My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Saturday, September 6, 2014

நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 2014

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (1 ஜூன் 2014) ░░▒▓██
1.   ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் 160 கிராமங்களுக்கு தலா ஒரு லிட்டர் குடிநீரை 10பைசாவுக்கு வழங்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
2.   பிரிட்டனின் சவுத்வார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா என்பவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தில்லியைச் சேர்ந்த சுனில் சோப்ராபிரிட்டனின் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். 
3.   நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கரிபெமாநாட்டிலேயே புகையிலை பொருட்களை முற்றிலுமாக பயன்படுத்தாத முதல் கிராமம் என்ற பெயர் பெற்றுள்ளது.
 ███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (2 ஜூன் 2014) ░░▒▓██
1.   நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் “Asian Development Bank” (ADB)  இன் ஆளுநர்கள் குழுவின் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.   அமைச்சரவை செயலாளராக இருந்த திரு அஜித் சேத் அவர்களின் பதவி காலம்ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவரின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது அதனை மத்திய அரசு நிட்டித்துள்ளது.
3.   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 7 கோப்பையை பஞ்சாப் அணியை விழ்த்தி வெற்றிபெற்றது.
4.   29 மே 2014 அன்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் ஜி மகேந்திரா அவர்களுக்கு மதிப்புமிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் ஹார்வர்ட் பதக்கத்தை பெற்றார். இந்த பதக்கத்தை பெரும் முதல் இந்தியர் இவர் அவர்.
5.   முன்னாள் இடதுசாரி கிளர்ச்சி தலைவர் “Salvador Sanchez Ceren” அவர்கள் “எல் சல்வடோர்” நாட்டின் குடியரசு தலைவராக ஜூன் 12014 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
6.   கொரிய விஞ்ஞானிகள் ஓட்டப்பந்திய வீரர் உசேன் போல்ட் ஓடும் வேகத்தில் ஓடக்கூடிய ரோபோராப்டர் (roboRaptor) யை உருவாக்கியுள்ளனர்.
7.   நாட்டின் 29 ஆவது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் 1 ஜூன் 2014 ஆண்டு உதயமானது. அந்த நாட்டின் முதல் மாநிலமாக திரு சந்த்ரசேகர ராவ் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.
 ███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (3 ஜூன் 2014) ░░▒▓██
1.   மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் ஜூன் 1, 2014 அன்று இத்தாலியில் உள்ள “Sassari” நகரில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றார்.
2.   2 ஜூன் 2014 அன்று தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி நிறுவன (NDRI) விஞ்ஞானிகள் Lalima என்ற குளோனிங் முறையில் பெண் எருமைக்கன்று ஒன்றை உரிவக்கியுள்ளனர். “Lalima” உள்நாட்டிலேயே இந்திய தொழில் நுட்பத்தின் முலம் உருவாக்கப்பட்டது. உலகின் மிக அதிக அளவில் எருமைகள் இந்தியாவில் இருகின்றது மற்றும் நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் சுமார் 55 சதவீதம் பங்களிப்பு எருமைகள் வகிக்கின்றது.
3.   பாஜகவை சேர்ந்த மத்திய ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர்கோபிநாத் முண்டே 3 ஜூன் 2014 அன்று தில்லி சாலை விபத்தில் இறந்தார்.
4.   காவிரி பானர்ஜி அவர்கள் தபால் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.   இந்திய மற்றும் பிரஞ்சு விமானப்படை வீரர்கள் ஜோத்பூர் விமான தளத்தில் விமான பயிற்சியை  2 ஜூன் 2014 அன்று தொடங்கினர். இதற்க்கு “Garuda V” என்று பெயர் வைத்துள்ளனர். இது இந்திய மற்றும் பிரஞ்சு விமானப்படை வீரர்கள் மேற்கொள்ளும் ஐந்தாவது பயிற்சி ஆகும். இது 13 ஜூன் 2014 அன்று நிறைவு பெற உள்ளது. முதல் பயிற்சி குவாலியர் இந்திய விமான தளத்தில் பிப்ரவரி 2003 இல் நடைபெற்றது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (4 ஜூன் 2014) ░░▒▓██
1.   இந்தியாசீனாவிற்கு அடுத்து உலக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 2 வது இடத்தை பெற்றுள்ளது. இதை ஐ.நா. வின் Comtrade அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் முலம் தெரியவந்துள்ளது. இந்த தரவரிசையில் இந்திய கடந்த  2012 இல் 8 ஆவது இடத்திலும், 2013 இல் 6 ஆவது இடத்திலும் இருந்தது.
