My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Thursday, September 11, 2014

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2014

நடப்பு நிகழ்வுகள் (1 ஜனவரி 2014)
1.   மாம்மென் மேத்யூ (Mammen Mathew மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியர் பத்திரிகை துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான லோகமான்ய திலகர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.   டேனியல் ஸ்டீல் (அமெரிக்க எழுத்தாளர்), பிரான்சின் மிக உயர்ந்த விருதான லெஜியான் ஆப் ஹானர் விருது (Legion of Honorவழங்கப்பட்டது.
நடப்பு நிகழ்வுகள் (2 ஜனவரி 2014)
1.   டெல்லியில்  மின் விநியோகம் செய்யும் முன்று நிறுவனங்கள் கணக்கை தணிக்கை செய்ய தில்லி அரசு சிஏஜி க்கு உத்தரவிட்டுள்ளது.
2.   ரொனால்டினோ, 2௦13 ஆம் ஆண்டிற்க்கான தென் அமெரிக்க கால்பந்து வீரர் விருதை பெற்றார்.
3.   இராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் தலைவர்கள் குழுவின் தலைவர் (Chiefs of Staff Committee Chairman)பொறுப்பை ஏற்றார்.
4.   மத்திய அரசு ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் (Jawaharlal Nehru National Urban Renewal Mission scheme )கீழ் 13 நகரங்களில் 1000 பேருந்துகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
5.   லோசர் (Losar) லடாக் பகுதியில் கொண்டாடபடும் புத்தாண்டு திருவிழா சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது.
6.   2 ஜனவரி 2014 அன்று லாட்வியா(Latvia) நாடு யூரோ மண்டலத்தின் 18 உறுப்பினர் நாடக இணைந்தது.
நடப்பு நிகழ்வுகள் (3 ஜனவரி 2014)
1.   பெண்களின் பாதுகாப்பு கருதி 32 நகரங்களில் மத்திய அரசு போக்குவரத்து வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜி.பி.எஸ் பொறுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.   ஹப்புள் தொலைநோக்கி(Hubble space Telescope’s) 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிதாக மேகங்கள் உடைய இரண்டு கிரகங்களை கண்டுபிடித்துள்ளது ( GJ 436b மற்றும் GJ1214 ).
3.   பாக்கிஸ்தான் 2030 ஆம் ஆண்டிற்கும் 8900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு புதிதாக 7அணுமின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
4.   விஞ்ஞானிகள் உள்ளூர் தகவல்களை பயன்படுத்தி காலநிலை நடவடிக்கைகளை கொடுக்கிற புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
5.   நீதிபதி ஏ.கே. கங்குலி தேசிய பல்கலைக்கழக கெளரவ பேராசிரியர் பதவியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்தார்.
நடப்பு நிகழ்வுகள் (4 ஜனவரி 2014)
1.   எஸ்.கே. சர்மா  அவர்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார்.
2.   இந்தியா அரசு உலக வங்கியுடன் 160 மில்லியன் டாலர்க்கு கடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
3.   கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு Order of Prince Henry விருது வழங்கப்பட்டுள்ளது.
4.   மன்மோகன் சிங் கேரளாவில் E-literacy திட்டத்தை தொடங்கிவைத்தார்.
5.   டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) திருவனந்தபுரத்தில் உலகின் மிக பெரிய பெருநிறுவன பயிற்சி மையம்(corporate learning and development centre) ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.
6.   அர்ஜுனா விருது வழங்குவதற்கு புதிய வழிமுறைகளை விளையாட்டு  துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (5 ஜனவரி 2014)
1.   செரீனா வில்லியம்ஸ் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி 2014 யை வென்றார்.
2.   5 ஜனவரி 2014 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாகஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட GSLV-III D5 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியது.
3.   தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலை ஏப்ரல் மாதம் மத்தியில் தொடங்கி ,மே மாதம் வரை ஐந்துகட்டங்களாக நடத்திமுடிக்க திட்டம் இட்டுள்ளது.
