My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Monday, September 8, 2014

நடப்பு நிகழ்வுகள் - மே 2014

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (1 & 2 மே 2014) ░░▒▓███
1.   30 ஏப்ரல் 2014 அன்று  லண்டனை மையமாக கொண்ட இயங்கும் டைம்ஸ் உயர் கல்வி இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் மத்தியில் ஐஐடி குவஹாத்தி 87 வது இடத்தை பெற்றுள்ளது.
2.   உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ஷா தலைமையில் கறுப்பு பணம் வழக்குகளை விசாரணை செய்ய ஒரு சிறப்பு புலனாய்வு அமைப்பை மாற்றியமைத்துள்ளது.
3.   நமீபியா அரசாங்கம் நவம்பர் 2014 இல் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  3400 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வங்கியுள்ளது.
4.   அதிவேக ரயில் செல்வதற்கு அமைக்கப்பட்ட உலகின் மிக  உயர்ந்த இடத்தில் உள்ள சுரங்கப்பாதை வடமேற்கு சீனாவில் 1 மே2014 அன்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 3607,4 மீட்டர் உயரத்தில் உள்ளது.
5.   இந்திய- அமெரிக்கரான மனிஷ் ஷா அவர்களை இல்லினாய்ஸ் கூட்டாட்சி நீதிபதியாக அமெரிக்க செனட் மே 2, 2014 அன்று தேர்வு செய்தது.
6.   மராட்டிய மன்னர் சிவாஜி குறித்த சித்திரக் கதை புத்தகம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.அதில் சிவாஜியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த 100 ஒவியங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பழங்குடியின ஒவியர் பிரிஜேஷ் மோக்ரா என்பவர் வரைந்துள்ளார்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (3 மே 2014) ░░▒▓███
1.   நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக தேர்தல் வரிசை மேலாண்மை முறை மேற்கு வங்க மாநிலத்தில் (பர்த்வான்மாவட்டத்தில்) கடை பிடிக்கப்பட்டது.
2.   இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 2 மே 2014 தேதி  அன்று புகழ்பெற்ற வீர தீர செயல்களுக்கான விருதுகளை சிறந்த சேவை மற்றும் துணிவுக்காக 55 நபர்களுக்கு வழங்கினர்.
3.   மே 12014 ம் தேதி துபாயில் அறிவித்தது ICC  ட்வென்டி 20 சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
4.   ராக்கிகர்ஹி கிராமத்தில் (ஹரியாண) தொல்பொருள் ஆய்வாளர்களால் மேற்க்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதுமண் செங்கல் சுவர்களால் கட்டப்பட்ட   ஹரப்பா நாகரிக காலத்து உணவு களஞ்சியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
5.   பத்திரிக்கை சுதந்திரத்தில் இந்தியா 2014 ஆம் ஆண்டில் 78 இடத்துக்கு பின்தங்கியுள்ளது. முதல் இடத்தில் ஸ்வீடன் உள்ளது.
6.   எச்ஏஎல் Dornier 228 (இலகுவான எடை கொண்ட விமானம்) Nabhrathnaவை டி.ஆர்.டி.ஓ. இடம் ஒப்படைத்துள்ளது.
7.   இந்திய துப்பாக்கி சுடும் வீரர் மண்வீஜீத் சிங் சாந்துஅவர்கள் டஸ்கன் ISSF உலக கோப்பை தங்கம் வென்ற பிறகு உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றார்.
8.   உலக பத்திரிகை சுதந்திர தினம் உலகம் முழுவதும் 3 மே 2014 அன்று அனுசரிக்கப்பட்டது
9.   பிரபல பாலிவுட் பாடலாசிரியரும் இயக்குநருமான குல்சாருக்கு இந்தியத் திரையுலகின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 3 மே 2014 அன்று வழங்கி கௌரவித்தார்.
10. புதிய மற்றும் புதுமையான தொழில்களுக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூல் லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் கூடிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு இந்த ஆண்டு இந்தியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
11. அமெரிக்க நிதித்துறையின் உயர் பதவிக்கு அந்நாட்டில் வாழும் இந்தியரான ஜவஹர் கலியானி நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறையின் கீழ் செயல்படும் வங்கிகள் ஒழுங்காற்று அமைப்பின் மென்பொருள் சேவை விநியோகத்திற்கானதுணை தலைமைத் தகவல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்துநிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜவஹர் கலியானி மே 4ஆம் தேதி முதல் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
12. அமெரிக்காவை தவிர்த்துசுற்றுச்சூழலுக்கு ஆதரவான "பசுமைக் கட்டடம்கொண்டுள்ள 10 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாக அமெரிக்க பசுமைக் கட்டடங்கள் கவுன்சிலின் (யூஎஸ்ஜீபிசி) சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (4 மே 2014) ░░▒▓███
1.   இந்தியாவின் அந்நிய செலாவணி  (forex) இருப்புக்கள் $499.8 மில்லியன்  உயர்ந்து $309.91 பில்லியன் என்ற அளவை எட்டியுள்ளது என்று RBI தெரிவித்துள்ளது.