2.   தமிழகத்தைச் சேர்ந்த அலெக்சிஸ் பிரேம் குமார்(47) என்பவர் ஆப்கானில் உள்ள சேவை மையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரத்தில் வைத்து அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
3.   ஹஷீம் ஆமியா 3 ஜூன் 2014  ஆம் தேதி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.  இதற்க்கு முன்னால் கேப்டனாக கிரேம் ஸ்மித் அவர்கள் மார்ச் 2014 ல் ஓய்வு பெற்றார்.
4.   ஜம்மு காஷ்மீர் அரசு 3 ஜூன் 2014 முதல் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 60 வயதாக உயர்த்தியுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (5 ஜூன் 2014) ░░▒▓██
1.   தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வருடத்திற்கு 25 முதல் 40 மில்லியன் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கியதற்காக உலகில் இரண்டாவது சிறந்த விமான நிலையம் என்ற இடத்தை பெற்றுள்ளது.
2.   இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அபிஜித் குஹா அவர்கள் ஐ.நா. வின் அமைதிப்படையின்  தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் ஐந்து பேர்க்கொண்ட உறுபினர்களில் ஒருவராக 5 ஜூன் 2014 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
3.   இந்திய அமெரிக்கரான “Shefali Razdan Duggal” அவர்களை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள் 3 ஜூன் 2014 இல் அமெரிக்கவின் ஹோலோகாஸ்ட் நினைவு சபையின் உறுப்பினராக நியமித்துள்ளார்.
4.   உலக சுற்றுச்சூழல் தினம் (WED) 5 ஜூன் 2014 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 'உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல’ என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. 
5.   மத்திய தகவல் ஆணையம்2014 ஜூன் மாதம் 4 ம் தேதி தனியார் பள்ளிகளும் தகவல் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் வரும் என்று தீர்ப்பளித்தது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (6 ஜூன் 2014) ░░▒▓██
1.   பிரவுன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சில் வழியாக இரத்த சர்க்கரையை கண்டறிய ஒரு புதிய, biochip சென்சார்  ஒன்றை உருவாக்கியுள்ளது.
2.   மக்களவை சபாநாயகராக பாஜ மூத்த பெண் எம்.பி. சுமித்ரா மகாஜன் (71) ஜூன் 6, 2014 அன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம்மக்களவையின் 2வது பெண் சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
3.   சஞ்சய் கபூர் அவர்கள் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவராக 5 ஜூன் 2014 அன்று நியமிக்கப்பட்டார். சஞ்சய் கபூர் அவர்கள் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (7 ஜூன் 2014) ░░▒▓██
1.   துணை அட்மிரல் அனில் சோப்ரா அவர்கள் 6 ஜூன் 2014 அன்று மேற்கத்திய கப்பற்படை பிரிவின் (WNC) தலைமை தளபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
2.   லிதுவேனியா 1 ஜனவரி 2015 முதல் யூரோ நாணயத்தை பயன்பதுத்தும் 19 நாடாகும். இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு 4 ஜூன் 2014 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
3.   மத்திய பிரதேச மாநில அரசு வெளியிட்ட தாய் மற்றும் குழந்தைகள் சுகாதாரத்தை பற்றிய பிரச்சாரம் “மம்தா அபியானின்” தூதராக மாதுரி தீட்சித் அவர்களை நியமித்துள்ளது.
4.   காற்று மாசுபடுவதுக்கு எதிராக போராடக்கூடிய புதிய டைட்டானியம் ஆக்சைடு டைல்சை கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு உருவாக்கியுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (8 & 9 ஜூன் 2014) ░░▒▓██
1.   India Back on track – An Action Agenda for Reform” என்ற புத்தகத்தை புது தில்லியில் 8 ஜூன் 2014 ஆம் தேதி பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார்.
