)

  1. ஈரான் பயணிகள் விமானம் மேஹ்ரபாத் (Mehrabad)  விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் 8 விமான குழு உறுப்பினர்கள் உட்பட 39 பயணிகள் இறந்தனர்.
  2. இந்திய பெண்கள் அணி உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
  3. நரேந்திர மோடி அவர்கள் “Gujarat's success story in Water Management” என்ற தலைப்பில் “Sriram Vedire” அவர்கள் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது.
  4. தில்லி போலீஸ் ஊழலை கட்டுப்படுத்த , Whatsapp  ஹெல்ப்லைன் ஒன்றை தொடங்கியுள்ளது.
  5. K.V. Chowdary” அவர்கள் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
  6. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே மற்றும் கார்கில் பகுதிகளில் 2 புதிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.லே - ஸ்ரீநகர் இடையேயான 349 கி.மீ. தூர மின் திட்டத்தை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர்.

நடப்பு நிகழ்வுகள் (12 ஆகஸ்ட் 2014)
  1. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில்இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
  2. துருக்கியில் முதன்முதலாக பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற அதிபர் தேர்தலில்தற்போதைய பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் வெற்றி வெற்றுள்ளார். இதனை துருக்கி தலைமைத் தேர்தல் ஆணையர் சதி குவென் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
  3. ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும்தனது அபாரமான நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களை வசீகரித்தவருமான “ராபின் வில்லியம்ஸ்” தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 63.
  4. ஹைதர் அல்- இபாதி அவர்களை ஈராகின் புதிய பிரதமராக அந்நாட்டு ஜனாதிபதி முகமது புவாட் மாஸும் அவர்கள் அறிவித்தார்.
  5. உலக யானை தினம் ஆகஸ்ட் 12 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது
  6. ஜெர்மனி கால்பந்து விளையாட்டு வீரர் “மிராஸ்லாவ் குலோஸ்” அவர்கள் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

 நடப்பு நிகழ்வுகள் (13 ஆகஸ்ட் 2014)
  1. அருண் ஜேட்லி, கரண் சிங், சரத் யாதவ் ஆகியோருக்கு மிகச் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதுகள்வழங்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டிற்கு அருண் ஜேட்லிக்கும், 2011 ஆம் ஆண்டிற்கு கரண் சிங் அவர்களுக்கும், மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கு சரத் யாதவ் அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
  2. ஹரப்பா நாகரிகத்தின் உடன் தொடர்பான தாமிரத்தால் ஆனா கிரீடம் சூடிய மனித மண்டை ஓடு ஒன்றுஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பக்பட் மாவட்டத்தில் உள்ள Chandayan கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  3. ஆகஸ்ட் 12 அன்று கபில் தேவ் தலைமையில் தேர்வு குழு 2014 ஆம் ஆண்டிற்க்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னாவிருதுக்கு யார் பெயரையும் பரிந்துரைக்கவில்லை.

நடப்பு நிகழ்வுகள் (14 ஆகஸ்ட் 2014)

  1. 2015 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராகிளைடிங் உலக கோப்பை போட்டி நடத்த இந்தியாவில் இமாச்சல பிரதே மாநிலத்தில் நடத்த தேர்வு செய்துள்ளன.
  2. ஆந்திரப் பிரதேச அரசு விஜயவாடாவை தற்காலிக தலைநகராக செயல்பட முடிவு செய்துள்ளன.
  3. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் அரை இறுதி அடைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை “குஷ்குமார்” அவர்கள் பெற்றார்
  4. மத்திய அரசாங்கம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக நான்கு நெடுஞ்சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கி ரூ 8000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (15 & 16 ஆகஸ்ட் 2014)
  1. சீனா தனது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கவல்ல (Intercontinental Ballistic Missile) அடுத்த தலைமுறை ஏவுகளைடோங்ஃபெங் – 41 யை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை 12000 கி.மீ முதல் 15000 கிமீ வரை சென்று தாக்கவல்லது ஆகும்.
  2. மத்திய அரசு 60 வயதுக்கு மேற்ப்பட்ட குடிமக்கள் நலனுக்காக வரிஸ்த ஓய்வூதிய பீமா யோஜனா திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (19 ஆகஸ்ட் 2014)
  1. இலங்கை நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
  2. ரோஜர் பெடரர் சின்சினாட்டி டென்னிஸ் ஓபன் பட்டத்தை வென்றார்
  3. ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
  4. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் பாரதி ஃபவுண்டேஷன் ஆகஸ்ட் 18 அன்று Clean India Campaign” என்ற திட்டத்துக்கு ரூ 200 கோடி ரூபாய் செலவிட அறிவித்துள்ளன.

