My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Monday, September 8, 2014

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2014

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (1 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014-15 ஆம் நிதிஆண்டில் 5.5 சதவீதமாக இருக்கும் என்று ஆசியன் வளர்ச்சி வங்கி 1 ஏப்ரல் 2014 அன்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
  2. ஜப்பன் அரசாங்கம் அண்டார்டிக் பெருங்கடலில் திமிங்கலங்கள் வேட்டையாட தடைவிதித்து ஐ.நா. வின் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  3. இந்திய அமெரிக்கரான இதயடாக்டர் சுமித் சவுக் அவர்களுக்கு “Simon Dack Award” என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  4. மாறிவரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தெற்கு ஆசிய நாடுகளான இந்திய, சீனா, பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையே போர் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நாவின் குழு ஒரு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  5. பிரான்ஸியின் அடுத்த பிரதமராக உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் அவர்களை மார்ச் 31, 2014 அன்று அந்நாட்டு குடியரசு தலைவர் பிரான்சுவா ஹாலண்ட் அவர்கள் நியமித்தார்.
  6. அழிவின் விளிம்பில் உள்ள டோலே (ஆசிய காட்டு நாய்) Jaldapara National Park (மேற்கு வங்காளம்) இல் முதல் முறையாக காணப்பட்டது. இது பெரும்பாலும் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும்.
  7. ஜப்பான் அரசு 2014 மார்ச் 31 ஆம் தேதி இந்தியவில் மேற்க்கொலப்படும் 5 திட்டங்களுக்கு ரூபாய் 15000 கோடியை அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (ஓடிஏ) கடன் வழங்க உள்ளது என அறிவித்தது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (2 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. 8.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் சிலி அருகில் ஏற்ப்பட்டது. இதன் காரணமாக லத்தீன் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
  2. இந்தியா 2014 ஏப்ரல் 1 ஆம் தேதி ஓமானை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவி தொகை பெரும் மாணவர் எண்ணிக்கையை 125 ல் இருந்து 150 அக அதிகரித்துள்ளது.
  3. விஸ்வநாதன் ஆனந்த் ஏப்ரல் 12014 அன்று எஃப்ஐடிஇ வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் உலக அளவில் 3 வது இடத்தை பிடித்துள்ளார். மார்ச் 2014 இல் ரஷ்யாவில் நடைபெற்ற “Candidates Tournament” இல் வெற்றி பெற்றதன் முலம் 8 வது இடத்தில் இருந்த 3 வது இடத்துக்கு முன்னேறினார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (3 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் புதிய வங்கிகள் தொடங்க “ஐடிஎப்டி லிமிடெட்” மற்றும் “பந்தன் நிதி சேவை பிரைவேட் லிமிடெட்” ஆகிய இரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
  2. முதல் அதிகாரபூர்வமான மக்கள்தொகை கணக்கெடுப்பு மியான்மரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது. இதற்க்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு 1983 இல் நடத்தப்பட்டது.
  3. தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலில் 2014 ஆம் ஆண்டின் தேசிய அடையாளமாக ஹிந்தி நடிகர் “அமீர் கான்” அவர்களை தேர்வு செய்துள்ளது.
  4. இந்திய கிரிக்கெட் அணி ஐ.சி.சி. இருபதுக்கு 20 போட்டி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
  5. நாசா அதன் ரஷ்யா உடனான சர்வதேச விண்வெளி நிலையம் அமைப்பது தவிர அத்தனை ஒத்துழைப்பையும் இடைநிறுத்தம் செய்துள்ளது.
  6. 3 ஏப்ரல் 2014 அன்று இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு 2013 ஆம் ஆண்டிற்க்கான மிகவும் சிறந்த நவரத்னா விருது வழங்கப்பட்டது.