2.   ஐ.பி.எல் மட்டைபந்து தொடரில் நடந்த சூதாட்ட மோசடி தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான விசாரணைக் குழு இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் குழுவில் வழக்குரைஞர்கள் எல். நாகேஸ்வரராவ்நிலோய் தத்தாமூத்த ஐ.பி.எஸ் அதிகாரி பி.பி. மிஸ்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த நிலையில் இந்தக் குழுவில் கூடுதல் உறுப்பினராக செளரவ் கங்குலி சேர்ந்துள்ளார்.
3.   ஐ.நா. பொது சபை 7 ஜூன் 2014 அன்று நெல்சன் மண்டேலா நினைவாக ஒரு விருது அறிவித்துள்ளது.
4.   புதிய ஆந்திரத்தின் முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு  ஜூன் 8, 2014 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
5.   உக்ரைன் தேர்தலில் பெட்ரோ போரஷங்கோ 56 சதவீத வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்.
6.   பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பட்டத்தை ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வென்றார். இது இவருக்கு 9-வது பிரெஞ்சு ஓபன் பட்டமாகும். அதுமட்டுமல்லாமல் இது இவரது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
7.   அப்தெல் ஃபத்தா எல்சிசி அவர்கள் எகிப்து ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (10 ஜூன் 2014) ░░▒▓██
1.   சிக்கிம் அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தேர்வர்களுக்கு 12 சதவீதம் வேலைக்கு இட ஒதுக்கீடு வழங்க அறிவித்துள்ளது.
2.   மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் அவர்கள் இந்திய சொலிசிட்டர் ஜெனரலாக 7 ஜூன் 2014 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
3.   ஜூன் 92014 அன்று குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.கே. மிஸ்ரா அவர்கள் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.   ஜூன் 92014 அன்று இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை சேர்ந்த சோமசுந்தரம் அவர்களுக்கு இந்தியா ஏரோநாட்டிகல் சமூகம் மூலம் வழங்கும் 2013 ஆம் ஆண்டிற்க்கான பாரத் ரத்னா டாட்டா விருது வழங்கப்பட்டது.
5.   தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த “Sirikonda Madhusudhana Chary” அவர்கள் 10 ஜூன் 2014 அன்று தெலுங்கானா சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராக பதவி ஏற்றுக்கொண்டார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (11 ஜூன் 2014) ░░▒▓██
1.   சுனில் தத் அவர்கள் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவராக 10 ஜூன் 2014 அன்று நியமனம்.
2.   10 ஜூன் 2014 அன்று கூகுள் நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்க்கு சேட்டிலைட் நிறுவனமன “Skybox Imaging” நிறுவனத்தை வாங்குவதை உறுதி செய்துள்ளது.
3.   வெப்ப மண்டல சூறாவளி “Nanauk” ஜூன் 11, 2014  அன்று கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவில் தென்மேற்கு பருவ நிலை பதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர்.
. ███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (12 ஜூன் 2014) ░░▒▓██
1.   ரஷ்யாவில் கொள்கை அடிப்படையில் இந்தியாவின் அணுசக்தி பொறுப்பு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைய வாய்ப்பு உள்ளது.
2.   11 ஜூன் 2014 அன்று விஷால் சிக்கா அவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO)நியமிக்கப்பட்டுள்ளார். விஷால் சிக்கா 1 ஆகஸ்ட் 2014 அன்று முதல் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ஏற்க உள்ளார்.
3.   6 வது சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு “ATOMEXPO-2014” மாஸ்கோவில் ஜூன் 9 முதல் ஜூன் 11 2014 வரை நடைபெற்றது.
4.   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லே பகுதியில் மூன்று நாள் நடைபெறும் லே திருவிழா 2014 ஜூன் 12 ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழா கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறையால் நடத்தப்படுகிறது.