நடப்பு நிகழ்வுகள் (20 ஆகஸ்ட் 2014) 
  1. உலக புகழ் பெற்ற யோகா குரு BKS  ஐயங்கார் தனது 96 ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
  2. மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தாமஸ் அவர்கள் நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். இதற்க்கு முன் இப்பதவியில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இருந்தார்.
  3. ஐடிபிஐ வங்கி கிராமப்புற பள்ளிகளில் கழிவறை கட்ட ரூ 9 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
  4. 2015-16 ஆம் ஆண்டை “நீர் பாதுகாப்பு ஆண்டக” கடைப்பிடிக்கவேண்டும் என்று  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
  5. இந்தியா மற்றும் செக் குடியரசு ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேற்கொள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திட்டுள்ளன.
  6. பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலர் அனுஜ் குமார் பிஷ்னோயின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  7. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீலா படேல் என்பவருக்கு சிறந்த பெண் ஆராய்ச்சியாளருக்கான விருது கிடைத்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (21 ஆகஸ்ட் 2014)
  1. பிரிட்டனின் லண்டன் நகரில் ஹிந்து கோயில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பசுமை தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள உலகின் முதல் கோயில் என்ற பெருமையைப் பெறுகிறது.மத்திய அமைச்சரவை நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. உச்ச நீதிமன்றம், சட்ட ஆணைக்குழுவின் நீதித்துறையில் நிலுவை மற்றும் பின்விவரங்கள் அடங்கிய 245 ஆவது  அறிக்கைக்கு பதிலளிக்காத 14 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்துக்கு ரூ 25000 அபராதம் விதித்துள்ளது.
  3. பங்களாதேஷ் நாடு புதிதாக அமைக்கப்பட உள்ள பிரிக்ஸ் வங்கியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது.
  4. ஆந்திர சட்டசபையில் ரூ. 1.11 லட்சம் கோடியில் 2014-15-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
  5. தாய்லாந்து நாட்டின் பிரதமராக அந்நாட்டு ராணுவ தளபதியான ப்ரயுத் சான் ஓ சா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  6. உலகிலேயே மிக முதிய ஆண் ஜப்பானில் வசிக்கிறார். அவருக்கு வயது 111. இதை கின்னஸ் சாதனைப் புத்தகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  7. உலகின் செல்வாக்குமிக்க நகரங்களில் லண்டன் முதலிடத்தில் உள்ளது.உலகில் அதிக செல்வாக்குமிக்க நகரங்கள் குறித்து `போர்ப்ஸ்இதழ் அண்மையில் ஆய்வு நடத்தியது.

நடப்பு நிகழ்வுகள் (22 ஆகஸ்ட் 2014)
  1. ஹாக்கி மத்திய பிரதேசம், இந்தியா ஹாக்கி கூட்டமைப்பின் 23 ஆவது  இணை உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது.
  2. சட்டவிரோதமாக க்ரூகர் தேசிய பூங்காவில் இருந்து வேட்டையாடுவதை தடுக்க 500 காண்டாமிருகங்களை வெளியேற்ற தென் ஆப்பிரிக்கா அரசு முடிவு செய்துள்ளது.
  3. 21 ஆகஸ்ட் 2014 அன்று தில்லி மேம்பாட்டு ஆணையம் “Master Plan of Delhi-2021” என்ற திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
  4. ஆப்கானிஸ்தான் 2014 ஆகஸ்ட் 19 அன்றுதனது 95 வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இது1919 ஆம் ஆண்டு ஆங்கிலோ-ஆப்கான் உடன்படிக்கை கையெழுத்தான நாளை குறித்து கொண்டாடப்படுகிறது.
  5. டிஎம் பாசின் அவர்கள் இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடப்பு நிகழ்வுகள் (23 ஆகஸ்ட் 2014)
  1. ஞானபீட விருது பெற்ற புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்த்மூர்த்தி அவர்கள் பெங்களூரில் தனது 82 ஆவது வயதில் இறந்தார்.
  2. சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில்2வது யூத்’ ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இதன் ஆண்களுக்கான 77 கி.கி.,எடைப்பிரிவு பளுதுாக்குதலில்இந்தியாவின் வெங்கட் ராகுல் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  3. சத்தீஸ்கர் மாநிலத்தில்அடுத்த மூன்று மாதங்களுக்குள் சுமார் ஒரு லட்சம் கழிப்பறைகளைக் கட்டுவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  4. உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டரேடார் போன்ற சாதனங்களின் கண்காணிப்பில் சிக்காதநீர்மூழ்கி எதிர்ப்பு ரகசியப் போர்க் கப்பலான "ஐஎன்எஸ் கமோர்ட்டா', விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் (24 & 25 ஆகஸ்ட் 2014)
  1. நாசாவின் விஞ்ஞானிகள் வறட்சி ஏற்ப்படுவதை தடுக்கும் வகையில் புதிய வகை செயற்கைக்கோள் “Soil Moisture Active Passive “ ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது உள்ளூர் விவசாய மற்றும் தண்ணீர் தகவல்களை சேகரித்து அதன் முலம் வறட்சியை கட்டுபடுத்தும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
  2. மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்த புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வென்ற பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரிச்சர்டு அட்டன்பரோ அவர்கள் லண்டனில் இறந்தார்.
  3. உலகின் பழமையான உலோக பொருள் கூம்பு வடிவ செப்பு குத்தூசி இஸ்ரேல் நாட்டில் உள்ள “Tel Tsaf” என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  4. மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார் மகாராஷ்டிரா கவர்னர் கே சங்கர நாராயணன்அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  5. மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் நாக்பூரில் எத்தனால் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
  6. நிதி அமைச்சர் “Ahmet Davutoglu” அவர்கள் துருக்கி பிரதமராக பெயரிடப்பட்டார்.