4.   ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து அஷேஸ் தொடரை வென்றது.
நடப்பு நிகழ்வுகள் (6 ஜனவரி 2014)
1.   பூட்டான் மன்னர், Jigme Khesar Namgyel Wangchuck மற்றும் ராணி Jetsun Pema Wangchuck ஆகிய இருவரும்இந்தியாவிற்கு ஐந்து நாள் சுற்று பயணமாக 6 ஜனவரி 2014 அன்று வந்துள்ளனர்.
2.   Indian Pitta, ஒரு அரியவகை பறவை 60 ஆண்டுகளுக்கு பிறகு தில்லியில் காணப்பட்டது.
3.   மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் மரத்துளைகளில் வாழும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.   ஆர் சந்திரசேகர் அவர்கள் 4 ஜனவரி 2014 அன்றுமென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பின் (நாஸ்காம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.   சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையம் 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கொலராடோபல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு நிகழ்வுகள் (7 ஜனவரி 2014)
1.   இந்திய அரசு 37 நபர்களுக்கு மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு மனித தன்மையுடன் நடந்தமைக்காக ஜீவன் ரக்ஷா பதக்(Jeevan Raksha Padak) விருதை அறிவித்துள்ளது.
2.   அணு ஆயுதங்களை தங்கிசென்று தாக்கவல்ல பிருத்வி II ஏவுகணை வெற்றிகரமாக ஓடிஷாவில் உள்ளசாந்திப்பூர் என்ற இடத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது.
3.   சுற்றுச்சூழல் தகவல் விரிவாக்க மையம்(Environmental Information dissemination centre) தமிழ்நாட்டில் அமையயுள்ளது.
4.   அரசு இந்தியாவின் முதல்முறையாக முழுமைக இளம்பருவத்தினர் பயன்படும் வகயில் சுகாதார திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.
5.   சீனா அரசு குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கையை பாதுகாக்க  சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டஆறு டன் யானை தந்தத்தை அழித்தது.
6.   சட்டீஸ்கர் அரசு ஊழலை தடுப்பதற்கான இலவச தொலைபேசி எண் “1100” தொடங்கியுள்ளது.
7.   ஆந்திராவில் தொடங்கப்படயுள்ள தேசிய முதலீட்டு மற்றும் தயாரிப்பு மண்டலம் (National Investment and Manufacturing Zones) ஒரு பங்குதாராக இருக்க சீனா முடிவுசெய்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (8 ஜனவரி 2014)
1.   வானியல் ஆராய்ச்சியாளர்கள் 200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மற்றொரு சூரிய மண்டலத்தில் பூமியை போல்ஒத்த காற்று மண்டலம் நிறைந்த மற்றொரு பூமியை கண்டுபிடித்துள்ளனர்.
2.   அரவிந்த் கெஜ்ரிவால்ஊழல் அதிகாரிகள் பற்றி தகவல் அளிக்க தில்லிவாசிகள் புதிய தொலைபேசி எண்யை வழங்கியுள்ளது.
3.   அல் கெய்தா தொடர்புடைய திவிரவாத அமைப்பு ஈரானில் பல்லூஜா (Fallujah) நகரை கைப்பற்றி அதனை புதியமாநிலமாக அறிவித்துள்ளது.
4.   முனீஸ் சாரதா (Munish Sharda) ஜெனரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின்  இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.   மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணக்குளை தணிக்கை செய்யலாம் என்று தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (9 ஜனவரி 2014)
1.   இணைந்த சாம்பல் நிற திமிங்கிலக் கன்று ஒன்று பாஜா கலிபோர்னியா கடற்க்கரை ஓரம் மீனவர் ஒருவர் கண்டுபிடித்தார்.
2.   பேஸ்புக் நிறுவனம் 7 ஜனவரி 2014 அன்று பெங்களூருவை சேர்ந்த லிட்டில்  லேப்ஸ் என்ற நிறுவனத்தை 90 கோடி ரூபாய்க்கு வங்கியுள்ளது.
