My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Tuesday, September 9, 2014

நடப்பு நிகழ்வுகள்-பிப்ரவரி 2014

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (1 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   உலகின் மிக வயதான Flamingo பறவை ஆஸ்திரேலியா அடிலெயிட் மிருகக்காட்சிசாலையில் இறந்தது.
2.   மைக்கேல் ரோஜர்ஸ், தேசிய பாதுகாப்பு அமைப்பின் இயக்குநராக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவால் நியமனம் செய்யப்பட்டார்.
3.   தென் சீன கடல் மீது ஒரு புதிய விமான பாதுகாப்பு அடையாள மண்டலமாக சீனா அறிவித்ததற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
4.   ராஜஸ்தான் அரசு சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழங்கிய ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளது.
5.   இந்தியாவின் முதல் மோனோ ரயில் சேவையைமகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மும்பையில் துவக்கி வைத்தார்.
6.   பாகிஸ்தானின் சிந்து மாநில அரசு முதன் முறையாக திருநங்கைகளுக்கு வெவ்வேறு துறைகளில் அரசுப் பணிகளை வழங்கி உள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (2 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   ஒலிம்பிக்  சுடர் ரஷ்யாவின் மிக உயர்ந்த மலையான மவுண்ட்எல்ப்ருஸ் இல் ஏற்றப்பட்டது.
2.   7 வது ரஞ்சி டிராபி போட்டியில் மகாராஷ்டிரா அணியை தோற்கடித்து கர்நாடக அணி வெற்றி பெற்றது.
3.   மின் வர்த்தக சேவையை ட்விட்டர் உருவாக்கிவருகிறது.
4.   நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று அத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
5.   புயலை முன்கூட்டியே கணிக்கும் விமானம்: நாசாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்.
6.   தாய்லாந்தில் நீச்சல் வீரர்கள் இருவர் உலகிலேயே மிக ஆழத்தில் திருமணம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
7.   மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாகி இந்தியாவை சேர்ந்த சத்ய நாடெல்லா நியமிகப்படுள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (3 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   பிலிப் சீமோர் ஹாஃப்மேன்(Philip Seymour Hoffman), ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் இறந்தார்.
2.   தில்லி மெட்ரோ ரயில்க்கு திறமையாக எரிசக்தியை பயன்படுத்தியதற்காக மதிப்புமிக்க Gold Standard Foundation (GSF)சான்றிதழ் 2, பிப்ரவரி 2014 அன்று வழங்கப்பட்டது.
3.   18 புதிய தொழிற்பேட்டையை உருவாக்க ஜம்மு & காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது.
4.   விஞ்ஞானிகள் கிரீன்ஹவுஸ் வாயுக்களை கட்டுப்படுத்தா புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். அதனை செயற்கை எரிபொருளாக மற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர.
5.   Silverine Swer, மேகாலயா மாநிலத்தில் இருந்து முதல் பத்ம ஸ்ரீ விருதுபெற்றவர் தனது 103 வது வயதில் இறந்தார்.
6.   ரூ.1450 கோடியில் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்: பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு
7.   ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவுக்குமுதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (4 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   ஸ்குவாஷ் வீரர் ஜோஷ்ன சின்னப்பா பிப்ரவரி 32014 அன்று நடைபெற்ற வின்னிபெக் குளிர்கால கிளப் கோப்பை போட்டியில் வெற்றிபெற்றார்.
2.   உலக புற்றுநோய் தினம் 4, பிப்ரவரி 2014 ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
3.   ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 32014 அன்று இணைய பாதுகாப்புக்கு சிறப்பு ஆலோசகராக இந்திய சார்ந்த விவேக்லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
4.   நீதிபதி அசோ குமார் மாத்தூர் 7 ஊதிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.   சச்சின் டெண்டுல்கர் மற்றும் CNR .ராவ் ஆகியோருக்கு 4, பிப்ரவரி 2014 அன்று பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது.
6.   இந்தியாவை சேர்ந்த சத்ய நாடெல்ல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (5 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   உலக முதல் காகிதமற்ற பொது நூலகம் “BiblioTech” பிப்ரவரி 42014 அன்று அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ்மாநிலத்தில் திறக்கப்பட்டது.
2.   லிபியா அரசாங்கம் அதன் முழு இரசாயன ஆயுத அழித்துவிட்டது என்று அறிவித்துள்ளது.
3.   பஞ்சாபில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீதான இந்திய ராணுவத்தின் புளூ ஸ்டார்நடவடிக்கையில் பிரிட்டனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பிரதமர் டேவிட் கேமரூன் தெரி வித்துள்ளார்.
4.   ஹர பிரசாத் தாஸ், குறிப்பிடத்தக்க தற்கால கவிஞர் மற்றும் சிந்தனையாளர் அவருக்கு “26 வது மூர்த்தி தேவிவிருதுவழங்கப்பட்டது.
5.   நாட்டின் கணினிவழி சேவையை பெருக்க “National Cloud” என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (6 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   ஒலிம்பிக் சுடர் அனைத்து கடல்கள், வட துருவம் மற்றும் விண்வெளியை  கடந்து பின்னர் சோசி வந்தடைந்து. இந்த ஒலிம்பிக் சுடர் 65000 கி.மீ துரத்தை கடந்து விளையாட்டு வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.
2.   2009-2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 9.7 கோடி புதிய வாக்காளர்கள் செர்ந்டுள்ளர்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் பட்டியலில் வெளிட்டுள்ளது.
3.   ராஜஸ்தான் அரசு சேகரித்த பயிர் மதிப்பீட்டு அறிக்கையின் படி அந்த மாநிலத்தில் 17 மாவட்டங்களில் உள்ள 10225கிராமங்களில் விவசாயம் பெரும் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. அதனால் அந்த மாநில அரசு அந்த மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களின் மீதான வரியை ரத்து செய்துள்ளது.
4.   மத்திய அரசு 5 பிப்ரவரி 2014 அன்று ஹைட்ரோகார்பன் இயக்குநராகத்தின்(Director General of Hydrocarbon) தலைவராகB.N.Talukdar நியமனம் செய்ததை உறுதி செய்துள்ளது.
5.   இந்திய டெலிகாம் முக்கிய நிறுவனமான எம்டிஎஸ் ட்விட்டர் (Twitter) இல் ஒரு ஆன்லைன் மூலன் IndiaForShiva என்றபிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இது சோசி குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்தியாவை சேர்ந்த ளுக் விளையாட்டு வீரர் “சிவன் கேசவனுக்கு” ஆதரவை திரட்டும் பொருட்டு தொடங்கியுள்ளது. ளுக்= பணிசரிவில் விளையாடப்படும் ஒருவகை விளையாட்டு.
6.   வட கொரியா மற்றும் தென் கொரியா விட மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு போரின் காரணமாக பிரிந்தகுடும்பங்கள் மறுபடியும் இணைய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். மறு இணக்கக்கமானது வடகொரியாவில் உள்ளKumgang மலை ரிசார்ட்டில் 20-25 பிப்ரவரி 2014 அன்று நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
7.   சஞ்சீவ் குல்கர்னி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பள்ளியின் (Princeton University Graduate School) டீன்னாகநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8.   மலாலா, ஜான் வுட் மற்றும் இந்திரா ரணமகார் ஸ்வீடன் உலக குழந்தைகள் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்துள்ளனர்.