  7. ஏப்ரல் 22014 அன்று மத்திய அரசு எல்லை பாதுகாப்பு படையின் புதிய இயக்குனர் ஜெனரலாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.கே. பதக் அவர்களை நியமனம் செய்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (4 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. இந்திய ரிசர்வ் வங்கி மூன்று ஆண்டு காலத்துக்கு துணை ஆளுநராக ஆர் காந்தி அவர்களை ஏப்ரல் 32014 அன்று நியமனம் செய்தது. ஆனந்த் சின்ஹா இந்த பதவியை ராஜினாமா செய்ததால் இந்த பதவியை அவர் ஏற்கிறார்.
  2. ஐரோப்பா, பூமியின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி கண்காணிக்க மற்றும் பேரழிவு நிவாரண செயல்பாடுகளுக்க்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட  “செண்டினல்-1A” என்ற செயற்கைக்கோளை ஏவியது.
  3. அமெரிக்காவை சேர்ந்த National Institute of Standards and Technology (NIST) மிகவும் துல்லியமாக நேரத்தை கட்டக்கூடிய புதிய அணு கடிகாரம் “NIST-F2” வை உருவாக்கியுள்ளது.
  4. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது நேவிகேஷன் செயற்கைக் கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1பி உடன் பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் 4 ஏப்ரல் 2014 அன்று செலுத்தப்பட்டது.
  5. ஆளில்லா விமானம் மூலம் இன்டர்நெட் வழங்க பேஸ்புக் முயற்சி செய்து வருகிறது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (5 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. ஏப்ரல் 2014 அன்று கூகிள் ஸ்ட்ரீட் வியூ திட்டத்தின் கீழ் கம்போடியா அங்கோர் வாட் கோவிலை 360 டிகிரி ஆன்லைனில் பார்க்கும் வசதியை தொடங்கி வைத்துள்ளது.
  2. இந்திய வீரர் தோனிக்கு விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர் என்பதற்காக  United Kingdom’s 2014 Asian Awardவழங்கப்பட்டுள்ளது.
  3. அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பு வெளிட்ட சமூக மேம்பாடு பட்டியலில் 132 நாடுகளில் 102 வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது.
  4. புலிட்சர் பரிசு பெற்ற பத்திரிகையாளர் “Anja Niedringhaus” ஆப்கானிஸ்தானில் போலீஸ்காரர் ஒருவரால் 4 ஏப்ரல் 2014 அன்று சுடப்பட்டார்.
  5. தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தில் 3500 வயதான கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர் மற்றும் அது உலகின் மிக பழமையான வானிலை அறிக்கை அதில் உள்ளது என்று கூறுகின்றனர். அந்த கல்வெட்டுக்கு “Tempest Stela” என்று பெயரிடப்பட்டுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (6 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. டெல்லியை சேர்ந்த கோய்ல ராணா அவர்கள் மிஸ் இந்தியா 2014 பட்டத்தை வென்றார்.
  2. சென்னையில் நடைபெற்ற 4 வது ஹாக்கி இந்தியா ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் 2014 போட்டியில் ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணி வெற்றிப்பெற்றது.
  3. ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் சோனியா காந்தி 2-வது இடம் பெற்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் 66வது இடத்தில் உள்ளார்.
  4. மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (7 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. சன் பாராசெயூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஏப்ரல் 2014 அன்று பிரச்சனையில் உள்ள ரான்பாக்ஸி லேபாராட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தை 3.2 பில்லியன் டாலர்க்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதை அறிவித்தது.
  2. டெல்லியில் நடைபெற்ற “India Super Series Badminton” போட்டியில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான மலேஷியாவை சேர்ந்த லீ சாங் வெய் வெற்றிபெற்றார் மற்றும் பெண்கள் பிரிவில் Shixian Wang வெற்றிபெற்றார்.
  3. உலக சுகாதார தினம் ஏப்ரல் 72014 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  4. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்இணையதளம் மூலம் வாக்கை செலுத்துவதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (8 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்து 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டி தரவரிசையில் உலகின் நம்பர் இடத்தை பெற்றார். இந்த இடத்தை பெரும் முதல் இந்தியர் இவர் அவர்.