3.   சுகாதார ஆராய்ச்சி துறை(Department of Health Research), பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ரீதியாகஉதவி புரிய புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
4.   மலேஷியா அரசு ஐஐடி யின் ஒரு கிளையை தங்கள் நாட்டில் திறக்க இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
5.   இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே ஆன பாதுகாப்புத்துறை அமைச்சக கூட்டம் நடைபெற்றது.
நடப்பு நிகழ்வுகள் (10 ஜனவரி 2014)
1.   உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு அதிகப்படுத்துவது பற்றி ஆராய கேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 8 ஜனவரி 2014 அன்று அதன் முதல் அறிக்கையை சமர்ப்பித்தது.
2.   புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் செய்துக்கொண்ட உடன்படிக்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
3.   பிஸ் ஸ்டோன் (Biz Stoneட்விட்டர் இன் துணை நிறுவனர் 8 ஜனவரி 2014 அன்று ஜெல்லி என்று ஒரு புதியமொபைல் சேவை ஒன்றை வெளியிட்டார்.
4.   துனிசியா (Tunisia) பிரதமர், அலி லாராயெட் (Ali Larayedh) அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
5.   பெண்களுக்கான இந்தியாவின் முதல் துப்பாக்கி, நிர்பீக் (Nirbheek) 9 ஜனவரி 2014 அன்று வெளியிடப்பட்டது. இதுடிசம்பர் 2012 இல் டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் நினைவாக வெளியடப்பட்டது.
6.   சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகம் அருணாச்சல பிரதேசத்தில் தவாங்-II நீர் திட்டத்தை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (11 ஜனவரி 2014)
1.   சவுத் கொரியாவை சேர்ந்த இரும்பு தொழிற்சாலை நிறுவனமான போஸ்கோவிற்கு ஓடிஷாவில் தொழிற்சாலை அமைக்க சுற்றுசுழல் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது.
2.   கோரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள உலகின் மிக நீளமான நடைமேடை (platformலிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
3.   இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை டிசம்பர் 2013 இல் 10.1 பில்லியன் டாலர் என்று அளவுக்கு குறுகியது.
4.   ஓஎன்ஜிசி ஆண்கள் & சத்தீஸ்கர் பெண்கள் அணி 28 வது பெடரேஷன் கோப்பை தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றனர்.
5.   நாடுமுழுவதும் புதியதாக ரூ.6650 கோடி மதிப்பீட்டில் 71 புற்றுநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
6.   சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா - அய்சம் அல் குரேஷி (பாகிஸ்தான்) ஜோடி தகுதி பெற்றுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (12 ஜனவரி 2014)
1.   ஐஆர்டிஏ 2012-13  ஆம் ஆண்டில் 12 காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதத் தொகையாக ரூ .12 கோடியை போட்டுள்ளது.
2.   சிறந்த வங்கி விருதை “பாங்க் ஆப் பரோடா” வங்கி 12 ஜனவரி 2014 அன்று பெற்றுள்ளது.
3.   எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை சிறந்த முறையில் பாதுகாத்தமைக்கான விருதை ஆந்திர அரசு பெற்றுள்ளது.
4.   நாள் சர்வதேச காற்றாடி விழாகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி நதி அருகில் நேற்று தொடங்கியது.
5.   ராஜஸ்தானின் மொத்தவிலை சந்தைகளில் விளைபொருளை விற்பனை செய்யவரும் விவசாயிகளுக்குஐந்து ரூபாயில் உணவளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
6.   வரும் 2017-ம் ஆண்டு சந்திராயன்-திட்டம் நிறைவேற்றப்படும் என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நடப்பு நிகழ்வுகள் (13 ஜனவரி 2014)
1.   சனில் ஷெட்டி மற்றும் அன்கிடா தாஸ் 12, ஜனவரி 2014  அன்று நடைபெற்ற தேசிய 75 வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம்வென்றார்.