9.   9 ஜனவரி 2014 அன்று காணாமல் போன “புலி வம்சத்தின் மகாராணி” என்று அழைக்கப்படும் 17 வயதான உலகில் அதிக காலம் வாழ்ந்த பெண் புலி என்ற பெருமையை கொண்ட மச்சிலி (Machli) என்ற பெண் புலி, 5 பிப்ரவரி 2014 அன்றுரன்தம்போர் தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10. இந்தியா மற்றும் ஜெர்மனி அரசுக்கள் நிதி மற்றும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு மேற்க்கொள்ள இரண்டு உடன்படிக்கைகளை செய்துக்கொண்டுள்ளது.
11. ஜான் தாம்சன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக 5 பிப்ரவரி 2014  அன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (7 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   விஸ்வநாத் திரிபாதி “வியாஸ் சம்மான் 2013” ஆம் ஆண்டிற்க்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வியாஸ்சம்மான் என்பது கே.கே.பிர்லா அறக்கட்டளையினால் நிறுவப்பட்டது ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளாக இந்தி இலக்கிய பணிகளுக்கு விருது வழங்கி வருகிறது.
2.   மத்திய அரசு 2014-15 ஆம் ஆண்டுக்கு கரும்பு குவிண்டால் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்துள்ளது.
3.   டெண்டுல்கர் மற்றும் வார்ன் ஆகிய இருவர் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெறும் 200 வது போட்டியில் விளையாட உள்ளனர் என்ற அறிவிப்பை பிப்ரவரி 62014 அன்று நிறுவகம் வெளிட்டுள்ளது.
4.   இன்ஃபோசிஸ் பிப்ரவரி 62014 அன்று Araraquara, பிரேசிளில் தனது புதிய விநியோக மையத்தை திறக்க போவதாகஅறிவித்துள்ளது.
5.   WWF இன் இயக்குனராக Marco Lambertini நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவர் தனது பணியை மே 1, 2014 அன்று தொடங்குவர் என்று அறிவித்துள்ளது.
6.   பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA5 பிப்ரவரி 2014 அன்று 17630 கோடி ரூபாய் மதிப்புள்ள 5துறைமுக மேம்பாட்டு திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7.   International Union for Conservation of Nature (IUCN) வெளிட்ட சிவப்பு பட்டியலில் (அழிந்து வரும் உயிரினம் பற்றியது) இந்தியாவை சேர்ந்த 15 பறவைகள் அழியும் நிலையில் உள்ளது என்று அந்த பட்டியலில் கூறியுள்ளது.
8.   இஸ்ரேல் ஜனாதிபதி  சிமோன் பெரஸ் ஒரு புதிய கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார். ஆவர் இணையம் வாயிலாக குடியியல் படத்தை 6500 மாணவர்களுக்கு எடுத்து இந்த சாதனையை புரிந்துள்ளார்.
9.   தில்லி காவல்துறை வெளிநாட்டினருக்காண தனி ஹெல்ப்லைன் எண் +91-8750871111 யை தொடங்கியுள்ளது.
10. அருனிமா சின்ஹா (Arunima Sinha ) ​​6 பிப்ரவரி 2014. அன்று  Amazing Indian விருதை பெற்றார். இந்திய துணை ஜனாதிபதி, எம் ஹமீத் அன்சாரி  இந்த விருதை வாங்கினர். இந்த விருது அவருக்கு மாற்றுத்திறனாலியாக இருந்த போதும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறியதற்காக வழங்கப்பட்டது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (8 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   அமைச்சரவை தெலுங்கானா மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியது மற்றும் ஹைதெராபாத்தை யூனியன் பிரதேசம்அந்தஸ்து கொடுக்க மறுத்துவிட்டது.
2.   அபினவ் பிந்த்ரா, Hague (நெதர்லாந்தில்) நடைபெற்ற Inter Shoot Tri Series துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார்.
3.   மாவோயிஸ்டுகள் பதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்ட்களை கண்காணிக்க சிஆர்பிஎப் க்கு ஆளில்லாஏரியல் விமானங்களை டி.ஆர்.டி.ஓ. உருவாக்கியி வருகின்றது.
4.   மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் பிரபலமான “மாருதி 800” கார் உற்பத்தியை 18 ஜனவரி 2014 அன்றுடன் நிறுத்திவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
5.   ஒரே போட்டியில் மூன்று நூறு ஓட்டங்கள் மற்றும் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை சங்ககாராபெற்றார். இவர்க்கு முன் இங்கிலாந்தை சேர்ந்த Graham Gooch இச் சாதனையை செய்துள்ளார்.
6.   பொது இடங்களான சாலைகள், குடியிருப்பு பகுதிகளில்  டயர்களை எரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது மகாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியம் (MPCBமற்றும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு எதிரான ஒரு மனுவை விசாரித்த பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயமத்தின் மேற்கு மண்டலம் பெஞ்ச் தடை வழங்கியது.
7.   கண்போடியாவில் உள்ள மலைக்கோயில் ஒன்றில் வைக்கப்பட்டு திருடுபோனதாக தேடப்பட்டு வந்த புத்தருடையது என கருதப்படும் முடிபற்கள்எலும்புகள் அடங்கிய தங்கத்தாழி மீட்கப்பட்டது. 
8.   இரண்டாம் உலகப் போரின்போது ஹாங்காங் மீது வீசப்பட்ட சுமார் டன் எடை கொண்ட வெடிகுண்டை ஹாங்காங் போலீஸார் நேற்று வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தனர்.
9.   பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தற்போதைய தலைவர் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (9 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   பிப்ரவரி 92014 அன்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOAவெற்றிகரமாக நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டதனால் 14 மாத இடைநீக்கத்திற்கு பிறகு மிண்டும் ஒலிம்பிக் பங்குபெறும் வாய்ப்பினை பெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் N.ராமசந்திரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டர்.
2.   பூட்டான் பிரதமர் Jigmi Y. Thinley இந்தியாவிற்கு பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 9 2014 வரை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.
3.   9 பிப்ரவரி 2014 அன்று தெற்கு சூடான் ஓய்வுபெற்ற பிஷப் Paride Taban அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டிற்க்கான ஐ.நா.வின் அமைதிக்கான பரிசு (UN peace prize) வழங்கப்பட்டது.
4.   பிப்ரவரி 9, 2014 அன்று ரத்தன் டாடா அவர்களை அமெரிக்கவின் மதிப்புமிக்க National Academy of Engineering' இன் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய மற்றும் உலக தொழில்துறையின் வளர்ச்சியில் அவரின் பங்களிப்பை மிக சிறப்பாக இருந்ததால் ஆவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
5.   மாற்றுத் திறனாளிகளுக்கு சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (10 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   விவசாயம் மற்றும் அதை சேர்ந்த தொழில்களில் வளர்சிக்காக “உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு நிதியின்”(Rural Infrastructure Development Fund) கீழ் நபார்டு வங்கி 19100 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
2.   சீனிவாசன் 2 ஆண்டுகளுக்கு ஐசிசி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்அவர் ஜூலை 2014 ல் முதல் ஆவர் அப்பதவியை ஏற்கிறார்.