  2. 7 ஏப்ரல் 2014 அன்று சீன ஆய்வு குழு திபெத்தின் வளம் நிறைந்த இமாலய பிராந்தியத்தில் ஏழு கிலோமீட்டர் ஆழத்துக்கு ஆழ்குழாய் துளையிட்டு உள்ளது. அந்த. பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறிய தோண்டப்பட்டுள்ளது.
  3. இட்டாநகர் 7 ஏப்ரல் 2014 அன்று தனது முதலாவது பயணிகள் ரயில் போக்குவரத்தை பெற்றது.
  4. எச்.ஐ.வி நோயை கண்டறிய சுய பரிசோதனை கருவிகள் விற்பனை செய்ய 6 ஏப்ரல் 2014 அன்று இங்கிலாந்து அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்தியது.
  5. 2014 ஆம் ஆண்டுக்கான யேல் ஃபெல்லோ விருதினை பிரபல நடிகை நந்திதா தாஸ் மற்றும் காத்ரெஜ் இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் பர்மேஷ் ஷஹானி ஆகிய இந்தியர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (9 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. 1971 இந்திய பாகிஸ்தான் போரின் போதுஒரு முக்கிய பங்கு வகித்தது இந்தியாவின் முதல் விமானம் தங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் 60 கோடி ரூபாய்க்கு  IB Commercial Pvt Ltd என்னும் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.
  2. “விக்டர் ஓர்பன்” தொடர்ந்து இரண்டாவது முறையாக நான்கு ஆண்டு காலத்துக்கு “ஹங்கேரி பிரதமராக” மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  3. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யை சேர்ந்த “Ernesto Gainza” என்பவர் உலகின் மிகச்சிறிய பாராசூட் பயன்படுத்தி skydiving இல் ஒரு புதிய கின்னஸ் சாதனையை படைத்தார். இவர் 14000 அடி உயரத்தில் இருந்து குதித்து இச்சாதனையை புரிந்தார்.
  4. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரியை தயாரித்தார்அந்த பேட்டரியில் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறுகிறது. 

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (10 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் புத்தகத்தின் அட்டையில் சச்சின் டெண்டுல்கரின் படம் இடம் பெற்றுள்ளது. ஓராண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியாகும் இப்புத்தகத்தின் இந்த ஆண்டுக்கான பதிப்பு லண்டனில் வெளியிடப்படுகிறது. இது 151-வது வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்டன் புத்தக அட்டைப்படத்தை அலங்கரிக்கும் முதல் இந்தியர் சச்சின் டெண்டுல்கர்.
  1. இந்தியாவின் பொருளாதாரம் 2014 நிதி ஆண்டில் 4.8% சதவிகிதம் மற்றும் 2015 நிதி ஆண்டில் 5.7% என்ற அளவிற்கு வளர்ச்சி இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
  2. விஸ்டன் இதழ் 2013-ம் ஆண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளது. அதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும் இடம் பிடித்துள்ளார்.
  3. விண்டோஸ் எக்ஸ்பியின் ஆயுட் காலம் 8 ஏப்ரல் 2014 அன்றுடன் முடிந்தது.   விண்டோஸ் எக்ஸ்பியை உபயோகப்படுத்தும் பயனாளிகள்  விண்டோஸ்க்கு மாறும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனி அமைப்பை ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (11 ஏப்ரல் 2014) ░░▒▓██
1)   அந்தமான் & நிகோபாரை சேர்ந்த சோம்பென்ஸ் (Shompens)  பழங்குடியினர் முதல் முறையாக தங்களது வாக்கை பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர்.
2)   சர்வதேச உதவி அமைப்புக்கள் 10 ஏப்ரல் 2014 அன்று மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் எபோலா வைரஸ்க்கு எதிரான அவசர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
3)   11 ஏப்ரல் 2014 அன்று இந்திய குடியரசு தலைவர் இந்தியவின் அடுத்து தலைமை நீதிபதியாக நீதிபதி ராஜேந்திர மால் லோதா அவர்களை நியமித்துள்ளார். நீதிபதி லோதா அவர்கள் 27 ஏப்ரல் 2014 ல் தனது பொறுபேற்க உள்ளார். அவர் இந்திய 41 வது தலைமை நீதிபதியாக பொறுபேற்க உள்ளார்.
