My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Friday, September 5, 2014

நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 2014

நடப்பு நிகழ்வுகள் (1 ஜூலை 2014)

1.   ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிஜிட்டல் டச் வங்கி கிளைகளை நாட்டில் உள்ள ஆறு பெருநகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த கிளைகள்மும்பைபெங்களூர்சென்னைஅகமதாபாத் மற்றும் டெல்லியில் அமைந்துள்ளது. அதற்க்கு “SbiINTOUCH” என்று பெயரிடப்பட்டுள்ளது.
2.   இந்தியா ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு புதிய தாராளவான விசா கொள்கையை அறிவித்துள்ளது.
3.   30 ஜூன் 2014 அன்று அமெரிக்கா அண்டார்டிகாவில் உள்ள ஒரு மலைக்கு மவுண்ட் சின்ஹா ​​என்று பெயர் வைத்துள்ளது. இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான திரு அகவுரி சின்கா அவர்களை பெருமை படுத்தும் விதமாக அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் மரபணுவியல்செல் உயிரியல் துறையில் இணை பேராசிரியராக அகவுரி சின்கா பணியாற்றி வருகிறார்.
4.   முன்னாள் ஹெய்டியன் (Haitian) ஜனாதிபதி லெஸ்லி பிரான்சுவா மனிகட் (Leslie Francois Manigat) அவர்கள் 27 ஜூன் 2014 அன்று தனது 83 ஆவது வயதில் இறந்தார்.
5.   Orkut” சேவையை வரும் செப்டம்பர் 30 முதல் நிறுத்தப்படும் என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
6.   கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய நியூசிலாந்து வீரர் லூ வின்சென்ட் (Lou Vincent) அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. "My name is Lou Vincent and I am a cheat. I have abused my position as a professional sportsman on a number of occasions by choosing to accept money through fixing," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் லூ வின்சென்ட் கூறியுள்ளார்

நடப்பு நிகழ்வுகள் (2 ஜூலை 2014)

1.   வங்கி பிரிவில் சிறந்த செயல்திறன் கொண்டு செயல்ப்பட்ட மகாராஷ்டிரா வங்கிக்கு “உலக மனிதவள மேம்பாடு காங்கிரஸ்” BFSI விருதுகள் -2014 இல் “Best Bank – Public Sector”  என்னும் விருதை வழங்கியுள்ளது.
2.   நாட்டில் இணைய குற்றங்கள் (cyber crimes) பெருமளவு உயர்ந்துள்ளது. ஐடி சட்டத்தின் கீழ் 2013 ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்து 2,761 இல் இருந்து 4,192  என்று அதிகரித்துள்ளது.
3.   கேரள அரசு கொச்சியில் 2017 இல் நடைபெற உள்ள 17 வயதுக்கு உட்பட்ட ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை மேற்பார்வை இட  மூத்த ஐஏஎஸ் அதிகாரி சக்தியாக முகமது ஹன்சி யை சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது.
4.   சமீபத்தில் முனிச்ஸ்லோவேனியாவில் நடைபெற்ற ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடும் (air pistol) போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ஜீத்து ராய் (Jitu Rai) அவர்கள் துப்பாக்கி (air pistol) சுடும் வீரர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
5.   முன்னாள் பிரஞ்சு ஜனாதிபதியான நிக்கோலா சார்க்கோசி (Nicolas Sarkozy) அவர்கள் மிது ஊழல் மற்றும் மோசடிகளில் வழக்குகள் சாட்டப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (3 ஜூலை 2014)

1.   மைக்கேல் ஹோவார்ட் அவர்கள் அமெரிக்க கடற்படை நான்கு நட்சத்திர அட்மிரலில் (four-star admiral ) முதல் பெண் நபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்க கடற்படை 236 ஆண்டு வரலாற்றில் முதல் பெண்கள் அட்மிரல் இவர் அவர்.
2.   ஜூலை 23 முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெறும் 2014 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சர்தார் சிங் அவர்கள் இந்திய ஹாக்கி அணியை தலைமை வகிப்பார் என்று “ஹாக்கி இந்தியா” அமைப்பு தெரிவித்துள்ளது.
3.   ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தியாவில் இரண்டு எரிசக்தி திட்டங்களுக்கு 350 மில்லியன் டாலர் நிதி அழிக்க உள்ளது.
4.   இந்திய பயணிகள் ரயில் டெல்லி முதல் ஆக்ரா வரையில் ஆனா துரத்தை ஒரு மணி நேரத்துக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் சென்று நாட்டின் அதிவேக ரயில் என்ற புதிய சாதனையை செய்துள்ளது. இதற்க்கு முன்பு போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 160 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது சாதனையாக இருந்தது.
5.   நிதி சுமையை குறைக்கும் நோக்கத்துடன்எஸ்பிஐ புதியதாக 5000 ஏடிஎம் மையங்களை திறக்க முடிவு செய்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (4 ஜூலை 2014)