3.   8 பிப்ரவரி 2014 அன்று Central Statistics Office வெளிட்ட அறிக்கையில் தற்போதைய (2013-14) நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.9 சதவிகிதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த வளர்ச்சி விகிதன் கடந்த நிதி (2012-13) ஆண்டில் 4.5 சதவிகிதமாக இருந்தது.
4.   சுஷில் கொய்ராலா 10 பிப்ரவரி 2013 அன்று நேபாலத்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
5.   அபினவ் பிந்த்ரா, இந்திய துப்பாக்கி சுடும் பிப்ரவரி 82014 அன்று  Hague, Netherlands இல் நடைபெற்ற ஏர் பிஸ்டல்போட்டியில் மூன்றாவது தங்க பதக்கம் வென்றார். அந்த போட்டில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
6.   15 வயதான Yulia Lipnitskaya , குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற இளம் ரஷிய தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆவர் பனி சறுக்கு (skating) போட்டியில் இப்பதக்கத்தை வென்றார்.
7.   விஞ்ஞானிகள் குறைந்த பட்சம் 8 லட்சம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் தடங்களை இங்கிலாந்தில் உள்ளநோர்போக் கோஸ்ட் என்ற பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
8.   நீதிபதி முட்கல் தலைமையில் ஆன குழு IPL போட்டியில் நடந்த சூதாட்டத்தின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
9.   கலிபோர்னியா ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் துஷ்கர் கேஷ்கரி குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (11 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   யுவராஜ் சிங் இன் புற்றுநோய் அறக்கட்டளையான “YouWeCan” மற்றும் “நவ் பாரத் சேவா சமிதி” என்னும் அரசு சாரா அறக்கட்டளையுடன் இனைந்து “Mukt Purvi Dilli” என்ற புற்றுநோய் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
2.   8 வது பாதுகாப்புத்துறை கண்காட்சி பிப்ரவரி 62014 முதல் 9 பிப்ரவரி 2014 வரை  புதுதில்லி இல் உள்ள “பிரகதிமைதானத்தில்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3.   தென் மத்திய இரயில்வே அமைப்பு (SCR)  10, பிப்ரவரி 2014  அன்று ஹைதெராபாத் லைவ் ரயில் விசாரணை அமைப்பு (HYLITES) தொடங்கியுள்ளது.
4.   101 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு (ISC) 3 பிப்ரவரி 2014 முதல் பிப்ரவரி 7, 2014 வரை  ஜம்மு & காஷ்மீர்மாநிலத்தில் உள்ள ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 101 வது ISC மாநாட்டின் தலைவராக பேராசிரியர்ஆர்.சி.Sobti இருந்தார்.
5.   விஞ்ஞானிகள் அமேசான் நதியில் புதிய வகையான டால்பின் (Araguaian boto) இனத்தை கண்டுபிடித்துள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புதிய வகை இனம் ஆகும்.
6.   நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிக்கிம் மாநிலம் 100 சதவீதம் சுகாதாரத்தை அடைந்த முதல் இந்தியா மாநிலம் என்ற பெருமையை பெற்றது.
7.   R.K.Tiwari பிப்ரவரி 92014 அன்று Central Board of Direct Taxes (CBDT) புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
8.   இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஹங்கேரியில் நடைபெற்ற 58 வது Bocskai International Tournament போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தனர்.
9.   Vinod Sawhny ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.
10. இந்திய சூரியசக்தி கொள்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் செய்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (12 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு புதுதில்லி 11 பிப்ரவரி 2014 அன்று Award of Honour விருதை சர்வதேச ரோட்டரிசங்கம் வழங்கியது. இந்த விருதை ரான் பர்டன், சர்வதேச ரோட்டரி சங்கதின் தலைவர் அவர்கள் ராஷ்டிரபதி பவனில்வழங்கினர்.
2.   ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சியாளர்கள் பிப்ரவரி 112014 அன்று அண்டத்தின் மிக பழமையான நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.அந்த கண்டுபிடிப்பை “Nature”  என்ற பத்திரிகையின் வாயிலாக வெளிட்டனர். “SMSS J031300.36-670839.3”  என அழைக்கப்படும் நட்சத்திரம், பால்வெளி மண்டலத்தில் பூமியில் இருந்து சுமார் 6000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அந்த நட்சத்திரமானது  13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிக் பேங் நிகழ்வு ஏற்பட்ட பிறகு உருவானது என்று கூறியுள்ளனர். “ANU SkyMapper telescope” என்ற தொலைநோக்கி உதவியால் அந்த நச்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
3.   புத்தகம் வெளியிடும் நிறுவனமான “பெங்குயின் இந்தியா” வெளிட்ட “The Hindus: An Alternative History” என்ற புத்தகத்தை 11 பிப்ரவரி 2014 அன்று  இந்திய சந்தையில் இருந்து அதை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இந்த புத்தகத்தை எழுதியவர் Wendy Doniger, இவர் ஒரு அமெரிக்க அறிஞர் மற்றும் இந்திய கலாச்சாரத்தை பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிஞர். இந்து மதத்துக்கு எதிராக இந்த புத்தகம் இருந்தமையால் இந்த புத்தகத்தை திரும்பபெற பெங்குயின் இந்தியா முடிவுசெய்துள்ளது.
4.   பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் 2013 இளம் மற்றும் அமெரிக்காவின் மிக அதிகமாக கொடை வழங்கியவர் என்று “Chronicle of Philanthropy” என்ற இதழ் வெளியிட்டது.
5.   அல்ஜீரியாவில் இராணுவ விமானம் ஏற்ப்பட்ட விபத்தில் 103 நபர்கள் இறந்தனர்.
6.   ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு 11 பிப்ரவரி 2014 அன்று முன்று வயது குழந்தைக்குபோலியோ தாக்குதல் ஏற்ப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அரசு அவசமாக போலயோ சொட்டு முகாம்களை ஏற்ப்படுத்தியுள்ளது.
7.   இந்தியா துணை ஜனாதிபதி எம்.ஹமீத் அன்சாரி 11, பிப்ரவரி 2014 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் சீனாநாடுக்கிடையே நட்பு ரீதியான புதிய சந்தை வர்த்தகத்தை தொடங்கிவைத்தார்.
8.   Asian Development Bank (ADB) மற்றும் இந்திய அரசுசும் இனைந்து கிராமப்புற இணைப்பு சாலை மேம்படுத்த 275மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்த திட்டம் “கிராம இணைப்பு முதலீட்டு திட்டத்தின்”( Rural Connectivity Investment Programme)  கீழ் அசாம்சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத்தில் உள்ள கிராமங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
9.   சர்வதேச அளவில் பிரபலமான “பாலைவன திருவிழா” பிப்ரவரி 122014 அன்று தார் பாலைவனத்தில், ஜெய்சால்மர் ராஜஸ்தான் என்ற இடத்தில் தொடங்கியது. இந்த திருவிழாவானது ஜெய்சால்மர் கோட்டை வாயில் இருந்து ஊர்வலமாகதொடங்கியது.
10. கொண்சாம் இமயமலை சிங் (Konsam Himalaya Singh) 12 பிப்ரவரி 2014 அன்று  வடக்கு கிழக்கு மாநிலத்தில் இருந்துதேர்ந்துதெடுக்கப்பட்ட முதல் இராணு லெப்டினென்ட் ஜெனரல் ஆனார்.ஆவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவர். தற்போது ஆவர் புதுதில்லியை தலைமையகமாக கொண்ட இயங்கிவரும் இராணுவ செயலகத்தின் கிளையில்பணியாற்றி வருகின்றார்.