4)   11 ஏப்ரல் 2014 அன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதன் ட்விட்டர் கணக்கை தொடங்கியது. இதன் முலம் சமுக வலைத்தளங்களில் தனது பங்களிப்பை பெருக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
5)   இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளிநாட்டில் கடன் பத்திர வெளியீடு மூலம் 125 கோடி டாலரைத் திரட்டியுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (12 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. ரத்தன் டாடா அவர்களுக்கு இங்கிலாந்து அரசு “நைட் கிராண்ட் கிராஸ்” (GBE) விருதை 10 ஏப்ரல் 2014 அன்று வழங்கியது.  பிரிட்டனின் மிக உயர்ந்த விருதான ஒன்றாகும். இந்த விருதை ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் வழங்கினர்.
  2. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் குல்சார் அவர்களை 2013 ஆம் ஆண்டிற்க்கான தாதா சாகே பால்கே விருதுக்கு தேர்வு செய்துள்ளது. தாதா சாகே பால்கே விருது பெரும் 45 வது நபர் இவர் அவர்.
  3. பிசிசிஐயின் தற்காலிக தலைவரான சுனில் கவாஸ்கர் அவர்கள் HDFC யின் தலைவர் தீபக் பரேக் அவர்களை 7 வது IPL ளின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. அணு ஆயுதங்களை தங்கி செல்லும் திறன் கொண்ட உள்நாட்டு தயாரிப்பான அக்னி I ஏவுகணை வீலர் தீவில் இருந்து முதல் முறையாக இரவு சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  5. அமெரிக்காவில் நடக்கும் ஐ.எஸ்.எஸ்.எப் ஷாட்கன் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் டிரேப் பிரிவில் இந்திய வீரர் மானவ்ஜித் சிங் சாந்து (37) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (13 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள கொச்சிகொல்கத்தா அணிகளின் உரிமத்தை கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர்சவுரவ் கங்குலி வாங்கியுள்ளனர்.
  2. ஆயுள் காப்பீட்டு துறையில் ஈடுபட்டு வரும், "ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனத்திற்குகாப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா), 1.77 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. உரிமம் பெறாத நிறுவனங்கள் மூலம் காப்பீடுகளை திரட்டியது உள்ளிட்ட பல்வேறு 
    விதிமீறல்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  3. சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை இகான் வாங் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையரில்இந்தோனேஷியாவின் சைமன் சன்டோசோ பட்டம் வென்றார்.
  4. எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சஷஸ்த்ர சீமா பல் (எஸ்.எஸ்.பி.) படைப் பிரிவில் முதன் முறையாக பெண் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
5.   சங்ககால இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை முதல்முறையாக அஸ்ஸாமிய மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பிரபல அஸ்ஸாமிய கவிஞரும்சாகித்ய அகாதெமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்றவருமான பிஜோய் பர்மன் இந்த மொழிபெயர்ப்பை செய்துள்ளார். இந்தப் புத்தகத்தை வெளியிட்டு பேசிய எழுத்தாளர் பிரதீப் ஆசார்யா, ""அஸ்ஸாமிய கலாசாரத்தோடு ஒத்த தமிழ் கலாசாரத்தின் வெளிப்பாடுகளைஇப்புத்தகத்தில் வெற்றிகரமாகக் கொண்டு வந்துள்ளார்'' எனப் பாராட்டினார்.
6.   இந்தியாவில் அதிக நகரங்களில் அலுவலகங்களைத் திறக்க ஹாங்காங் வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் (எச்.கே.டி.சி.) திட்டமிட்டுள்ளது. பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த ஹாங்காங்கை மையமாக கொண்டு இந்த கவுன்சில் செயல்பட்டுவருகிறது.