2.   மொபைல் காப்புரிமை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ்  நிறுவனம் $119.6 மில்லியன் செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.   உக்ரைன் பத்திரிகையாளர்களுக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியை அமெரிக்கா அறிவித்தது.
4.   இந்திய-ஜிம்பாப்வே டென்னிஸ் ஜோடியான சானியா மிர்சா மற்றும் காரா பிளாக் ஜோடி “போர்த்துக்கல் ஓபன் டென்னிஸ்மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளனர்.
5.   இந்தியவை சேர்ந்த ஸ்னூக்கர்  வீரர் கமல் சாவ்லாஅவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர்சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கத்தை பெற்றார்.
6.   உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தில் பதிக்கப்பட்ட கேதார்நாத் கோயில் ஒரு ஆண்டு பிறகு 4 மே 2014 அன்று திறக்கப்பட்டுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (5 மே 2014) ░░▒▓███
1.   இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு வான்வழி ஏவுகணையான அஸ்ட்ரா வெற்றிகரமாக அரபிக்கடல் மீது சோதனை செய்து பார்க்கப்பட்டது.
2.   துருக்கியை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் அஹ்மத் சிக் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ கில்லர்மோகானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கப்பட்டுள்ளது.
3.   மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் புதிய அதிபராகஅந்நாட்டின் தற்போதைய துணை அதிபர் ஜுவான் கார்லொஸ் வரேலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவர் ஜூலை 1 அன்று பதவி ஏற்க உள்ளார்.
4.   நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் கேரி பெக்கர் அவர்கள் மே 32014 அன்று சிகாகோவில்  உடல்நல குறைவு காரணமாக93 வயதில் இறந்தார்.
5.   தொழிலதிபர் அகமது மைடிக் அவர்கள் லிபியாவின் புதிய பிரதமராக 4 மே 2014 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6.   5 மே 2014 அன்று வெளிவிவகார துறை அமைச்சகம் துருக்கியின் அடுத்த தூதுவராக ராகுல் குல்ஷேத்த அவர்களை நியமித்தது.
7.   இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கழித்துசாண்டர்ஸ் கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இடப்பெறவில்லை என்று பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
8.   சூரிய மின்சக்தித் துறையில் ஒரு புரட்சியாகதகரத்தைக் கொண்டு சூரிய மின்சாரம் தயாரிக்க உதவும் மின் தகடுகளை (சோலார் செல்) அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம்மிக மலிவான விலையில் சூரிய மின் தகடுகளைத் தயாரிக்க முடியும்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (6 மே 2014) ░░▒▓███
1.   உச்ச நீதிமன்றம் 6 மே 2014 அன்று அனைத்து பள்ளிகள் 25 சதவீதம் இடங்களை பொருளாதார நிலையில் பின்தங்கியமாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆணை கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்துள்ளது.
2.   ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளாகும் மூத்த அதிகாரிகளை விசாரணை செய்ய அரசு ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
3.   உச்ச நீதிமன்றம் 6 மே 2014 அன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் கன்னட மொழி கற்பிக்கவேண்டும் என்ற கர்நாடக அரசின் முடிவை ரத்து செய்தது.
4.   பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் தலைவர் “சுனில் பார்தி மிட்டல்அவர்கள் “ஆப்ரிக்கா உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum on Africa) இந்த ஆண்டு பதிப்பில் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.   முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி முறையாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டர். இந்த முடிவை அடுத்து ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.
6.   பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறந்த கிரிக்கெட் வீரரான வக்கார் யூனிஸ்யை தேசிய அணியின் பயிற்சியாளராகஇரண்டாவது முறையாக நியமித்துள்ளது.
7.   ஸ்லோவேனியா பிரதமர், Alenka Bratusek அவர்கள் மே 5, 2014 அன்று தனது பதவி விலகினார்.
8.   முன்னாள் பிரிட்டிஷ் நம்பர் 1 டென்னிஸ் வீரரான Elena Baltachaஅவர்கள் தனது 30 ஆவது வயதில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக  மே 5, 2014 அன்று இறந்துவிட்டார்.
9.   Ununseptium என்று தற்காலிகமாக அழைக்கப்படும் 117 புரோட்டான்கள் கொண்ட புதிய கனிமம் தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (7 மே 2014) ░░▒▓███
1.   C.R Pakrashi அவர்கள் எழுதிய A Stamp is Bornஎன்ற புத்தகத்தை இந்திய துணை ஜனாதிபதி, எம் ஹமீத் அன்சாரி 6 மே 2014 அன்று வெளியிட்டார்.  அந்த புத்தகத்தில் இந்திய அஞ்சல் தலை வரலாறு மற்றும் அஞ்சல் தலைகளின் பரிணாம வளர்ச்சி பற்றி கூறியுள்ளது.