2.   ஷேக் ஹசீனா பங்களாதேஷ் பிரதராக படவியேற்றர்.
3.   இந்தியா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 12, ஜனவரி 2014 அன்று போர்ட் பிளேர் இல்  அந்தமான் நிக்கோபார்பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை (Andaman and Nicobar Tribal Research and Training Institute) தொடங்கி வைத்தார்.
4.   இந்தியா எந்த போலியோ பதிப்பும் இல்லாமல் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது.
5.   கோல்டன் குளோப் விருதை நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ சிறந்த நடிகருக்கான விருதினைத் தட்டிச் சென்றார்.
நடப்பு நிகழ்வுகள் (14 ஜனவரி 2014)
1.   இந்தியா மற்றும் கனடா நாடுகள் இரும்பு மற்றும் எஃகு துறையில் ஒப்பந்தம் செய்துக்கொண்டன.
2.   34 விஞ்ஞானிகள் குழு ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள தைத் கிராமத்தில்டைனோசர் படிமங்களை கண்டுபிடித்தனர்.
3.   சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை திரும்ப பெற்ற முதல் மாநிலமாக மாறியது டெல்லி.
4.   கிறிஸ்டியானோ ரொனால்டோ 2013 ஆம் ஆண்டுக்கான FIFA Ballon d’Or  விருதை பெற்றார்.
5.   சுவாமி விவேகானந்தர் 151 வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
6.   உயர் தொழில்நுட்ப அடையாள அட்டைகளை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுமலேசிய அரசு.
நடப்பு நிகழ்வுகள் (15 ஜனவரி 2014)
1.   இந்தியா ஜப்பான் இரண்டு நாடுகளும் கொச்சி கடற்கரைப்பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி செய்தனர்.
2.   நானோ தொழில்நுட்பத்தின் மூலம் புற்று நோய் தடுக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
3.   பிரிட்டிஷ் பிரதமர் ஆபரேஷன் புளூஸ்டார் இல் முன்னால் பிரிட்டிஷ் பிரதமர் தாட்சர் பங்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
4.   அமெரிக்கா அரசு இந்தியாவில் இருந்து திருடப்பட்ட மூன்று 10 ஆம் நூற்றாண்டு இந்திய கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
5.   கர்நாடகம் அரசு அனைவருக்கும் சுகாதாரம் வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம் ஆனது.
6.   இந்தியாவில் வாழும் மக்களின் சராசரி வாழ்நாள் விகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகரித்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (16 ஜனவரி 2014)
1.   இந்தியாவின் வேகமாக ரோந்து கப்பல் அபினவ் கொச்சியில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டது.
2.   கோவா அரசு OBC க்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
3.   நாசா 2013 YP139 என்ற ஒரு புதிய அபாயகரமான சிறுகோள் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டது.
4.   நீரோடைகள் மற்றும் நதிகளில் இருந்து வெளிப்படும் நைட்ரஸ் ஆக்சைடு இன் அளவை விஞ்ஞானிகள் ஆய்வுசெய்கின்றனர், நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை கண்டறிய.
5.   தமிழ்நாடு அரசு கபடி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளை சென்னையில் நடத்த 1.75 கோடி ரூபாய்வழங்கியுள்ளது.
6.   தைவான் கவிஞர் யூசி அவர்களுக்கு சீனா மொழியில் திருக்குறளை மொளிமற்றியதல் அவருக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் விருது வழங்கியது.
நடப்பு நிகழ்வுகள் (17 ஜனவரி 2014)
1.   தொல்பொருள் ஆராய்சியாளர்கள் எகிப்தில் பாரொனிக் அரசர்களின் (Pharaonic Kings) தொலைந்த வம்சத்தைகண்டுபிடித்துள்ளனர்.