நடப்பு நிகழ்வுகள் (26 ஆகஸ்ட் 2014)
  1. ஜவுளி துறை அமைச்சகம் கைத்தறி நெசவாளர்களுக்கு இணையவழி சந்தைப்படுத்தலை மேற்க்கொள்ள “Flipkart” நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  2. மகாராஷ்டிரா முதல் கடல் விமான சேவை மும்பை முதல் லோனாவாலா வரை தொடங்கப்பட்டது.
  3. இந்திய வம்சாவளியை சேர்ந்த சீமா மல்ஹோத்ரா அவர்கள் பிரிட்டனில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. கூகிள் உலகின் தகவல்களை சேமிக்க “Knowledge Vault” என்பதை உருவாக்க முடிவு செய்துள்ளது.
  5. எல்லைப் பாதுகாப்புப் படையின்றால் எல்லை ஓரமாக மரக்கன்றுகள் நட்டது லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  6. முன்னாள் சிஏஜி வினோத் ராய் அவர்கள் எழுதிய “Not Just an Accountant” என்ற புத்தகம் வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  7. RN ரவி அவர்கள் கூட்டு புலனாய்வு குழுவின் (Joint Intelligence Committee) புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  8. பாக்கிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மகரிஷி வால்மீகி சுவாமி ஜி கோயில் இடிப்பதை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (27 ஆகஸ்ட் 2014)
  1. கேரள மாநில ஆளுநராக இருந்த டெல்லியின் முன்னால் முதல்வர் “ஷீலா தீட்சித்” அவர்கள் தனது  பதவியை ராஜினாமா செய்தார்.
  2. இந்திய விமானப்படை (IAF) மற்றும் ரஷியன் கூட்டமைப்பு விமானப்படை (RFAF)  இனைந்து நடத்தும் கூட்டு பயிற்சி “Avia Indra-2014” 25 ஆகஸ்ட் 2014 அன்று ரஷ்யாவில் காஸ்பியன் கடல் அருகே தொடங்கியது.
  3. C.S. வர்மா அவர்கள் இந்திய எஃகு சங்கத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  4. தொல்பொருள் ஆராச்சியாளர்கள் மெக்ஸிக்கோவில் Lagunita மற்றும் Tamchen  என்ற இரண்டு பண்டைய மாயன் நகரங்களை கண்டு பிடித்துள்ளனர்.

நடப்பு நிகழ்வுகள் (28 ஆகஸ்ட் 2014)
  1. மத்திய அரசு “Dot Bharat” என்ற புதிய இணையவழி டொமைன் ஒன்றை தொடங்கியுள்ளது. இது தற்போது ஹிந்தி,போடோடோக்ரிகொங்கனிமைதிலிமராத்திநேபாளி மற்றும் சிந்தி. ஆகிய மொழிகளில் இருக்கும் வகையில் உள்ளது. மேலும் இது எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 இந்திய மொழிகளிலும் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. கேரள மாநில அமைச்சரவை மதுபானம் மீதான புதிய கொள்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
  3. E-சிகரெட்டுகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
  4. பிரதமர் பயனற்று சட்டங்கள் கண்டறிய இராமானுஜம் தலைமயில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
  5. Tata Value Homes” மற்றும் Snapdeal  ஆகியவை இனைந்து ஆன்லைன் முலம் வீடுகளை விற்க ஒப்பந்தம் செய்துள்ளன.
  6. Recep Tayyip Erdogan” அவர்கள் துருக்கியின் பனிரண்டாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