2.   இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மார்க் செல்பி (Mark Selby) அவர்கள் ஷெஃபீல்ட், இங்கிலாந்தில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர்சாம்பியன்ஷிப் பட்டம் 2014 யை வென்றார்.
3.   10 வயதுக்கு மேல் உள்ள சிறார்கள் வங்கியில் சேமிப்பு கணக்கை திறக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
4.   தாய்லாந்து நாட்டின் பிரதமர் இங்லுக் ஷினாவத் பதவி விலக அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்துபுதிய பிரதமராக நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் நியமிக்கப்பட்டுள்ளார்.
5.   "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தாமல் இருக்க கேரள அரசு அம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தனிச் சட்டம் செல்லாதுஅது சட்டவிரோதமானதுஎன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (8 மே 2014) ░░▒▓███
1.   ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட “Global 2000 அறிக்கையின் படி உலகின் மிக பெரிய நிறுவனங்களில் இந்தியாவில் 54நிறுவனங்கள்  உள்ளது என்று கூறியுள்ளது.
2.   இந்திய ஜனாதிபதிஸ்ரீ பிரணாப் முகர்ஜி அவர்கள் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் (மே 82014) 'RuPay'  இந்தியாவின் சொந்த கட்டணம் செலுத்தும் அட்டையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
3.   உலக சுகாதார அமைப்பு (WHO), நடத்திய ஒரு புதிய ஆய்வு படி உலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டெல்லி என்று கூறியுள்ளது.
4.   மே 82014 அன்று ஃபிஃபா வெளியிடப்பட்ட தரவரிசையில் இந்தியா  இரண்டு இடங்கள் பின்தங்கி 147 வது  இடத்தில் உள்ளது.
5.   பழுப்பு நிறம் கொண்ட புதிய வகை பாம்பு இனம்  Himalayanus சீன விஞ்ஞானிகளால் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டது. Asian Herpetological Researchஇல் இந்த கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
6.   R.D.Pradhan அவர்கள் எழுதிய My Years with Rajiv and Soniaஎன்ற புத்தகம் மார்ச் 27, 2014 அன்று வெளியிடப்பட்டது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (9 மே 2014) ░░▒▓███
1.   நடனமாடக்கூடிய 14 புதிய தவளை இனங்களை தென்னிந்தியாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பேராதனிய பல்கலைக்கழகத்தின் வெளியீடான சிலோன் ஜர்னல் ஆஃப் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் இந்த புதிய இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
2.   2014 மே 6 ம் தேதி ஐந்து அணு வல்லரசு நாடுகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் (அமெரிக்காரஷ்யாசீனா,பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்) ஆகிய நாடுகள் மத்திய ஆசிய அணு ஆயுதம் இல்ல மண்டலத்தின் ஏற்கனவே இருந்த நெறிமுறைகளை மாற்றி புதிய நெறிமுறைக்கு ஒப்பந்தம் மேற்க்கொந்துள்ளன.
3.   மேற்குவங்க மாநிலம் சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4.   வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மேஜர் தயான்சந்த் விருதுக்கு மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சுமராய் திதியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய சீனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர்.
5.   ரஷியா வழியாக அமெரிக்காவுக்கு 13,000 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையில் அதிவேக ரயில் இயக்கவும்அதற்காக பசிபிக் பெருங்கடலில் சுரங்கப்பாதை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்.
6.   2030ம் ஆண்டில் நிலவில் குடியேறி மனிதர் காலனி அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. வரும் 2028ம் ஆண்டு அதற்கான பணியில் ஈடுபட மனிதர்களை அனுப்ப தாயாராகி வருவதாகவும் இறுதிகட்டத்தில் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி அங்கு ஒரு காலனிக்கான உள்கட்டமைப்பு அமைக்க சந்திரனின் மேற்பரப்பிற்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் மாஸ்கோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (10 மே 2014) ░░▒▓███
1.   “India Junction – A Window to the Nation” என்ற புத்தகத்தை ரயில்வே வாரிய தலைவர் Arunendra Kumarஅவர்கள் வெளியிட்டார்.
2.   Pria Somiah அவர்கள் இயக்கிய இந்தியவின் ஆவணப்படமான Silent Screams – India’s Fight Against Rape அமெரிக்கவில் நடைபெற்ற ஒரு விழாவில் மூன்று விருதுகளை வென்றது.
3.   8 மே 2014 அன்று Ronnie O’Sullivanஅவர்கள் இந்தண்டிர்க்கான உலக ஸ்னூக்கர் வீரராக முடிசூட்டப்பட்டார்.
4.   தேசப்பிதா மகாத்மா காந்தியின் ஆளுயர உருவச் சிலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இர்விங் நகரில் அமைக்கப்பட உள்ளது. 