1.   ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது மற்றும் இந்த கணக்கை ஜனாதிபதி செயலகம் நிர்வகிக்கின்றது. ஜனதிபதியின் முக்கிய வெளியிடுகள் இந்த ட்விட்டர் கணக்கு முலம் வெளியிடப்படும்.
2.   ஆண்டி கவுல்சன்பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனின் முன்னால் உதவியாளர் மற்றும் முன்னாள் செய்தியாளர் அவர்களுக்கு பிரபலங்கள்அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்ட குற்றத்துக்காக 18 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
3.   ராம் நரேஷ் யாதவ் அவர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக  ராய்ப்பூரில் ஜூலை 2, 2014 அன்று பொறுப்பு ஏற்றார். ராம் நரேஷ் யாதவ் அவர்கள் மத்திய பிரதேச ஆளுநரான இவருக்கு  சத்தீஸ்கர் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (5 ஜூலை 2014)

1.   அமெரிக்க சுதந்திர தினத்தன்று நடைபெற்ற விழாவில் சத்ய நாடெல்லா உட்பட 4 இந்திய அமெரிக்கர்கள் பாராட்டப்பட்டனர். அமெரிக்காவின் பொருளாதரத்துக்கு சிறப்பாக செயல் பட்டதால் இவர்கள் பாராட்டப்பட்டனர். மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் தலைமை அதிகரி சத்ய நாடெல்லா, நகைச்சுவை நடிகர் ஆசிப் மாண்ட்வி, கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் தலைவர் சுப்ரா சுரேஷ் மற்றும் மேற்கு ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் பெஹ்ரூஸ் சேத்னா ஆகிய மொத்தம் 40 பேர் பாராட்டப்பட்டனர்.
2.   கோவா ஆளுநர் பி வி வாஞ்சோ அவர்கள தனது பதவியை  ராஜினாமா செய்தார்.
3.   ஈராக் கிளர்ச்சியாளர்கள் மத்தியில் சிக்கி தவித்த இந்திய நர்சுகள் 46 பேர் திக்ரித் நகரத்தில் இருந்து கொச்சிக்கு சிறப்பு விமானம் முலம் இந்திய வந்து சேர்ந்தனர்.

நடப்பு நிகழ்வுகள் (6 & 7 ஜூலை 2014)

1.   ஆறாவது BRICS உச்சிமாநாட்டின் 2014 ஜூலை 15 முதல் 17 வரை போர்தலேஜாபிரேசில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்தர் மோடி அவர்கள் பங்கு பெற உள்ளார். உச்சிமாநாட்டை நடத்தும்  பிரேசிலின் அதிபர் டில்மா ரூசஃப் அவர்கள் அர்ஜென்டீனாபொலிவியாஈக்வடார்பராகுவேஉருகுவேவெனிசூலா மற்றும் சூரினாம் உட்பட தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2.   குஜராத் ஆளுநர் கமலா பெனிவல் அவர்கள் மிசோரம் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநில கவர்னராக இருந்த வைக்கம் புருஷோத்தமன் அவர்கள் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3.   பீகார் ஆளுநர் டிஒய் பாட்டீல் அவர்களுக்கு  கூடுதல் பொறுப்பாக மேற்குவங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4.   எம் மேத்தா அவர்கள் ஜூலை 7, 2014 அன்று ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO)நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவியில் ஐந்து ஆண்டு காலத்டுக்கு இருப்பார்.
5.   நோவாக் ஜோகோவிக் தனது இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் விம்பிள்டன்  பட்டத்தை வென்றார். அவர் ரோஜர் பெடரர் அவர்களை தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றார். இது இவருக்கு ஏழாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். நோவாக் ஜோகோவிக் அவர்கள் விம்பிள்டன் வெற்றி பெற்ற பிறகு உலக தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.
6.   விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா வென்றார். இவர் கனடாவின் எவ்ஜினி பவுச்சார்ட் அவர்களை வெற்றிபெற்றார். இது இவருடைய இரண்டாவது பட்டம் ஆகும்.
7.   லண்டன் லார்ட்ஸ் மைடனத்தின் 200 ஆவது ஆண்டு விழா சிறப்பிக்கும் விதமாக நடந்த ஒரு நாள் போட்டியில் சச்சின் தலைமையிலான மெரிலிபோன் கிரிக்கெட் கிளப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணியை வெற்றி பெற்றது.