11. டிஜிட்டல் நிர்வாகம் அடிப்படையில் பத்து நாடுகளின் பட்டியலில் இந்திய 8 வது இடத்தில் உள்ளது. முதல் முன்று இடத்தில் சிங்கப்பூர், நார்வே, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வகிக்கின்றன. இந்த அறிக்கையை பிப்ரவரி 11, 2014 அன்றுAccenture நிறுவனம் வெளியிட்டது.
12. இந்திய வம்சாவழியை சேர்ந்த அசோக் வரதன் பிப்ரவரி 112014 அன்று “கோல்ட்மேன் சாக்ஸ்”  இன் பத்திரங்கள்பிரிவின் இணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். “கோல்ட்மேன் சாக்ஸ்” ஒரு அமெரிக்கவை சேர்ந்த பன்னாட்டுமுதலீட்டு வங்கியியல் நிறுவனம் ஆகும்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (13 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   தென் ஆப்ரிக்கா அரசு 11, பிப்ரவரி 2014 அன்று நெல்சன் மண்டேலாவின் நினைவாக வெள்ளி தபால் தலையை வெளியிட்டது. இந்த கருப்பு மற்றும் வெள்ளை தபால் தலை ஆனது சிறையில் நெல்சன் மண்டேலா அவர்கள் 27ஆண்டு காலம் சிறையில் கழித்த பிறகு வெளியேறி 24 ஆண்டுகள் ஆவதை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்டது.
2.   உலக வானொலி தினம் பிப்ரவரி 132014 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. உலக வானொலி தினம் 2014 இன் முக்கிய கருப்பொருளானது(theme) பாலியல் சமத்துவம் மற்றும் வானொலி துறையில் மகளிரின் பங்கை முன்னேற்றுவது(Gender Equality and Women's Empowerment in Radio) ஆகும். இது யுனெஸ்கோ அமைப்பால் அனுசரிக்கப்படும் முன்றாவது உலக வானொலி தினம் ஆகும்.
3.   கர்நாடகம் அணி பிப்ரவரி 122014 அன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இரானி கோப்பை இறுதி போட்டியில், Rest of India அணியை வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக இக்கோப்பையை வென்றது.
4.   அசாம் அரசு நாட்டின் முதல் மாநிலமாக சட்டபூர்வமாக பிப்ரவரி 132014 அன்று அந்த மாநிலம் முழுவதும் உள்ளபுகையிலை மற்றும் நிகோடின் கொண்ட பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை செய்துள்ளது. 90% வாய் புற்றுநோய்க்கு புகையிலை காரணமாகிறது அதனால் அசாம் அரசு புகையிலை வியாபாரம், வர்த்தகம், விநியோகம் மற்றும் வியாபாரம் போன்றவற்றை தடை விதித்துள்ளது.
5.   மருத்துவ கல்வி பட்டப்பின் நிறுவனத்தின் சேட்டிலைட் மையத்தை சண்டிகரில் உள்ள Sangrur (சங்கரூர்) இல் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டமானது 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் மருத்துவமனைகள்மற்றும் அதனை சார்ந்த நிறுவங்களின் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
6.   சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பிப்ரவரி 122014 அன்றுஎச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய்யுடன் வாழும் மக்களுக்கு இல்லினாய்ஸ் சிகிச்சையை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தால் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் கட்டம் IV வெளியீட்டு நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (14 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   பி வேதமூர்த்தி, இந்திய வம்சாவழியை சேர்ந்த மலேஷியா அரசின் முக்கிய அமைச்சர் தனது பதவியை 11, பிப்ரவரி 2014 அன்று இராஜினாமா செய்தார்.
2.   பெல்ஜியம் அரசு தீராத நோயினால் பதிக்கப்பட்ட குழந்தைகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்நாட்டு தேவாலயம் மற்றும் சில குழந்தைநல மருத்துவர்கள் எதிர்ப்பை தாண்டியும் இந்த முடிவை பெல்ஜியம் அரசு எடுத்துள்ளது.
3.   இந்தோனேஷியா கேடிரி மாவட்டத்தில் உள்ள எரிமலை மவுண்ட் கேளுது Mount Kelud (ஜாவா தீவில் உள்ளது) 13பிப்ரவரி 2014 ல் வெடித்தது.இதனால் அதனை சுற்றியுள்ள 36 கிராமங்களில் வாழும் 2 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. இதற்க்கு முன் சுமத்ரா தீவில் Mount Sinabung இல் ஜனவரி 2014 இல் ஏற்ப்பட்ட வெடிப்பில் 14 பேர் உயிர் இழந்தனர்.
4.   தில்லி காவல்துறை 13, பிப்ரவரி 2014 அன்று வட கிழக்கு புது தில்லியில் வாழும் மக்களுக்கு என்று பிரத்தியேகமாகஒரு புதிய உதவி எண் 1093 யை தொடங்கியுள்ளது. இனவெறி மற்றும் கொடுமை போன்ற குற்றங்களை காவல்துறையிடம் நேரடியாக தெரிவிக்க பயன்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி கவல்துறையனது விரைவில் சமுகவளைதளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இல் மக்கள் தங்கள் புகார்கள் மற்றும் ஆலோசனைகளைவழங்க தொடங்க உள்ளது.
5.   இந்திய தேசிய மகளிர் தினம் 13 பிப்ரவரி 2014 இந்திய முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பெண்கள்ஆளுநர் சரோஜினி நாயுடு அவர்களின் 135 வது பிறந்த நாள் நினைவாக அனுசரிக்கப்பட்டது.
6.   நீதிபதி முகுல் முட்கல், பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அவர்கள் ஒலிபரப்புஉள்ளடக்க புகார்களுக்கு குழு (Broadcast Content Complaints Council) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7.   டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.
8.   கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரிட்டனில் உள்ள  தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மற்றும் 250 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கிறது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (15 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுனர் பரிந்துரை செய்துள்ளார். டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2.   ஒடிசா சட்டமன்றத்தில் பிப்ரவரி 142014 அன்று லோக்ஆயுக்தா மசோதா-2014  நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு லோக்பால் நிறைவேற்றிய பிறகு முதல் மாநிலமாக ஒடிசா அரசு லோக்ஆயுக்தாவை நிரிவேற்றியுள்ளது.
3.   இத்தாலி நாடு, ஆப்கானிஸ்தானில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிக பெரிய சரக்கு விமான நிலையமான ஹேரத்விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஒப்பு கொண்டுள்ளது. இதற்க்கு உதவ இத்தாலி அரசு ஆப்கானிஸ்தானுக்கு200 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியுள்ளது.
4.   ஐ.நா. விவகாரங்களுக்கான, ஜி4 இயக்குனர் ஜெனரல்கள் சந்திப்பு புதுதில்லியில் 11, பிப்ரவரி 2014 அன்று கூடியது. பிரேசில், ஜெர்மனிஇந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி4 நாடுகள் ஆகும்.
5.   இத்தாலி பிரதமர் என்ரிகோ லெட்டா தனது பதவியை 14, பிப்ரவரி 2014 அன்று ராஜினாமா செய்தார்.