5.   தென்னாப்பிரிக்காவில் நடை பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி (ஏஎன்சி) தொடர்ந்து 5-வது முறையாக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்துஇப்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா (72) 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
6.   இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் மிதுல் கதாகியாவுக்கு அமெரிக்காவின் சிறந்த இருதய அறுவைச் சிகிச்சை நிபுணருக்கான கிரிகோரி பிராடின் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (11 மே 2014) ░░▒▓███
1.   பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகஇறால் போன்ற உயிரினங்களின் கெட்டியான தோலில் இருந்து எடுக்கப்படும் பொருளில் இருந்து புதிய வகை பிளாஸ்டிக்கைஅமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொழில்நுட்பத்துறையானவைஸ் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ளது.
2.   அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார். அவருக்கு வயது 67. உலகில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தவர்.
3.   வெளிநாடு வாழ் இந்தியரான பிரபல தொழிலதிபர் ஸ்வராஜ் பாலின் "கபாரோநிறுவனத்துக்கு "2014ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகவிருது வழங்கப்பட்டுள்ளது.
4.   சீன ராணுவம்தனது விமானப் படையில் பயிற்சியளிக் கப்பட்ட மாகாக் இன குரங்குகளைச் சேர்த்துள்ளது. பெய்ஜிங் அருகே உள்ளே ரகசிய விமானப்படைத் தளத்தில் இக்குரங்குப் படை பணியமர்த்தப்பட்டுள்ளது.சீன ராணுவத்தின் ரகசிய ஆயுதம்’ என இந்தக் குரங்குப் படையை ராணுவ வீரர்கள் செல்ல அடைமொழியுடன் குறிப்பிடு கின்றனர்.
5.   சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக அமல்படுத்துவதுநிதிப்பற்றாக்குறையை குறைப்பது ஆகியவற்றை புதிய அரசு உடனடியாக செய்ய வேண்டும். அப்போதுதான் முதல் 7.5 சதவீத வளர்ச்சியை நாம் அடைய முடியும் என்று திட்டக் குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (12 மே 2014) ░░▒▓███
1.   சர்வதேச செவிலியர் தினம் 2014 உலகம் முழுவதும் 12 மே 2014 அன்று அனுசரிக்கப்பட்டது.
2.   புதிய ராணுவ தலைமைத் தளபதியை நியமிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கி யுள்ளது.தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் விக்ரம் சிங் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுகாக்கின் அவர்கள் புதிய ராணுவ தலைமைத் தளபதியை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
3.   மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து (மார்ச் 5ஆம் தேதியிலிருந்து) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற திங்கள்கிழமை (மே 12) வரை கணக்கில் வராத பணம் ரூ.313 கோடி தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
4.   செவ்வாய்க்கிரக சுற்றுப்பாதையை செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி மங்கள்யான் விண்கலம் சென்றடையும் என இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
5.   ஐ.நாவின் உலக அமைதிகாக்கும் படைக்கு முதல் முறையாக ஒரு பெண் தளபதியை நியமிப்பதாக நேற்று ஐ.நா அறிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-மூன் கூறும் போது உலக அமைதிகாக்கும் படைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டின் லுண்ட் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதியில் இருந்து இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என கூறினார். மேலும் இவர் நார்வே நாட்டைச்சேர்ந்தவர். துருக்கியின் சைப்ரஸ் பிரிவுக்கும்கிரீசிற்கும் இடையில் உள்ள 112 மைல் நிலப்பரப்பும், 900 ராணுவத்துருப்புகள் அடங்கிய காவல்துறையும் இவரது கண்காணிப்பின் கீழ் செயல்படும் என கூறினார்.
6.   உலகில் முதல் முறையாக மின்சார பேட்டரி மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக வானத்தில் பறக்கவைத்துசோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதனை உருவாக்கியுள்ள பிரான்ûஸச் சேர்ந்த "ஏர்பஸ்நிறுவனம் தெரிவித்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (13 மே 2014) ░░▒▓███
1.   அசாமில் உள்ள கோலாகாட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சீனியர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன் போட்டியில் ஒரிசாவை விழ்த்தி மணிப்பூர் பெண்கள் கால்பந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2.   மும்பை உயர் நீதிமன்றம் வாக்காளர் பட்டியலை மிண்டும் திருத்தும் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது. இம் முடிவானது நடந்த லோக்சபா தேர்தலில் மும்பை மற்றும் புனேவில் அதிகமான வாக்காளர் பெயர் விடுபட்டு இருந்ததால் இந்த திர்ப்பை வழங்கியது.
3.   கடன் பத்திரங்கள் மூலம் இந்திய நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் (2013-14) உள்நாட்டில் திரட்டிய நிதியின் அளவு ரூ. 42ஆயிரம் கோடியாகும். 