நடப்பு நிகழ்வுகள் (8 ஜூலை 2014)

1.   மத்திய ரயில்வே அமைச்சர்சதானந்த் கவுடா அவர்கள் 2014-15 ஆம் ஆண்டின் ரயில் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2.   ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) நேபால் நாட்டுக்கு அதன் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க 180 மில்லியன் டாலர்கள் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
3.   இந்தியா வெற்றிகரமாக அதிவேக ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணையை ஓடிஷா கடற்கரையில் சோதனை செய்து பார்த்தது.
4.   இந்திய டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ் அவர்கள் 7 ஜூலை 2014 அன்று “இந்தியான் சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக்” (சிடிஎல்) அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
5.   சானியா மிர்சா டென்னிஸ் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

நடப்பு நிகழ்வுகள் (9 முதல் 14 ஜூலை 2014)

1.   ஐ.நா. வின் நல்லெண்ண தூதராக ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகையான எம்மா வாட்சன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.   ஃபிஃபா அனைத்து சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து நைஜீரியா நாட்டை தற்காலிகமாக நிக்கி உள்ளது.
3.   மத்திய நிதி அமைச்சர் தனது முதல் பட்ஜெட் 2014-15 யை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
4.   ரயில்வே அமைச்சகம்இந்திய ரயில்வே துறைக்கு என்று சமூக ஊடக அரங்கு ஒன்றை தொடங்கியுள்ளது.
5.   ஜெர்மனி அர்ஜென்டீனா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 2014 ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை வெற்றி பெற்றது.
6.   இந்திய கடற்படை கப்பல் (INS) குத்தார் போர்க்கப்பலை 13 ஜூலை 2014 அன்று ஏற்ப்பட்ட விபத்து ஒன்றில் சேதமடைந்துள்ளது.
7.   ரயில்வே தனது நடப்பு நிதி ஆண்டில் 2014-15 முதல் காலாண்டில் அதன் வருமானம் 9.48 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பதிவு செய்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (15 ஜூலை 2014)

1.   மஹேலா ஜெயவர்த்தனேஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்2014 ஜூலை 14 ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2.   இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் 14 ஜூலை 2014 அன்று  ஐந்து மாநில ஆளுநர்களை நியமனம் செய்தார். அவர்கள்,
·         உத்தர பிரதேச - ராம் நாயக்
·         சத்தீஸ்கர் - பல்ராம்ஜி தாஸ் டாண்டன்
·         மேற்கு வங்க - கேசரி நாத் திரிபாதி
·         குஜராத் - ஓம் பிரகாஷ் கோஹ்லி
·         நாகாலாந்து - பத்மநாப பாலகிருஷ்ணா ஆச்சார்யா

3.   அசாம் மாநிலம் வரும் 2014 செப்டம்பர் 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
4.   சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் சண்டி பிரசாத் பட் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டிற்க்கான மதிப்புமிக்க காந்தி அமைதி பரிசு 15 ஜூலை 2014 அன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வழங்கினர்.

நடப்பு நிகழ்வுகள் (16 ஜூலை 2014)

1.   பிரிக்ஸ் நாடுகளுக்கென புதிய வங்கி தொடங்குவதற்கு பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படிசீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   தலைமையிடம் சீனா வசம் சென்றுள்ள நிலையில்வங்கியின் முதல் தலைவர் இந்தியராக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில்ரஷ்யாஇந்தியாசீனா மற்றும் தென்ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக பிரிக்ஸ் இருக்கிறது. இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக்கு முதல்கட்டமாக 6 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
2.   தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் தன் 90-வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
3.   127 ஆவது துராண்ட் கால்பந்து கோப்பை அக்டோபர் 2014 இல் கோவாவில் நடைபெற உள்ளது.
4.   பிலிப்பைன்ஸை ராம்மசன் என்ற சூறாவளி தாக்கியதில் 4 பேர் பலியாகினர்1.5 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நடப்பு நிகழ்வுகள் (17 ஜூலை 2014)