7.   மாநில அரசுகளின் ஊரக கட்டமைப்பு திட்டங்களுக்காக கடந்த நிதியாண்டில் (2013-2014) நபார்டு வங்கி சார்பில் ரூ.17 ஆயிரத்து 353 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷ்குமார் பன்வாலா தெரிவித்துள்ளார்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (14 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. நீதிபதி ஜி ரோகினி அவர்கள் தில்லி உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  2. மேம்படுத்தப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் விமானம் “Solar Impulse 2” சுவிச்சர்லாந்து விமானப்படை தளத்தில் 13 ஏப்ரல் 2014 அன்று வெளியிடப்பட்டது. அது வரும் மார்ச் 2015 இல் உலகை சுற்றி வர உள்ளது.
  3. சஞ்சய பாருக் அவர்களால் எழுதப்பட்ட “The Accidental Prime Minister: the making and unmaking of Manmohan Singh” என்ற புத்தகம் ஏப்ரல் 2014 11 இல் வெளியிடப்பட்டது.
  4. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் சேஷாத்ரி 2014-ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசை வென்றுள்ளார். அவர் எழுதிய "3 செக்‌ஷன்ஸ்" (3 Sections) என்ற கவிதைத் தொகுப்பிற்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14,  2014அன்று நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 98-வது புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  5. டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல்எகிப்தின் டீன் ஏஜ் வீராங்கனையான நூர் எல் ஷெர்பினியிடம் தோல்வியடைந்தார்.
  6. சிரியாவில் இருந்து விஷவாயு மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட ரசாயன ஆயுதங்கள் பெருமளவில் அகற்றப்பட்டு விட்டதாக சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (15 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. மனித ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்ட செயற்கை இரத்ததத்தை நோயாளிளின் மீது வரும் 2016 முதல் பரிசோதனை செய்து பார்க்கப்போவதாக இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏப்ரல் 142014 அன்று அறிவித்துள்ளனர்.
  2. உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாவது வகை பாலினம் என்று அங்கீகராம் வழங்கியுள்ளது மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
  3. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) 850 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது பங்குகளை விற்பதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள தனது பங்கை 3.25% என்று குறைக்க உள்ளது.
  4. 14 ஏப்ரல் 2014 அன்று உலக வர்த்தக அமைப்பானது (WTO) நடப்பாண்டில் (2014) உலக வர்த்தகமானது 4.7 சதவிகிதம் வளர்ச்சி காணும் என்று கணித்துள்ளது.
  5. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் “மனு பிரகாஷ்” அவர்களின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு உலகின் மிக மலிவான மைக்ரோஸ்கோப்பை உருவாக்கியுள்ளனர். அதற்க்கு Foldscope என்று பெயர் வைத்துள்ளனர்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (16 ஏப்ரல் 2014) ░░▒▓██
  1. பொருளாதார விவகாரத்துறை செயலர் அர்விந்த் மாயாராம் (Arvind Mayaram) அவர்களை புதிய நிதித்துறை செயலாளராக15 ஏப்ரல் 2014 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. 15 ஏப்ரல் 2014 அன்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 50 நாடுகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை பார்வை இட “தேர்தல் பார்வையாளர்கள் திட்டம்” (EVP) 2014 யை தொடங்கியது.
  3. கட்மாண்டுவில் நடைபெற்ற ஏழாவது தென் ஆசிய ஜூடோ சாம்பியன்ஷி போட்டியில் இந்திய 12 பதக்கங்களை வென்றது.
  4. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) 15 ஏப்ரல் 2014 அன்று பெண்கள் அழகு நிலைய உரிமையாளர்களுக்கு என்று ஒரு புதிய நிதி திட்டத்தை தொடங்கியுள்ளது.