4.   16-வது மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு ரூ. 3,426 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் 131 சதவீதம் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு ரூ. 1,483 கோடி செலவிடப்பட்டது.
5.   இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுத் ஒல்மெர்ட்டுக்கு (68) ஊழல் வழக்கில் ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.இஸ்ரேல் வரலாற்றில் முதல் முறையாக ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் முதல் உயர்நிலைத் தலைவர் எஹுத் ஒல்மெர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (14 மே 2014) ░░▒▓███
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாக அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 2025 ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடக இருக்கும் என்று கூறியுள்ளது.
2.   இந்திய - அமெரிக்கரான Indira Talwani அவர்களை மாசசூசெட்ஸ் நீதிபதியாக அமெரிக்க செனட் உறுதி செய்துள்ளது.
3.   புத்த பூர்ணிமா 14 மே 2014 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
4.   மூத்த வழக்குரைஞர்கள் ரோஹிங்டன் நாரிமன்கோபால் சுப்பிரமணியம்கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் மிஸ்ராஒடிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கலாம் என்று தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
5.   உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டை ஃபோபர்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
6.   ஹைப்ரிட் ஏர்நிறுவனம் ஒரு விமானம்ஒரு ஹெலிகாப்டர்ஒரு ஏர்ஷிப் ஆகிய மூன்றையும் இணைத்து உலகையே பிரமிக்க வைக்கும் அளவிற்கு 'ஹெச்ஏவி 304' என்ற ராட்சத விமானத்தை வடிவமைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக பறந்த இந்த விமானம் உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (15 மே 2014) ░░▒▓███
  1. நீதிபதி பிஎஸ் சவுகான் அவர்களை காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  2. தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் சொத்து தகவல்களை வெளியிட தவறினால் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று உச்ச நீதிமன்றம்கூறியுள்ளது..
  3. மே 10, 11 2014 ஆகிய நாட்கள் உலக இடம்பெயர்ந்து பறவைகள் நாளாக (WMBD) உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  4. சர்வதேச தொழில்நுட்ப சட்டம் சங்கத்தின் தலைவராக சாஜய் சிங் (Sajai Singh) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர் அவர்.
  5. ரிசர்வ் வங்கி குழு அனைத்து வங்கிகளுக்கும் (பொதுத்துறை மற்றும் தனியார் துறை)  ஒரே மாதிரியான உரிமம் வழங்கும் கொள்கையை பரிந்துரைத்துள்ளது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF) இந்தியன் ஹாக்கியில் இணை உறுப்பினராக பதவியேற்றுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (16 மே 2014) ░░▒▓███
  1. அஸ்வின் பி பாண்டிய அவர்களை மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  2. எம்டிஎஸ் நிறுவனம் குர்க்கான் ராபிட் மெட்ரோ ரயிலில் இலவச Wi-Fi, அது ஆறு மாதங்களுக்கு வழங்க மே 14, 2014 அன்று முடிவு செய்துள்ளது.
  3. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் வரும் 2015 இல் பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை பரிசோதனை முறையில் இந்தியாவில் ஐந்து நகரங்களில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
  4. முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர், கிராண்ட் ஃப்ளவர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. நீதிபதி JS Khekar அவர்கள் சஹாரா வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொண்டுள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (17 மே 2014) ░░▒▓███
  1. அமுல் நிறுவனம் வாரணாசியில் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் லிட்டர்  பால் உற்பத்தி செய்யவல்ல பால்பொருள் ஆலை ஒன்றை அமைக்க உள்ளது.
  2. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  3. தில்லி தமிழ்ச் சங்கத்தில் வரும் மே 23-ஆம் தேதி, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்,தமிழுக்கு அளப்பறிய பங்களிப்பு நல்கியிருக்கும் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரது200-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.
  4. மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியா தனது பதவியை 17 மே 2014 அன்று ராஜிநாமா செய்தார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (18 மே 2014) ░░▒▓███
  1. 15-வது மக்களவையை முறைப்படி கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 18 மே 2014 அன்று உத்தரவிட்டார்.
  2. அர்ஜென்டினாவில் உலகின் மிகப்பெரிய டைனோசரின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. இதுவரை கண்டறி யப்பட்ட டைனோஸர்களிலேயே இதுதான் மிகப்பெரியதாகும்.14 ஆப்பிரிக்க யானைகளுக்கு இணையானதும், 7 மாடி அளவுக் குப் பெரியதுமான இந்த டைனோ சர்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  3. சவூதி அரேபியாவில் 152 பேரை பலி வாங்கியுள்ள மெர்ஸ் (எம்இஆர்எஸ்) வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
  4. அமெரிக்காவின் ஹைதி தீவுக்கு அருகே மூழ்கிய பழங்காலக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கப்பல் கொலம்பஸின் சான்டா மரியாவாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற கடல்-அகழ் வாராய்ச்சியாளர் பாரி கிளிப்போர்டு, ‘சான்டா மரியாவைக் கண்டுபிடித் துள்ளதாகக் கூறியுள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (19 மே 2014) ░░▒▓███
  1. 18 மே 2014 அன்று அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக Nabam Tukiஅவர்கள் இட்டாநகரரில் உள்ள ராஜ் பவனில் படவியேற்றர்.