1.   பஷர் அல் அசாத் 16 ஜூலை 2014 அன்று ஏழு ஆண்டு காலத்துக்கு சிரியாவின் ஜனாதிபதி பதவியை டமாஸ்கஸில் நகரில் பதவி ஏற்றார்.
2.   ஏலியன்ஸ் மற்றும் யுஎஃப்ஒக்களை சித்தரிக்கும் 10,000 வருடங்களுக்கு முந்தைய ஓவியங்களையும் சத்தீஸ்கரில் உள்ள காண்கெர் மாவட்டத்தில் Charama பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3.   7 பிரிக்ஸ்  உச்சிமாநாடு வரும் 2015 ஆம் ஆண்டு ரஷ்யவில் உள்ள யூஃபா நகரில் நடைபெறும் என்று தெரிவுக்கப்பட்டுள்ளது.
4.   பி அசோக் 16 ஜூலை 2014 அன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பேற்றார்.

நடப்பு நிகழ்வுகள் (18 19 ஜூலை 2014)

1.   மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் போயிங் 777 MH-17 கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
2.   7 இப்சா(IBSA) உச்சி மாநாடு வரும் 2015 ல் இந்தியாவில்  புது தில்லியில் நடைபெற உள்ளது. IBSA = India, Brasil, South Africa
3.   உச்ச நீதிமன்றம் கருணைக்கொலை மீதான பதில்களை சமர்ப்பிக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுள்ளது.
4.   ஜெர்மனி ஃபிஃபா உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
5.   ஜெர்மனி கால்பந்து அணி கேப்டன் பிலிப் லாஹ்ம் (Philipp Lahm) சர்வேதேச கால்பந்து போட்டியில் இருந்த தனது ஓய்வை அறிவித்தார்
6.   Business 20 (B20) உச்சி மாநாடு 18 ஜூலை 2014 அன்று சிட்னிஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் G20 நாடுகளை சேர்ந்த வர்த்தக துறை சேர்ந்த நபர்கள் பங்கு பெற்றனர்.

நடப்பு நிகழ்வுகள் (20 & 21 ஜூலை 2014)

1.   இந்திய வெளியுறவு துறை (IFS) அதிகாரி சஞ்சீவ் குமார் சிங்கள (Sanjeev Kumar Singla) அவர்கள் பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் இருந்த செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்கள் ஸ்பெயின் நாட்டு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.   உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தனது வளர்ச்சி பணிகளின் முன்னுரிமைகளை புரிந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மூன்று நாள் பயணமாக 22 ஜூலை 2014 அன்று புது தில்லி வருகிறார்.
3.   18 ஜூலை 2014 அன்று பொலிவியா அரசு 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக்க புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
4.   கனரா வங்கி ரூ 5,200 கோடி மதிப்பிலான கொச்சி மெட்ரோ திட்டத்துக்கு ரூ 1,170 கோடி கடன் வழங்க 20 ஜூலை 2014அன்று கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
5.   கடந்த நிதி ஆண்டில் பிரிட்டனில் அதிக வெளிநாட்டு முதலீடு செய்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் அதிகமானவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 2013-14 ஆண்டில் முதலீடு செய்த முதல் பத்து நாடுகளில்இந்தியா 74 திட்டங்களை மேற்கொண்டுஏழாவது இடத்தில் உள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (22 ஜூலை 2014)

1.   ஒய் சுதர்சன் ராவ் அவர்கள் ஐ.சி.ஹெச்.ஆர் (Indian Council of Historical Research) இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.   இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அவர்களை தெலுங்கானா மாநிலத்தின் அரசு விளம்பர தூதுவராக அம்மாநில முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் அவர்கள் நியமனம் செய்தார்.
3.   நாட்டில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2035ஆம் ஆண்டில் 19 லட்சமாக உயரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4.   கூகிள் மேப் (Google Maps ) தற்போது ஹிந்தி மொழியிலும் பயன்படுத்தும் வகையில் கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
5.   இந்தியாவில் குழந்தை பாலின விகிதம் மிகவும் குறைகிறது என்று ஐ.நா. அறிக்கையில் கூறி உள்ளது. இந்தியாவில் குழந்தை பாலின விகிதம் 1961 ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண் குழந்தைகள், 2001 ல் 927 பெண்கள் மற்றும் 2011 ல் 918 பெண்கள் என்று குறைந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (23 ஜூலை 2014)