6.   இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India14 பிப்ரவரி 2014 அன்று 14 வெவ்வேறு விளையாட்டு துறை சார்ந்த உயர் மட்ட நிபுணர் குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்கள் நாட்டில் உள்ள சிறந்த வீரர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு 2015 ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிவரை சிறப்பு பயிற்சி வழங்க முடிவுசெய்துள்ளது.
7.   மத்திய அரசு14 பிப்ரவரி 2014 ஆம் தேதி இந்தியாவில் புதிதாக semiconductor chips யை உற்பத்தி செய்யும் 63412 கோடிரூபாய் மதிப்புள்ள இரண்டு தொழிற்சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இரண்டு தொழிற்சாலைகளும் டெல்லிக்கு அருகில் அமைய உள்ளன.
8.   Shanghai institute of Ceramics மற்றும் Chinese Academy of Science யை சேர்ந்த விஞ்ஞானிகள் 14 பிப்ரவரி 2014 அன்று தீ பிடித்துக்கொல்லாத புதிய வகை காகிதத்தை உருவாக்கியுள்ளனர். இந்த காகிதம் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்கூட தீ பிடித்துக்கொல்லாத வகையில் உருவாக்கியுள்ளனர்இந்த புதிய காகிதம் கால்சியம் பாஸ்பேட் கலவையில்உருவாக்கப்பட்டது.
9.   சீனா அரசு 14, பிப்ரவரி 2014 அன்று உலக நீண்ட நீருக்கடியில் சுரங்கபாதையை உருவாக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த சுரங்கப்பாதையானது போஹய் கடலுக்கு அடியில் கட்டப்பட உள்ளது. 123 கி.மீ. நீளம் கொண்டசுரங்கமானது துறைமுக நகரங்களான லியோனிங் மாகாணத்தில் உள்ள டேலியந் மற்றும் யண்டை இணைக்க உள்ளது. இதன் கட்டுமானம் 2015 அல்லது 2016 இல் தொடங்கி 2026 இல் முடிவடையும் என்று கூறியுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (16 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   பிரெட்டியின்” என்ற பெயரைக்கொண்ட பிரிட்டனில்உள்ள 7.4 அடி உயர நாய்கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.
2.   இலங்கை போர் குற்றம் குறித்துசர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' எனஐ.நா.மனித உரிமை ஆணையர்,நவநீதம் பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.
3.   அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் ஒரு ஆய்வு நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,200 பேரிடம் இயற்பியல் மற்றும் உயிரியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் பூமி சூரியனைச் சுற்றி வருவது பற்றி 4-ல் ஒருவருக்கு (26%) தெரியவில்லை என்றும். இதுபோல,விலங்குகளில் இருந்து பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதன் தோன்றினான் என்பது 48 சதவீத அமெரிக்கர் கர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
4.   நாட்டின் ஒட்டுமொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஜனவரியுடன் முடிந்த மாதத்தில் 5.05 சதவீதமாகக் குறைந்துள்ளது. முக்கியமான உணவுப் பொருள்கள் குறிப்பாக காய்கறிகளின் விலைகள் குறைந்ததே பணவீக்கம் குறைந்ததற்கு முக்கியக் காரணமாகும். நடப்பு நிதி ஆண்டில் கடந்த மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
5.   மின்னணு தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஐபிஎம் தனது நிறுவனப் பணியாளர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியா,ஐரோப்பா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் மொத்தம் 15 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது என்று நிறுவனத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் லீ கோன்ராட் தெரிவித்துள்ளார்.
6.   ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மூலம் ரூ. 6.5 லட்சம் கோடி தொழில் வாய்ப்புகளை தமிழகம் பெற முடியும் என்று ஏரோஸ்பேஸ் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் (டிஆர்டிஓ) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.
7.   வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய டெல்லி காவல்துறை புதிய உதவி எண் ஒன்றை தொடங்கியுள்ளது மற்றும் இணையவழி புகார்களையும் பெற ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (17 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   ஐஐடி கரக்பூரில் ஆராய்ச்சியாளர்கள் போதிய ஊட்ட சத்து இல்லாமல் உள்ள    குழந்தைகளுக்கு விழுது போன்ற உண்ணும் உணவை உருவாக்கியுள்ளனர்.
2.   புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் பார்வை அற்ற பயணிகள் பயணம் பெரும் வகயில் பிரெய்லி (பார்வை அற்றவர் படிப்பதற்கான எழுத்துமுறை) பொதிக்கப்பட்ட ஏசி பெட்டி இணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ரயில் ஆகும்.
3.   மத்திய அரசானது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி மதிப்பு உயர்த்தியுள்ளது. 10 கிராம் தங்கத்துக்கு 421அமெரிக்க டாலர் என்றும் மற்றும் ஒரு கிலோ வெள்ளிக்கு 663 அமெரிக்க டாலர் என்றும் உயர்த்தியுள்ளது.
4.   குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
5.   80 மில்லியன் இந்திய  ரூபாய் மதிப்பில் சுகந்திர வீரர் பகத் சிங் அவர்களின் முன்னோர்களின் வீடு, பள்ளி மற்றும் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த கிராமத்தை மறுசீரமைப்பு செய்ய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
6.   தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் நடத்தப்பட்ட மெகா ரத்ததான முகாமில் ஒரே நாளில் 53,129 பேர் ரத்த தானம் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இதற்கான அத்தாட்சி சான்றிதழை முதல்வர் ஜெயலலிதாவிடம் கின்னஸ் அமைப்பின் பிரதிநிதி லுசியா 17 பிப்ரவரி 2014 அன்று வழங்கினார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (18 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   ஜப்பானில் கடந்த நான்கு வரமாக கடும் பனிப்பொழிவு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றுன் 1600 பேர் காயமடைந்துள்ளனர்.
2.   பாக்கிஸ்தான் அரசு 17 பிப்ரவரி 2014 இந்தியாவிற்கான  பாக்கிஸ்தானின் உயர் ஆணையராக ‘அப்துல் பசிட்” யை நியமித்துள்ளது. அவர் சல்மான் பஷீர்க்கு பதிலாக இப்பதவியை 28 பிப்ரவரி 2014 அன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.
3.   தமிழ்நாட்டில் முதல் இந்தி சார்பு அரசியல் கட்சியை சென்னை உயர் நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் சங்கம் 17பிப்ரவரி 2014 அன்று தொடங்கியுள்ளது. இந்த கட்சி ஹிந்தியை ஐந்தாம் வகுப்பு வரை கட்டாய படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
4.   சீனாவை சேர்ந்த “லி நா”, 17 பிப்ரவரி 2014 அன்று உலக டென்னிஸ் சங்கத்தால் வெளியிடப்பட்ட மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஒற்றையர் பிரிவில் உலக அளவில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஆசிய கண்டத்தில் இருந்து டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்த முதல் டென்னிஸ் வீரர் இவர் ஆவர்.
5.   17 பிப்ரவரி 2014 அன்று ESPN Cricinfo வால் அறிவிக்கப்பட்ட “Cricketer of the Generation award” விருதுக்கு இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
6.   கர்நாடக இசை பாடகர் ருத்ர கிருஷ்ணா ஸ்ரீகாந்த் தனது 94 வயதில் நெஞ்சு வலி காரணமாக பெங்களூரில் இறந்தார்.