  2. பத்ம பூஷன் விருது பெற்ற டாடா ஸ்டீல் தலைவர் மற்றும் மேலாண்மை குருவாக இருந்த ருஸ்ஸி மோடி, அவர்கள் தனது 96 வயதில் தென் கொல்கத்தாவில் இறந்தார்.
  3. 15 வது மக்களவை இந்திய குடியரசு தலைவரால் 18 மே 2014  அன்று கலைக்கப்பட்டது.
  4. செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக மகளிர் இத்தாலிய டென்னிஸ் போட்டிய 2014 யை வென்றார் மற்றும் ஆண்கள் பிரிவில் நோவாக் ஜோகோவிக் அவர்கள் வெற்றிபெற்றார்.
  5. N. சீனிவாசன், மூத்த அணு விஞ்ஞானி மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றவர் 2014 மே 18 அன்று இறந்தார். அவர் தனது 84 வயதில் மாரடைப்பினால் காலமானார்.
  6. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் (PMEAC) தலைவராக இருந்த சக்ரவர்த்தி ரங்கராஜன் அவர்கள் 2014 மே 19 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  7. அமெரிக்க மக்களிடம் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் தொடக்க முயற்சியாக, நியூயார்க் மாகாணத்தில் சிகரெட் வாங்குபவர்களின் வயது 19 வயதிலிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  8. பீகார் மாநிலத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவிவிலகியதை அடுத்து புதிய முதல்வராக ஜிதன்ராம் மஞ்சி தேர்வு செய்யப்பட்டார்.
  9. ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் போலியோவால் கால்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ப்பூர் புட்' நிறுவனம் 1,000 செயற்கைக் கால்களை இலவசமாக வழங்குகிறது.
  10. பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி மொபைல் போனை பிரிட்டனைச் சேர்ந்த ஓன்போன் நிறுவனம் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.இந்திய மதிப்பில் சுமார் ரூ.5900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போன் மூலம்பார்வையற்றவர்கள் எளிதில் மற்றவர்களைத் தொடர்பு கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (20 மே 2014) ░░▒▓███
  1. இந்திய சினிமாவின் 100 ஆண்டுகள் நிறைவு செய்ததை சிறப்பிக்கும் விதமாக பிரேசில் நாடு இரண்டு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.
  2. தாய்லாந்து இராணுவ தலைமை தளபதி Prayuth Chan-ocha  அவர்கள் தாய்லாந்தில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்த்தியுள்ளார்.
  3. எடின்பர்க் பல்கலைக்கழகம் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
  4. 18 மே 2014 அன்று இந்திய ஆண்கள் வில்வித்தை அணி அமெரிக்கவில் உள்ள மேடெல்ளினில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை நிலை 2 போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (21 மே 2014) ░░▒▓███
  1. திட்ட குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மே 17, 2014 அன்று தனது பதவியிலிருந்து விலகினார்.
  2. பவான் சாம்லிங் 5 வது முறையாக சிக்கிம் முதல்வராக பதவியேற்று சாதனை புரிந்துள்ளார்.
  3. நவீன் பட்நாயக் ஒடிசா முதல்வரராக தொடர்ந்து நான்காவது முறையாக பதவியேற்றார்.
  4. உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களின் வரிசையில் லண்டன் முதல் இடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நியூயார்க் நகர்ம் 2ம் இடத்திலும்சிங்கபூர் 3ம் இடத்திலும் இதையடுத்து டொராண்டோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ 4 இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
  5. குஜராத்தின் புதிய முதல்வராகஅம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆனந்தி பென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (22 மே 2014) ░░▒▓███
  1. முன்னாள் உளவுத்துறை பிரிவின்  தலைவரான ராஜீவ் மதூர் அவர்கள் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்றார். இவர் ஆறாவது தலைமை தகவல் ஆணையர் அவர்.
  2. பிரெய்லி கீபேடுகள் கொண்ட "பேசும் ஏடிஎம்யை" வரும் ஜூலை 1, 2014 முதல் அனைத்து வங்கிகளுக்கு தங்களது ஏடிஎம் இல் நிறுவப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
  3. அமெரிக்காவின் "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் 100 புதுமையான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 9 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
  4. தென்கொரிய பிரதமராக உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி ஆன் தய்-ஹீயை நியமிக்கப்போவதாக அதிபர் பார்க் கியூன் ஹை அறிவித்துள்ளார்.