1.   20 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கிளாஸ்கோஸ்காட்லாந்தில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் யுனிசெப் நல்லெண்ண தூதராக சச்சின் டெண்டுல்கர் பங்கு பெற்றார்.
2.   ஜகார்த்தாவின் ஆளுநர் “ஜோகோ விடோடோ” (Joko Widodo) அவர்கள் இந்தோனேசியவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.
3.   வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கலுக்கு விரைவில் யுனிவர்சல் எண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முலம் ஒரு நபர் இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு செல்லும்போது புதிதாக வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்க தேவை இல்லை.
4.   ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் “இந்திய சூப்பர் லீக்” கால்பந்து போட்டிக்கு தலைப்புப் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு முன்று ஆண்டு கால ஒப்பந்தம் செய்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (24 ஜூலை 2014)

1.   புதன்கிழமை (23 ஜூலை 2014அன்று BRICS நாடுகளுடன் இணைந்து இந்தியா காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
2.   உலக வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவிற்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்க மற்றும் வறுமையை ஒழிக்க 15 முதல் 18 பில்லியன் டாலர் கடன் உதவி செய்ய உறுதியளித்துள்ளது.
3.   யு.என்.டி.பி. (United Nations Development Programme) வெளியிட்ட அறிக்கையில், மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் மொத்தம் 187 நாடுகளில் இந்திய 135 வது இடத்தில் உள்ளது. நார்வேஆஸ்திரேலியாசுவிச்சர்லாந்துநெதர்லாந்துஅமெரிக்கா,ஆகியவை முதல் ஐந்து இடத்தில் உள்ளது மற்றும் நைஜர்காங்கோ ஜனநாயக குடியரசுமத்திய ஆபிரிக்க குடியரசு,சாட் மற்றும் சியரா லியோன் ஆகியவை கடைசி ஐந்து இடத்தை பிடித்துள்ளது.
4.   மத்திய அமைச்சரவை குழு இந்தியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வகையில் காப்பீட்டு துறையில் 49% அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (25 ஜூலை 2014)

1.   மலேசிய விமானம் MH17 சுட்டு விழ்த்தப்பட்டதன் காரணமாக உக்ரைன் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2.   சல்மான் கான் அவர்கள் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனமான “Astral Poly Technik Ltd” இன் தூதராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
3.   கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் 2014 போட்டிகளில் பெண்கள் 48kg பளு தூக்குதல் போட்டியில் “Sanjita Khumukcham” அவர்கள் இந்தியாவின் முதல் தங்க பதக்கத்தை பெற்றார்.

நடப்பு நிகழ்வுகள் (26 ஜூலை 2014)

1.   கார்கில் விஜய் திவாஸ் 15 வது ஆண்டு நினைவு நாள் 26 ஜூலை 2014 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
2.   கப்டன் சிங் சோலங்கி (Kaptan Singh Solanki) அவர்கள் அரியானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3.   இந்தியாவின் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் சசி காந்த் சர்மா அவர்கள் ஐ.நா. சபையின் தணிக்கையாளர்களின் உறுப்பினராக பொறுப்பேற்றார். இவர் வரும் ஜூன் 2020 வரை அதாவது, ஆறு ஆண்டு காலத்துக்கு இந்த பதவியில் இருப்பார்.
4.   இந்தியஜப்பான் மற்றும் அமெரிக்க கடற்படையினர் நடத்தும் 18 ஆவது மலபார் கடற்படை பயிற்சி 2014, பசிபிக் பெருங்கடலில் 26 ஜூலை 2014 முதல் தொடங்கியது. இந்த பயிற்சியில் ஜப்பான் 2007  முதல் பங்கு பெறுகின்றது.