நடப்பு நிகழ்வுகள் (29 ஆகஸ்ட் 2014)
  1. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 28 ஆகஸ்ட் 2014 அன்று “பிரதான் மந்திரி ஜான் தண் யோஜனா” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  2. மத்திய அரசு “பாதுகாப்பு சட்ட திருத்த சட்டம்2014” யை அறிவித்துள்ளது. இந்த சட்டம் செபி அமைப்பபை பலப்படுத்துகிறார் சட்டம் ஆகும்.
  3. மகாராஷ்டிரா அரசு லிங்காயத் சமூகத்தில் உள்ள பத்து  துணை ஜாதியை  ஓ.பி.சி. பிரிவில் சேர்த்துள்ளது.
  4. மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை திருநங்கை நல வாரியம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  5. தேசிய விளையாட்டு தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடப்பட்டது. தேசிய விளையாட்டு தினம் ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்த நாளை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
  6. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு விருதுகளை 29 ஆகஸ்ட் 2014 அன்று ராஷ்டிரபதி பவன்புது தில்லியில் வழங்கினர். 

நடப்பு நிகழ்வுகள் (30 ஆகஸ்ட் 2014)
  1. 29 ஆகஸ்ட் 2014 அன்று இந்திய அரசு “மிசோரம் மாநில சாலைகள் மேம்பட்டு திட்டத்துக்கு” உலக வங்கியுடன் கடன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இந்த திட்டத்துக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச மேம்பாட்டுக் கழகம் (IDA)ஆகியவை இனைந்து 107 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதிஉதவி வழங்கும்.
  2. 28 ஆகஸ்ட் 2014 அன்று ஜம்மு காஷ்மீர் மாநில சட்ட மேலவையில் இந்திய பாகிஸ்தான் இடையே பேச்சுக்களை மீண்டும் மத்திய அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. பாபா கல்யாணி இந்தியா-ஜப்பான் வர்த்தக தலைவர்களின் மன்றத்தின் (India-Japan Business Leader’s Forum) தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  4. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் அவர்கள் அந்நாட்டில் நிலவிவரும் அரசியல் நெருக்கடியை குறைப்பதற்கான மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாள்கள் நிறைவையொட்டி செய்தியாளர்களை 30 ஆகஸ்ட் 2014 அன்று சந்தித்த ஜேட்லிநடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
  6. ஜப்பான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை 30 ஆகஸ்ட் 2014அன்று சந்தித்துப் பேசினார்.அப்போது இந்திய நகரங்களை ஸ்மார்ட்’ நகரங்களாக மாற்றுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முதல்கட்டமாக வாரணாசியை கலாச்சார நகரமாக மாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பான் நாட்டில் உள்ள கியோட்டோ நகரத்தை போன்று உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியையும் கலாச்சார அம்சங்கள் மாறாமல் ஸ்மார்ட் நகரமாக மாற்ற இரு நாடுகளி டையே ஒப்பந்தம் கையெழுத் தானது. இந்த திட்டத்துக்கு “கியோட்டோ- வாரணாசி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (31 ஆகஸ்ட் 2014)

  1. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்துவது தொடர்பான தேசிய அளவிலான பிரச்சாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 31 ஆகஸ்ட் 2014 தொடங்கி வைக்கப்பட்டது. பதான் அருகே உள்ள கத்ரா சதத்கஞ்ச் கிராமத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை 31 ஆகஸ்ட் 2014 அன்று சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் அவர்கள் திறந்துவைத்தார்.
  2. குடிநீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் ஜீவன் அம்ரித்’ என்ற திட்டத்தை ராஜஸ்தான் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி கவாஸ்குடாஜோகாசாகர்பைட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் வழங்கும் ஏ.டி.எம்.கள் திறக்கப்பட்டுள்ளன.
  3. பிரபல வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா (86)உடல்நலக் குறைவு காரணமாக 30 ஆகஸ்ட் 2014 அன்று தனது இல்லத்தில் காலமானார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் தி ரைஸ் அண்ட் குரோத் ஆஃப் எகனாமிக் நேஷனலிஸம்', ‘இன் தி நேம் ஆஃப் டெமாக்ரஸி', ‘நேஷனலிஸம் அண்ட் கலோனி யலிஸம் இன் மாடர்ன் இந்தியாமற்றும் தி மேக்கிங் ஆஃப் மாடர்ன் இந்தியாஉள்ளிட்ட புகழ்பெற்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
  4. தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) புதிய தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஓ.பி. சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.இதன் மூலம்உலக பாட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றார்.
  6. இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட்டில் அலிஸ்டர் குக்கை ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்த தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்த உலக சாதனைக்குரியவரானார். சங்கக்காரா 129 ஸ்டம்பிங் செய்து வைத்திருந்த சாதனையை தோனி முறியடித்தார். மேலும் ஜோ ரூட் விக்கெட்டையும் ஸ்டம்பிங்கில் வீழ்த்திய வகையில் தோனி தற்போது 131 ஸ்டம்பிங்குகளுடன் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....