  5. புகைப் பிடிப்பிடிப்பவர்களுக்கும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துப்பவர்களுக்கும் அரசு மின்சார நிறுவனங்களில் இனி வேலைவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (23 மே 2014) ░░▒▓███
  1. “T R Zeliang” அவர்கள் நாகாலாந்தின் புதிய முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார். நிபியூ ரியோ தனது பதவியை ராஜினாமா செய்ததால் இவர் இப்பதவியை ஏற்றார்.
  2. ஐ.நா. பாதுகாப்பு சபை போகோ ஹராம்  Boko Haramயை அல் கொய்தா உடன் தொடர்புள்ள ஒரு பயங்கரவாத குழு என்று அறிவித்துள்ளது. இந்த போகோ ஹராம்  Boko Haramபயங்கரவாத குழு நைஜீரியாவில் 200 பள்ளி பெண்களை கடத்தியுள்ளனர்.
  3. ஸ்னூக்கர் சாம்பியன் சித்ரா மகிமைராஜ் அவர்கள் 2014 ஆம் ஆண்டிற்க்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
  4. சர்வதேச பல் உயிர் பெருக்க தினம் 2014 மே 22 ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  5. கே ராஜேந்திர குமார், அவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் போலீஸ் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
  6. உலக கடலாமைகள் தினம் மே 23, உலக முழுவதும் அனுசரிக்கப்பட்டது
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (24 & 25 மே 2014) ░░▒▓███
  1. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜுமா அவர்கள் இரண்டாவது முறையாக தென்னாபிரிக்கவின் ஜனாதிபதியாக பதவியேற்க்க உள்ளார்.
  2. மாடு பிடி வீரர்கள் காயம் காரணமாக 12 புல்ஃபைட்டை திருவிழாவை ஸ்பெயின் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
  3. மிதக்கும் ஹோட்டல் ஏபி செலேச்தியல், 2014 மே 22 ம் தேதி மும்பையில் திறந்து வைக்கப்பட்டது.
  4. நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராக டி.ஆர். ஜெலியாங் 24 மே 2014 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
  5. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி மலாவத் பூர்ணா, எவரெஸ்ட் சிகரத்தில் மிகக் குறைந்த வயதில் ஏறிய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
  6. பூமி தினத்தை முன்னிட்டு எடுக்கப் பட்ட சுமார் 36 ஆயிரம் பேரின் செல்பி வகை புகைப்படங்களை இணைத்து, ‘குளோபல் செல்பி புகைப்படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.
  7. சீனாவில் 'உலக நடைப்பயிற்சி' விழா நடைபெற்றது. இதில் 15,000 பேர் கலந்துகொண்டு, வெவ்வேறு தூரத்திற்கு நடைப் பயணமாக நடந்து சென்றனர்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (26 மே 2014) ░░▒▓███
  1. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் நாட்டின் 15 வது பிரதமராக 26 மே 2014 அன்று பதவியேற்றார்.
  2. தாமஸ் பூப்பந்து கோப்பை பட்டத்தை ஜப்பான் முதல் முதலாக வென்றுள்ளனர்.
  3. 2014 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டாலருக்கு நிகராக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்திய ரூபாய் சிறந்த நாணயமாக உள்ளது.
  4. ரியல் மாட்ரிட் தனது 10 வது UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை அத்லெட்டிகோ மாட்ரிட் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
  5. நாசா பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) விலங்குகளை எடுத்து செல்ல உயர் தொழில்நுட்ப கூண்டுகளை உருவாக்கியுள்ளது.
  6. சேகர் குப்தா அவர்கள் எழுதிய Anticipating India - The best of national interestஎன்ற புத்தகம் 2014 மே 24 அன்று வெளியிடப்பட்டது.
  7. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் மொரிஷியஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.
  8. உக்ரைனில் 25 மே 2014 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோடீஸ்வரரும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளருமான போரோஷென்கோ (48) முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் உக்ரைனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  9. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வாழ்ந்து வரும் 111 வயது உளவியல் மருத்துவரான அலெக்ஸாண்டர் இமிச்சை "உலகின் மிக வயதான ஆண்' என கின்னஸ் அறிவித்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (27 மே 2014) ░░▒▓███
  1. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மே 26, 2014 அன்று முதல் பெண் வெளியுறவு துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
  2. லித்துவேனியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் Dalia Grybauskaite, அவர்கள் 25 மே 2014 அன்று லித்துவேனியாவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார்.
  3. அகமது மைதீக் (Ahmed Maiteq) அவர்கள் 2014 மே 26 அன்று, லிபியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (28 மே 2014) ░░▒▓███
  1. நிர்பெண்தர் மிஸ்ரா (Nripendra Misra), டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் அவர்கள் பிரதமரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள 35 வது தேசிய விளையாட்டின் நல்லெண்ண தூதராக சச்சின் டெண்டுல்கர் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  3. மகாராஷ்டிரா மாநில அரசு பள்ளி பாடத்திட்டத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களை பற்றி பாடத்தை இணைக்க முடிவு செய்துள்ளது.