நடப்பு நிகழ்வுகள் (27 & 28 ஜூலை 2014)

1.   உலக கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day) உலகம் முழுவதும் 28 ஜூலை 2014 அன்று அனுசரிக்கப்பட்டது.
2.   காமன்வெல்த் 50 M  கைத்துப்பாக்கி போட்டியில் ஜீத்து ராய் அவர்கள் தங்க பதக்கத்தை பெற்றார் மற்றும்  குர்பல் சிங் வெள்ளி பதக்கத்தை பெற்றார்.
3.   இந்திய பிரதமர் நரேந்திர மோடி “MyGov.nic.in” என்ற புதிய வலை தளத்தை தொடங்கிவைத்தார். நல்ல முறையில் அரசாங்கத்தை வழிநடத்த மக்களின் பங்களிப்பை பெருக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.
4.   இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லை தாண்டியது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (29 ஜூலை 2014)

1.   சர்வதேச புலிகள் தினம் 2014 உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் 2010 கணக்கெடுப்பின் படி 1706 காட்டு புலிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.   மத்திய அரசாங்கள் “ராஷ்ட்ரிய கோகுல் திட்டம்” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் உள்நாட்டு கால்நடை இனங்களை அறிவியல் மற்றும் சிறந்த முறையில் அதனை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க தொடங்கப்பட்டுள்ளது. இதற்க்கு ரூ 500 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
3.   தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த “டிம் கிளார்க்” அவர்கள் கனடாவின் ஓபன் கோல்ப் போட்டியை வென்றார்.

 நடப்பு நிகழ்வுகள் (30 ஜூலை 2014)

1.   முஹம்மது புவாட் மாஸும் 24 ஜூலை 2014 அன்று ஈராக்கின் ஏழாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் “Patriotic Union of Kurdistan (PUK)” கட்சியை சேர்ந்தவர்.
2.   மூத்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி K.V. சௌதிரி (K.V.Chowdary) அவர்கள்  மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3.   இந்திய விமானப்படை தளபதிஅரூப் ரஹா அவர்கள் 30 ஜூலை 2014 அன்று பணியாளர்கள் குழுவின் (Staffs Committee)தலைவராக பொறுப்பு ஏற்றார்.

நடப்பு நிகழ்வுகள் (31 ஜூலை 2014)

1.   இராணுவ தளபதி விக்ரம்சிங் ஓய்வு பெறுவதை தொடர்ந்துபுதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக் அவர்கள் நாட்டின் 26-வது இராணுவ தளபதியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர்  30 மாதங்கள் அப்பதவியில் இருப்பார். அவருக்கு வயது 59. அவர்கடந்த 1987-ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் ஆவார்.
2.   புது தில்லியில்  இந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதிமூன்றாவது இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு, IAFS-III  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.   மகளிர் டென்னிஸ் போட்டியில் பணியாற்ற ஜெர்மன் மாட்டார்களா ஒரு சாதனையை படைத்தார்.
4.   தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் காலிஸ் அவர்கள் அனைத்து சர்வதேஷ விளையாட்டு போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார்.
5.   சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகை ஆசிரியர் ஹூ ஷூலி (61)அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்குகளில் வாதிடும் வழக்குரைஞர் வாங் கான்ஃபா (55)இந்தோனேசிய மானுடவியல் நிபுணர் சார் மார்லினா மானுருங்,ஆஃப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியக இயக்குநர் ஒமரா கான் மசூதிபாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான தி சிட்டிசன்ஸ் ஃபவுண்டேஷன்ஃபிலிப்பின்ஸ் ஆசிரியர் ராண்டி ஹலாசன் ஆகியோர் மகசேசே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஃபிலிப்பின்ஸ் நாட்டின் அதிபராக இருந்த ரேமன் மகசேசே விமான விபத்தில் பலியானார். அவரது நினைவாகசமூகத்துக்கு அளப்பரிய சேவையாற்றுபவர்களுக்கு மகசேசே விருது 1957 முதல் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. "ஆசிய நோபல் பரிசுஎன்று இவ்விருது வர்ணிக்கப்படுகிறது.

6.   இப்போது உள்ள எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தி முறையை மாற்றி அமைக்காவிட்டால் 2040-ம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. டென்மார்க் நாட்டின் ஆர்ஹஸ் பல்கலைக்கழகம்அமெரிக்காவின் வெர்மன்ட் சட்ட பள்ளி மற்றும் சிஎன்ஏ (கடற்படை பகுப்பாய்வு மையம்) கார்ப்பரேஷன் ஆகிய வற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டனர்.இவர்கள் பிரான்ஸ்அமெரிக்காசீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 4 வெவ்வேறு வகையான பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....