7.   கருவிழியில் புதிய அடுக்கை, இந்திய மருத்துவர் ஹர்மீந்தர் துவா அவர்கள் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில்.கண்டுபிடித்துள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (19 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   18 பிப்ரவரி 2014 அன்று மத்திய மிருகக்காட்சிசாலையில் ஆணையம் அழிந்து வரும் உயிரினமான காட்டு நாய்வகையை சேர்ந்த செந்நாய் இனத்தை காக்க விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் (IGZP) அதற்கு என தனியாக பாதுகாப்பு வளர்ப்பு மையத்தை 50 லட்சம் செலவில் நாட்டில் முதல் முறையாக தொடங்கயுள்ளனர்.
2.   2012-13 ஆம் ஆண்டிற்க்கான தேசிய சுற்றுலா விருதை சிக்கிம் மாநிலம் பெற்றது. சிறந்த முறையில் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் மற்றும் ஏற்ப்பாடு செய்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
3.   இந்தியாவின் பெரிய தொலை தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் மும்பையை சேர்ந்த லூப் மொபைல் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் முலம் லூப் மொபைல் நிறுவனத்தின் 3 மில்லியன் சந்தாதாரர்கள்ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் வந்துவிடுவார்கள்.
4.   Email Miles என்ற புதிய தொழில்நுட்பத்தின் முலம் அனுப்பப்படும் மின்னஞ்சல் மற்றும் பெறப்படும் மின்னஞ்சல்கள் ஆகியவை எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜி.பி. எஸ்) உதவியுடன் தெரிந்துக்கொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
5.   ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். தெலுங்கானா மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றியதன் காரணமாக ஆவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (20 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   இந்தியாவின் முதல் “சிறுபான்மை சைபர் கிராமமாக” ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் உள்ளChandoli என்னும் கிராமம் 19 பிப்ரவரி 2014 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை சிறுபான்மை அமைச்சர் ரஹ்மான் கான் தொடங்கி வைத்தார். சிறுபான்மை சைபர் கிராமம் என்பது குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள 15 வயது முதல் 59 வயது உள்ள அனைவரக்கும் கணினி கல்வி வழங்குவது ஆகும்.
2.   சமூக வலைத்தளமான பேஸ்புக் பிப்ரவரி 192014 அன்று WhatsApp யை 19 பில்லியன் டாலர்கள்க்கு வங்கியுள்ளது.
3.   மத பின்னணியை கருத்தில் பொருட்படுத்தாமல் குழந்தைகளை தத்தெடுக்க அனைவருக்கும் உரிமையுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
4.   உலகத்தை நோக்கி வந்துகொண்டு இருக்கும் முன்று கால்பந்து மைதானம் அளவிற்கு இருக்கும் விண்மீன்க்கு 2000 EM26 என்று பெயர் வைத்துள்ளனர். இந்த விண்மீனை ஸ்பெயின் கேனரி தீவில்  உள்ள மவுண்ட் டியாய்ட் மீது உள்ள ஸ்லோ விண்வெளி கேமரா(Slooh Space Camera) முலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது 3.4 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வந்துக்கொண்டு இருக்கிறது.
5.   கஜுராஹோ நடன விழா பிப்ரவரி 202014 அன்றுகஜுராஹோ, மத்திய பிரதேசம் இல் தொடங்கி வைக்கப்பட்டது.
6.   ஆந்திர பிரதேசம் Re-organisation பில் 2014, ஆந்திராவை பிரித்து இரண்டு மாநிலமாக்கும் மசோதா ராஜ்சபா மற்றும் லோக்சபா ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
7.   மேற்கு வங்க அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகிய இரண்டும் சேர்ந்துபாதுகாப்பான குடிநீர் மற்றும் பாதுகாப்பான சுகாதார நடைமுறைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் பிப்ரவரி 202014 அன்று பிரச்சாரத்தை தொடங்கியது.இந்த திட்டத்திம் முலம் வரும் 2020 க்குள் அனைவரக்கும் குழாய்வழி சுத்தமான பாதுகாப்பான குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
8.   20 பிப்ரவரி 2014 அன்று மத்திய அமைச்சரவை ஓடிய மொழியை பாரம்பரிய மொழி என்று அங்கீகரித்துள்ளது. இது “இந்தோ ஆரிய மொழி” குடும்பத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் மொழி இது ஆகும். ஓடிய மொழி, இந்தியாவின் பாரம்பரிய மொழிகளில் ஆறாவது மொழியாக இணைந்துள்ளது.
9.   சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழின் புதிய ஆசிரியராக சவுமய்யா ஜபர்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாளிதழ் ஆசிரியராக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பது சவூதி வரலாற்றில் இதுவே முதல்முறை.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (21 பிப்ரவரி 2014) ░░▒▓███
1.   20 பிப்ரவரி 2014 அன்று பழங்குடி விவகார துறை அமைச்சகம், உள்நாட்டு கைவினைஞர்கள் உருவாக்கிய கைவினை பொருட்களை விற்பனை செய்ய இணையவழி வர்த்தக பக்கத்தை தொடங்கியுள்ளது.
2.   கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பதிக்கப்பட்ட ஜப்பானில் உள்ள புகுஷிமா டைச்சிஅணு மின் நிலையத்தில் இருந்து 100 மெட்ரிக் டன் என்ற அளவிற்கு கதிரியக்க நீர் தொட்டியில் இருந்து கசிந்து வெளியேறுகிறது.
3.   இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஹேமந்த் தட்டே(Hemant Thatte20 பிப்ரவரி 2014 அன்று 21 இரசாயனகரைசல்களைகொண்டு “SOMAH” என்ற புதிய கரைசலை உருவாக்கியுள்ளார். இதன் முலம் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மனிதனின் உறுப்புகளை ஒரு வாரம் வரையில் பாதுகாப்பாக வைக்கமுடியும். SOMAH” என்றால் சமஸ்கிருதத்தில் அழியாத்தன்மை கொண்ட அமுதம்” என்று பொருள்.
4.   இந்தியா 21 பிப்ரவரி 2014 அன்று உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரையில் இருந்து ஆகாயத்த்தில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஆகாஷ் ஏவுகணையை வெற்றிகரமாக ஒடிசா கடற்கரையில் சாந்திப்பூர் இல் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
5.   20 பிப்ரவரி 2014 அன்றுIMF வெளியிட்ட  இந்திய பொருளாதாரத்தின் வருடாந்திர அறிக்கையில் வரும் 2014-15இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
6.   பூப்பந்து உலக கூட்டமைப்பு (BWFபிப்ரவரி 202014 அன்று வெளியிட்ட மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பி.வி. சிந்து ஒன்பதாவது இடத்தை பிடித்தார்.
7.   இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) கூகுள் நிறுவனத்துடன் இனைந்து 20 பிப்ரவரி 2014 அன்று இந்திய பாரம்பரிய சுற்றுலா தளங்களை 360 டிகிரியில் இணையதளத்தில் காண்பிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
8.   சர்வதேச தாய்மொழி தினம் பிப்ரவரி 212014 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது
9.   இந்திய ரயில்வே துறை கட்டணம் செலுத்தும் முறையை வேகமாக்க “E-wallet“ திட்டத்தை தொடங்கியுள்ளது.