2.   கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவு வேகமாக உயர்ந்து வருகிறது என்று ஐ.நா வின் அறிக்கையில் கூறியுள்ளது.
3.   அபிஜீத் குப்தா பிரஸ்வந்த் சர்வதேச செஸ் போட்டியில் (Parsvnath International Grandmasters chess tournament) வெற்றி பெற்றுள்ளார்.
4.   தமிழகத்தின் மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் வார காலம் தடை விதித்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (18 ஜனவரி 2014)
1.   இந்திய ரிசர்வ் வங்கி மாதா வைஷ்ணவ தேவி படம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய்நாணயங்களை வெளியிட்டது.
2.   சவுத் இந்தியன் வங்கியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
3.   கண்ணீரின் முளன் குளுக்கோஸ் அளவை அளவிட கூகுள் ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ் ஒன்றை வெளிட்டுள்ளது.
4.   Hery Rajaonarimampianina மடகாஸ்கர் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
5.   பாகிஸ்தனில் உள்ள பெஷாவர் நகரத்தில், உலக அளவில் போலியோ அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளர்கள் என்று WHO கூறியுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (19 ஜனவரி 2014)
1.   நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை 7-2 என்ற கோல் கணக்கில் விழ்த்தி உலக ஹாக்கி லீக் பட்டத்தை வென்றது.
2.   கோவா வில் முன்றாவது முறையாக Lusofonia விளையாட்டு (போர்த்துகீசியத்தின் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்) 18 - 29 ஜனவரி தேதிகளில் நடைபெறயுள்ளது.
3.   பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதி நிர்மல் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4.   அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியை மீரா சந்திரசேகரன் சிறந்த ஆசிரியருக்கான ராபர்ட் ஃபோஸ்டர் செர்ரி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
நடப்பு நிகழ்வுகள் (20 ஜனவரி 2014)
1.   கிறிஸ்டோபர் சாட்டவே (Christopher Chataway, முன்னாள் ஒலிம்பிக் 5000 மீட்டர் உலக சாதனையாளர் இறந்தார்.
2.   கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அபிஷிக்தா எஸ் ஷெட்டி(Abhishikta S Shetty) மிஸ் தென்னிந்தியா அழகி பட்டத்தை வென்றார்.
3.   வால் மார்ட் இந்தியாவில் வால் மார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற புதிய பெயரில் தனது நிறுவனத்தை பதிவு செய்துள்ளது.
4.   அணு ஆயுதங்களை தங்கிசென்று தாக்கவல்ல அக்னி  IV ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
5.   பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் கிளார்க் (16), உறையவைக்கும் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிரில் தென் துருவத்தைக் கடந்து சாதனை புரிந்துள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் (21 ஜனவரி 2014)
1.   மத்திய அமைச்சரவை இந்தியா முழுவதும் சமண சமயத்தை சார்ந்தவர்களை சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.   ஆனந்த் சின்ஹா​​, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் 20 ஜனவரி 2014 அன்று ஓய்வு பெற்றார்.
3.   இந்தியாவில் தனிநபர்களின் ஆன்லைன் வங்கி நடவடிக்கைகள் மற்றும் தகவல்களை திருடும் வைரஸ்,டெக்ஸ்டர்(Dexter) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.   அருணா பகுகுணா, முதல் பெண் தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.   காலநிலை மாற்றம் பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் திரையரங்கம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் காபுர்தாலா வில் Pushpa Gujral Science City என்ற இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. கனடாவக்கு அடுத்து உலகில் இரண்டாவதாக இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
6.   சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டில் 7.7 சதவீதம் என்று அறிவித்துள்ளது.
7.   சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஈரானுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (22 ஜனவரி 2014)
1.   உத்தரகண்ட் அரசு புதிய லோக்ஆயுக்தா மசோதாவை 21, ஜனவரி 2014  அன்று அந்த மாநிலத்தின்சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2.   மத்திய அரசு 18, ஜனவரி 2014  அன்று கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேசிய உணவுபாதுகாப்பு சட்டத்தை நீட்டித்துள்ளது.