5.   காந்தி அடிகள் தனது முதல் சத்தியாக்கிரகத்தை நடத்திய தென் ஆப்ரிக்காவில் உள்ள டால்ஸ்டாய் பண்ணையை சீரமைக்க மத்திய பிரதேச அரசு ருபாய் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளது.
6.   10 ஜூன் 2014 அன்று கனரா வங்கி நியூயார்க்அமெரிக்காவில் தனது ஏழாவது வெளிநாட்டு கிளை திறந்துள்ளது. மற்ற ஆறு வெளிநாட்டு கிளைகள் லண்டன்லீசெஸ்டர் (இங்கிலாந்து)ஹாங்காங்ஷாங்காய்பஹ்ரைன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் ஆகும்.
7.   குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உலகம் முழுவதும் ஜூன் 12 அன்று அனுசரிக்கப்பட்டது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (13 ஜூன் 2014) ░░▒▓██
1.   பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுப்பது பற்றிய உலக உச்சி மாநாடு 2014 ஜூன் 10 ம் தேதி லண்டனில் தொடங்கியது. நான்கு நாள் நடைபெறும் இந்த உச்சி மாநாடு ஹாலிவுட் நடிகை மற்றும் ஐ.நா. சிறப்பு தூதரான ஏஞ்சலினா ஜோலி அவர்கள் தொடங்கிவைத்தார்.
2.   பிரேசிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2014 FIFA உலக கோப்பை நினைவு அஞ்சல் தலைகளை 12 ஜூன் 2014 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டர்
3.   குஜராத் அரசு “சர்தார் சரோவர் அணை” உயரத்தை அதிகரிக்க Narmada Control Authority இடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
4.   லெப்டினன்ட் ஜெனரல் அமித் சர்மா அவர்கள் Strategic Forces Command இன் தலைமை தளபதியாக 13 ஜூன் 2014 அன்று நியமிக்கப்பட்டார்.
5.   ஐ.நா வின் கடல் சார்ந்த விவகாரத்துறை உறுப்பினராக இந்தியாவை சேர்ந்த விண்வெளி ராசிக் ரவீந்திரா அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (14 ஜூன் 2014) ░░▒▓██
1.  13 ஜூன் 2014 அன்று மகாராஷ்டிரா மாநில அரசு தானே மாவட்டத்தில் இருந்து “Palghar மாவட்டத்தை” உருவாக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. வரும் ஆகஸ்ட் 1  முதல் Palghar தனி மாவட்டமாக செயல் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.  சிறந்த மலையாள விஞ்ஞானியாக இருந்து எழுத்தாளராக மாறிய திரு சி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஜூன் 13, 2014அன்று 2013 ஆம் ஆண்டிற்க்கான மதிப்புமிக்க மூர்த்திதேவி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 14 ஜூன் 2014 அன்று இந்தியாவின் விமானம் தங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது ரஸ்சியவிடம் இருந்து 15000 கோடி க்கு வாங்கப்பட்டது.
4.  பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரான லார்டுசுவராஜ் பால்அவர்களுக்கு இங்கிலாந்தை சேர்ந்த வணிக சங்கம் ஒன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.
5.  இரத்த தான தினம் ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
 ███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (15 ஜூன் 2014) ░░▒▓██
1.   ஆந்திர பிரதேச அரசு பியாஸ் ஆற்றில் காணாமல் மாணவர்களை கண்டுபிடிப்பதற்கு விண்வெளி முகவர்களான இஸ்ரோ மற்றும் நாசாவின்  உதவியை நாட முடிவு செய்துள்ளது.
2.   ஆஸ்திரேலியா ஆண்கள் ஹாக்கி அணி நெதர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தனது முன்றாவது உலக கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் இந்திய 9 ஆவது இடத்தை பிடித்தது.
3.   ஆந்திராதெலங்கானாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 29 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க பி.கே. அகர்வால் கமிட்டி இரு அரசுகளுக்கும் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் இரு மாநிலங்களிலும் பணியாற்றும் சுமார் 10,000 அரசு ஊழியர்கள் பயனடைவர்.