10. பாரதிய மகிளா வங்கி (BMBபிப்ரவரி 212014 அன்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் முன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு சுகாதார காப்பீடு திட்டத்தை அமல்படுத்த இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
███▓▒░░ நடப்பு நிகழ்வுகள் (22 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் சேர்ந்த யுனைடெட் பாங்க் ஆப் இந்திய வின் தலைவர்மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை அர்ச்சனா பார்கவா, அவர்கள் 21 பிப்ரவரி 2014 அன்று ராஜினாமா செய்தார்.
2.   உலகின் மிகபெரிய வைஃபை மண்டலம் ஒடிசா வில் உள்ள பாட்னா நகரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் 19 பிப்ரவரி 2014 அன்று தொடங்கிவைத்தார்.
3.   தமிழக அரசுக்கும் 16 தொழில் நிறுவனங்களுக்கும் இடையே 5,081 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்தானது.
4.   தேசிய அளவில் திராட்சை உற்பத்தியில் மஹாராஷ்டிரா முதலிடத்தையும் கர்நாடகா 2-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளன.
5.   திபெத் புத்த மத துறவி தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்தித்தார். இதனால் இருதரப்பு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா தனது நாட்டில் உள்ள அமெரிக்க தூதரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

███▓▒░░ நடப்பு நிகழ்வுகள் (23 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்வாகம் தீர்ப்பாயத்தின் தலைவராக இந்தியாவை சேர்ந்த லட்சுமி சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யும் முதல் நபர் ஆவர்.
2.   சீனா காற்று மாசு கட்டுப்பாடு அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள சில தொழிற்சாலைகளை முடவும் மற்றும் வாகன புகையை கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
3.   உரிமைகோராதது ஊழியர் சேமநல நிதி (Employees Provident Fund ) ரூ .3,000 கோடி ரூபாய் உள்ளது என்று CAG கூறியுள்ளது.
4.   7 வது ஊதிய குழுவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கமிஷனின் அறிக்கையின் படி உழியர்களுக்கு வழங்கப்படும் “படி” அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்று கூறியுள்ளது.
5.   சேனல் தொலைக்காட்சி இயக்குநர் கல்லம் மெக்ரே தயாரித்த "No Fire Zone: The killing fields of Srilanka" ஆவணப்படம் இந்தியாவில் 23 பிப்ரவரி 2014 அன்று வெளியானது.
6.   வரும் மார்ச் மாதம் ஜெனீவா வில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஒருவர் பங்கேற்க, ’கோ ஜெனீவா’ எனும் பெயரில் பன்னாட்டு சமூகநல அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா வாய்ப்பளித்துள்ளது.
███▓▒░░ நடப்பு நிகழ்வுகள் (24 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   சட்டேஸ்வர் பூஜாராகுஜராத் மாநிலம் தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.   22 பிப்ரவரி 2014 அன்று இத்தாலி பிரதமராக மேட்டியோ ரேன்ஜி (Matteo Renzi) பதவியேற்றர். இவர் 14 பிப்ரவரி 2014அன்று என்ரிகோ லெட்டா தனது பதிவியை ராஜினாமா செய்தார், அதனால் .மேட்டியோ ரேன்ஜி இப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டர்.
3.   நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் G-20 கூட்டம் 22, 23 பிப்ரவரி 2014 அன்று சிட்னி,ஆஸ்திரேலியா நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து நிதியமைச்சர் திரு. ப சிதம்பரம் மற்றும் ரிசர்வ் வங்கிகவர்னர் ரகுராம் ராஜன் ஆகிய இருவர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் G20 நாடுகள் அடுத்த ஐந்தாண்டுகளில்குறைந்தது இரண்டு சதவீதம் உலக வளர்ச்சி அதிகரிக்க இலக்கு நிர்னைத்து உள்ளன.
4.   இந்தியா மற்றும் கனடா ஆகிய இரண்டு நாடுகள் சுகாதார துறை, ஆடியோ காட்சி இணை உற்பத்தி மற்றும் திறன்மேம்பாடு ஆகிய முன்று துறைகளில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
5.   ராஞ்சியில் உள்ள “AstroTurf ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் சாம்பியன்ஸ்இறுதிப்போட்டியில் தில்லி வேவ் ரைடர்ஸ் (Delhi Waveriders) அணி ஜேபி பஞ்சாப் வாரியர்ஸ் (Jaypee Punjab Warriors) அணியை 3-1 என்று தோற்கடித்து, கோப்பையை வென்றது.
6.   இந்திய வம்சாவளியை சேர்ந்த 12 வயது சிறுவன் நிதிஷ் பானர்ஜி 23 பிப்ரவரி 2014 அன்று குறைந்த விளைக்கொண்ட பிரெய்லி அச்சுப்பொறி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். பிரெய்லி என்பதுபார்வை அற்றவர் படிப்பதற்கான எழுத்துமுறை ஆகும்.
7.   ஐந்து நாள் கொண்ட உலக ஆயுர்வேத திருவிழா (GAF) 20 பிப்ரவரி 2014 அன்று கேரளாவில் தொடங்கியது. GAF 2014இன் முக்கிய பிரதான கருப்பொருள் “பொது சுகாதாரத்தில் ஆயுர்வேதம் (Ayurveda in Public Health)” என்பது ஆகும்.
8.   சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 23 பிப்ரவரி 2014 அன்று 7200 கி.மீ. கொண்ட மாநிலசாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக  மாற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது.
9.   விஷன் 2023 இன் இரண்டாம் கட்ட செயல்பாடுகளை தமிழக அரசு 23 பிப்ரவரி 2014 அன்று வெளியிட்டது.


███▓▒░░ நடப்பு நிகழ்வுகள் (25 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   புது தில்லில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த சோம்தேவ் தேவராமன் 6-36-1 என்று Aleksandr Nedovyesov யை தோற்கடித்து பட்டத்தை வென்றார்.
2.   24 பிப்ரவரி 2014 அன்று இந்திய துணை ஜனாதிபதி எம் ஹமீத் அன்சாரி அவர்கள் உலக தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளுவது பற்றிய புத்தகம் - Water, Peace and War  என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
3.   Prokash Karmakar, சிறந்த ஓவியர் 24 பிப்ரவரி 2014 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது ஓவியங்கள்சமூகம் சிரழிவு மற்றும் நவீன இந்தியாவில் நிலவும் குழப்பம் ஆகியவை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.
4.   இந்திய அமெரிக்க வாழ் விஞ்ஞானியான சங்கீதா பாட்டியா 24 பிப்ரவரி 2014 அன்று புற்றுநோயை கண்டறிய ஒருமலிவானஎளிய காகிதத்தை உருவாக்கியுள்ளார். ஆவர் Massachusetts Institute of Technology (MIT) மற்றும் Howard Hughes Medical Institute இல் பேராசிரியராக உள்ளார். சிறுநீர் மாதிரியை அடிப்படையாக கொண்டு கண்டுபிடிக்கும் வகையில் உருவாக்கியுள்ளார்.
5.   மன்மோகன் சிங் ஜோர்பாக் சாலையில் “இந்திரா பரிவாரன் பவன்யை தொடங்கி வைத்தார். இது சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகதத்தை சேர்ந்த 600 உழியர்கள் பணியாற்ற உள்ளனர்.