3.   பழம்பெரும் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் இறந்தார்.
4.   இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2013-14 ஆம் ஆண்டுகளில் 4.5 சதவீதமாக இருக்கும் என International Monetary Fund (IMF) கணித்துள்ளது.
5.   ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (23 ஜனவரி 2014)
1.   புகை மற்றும் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த பெய்ஜிங் அரசு கடுமையான புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
2.   சிந்து  மற்றும் ஹரப்பா நாகரிகங்கள் அழிய வன்முறை, தொற்று நோய் மற்றும் காலநிலை மாற்றங்கள்காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்கவை சேர்ந்த அபலாசியன் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்துள்ளனர்.
3.   இந்தியாவில் பிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியரான ஆரோகியசாமி ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு 21,ஜனவரி 2014 அன்று மதிப்புமிக்க 2014 ஆம் ஆண்டுக்கான மார்கோனி சமூகம் விருது (Marconi Society Prize) வழங்கப்பட்டது.
4.   ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரி புலம்பெயர் பறவைகளுக்கான சிறந்த நிலையான மற்றும் வாழத்தகுந்த இடம் என்று 21, ஜனவரி 2014 அன்றுஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனம் (UNWTO) அறிவித்துள்ளது.
5.   மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான  CRISIL 21, ஜனவரி 2014  அன்று 2014-15 ஆண்டிற்க்கான இந்தியபொருளாதார முன்கணிப்பை வெளியிட்டது. அதன் படி பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதம் இருக்கும் என்று கூறியுள்ளது.
6.   ஆசியா ஒலிம்பிக் கவுன்சில் (OCA) ரஷியன் தற்காப்பு கலையான சம்போ (Sambo வை ஆசிய விளையாட்டுபோட்டிகளில் இணைக்க அங்கீகரித்துள்ளது.
7.   இந்திய புவியியல் ஆய்வுக்காக, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கருட வாசுத (Garuda Vasudha) என்ற அதிநவீன ஹெலிகாப்டர் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.
8.   2013 ஆம் ஆண்டு உலகத்தில் அதிகமான வெப்பம் பதிவன நான்காவது ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
9.   இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் ராகேஷ் குரானா ஹார்வர்டு கல்லூரி டீன் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
10. 21, ஜனவரி 2014 அன்று உச்ச நீதிமன்றம் விசத்தினர் ஏற்ப்படும் மரணத்திற்கு  விசாரணை செய்யஉள்ளுறுப்புகளின் சோதனையை (viscera test) கட்டாயம் பெறவேண்டும் என்று கூறியுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (24 ஜனவரி 2014)
1.   தென் சூடான் அரசாங்கம் மற்றும் அந்நாட்டு போராளிகள் இடையே ஆன சண்டை நிறுத்திக்கொள்ள உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2.   தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 ம் தேதி அனுசரிக்கப்பட்டது.
3.   ஷேன் வார்ன் 20 ஓவர் உலக கோப்பைக்கு ஆஸ்திரேலியா ஸ்பின்னர்களுக்கு வழிகாட்டியான நியமிக்கப்பட்டுள்ளார்.
4.   அமெரிக்கா அரசு அந்நாட்டு இராணுவத்தில் பணியாற்றும் சீக்கியயர்கள் தலைப்பாகு அணிய அனுமதி வழங்கியுள்ளது.
5.   நாசா விஞ்ஞானிகள்  செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
நடப்பு நிகழ்வுகள் (25 ஜனவரி 2014)
1.   25 ஜனவரி 2014 அன்று இந்திய தேர்தல் ஆணையம் 4 வது தேசிய வாக்காளர்கள் தினத்தை கொண்டாடியது.
2.   தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority24, ஜனவரி 2014  அன்று நாடு முழுவதும்2648 கிராமங்களில் சட்ட சேவை மையங்களை தொடங்கியுள்ளது.