4.   அமெரிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக அமெரிக்க இந்தியரான சேதுராமன் பஞ்ச நாதனை அந்நாட்டு அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்காவில் பிரபல விஞ்ஞானியான சேதுராமன் பெங்களூர் ஐஐடி-யில் எம்.டெக் படித்தவர். முன்னதாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட விவேகானந்தா கல்லூரியில் 1981-ம் ஆண்டு இயற்பியல் பட்டம் பெற்றார். 1986-ல் சென்னையில் டேட்டா கம்யூனிகேசன் இன்ஜினீய ராக பணியாற்றினார்.
5.   பிரதமர் மோடியின் பூடான் சுற்று பயணத்தின்போது இந்திய உதவியுடன் அங்கு கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். மேலும் 600 மெகாவாட் திறன்கொண்ட கோலாங்சூ நீர்மின் நிலைய திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
6.   இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கொள்கையை மத்திய அரசு விரைவில் வகுக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சருக்கான அறிவியல் ஆலோசகர் அவினாஷ் சந்தர் கூறியுள்ளார்.
 ███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (16 ஜூன் 2014) ░░▒▓██
1.   கொலம்பியாவின் ஜனாதிபதியாக “ஜூவான் மானுவல் சாண்டோஸ்” அவர்கள் ஜூன் 152014 அன்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.   14 ஜூன் 2014 அன்று இந்திய வம்சாவளி இயற்பியலாளர் “Tejinder Virdee” அவருக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் நைட்ஹூட் விருதை வழங்கி உள்ளார்.
3.   14 ஜூன் 2014 அன்று “Shaktikanta Das” அவர்கள் புதிய வருவாய் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.   தீர்ப்புகளுக்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (17 ஜூன் 2014) ░░▒▓██
1.   ஐக்கிய நாடுகள் பொது சபை 16 ஜூன் 2014 அன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையாளராக ஜோர்டான் இளவரசர் ஜியேத் அல் ஹுசைன் (Zeid al-Hussein) அவர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பதவி ஏற்கும் முதல் முஸ்லீம் மற்றும் அரபு நாட்டை சேர்ந்தவர் இவர் அவர்.
2.   17 ஜூன் 2014 அன்று மத்திய பிரதேச அரசு நர்மதா-மால்வா-காம்பிர்  நதிகள் இணைப்பு திட்டத்துக்கு (NMGLP) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் முலம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களில் 158 கிராமங்களில் பாசன வசதி பெறுவதன் முலம் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.   நாட்டில் மண்ணெண்ணெய் பயன் பாடு இல்லாத முதல் நகரமாக டெல்லி உதயமாகியுள்ளதாக அம்மாநில அரசு 17 ஜூன் 2014 அன்று அறிவித்தது. டெல்லி மண்ணெண்ணெய் பயன்பாடில்லா நகரம் 2012என்ற திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் மூலம் இது சாத்தியமானது. 
4.   இடது கை சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் அவர்கள் 14 ஜூன் 2014 அன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.
 ███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (18 ஜூன் 2014) ░░▒▓██
1.            18 ஜூன் 2014 அன்று நிதா அம்பானி அவர்கள் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
2.            பார்த்தசாரதி சோம் (Parthasarathi Shome) தலைமையில் அமைக்கப்பட்ட வரி நிர்வாகம் சீர்திருத்த ஆணையம் (TARC) ஜூன் 15, 2014 அன்று தனது அறிக்கையை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
3.            "இந்திய அணு சக்தியின் தந்தைஎன்று போற்றப்படும் மறைந்த விஞ்ஞானி ஹோமி பாபாவின் வீடு ரூ. 372 கோடிக்கு ஜூன் 15, 2014 அன்று ஏலம் விடப்பட்டது.
4.            நோபல் பரிசு போலமிகப்பெரும் பரிசுத் தொகையுடன் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் "டாங்'பரிசுமுதல்முறையாக நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் க்ரோ ஹார்லெம் பிரண்ட்லாந்துக்கு வழங்கப்படவுள்ளது.