6.   பிரிட்டிஷ் இராணுவம் சமீபத்திய ஆளில்லா விமானம் “The Watchkeeper 25 பிப்ரவரி 2014 அன்று வில்ட்ஷிரில் (இங்கிலாந்து) மீது பறக்கவிடப்பட்டது. இது தேல்ஸ் நிறுவனத்தால் பிரிட்டிஷ் இராணுவத்துக்கு உருவாக்கப்பட்டது.தேல்ஸ் நிறுவனம் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, போன்ற துறைகளில் எலெக்ட்ரிக்கள் பொருட்கள் உருவாக்குகிறது.
7.   ஊரக மேம்பாட்டு முகமையான “நபார்டு” பிப்ரவரி 242014 அன்று Joint Liability Group (JLG) என்ற ஒரு புதிய கோட்பாடை அமைத்துள்ளது. இதன் முக்கிய அம்சம் வருவாயை பங்கீடு, விவசாய தொழிலாளர்கள் போன்ற சிறு விவசாயிகளுக்கு கடன் வழங்கும்.
8.   Maritime Energy Heli Services Pvt Ltd (Mehair) மற்றும் மஹாராஷ்டிரா சுற்றுலா அபிவிருத்தி கழகம் (MTDC) இணைந்து கடல் விமான சேவையை பிப்ரவரி 242014 அன்று தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கடல் வழி விமான சேவையாகும். இது மும்பை ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து மாநிலத்தில் உள்ள சுற்றலா தளங்களை இணைக்க தொடங்கப்பட்டது.
9.   நோக்கியா பிப்ரவரி 242014 அன்று அண்ட்ராய்டு பயன்படுத்தியை கைப்பேசி நோக்கிய X, X+, XL என்ற புதிய கைபேசியை Mobile World Congress-2014 இல் வெளியிட்டது.
███▓▒░░ நடப்பு நிகழ்வுகள் (26 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   அமெரிக்க நிறுவனமான ஹென்னெஸ்ஸியை சேர்ந்த பொறியாளர்கள் மணிக்கு 435 கி.மீ வேகம் செல்லக்கூடியஉலகின் அதிவேக கார் “Venom GT “ யை உருவாக்கியுள்ளனர்..
2.   விமான நிலையங்கள்  பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA25 பிப்ரவரி 2014 அன்று ஹைதெராபாத்விமான நிலையத்தில் பயனியர் வளர்ச்சி கட்டணத்தை ரத்து செய்துள்ளது.
3.   ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல்க்கு இஸ்ரேலிய நாட்டில் உயரிய விருதான ஜனாதிபதி விருது ஜெருசலேம் நகரத்தில் வழங்கப்பட்டது.
4.   புதிய வங்கி உரிமம்  தொடர்பாக அமைக்கப்பட்ட பிமல் ஜலான் குழு 25 பிப்ரவரி 2014 அன்று தனது அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி(RBI) இடம் சமர்ப்பித்துள்ளது.
5.   துணை ஜனாதிபதி அவர்கள் சுகந்திர போராட்ட வீரரான மவுலானா ஹஸ்ரத் மோஹானியின் நினைவு தபால்தலையை 25 பிப்ரவரி 2014 அன்று வெளியிட்டார்.
6.   26 பிப்ரவரி 2014 அன்று சிக்கிம் சட்டமன்ற லோக் ஆயுக்தா 2014 மசோதா ஒருமனதாக எற்றுக்கொலப்பட்டது.
7.   இப்ராஹிம் மஹலாப் எகிப்தின் புதிய பிரதமராக பதவியேற்றர்.
8.   இந்திய மொழிகள் நடுவண் அமைச்சகம்(CIIL) நடத்திய மெகா கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 500அழிந்துவரும் நிலையில் உள்ளன என்று கனுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மொழிகளை 10,000 க்கும் குறைவான மக்கள் பேசுகிறார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
9.   அமெரிக்காவை சேர்ந்த சன் எடிசன் சூரிய ஆற்றல் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் 18மெகாவாட் (MW) திறன் கொண்ட சூரிய பூங்கா அமைக்க 25 பிப்ரவரி 2014 அன்று அறிவித்தது. இந்த திட்டம் செப்டம்பர் 2014 இல் முழுமையாக அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது.
10. இந்திய கடற்படை தளபதி அட்மிரல் டி.கே. ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மும்பையில் நீர்முழ்கிகப்பலில் ஏற்ப்பட்ட விபத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
███▓▒░░ நடப்பு நிகழ்வுகள் (27 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   இந்தியா பெரிய 130 மெகாவாட் சூரிய சக்தி கூடம்26 பெப்ரவரி 2014 அன்று மத்திய பிரதேச மாநிலம் பகவான்புரில் உள்ள நீமுச்சின் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.
2.   தினேஷ் சாரப் 26 பிப்ரவரி 2014 அன்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனனின் (ONGC), அடுத்ததலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிகப்படுள்ளார்.
3.   சவுரவ் கோத்தாரி26 பிப்ரவரி 2014 அன்று லக்னோவில் நடைபெற்ற தேசிய பில்லியர்ட் சாம்பியன் போட்டியில் 5-3என்ற கோல் கணக்கில் அலோக் குமாரை விழ்த்தி பட்டத்தை வென்றார்.
4.   மத்திய அரசு அசாம் மாநிலத்தை பிரித்து போடோலாந்து தனி மாநில கோரிக்கையை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
5.   உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 262014 அன்று சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய உத்தரவிட்டார். அவரது நிறுவனங்களில் முதலீடு செய்த இரண்டு முதலீட்டாளர்களுக்கு 24000 கோடி ரூபாய் பணத்தை திரும்ப தராத விஷயத்தில் நடந்த வழக்கின் முன் தோன்றததல் அவரை கைது செய்ய உத்தரவிட்டார்.
6.   நாட்டின் முதல் பேட்டரியால் இயங்கும் பேருந்து, பெங்களூருவில் பிப்ரவரி 262014 அன்று முதல் தனது சோதனை ஓட்டத்தை தொடங்கியது.
7.   305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (28 பிப்ரவரி 2014)░░▒▓███
1.   தேசிய அறிவியல் தினம் நாடு முழுவதும் 28 பிப்ரவரி 2014 அன்று கடைபிடிக்கப்பட்டது. ராமன் விளைவை கண்டுபிடித்த இயற்பியலாளர் சி.வி. ராமன் பிறந்த தினமான 28 பிப்ரவரியை தேசிய அறிவியல் தினமாக 2010 முதல் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்க்கான கருத்து(theme) “அறிவியற்பூர்வமான வளர்ச்சி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ” ஆகும்.
2.   இந்தியா மற்றும்  இஸ்ரேல்உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்ட உதவி உடன்படிக்கை ஆகிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
3.   மின்சார கார் E2O யை அறிமுகம் செய்து பூட்டான் நாட்டில் மஹிந்திரா தனது கார் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
4.   சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சோதனை முறையில் பயிர் செய்ய அனுமதி அளித்துள்ளது.
5.   சாண்டி பிரசாத் பட்குறுப்பிடத்தக்க காந்தியவாதி சுற்று சூழல் ஆரவலர் மற்றும் சமூக ஆர்வலர் அவருக்கு 28பிப்ரவரி 2014 அன்று 2013 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
6.   இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
7.   ஆந்திரத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 41 ஆண்டுக்கு பிறகு ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமைய உள்ளது.
8.   பண்டைய ரோம் சாம்ராஜ்ஜியத்தின் போர் பயிற்சி பள்ளி ஒன்று ஆஸ்திரியாவில் புதைவுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....