3.   6.1 என்ற ரிக்டர் அளவுகோலில் இந்தோனேஷியா ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது.
4.   மத்திய அரசு, தேசிய நீர்வழி 4 கை 37 கிலோமீட்டர் நீட்டிக்க திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கிவைத்தது.
நடப்பு நிகழ்வுகள் (26 ஜனவரி 2014)
1.   உலக பொருளாதார மன்றம் வெளிட்ட உலக சூழலில் பாதுகப்பு செயல்திறன் பட்டியலில் இந்தியா 155 வது இடம் பெற்றுள்ளது.
2.   2013 ஆம் ஆண்டுக்கான தேசிய இன ஒற்றுமைக்காக வழங்கப்படும் விருதுகள் பட்டியலை மத்திய அரசு அறிவித்தது.
3.   ரஷ்யாசீனா போர் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் தங்களது முதலாவது கூட்டு பயிற்சியைதொடங்கியுள்ளது.
4.   ஆதார் அட்டை குடியுரிமையை கூறும் ஒரு ஆதாரம் இல்லை என்று Unique Identification Authority of India (UIDAI)வின்  தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.
5.   83 விமானப்படை வீரர்களுக்கு குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன.
6.   இந்தாண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ஜப்பன் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்றார்.
7.   இந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டுள்ளன. இந்திய வனத்துறையில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
8.   பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே இருக்கும் தேசிய ராணுவ நினைவிடத்தில் 207 அடி உயரம் கொண்ட நாட்டின் மிக உயர்ந்த கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது.
9.   புவியிலிருந்து 390 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆற்றல் மிக்க புதிய கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித் துள்ளனர்.
10. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில்ரஃபேல் நடாலை வீழ்த்திஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
11. இந்தியன் கிராண்ட் ப்ரீ பேட்மிட்டன் இறுதிச் சுற்றில்சக நாட்டு வீராங்கனை பி.வி.சிந்துவை வீழ்த்திசாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்
12. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த சானியா மிர்சா இணை இரண்டாம் இடம் பிடித்தது.
நடப்பு நிகழ்வுகள் (27 ஜனவரி 2014)
1.   Lusofonia Games (போர்ச்சுகல் காமன்வெல்த் விளையாட்டு) போட்டியில் ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.
2.   இந்திய அரசு ஏர்பஸ்  380 மீது விதித்திருந்த தடையை நீக்கியது.
3.   தமிழ்நாடு அரசு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் திட்டங்களுக்கு ரூ.854 கோடி வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4.   இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான 'பத்ம விபூஷன்' 2014 ஆண்டுக்கு விஞ்ஞானி RA Mashelkarமற்றும் யோகா குரு BKS ஐயங்கார் ஆகிய இருவருக்கு வழங்கப்பட உள்ளது.
5.   56 வது கிராமி விருது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொடுக்கப்பட்டது.
6.   இந்திய தபால் துறை நாடு முழுவதும் 5 நகரங்களில் தனது ஏடிஎம்யை வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் (28 ஜனவரி 2014)
1.   இந்திய ரிசர்வ் வங்கிரெபோ விகிதத்தை 7.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் என்று உயர்த்தியுள்ளது.
2.   சாம்சங் மற்றும் கூகிள் நிருவன்கங்கள் உலகளாவிய காப்புரிமை ஒப்பந்தத்தை செய்துக்கொண்டுள்ளனர்.
3.   விலங்குகள் மீது பரிசோதனை செய்ய ஒப்பனை நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
4.   கூகிள், இங்கிலாந்தை சேர்ந்த DeepMind Technologies என்ற நிறுவனத்தை  வாங்கி உள்ளது.
5.   உத்தர பிரதேச அரசு 28, ஜனவரி 2014  அன்று சமாஜ்வாடி ஓய்வூதிய திட்டத்தை தொடங்கிவைத்தது.