  4. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் மே 25, 2014 அன்று இந்தியவின் முக்கிய காரான அம்பாசிடர் உற்பத்தியை நிறுத்தி விட்டது.
  5. கடந்த 2006-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தத்தால் உலகின் அதிக எடையுள்ள குண்டு மனிதர் என்று என்று சான்றுரைக்கப்பட்ட மெக்சிகோவின் மேனுவல் மெமெ உரைப், தனது 48 வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (29 மே 2014) ░░▒▓███
  1. எகிப்தின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் அ‌ப்​‌து‌ல் ஃப‌ட்டா அ‌ல்-​சிசி  (Abdel Fattah Al Sissi )  அவர்கள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  2. சர்வதேச அளவில் இன்டர்நெட்டில் அதிகமான மக்களை ஈர்த்தவர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் 65.5 புள்ளிகளுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதலிடத்தில் உள்ளார்.இதற்கு அடுத்த இடத்தில் 45.3 புள்ளிகளுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளார். இப்பட்டியலில் 23.98 புள்ளிகளுடன் சச்சின் 68-வது இடத்தில் உள்ளார். 22.07 புள்ளிகளுடன் ஷாரூக்கான் 99-வது இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள் இவர்கள் மட்டும்தான்.
  3. உ‌ள்​நா‌ட்​டி​‌லே‌யே தயா​ரி‌க்​க‌ப்​ப‌ட்ட பினாகா ரா‌க்​‌கெ‌ட்​டு​க‌ளை இ‌ந்​தியா 29 மே 2014 அன்று ‌வெ‌ற்​றி​க​ர​மாக ‌சோத‌னை செய்தது. ஒடிஸா மாநி​ல‌ம் ச‌ண்​டி‌ப்​பூ​ரி‌ல் உ‌ள்ள பரி​‌சோ​த‌னை தள‌த்​தி‌ல் பினாகா ரா‌க்​‌கெ‌ட்​டு​க‌ள் 3 சு‌ற்​று​க​ளாக ‌சோத‌னை நட‌த்​த‌ப்​ப‌ட்​டன.​ 
  4. தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் கவர்னராக ESL. நரசிம்மனை இரண்டு மாநிலத்தின் பொது கவர்னராக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள், 2014 மே 28, அன்று நியமித்துள்ளார்.
  5. ஹிரோஷி நாகா அவர்கள் உலக வங்கியின் துணை தலைவர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (30 மே 2014) ░░▒▓███
  1. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் சர்வதேச தினம் உலகம் முழுவதும் 30 மே 2014 அன்றுஅனுசரிக்கப்பட்டது.
  2. இந்தியா சர்வ சிக்ஷா அபியான்திட்டத்திற்காக உலக வங்கி இடம் கடன் பெறுவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  3. கோவா இந்தியாவின் 25 வது மாநிலமாக கடந்த 30, மே 1987 அன்று அறிவிக்கப்பட்டது. அந்த நாளை கொண்டாடும் விதமாக கோவா நாள் 2014 மே 30 அன்று அனுசரிக்கப்பட்டது.
  4. இரண்டு இந்திய அமெரிக்கர்கலான ஸ்ரீராம் மற்றும் அன்சுன் ஆகியோர் எழுத்து பிழை இன்றி அங்கிலத்தை உச்சரிப்பு போட்டியில் (Scripps National Spelling Bee) வெற்றி பெற்றனர்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (31 மே 2014) ░░▒▓███
  1. ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் அவர்கள் 2013 ஆம் ஆண்டிற்க்கான அமைதிக்காண நடவடிக்கைகளில் தங்கள் உயிர்களை இழந்த எட்டு இந்திய வீரர்களுக்கு டாக் ஹமாஷெல்ட் விருது வழங்கி உள்ளார்.
  2. இந்திய கடற்படை மற்றும் சிங்கப்பூர் கடற்படை வீரர்கள் 22 மே 2014 முதல் 28 மே வரை அந்தமான் கடலில்  கூட்டு பயிற்சி மேற்கொண்டனர். அதற்க்கு  SIMBEX 2014 என்று பெயர் வைக்கப்பட்டது.
  3. புதிதாக அமைந்துள்ள 16ஆவது மக்களவையின் இடைக்காலத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை முன்னாள் அமைச்சருமான கமல்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  4. தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த பீட்டர் முத்தாரிக்கா வெற்றி பெற்றார்.
  5. உலக புகையிலை எதிர்ப்பு தினம் 31 மே 2014 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  6. வைஸ் அட்மிரல் லன்பா அவர்கள் கடற்படையின் புதிய துணை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் ஆர்.கே. Pattanaik அவர்கள் இந்திய கடற்படையின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....