5.            அமெரிக்காவில்கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் "மாற்றத்துக்கான நாயகர்' (சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச்) விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதிஷ்டா கன்னா என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (19 ஜூன் 2014) ░░▒▓██
1.   அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் 17 ஜூன் 2014 மத்திய பசிபிக் பெருங்கடலில் உலகின் மிக பெரிய பாதுகாக்கப்பட்ட கடற் பகுதி ஒன்றை(Marine Protected Area) உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார். இதன் முலம் கடல் வாழ் உயிரினகளை பாதுகாக்கப்படும்.
2.   இந்தியாவில் பிறந்த மெக்சிகன் நாட்டவரான தாவரவியல் விஞ்ஞானிசஞ்சய ராஜாராம் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான உலக உணவு பரிசு விருது வழங்கப்பட்டது. கோதுமை பயிர் உற்பத்தியில் இவரின் பங்களிப்புக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்படுகிறது. இவர் 480 வகை உயர் விளைச்சல் தரும் கோதுமையை மரபணு முறையில் உருவாக்கியுள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார்.
3.   367 வித்தியாசமான புதிய வகை உயிர் வகைகள் தென்கிழக்கு ஆசியா பகுதியான மீகாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
4.   18 ஜூன் 2014 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையின் படி மேற்கு ஆபிரிக்காவில் ஆபத்தான எபோலா வைரஸ் காரணமாக 337 நபர்கள் உயர்ந்துள்ளனர்.
5.   தைவான் கவிஞர்யூசி  அவர்கள் திருக்குறள் மற்றும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள் ஆகிய இரண்டையும் மாண்டரின் மற்றும் சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அவர் பாரதிதாசன் கவிதைகளும் மொழிபெயர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (20, 21, 22 & 23 ஜூன் 2014) ░░▒▓██
1.   இந்தியாவில் பிறந்த புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்களுக்கு20 ஜூன்2014 அன்று 2014 ஆம் ஆண்டிற்க்கான பென் பிண்டர் பரிசுக்கு அறிவிக்கப்பட்டார்.  அவரது சிறந்த இலக்கியத்துக்கான இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
2.   மேக்னஸ் கார்ல்சன்18 ஜூன்2014 அன்று துபாய்யில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷி போட்டியில் பட்டத்தை வென்றார்.
3.   ஜூன் 20, 2014 அன்று இந்தி கவிஞர் கேதார்நாத் சிங் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டிற்க்கான மதிப்புமிக்க ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4.   ஜூன் 2014 இல் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியீட்ட அறிக்கையில் இந்த ஆண்டு எல் நினோ விளைவுகளின் காரணமாக இந்திய பருவ மழை காலத்தில் 70 சதவீதம் மற்றம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த எல் நினோவை இந்திய பெருங்கடலில் ஏற்ப்படுவதனால் இதனை Indian Ocean Dipole அல்லது  Indian Nino என்று கூறுவர்.
5.   யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 38-வது கூட்டத்தொடர் நேற்று தோஹாவில் நடைபெற்றது. அதில் குஜராத் மாநிலம் பதானில் உள்ள ராணி-கி-வாவ் என்னும் கலைநயம் மிக்க படிக்கட்டுகளைக் கொண்ட நீர்த்தடாகம் பாரம்பரியத் தளங்கள் பிரிவில் இடம் பெற்றது.
6.   வேற்றுலக உயிர் வாழ்க்கையை கண்காணிக்க நாசா உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்க்கு “ATLAST” என்று பெயர் வைக்கப்பத்துள்ளது.
7.   உலக அகதிகள் தினம் 2014 ஜூன் 20 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
8.   21 ஜூன் 2014 அன்று முன்னாள் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா அவர்களுக்கு கனடா நாட்டில் உள்ள டொராண்டோ பகுதியில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (24 ஜூன் 2014) ░░▒▓██
1.   சீனிவாசன்பிசிசிஐ தலைவர் ஒருமனதாக 14 வது ஆண்டாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA)தலைவராக 23 ஜூன் 2014 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2.   கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் (GHNPCA) உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
3.   ஐக்கிய நாடுகள் சபையின் பொது சேவை தினம் ஜூன் 23 ம் தேதி அனுசரிக்கப்படாது.