6.   பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா 28, ஜனவரி 2014 அன்று நடைபெற்றது.
நடப்பு நிகழ்வுகள் (29 ஜனவரி 2014)
1.   28, ஜனவரி 2014 அன்று யுனெஸ்கோ அமைப்பு அனைத்து உலக கல்வி அறிக்கை 2013-2014 யை வெளிட்டது.
2.   உக்ரைன் பிரதமர் Mykola Azarov 28, ஜனவரி 2014 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
3.   அரசு சாரா மரம் வளர்க்கும் அறக்கட்டளை ஒன்று நாகப்பட்டினம் கடற்க்கரை ஓரம் குறைந்தது 100 ஆலிவ் ரிட்லி 'ஆமைகள் கடந்த டிசம்பர், 2013 இல் இறந்து உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
4.   உலகின் முதல் 3D பிரிண்டர் “Objet500 Connex3“ 28, ஜனவரி 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
5.   சீனாவின் ஜிலின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நீர் ஜெட் பிரிண்டரை உருவாக்கியுள்ளனர்.
6.   பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கோபால் விட்டல்நியமிக்கப்பட்டுள்ளார்.
7.   டிராய் வர்த்தக செயல் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடப்பட்டது.
நடப்பு நிகழ்வுகள் (30 ஜனவரி 2014)
1.   சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை அறிமுகம் செய்ய ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.   ஆனந்த் குமார், Super30 நிறுவனருக்கு இந்தாண்டுக்கான ராமானுஜ விருது வழங்கப்பட்டது.
3.   விண்வெளியில் பயிந்து செல்லும் ஹைட்ரஜன் நதி ஒன்றை 28, ஜனவரி 2014 அன்று வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
4.   வாயில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் மருந்து(mouthwashes), வாயில் உள்ள பாக்டீரியாக்களை அளிப்பதனால் மாரடைப்பு வருவதற்க்கான காரணிகளை அதிகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
5.   ஜிம்பாப்வே ரிசர்வ் வங்கி (RBZ29, ஜனவரி 2014 அன்று இந்திய ரூபாய் சட்டப்படி அந்நாட்டில் செல்லத்தக்கதுஎன்று அறிவித்துள்ளது.
6.   துருவப்பகுதியில் வாழும் பெங்குயின் குஞ்சுகள் இறப்புக்கு காரணம் காலநிலை மாற்றம் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
7.   என்.ஐ.டி ஒடிசா பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
நடப்பு நிகழ்வுகள் (31 ஜனவரி 2014)
1.   கேத்தி கிராஸ், ஐசிசியின் முதல் பெண் நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.   இந்தியா மற்றும் பிஜி ஆகிய நாடுகள் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
3.   கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா ஜப்பானை முந்தி உலகின் மூன்றாவது பெரியநாடாக விளங்குகிறது.
4.   நவம்பர் 2013 ல் முனிச் உலக கோப்பை போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் ஹீந சாந்து பெற்ற 203.8புள்ளிகள் உலக சாதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5.   விஜய் பகுகுணா, உத்தரகண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
6.   இரண்டாம் கட்ட பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
7.   சீனா தங்களின் புதிய ஆண்டை “குதிரை ஆண்டாக” உலகம் முழுவதும் வாழும் சீனர்கள் ஜனவரி 31, 2014அன்று கொண்டாடினர்.
8.   மத்திய அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகரிகளுக்கு இரண்டு ஆண்டு காலம் ஒரு பதவியில் இருக்கும் படி மற்றம் செய்துள்ளது.
9.   இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்துஇந்தியப் பெருங் கடலில் நிலவும் வெப்ப அலைகளின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகளைக் கண்டறியும் பணியில் 'பயோ அர்கோ' என்ற ரோபோவை இந்தாண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

10. எழுத்தறிவற்ற இந்தியர்கள் 28.7 கோடி பேர்: ஐ.நா அறிக்கையில் தகவல்

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....