4.   22 ஜூன் 2014 அன்று போட்ஸ்வானா உள்ள ஒகவங்கோ டெல்டா (Okavango Delta) பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது இது உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட 1000 ஆவது தளம் ஆகும்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (25 ஜூன் 2014) ░░▒▓██
1.   ஏர் இந்தியாஇந்தியாவின் தேசிய விமான நிறுவனம்உலக விமான நிறுவனமான ஸ்டார் குழுமத்துடன் இனைந்து விமான சேவை வழங்க முடிவு செய்துள்ளது.
2.   ஆந்திர பிரதேச அரசு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 60 ஆகா உயர்த்தியுள்ளது.
3.   குஜராத் போலீஸ் படையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குஜராத் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (26 ஜூன் 2014) ░░▒▓██
1.   விஞ்ஞானிகள் கான்கிரீட் கட்டமைப்புகளில் உள்ள பிளவுகளை கண்டறிய “sensing skin technology” என்னும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
2.   ஓடிஷா அரசு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆகா உயர்த்தியுள்ளது.
3.   சங் ஹாங் வோன் அவர்கள் 2014 ஜூன் 25 அன்றுதென் கொரியாவின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
4.   கூடுதல் செயலாளர் A.K. துபே  அவர்கள் 25 ஜூன் 2014 அன்று கோல் இந்தியா லிமிடெட் இன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
5.   24 ஜூன் 2014 அன்று மத்திய “Engineers India Ltd” மற்றும் “National Buildings Construction Corporation” ஆகிய இரண்டு நிறுவனத்துக்கும் நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (27 ஜூன் 2014) ░░▒▓██
1.   பிரான்ஸ் 25, ஜூன் 2014 அன்று சினிமா தனது பங்களிப்பை கவுரவ படுத்தும் விதமாக ஷாரு கான் அவர்களுக்கு மதிக்க “Legion of Honour” விருது வழங்க உள்ளதை அறிவித்தது.
2.   தமிழ்நாடு அரசு குறைந்த செலவில் மருந்துகள் வழங்க அம்மா மருந்தகங்களை 2014 ஜூன் 26 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
3.   26 ஜூன் 2014 அன்று மத்திய அரசு மேலும் மூன்று மாதங்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் செயல்படுத்த காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
4.   கூகிள் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை உருவாக்க “அண்ட்ராய்டு ஒன்” என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (28 ஜூன் 2014) ░░▒▓██
1.   27 ஜூன் 2014 அன்று இந்திய மணல் கலைஞர் “Sudarsan Pattnaik” அமெரிக்க அட்லாண்டிக் சிட்டி நடைபெற்ற உலக கோப்பை மணல் சிற்பி-2014 போட்டியில் “பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது” பெற்றார்.
2.   26 ஜூன் 2014 அன்று “Jean-Claude Juncker” அவர்களை ஐரோப்பிய ஆணைக்குழுவின் அடுத்த ஜனாதிபதியாக அறிவித்துள்ளது. இவர் வரும் 2014 இல் பதவி ஏற்க உள்ளார்.
3.   புனே ஃபெர்குசன் கல்லூரியில் 26 ம் தேதி ஜூன் 2014 வெளியிட்ட 2014-15 ஆம் ஆண்டிற்கான கல்வி விண்ணப்ப படிவங்களில் மூன்றாவது பாலினம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது உள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (29 & 30 ஜூன் 2014) ░░▒▓██
1.   சாய்னா நேவால் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றார்.
2.   பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செயற்கைகோள்களை ஏந்திச்செல்லும் PSLV C-23 Rockrt,ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 30 ஜூன் 2014 அன்று ஏவப்பட்டது.
3.   பிரான்ஸ் அரசு இந்தியாவிற்கு முன்று ஆண்டுகளுக்கு பருவ நிலை மாற்றத்தை கையாள 1 பில்லியன் யூரோ அளவிற்கு கடன் வழங்க முடிவு செய்துள்ளது.


No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....