  5. 61 வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆனந்த் காந்தியின் ஷிப் ஆப் தீசிஸ்படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது மற்றும் பாஹ் மில்கா பாஹ்’ ஹிந்தி திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது. தமிழ் திரைப்படமான தங்க மீன்கள் திரைப்படத்துக்கு பிரிவுகளில் தேசிய விருது கிடைத்துள்ளது. இது மாநில மொழி திரைப்படங்கள் பிரிவில்சிறந்த தமிழ்ப் படமாகவும் தங்க மீன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
6.   கடந்த 2012ஆம் ஆண்டில்அமெரிக்காவின் தாற்காலிகப் பணியாளர்களில் 3ல் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்துஅந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ""கடந்த 2012ஆம் ஆண்டில்பல்வேறு பணிகள் தொடர்பாக அமெரிக்காவுக்குச் சென்றவர்கள் 19 லட்சம் பேர். அவர்களில் 4.30 லட்சம் பேர் இந்தியர்கள். 2.10 லட்சம் பேர் சீனர்கள், 1.40 லட்சம் பேர் தென் கொரியர்கள்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (17 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (WMO), குழு வெளிட்ட அறிக்கையில் சிரபுஞ்சியில் 48மணி நேரத்தில் 2493 மில்லி மீட்டர் மழை பெய்ததன் மூலம் மிக அதிக மழை பெய்த உலக சாதனையை மீண்டும் பெற்றுள்ளது என்று அறிவித்துள்ளனர்.
2.   மத்திய அமைச்சரவை 16 ஏப்ரல் 2014 அன்று தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தின் (என்எம்டிசி) தலைவராக “நரேந்திர கோத்தாரி” அவர்களை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கியது.
3.   17 ஏப்ரல் 2014 அன்று இந்திய உச்ச நீதிமன்றம், மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர்க்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயை தணிக்கை செய்யவும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.
4.   அட்மிரல் ஆர்.கே. தோவான் அவர்கள் இந்திய கடற்படையின் 22 வது தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார். அவர் முன்னால் தலைமை அதிகாரி அட்மிரல் டி.கே. ஜோஷி இப்பதவியை ராஜினாமா செய்ததால் இப்பதவியை அவர் பெற்றார். இந்தியவில் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக இருந்து ராஜினாமா செய்த முதல் அதிகாரி டி.கே. ஜோஷி அவர்கள் ஆகும்.
5.   படிப்பறிவில்லாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் “சந்தேஷ் பதக்” என்னும் ஒரு புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் முலம் விவசாயிகள் எழுத்து-பேச்சு வடிவில் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதில் தமிழ், இந்திமராத்திகுஜராத்திதெலுங்கு மொழிகளை  தேர்வு செய்யும் வழிமுறையும் உள்ளது.
6.   அமெரிக்காவில் உள்ள இடாஹோ மாநிலத்தின் பாய்சி நகரத்தில் தமிழ் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ம் தேதிபல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பாய்சி நகரத்தில் தமிழ் சங்கம் கோலாகலமாக துவங்கப்பட்டுள்ளது. சங்கத்திற்கான முத்திரையையும் வெளியிடப்பட்டது.
7.   பிஎப் சந்தாதாரர்களுக்கு பிஎப் பணம் திரும்ப பெறுதல் உள்ளிட்ட அனைத்து பயன்களும் எலக்ட்ரானிக் பரிவர்த்தனை மூலமே வழங்கப்படும் என்று பிஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (18 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   18 ஏப்ரல் 2014 அன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
2.   கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் முதல் முறையாக மலேரியா ஒட்டுண்ணியின்டி மாதிரி கிருமியை உருவாக்கியுள்ளனர்.
3.   நோபல் விருது பெற்ற பிரபல கொலம்பியா நாட்டு எழுத்தாளர் கேப்ரியல் கார்ஸியா மார்குவேஸ் (87) 17 ஏப்ரல் 2014 அன்று காலமானார். 
4.   வான்வெளியில் தோற்றத்திலும்அளவிலும் பூமியைப் போன்று காணப்படும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பூமியில் இருந்து சுமார் 490 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும் போதுமிதமான வெயிலும்மிதமான குளிரும்நீர் இருப்பதற்கான ஆதாரங்களும் தெரிகின்றன.இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட சற்று பெரியதாகபாறைகள் நிறைந்அதிக புவிஈர்ப்பு சக்தி உள்ளதாகவும் இருக்கிறது. இது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால்இதனை மனிதன் சென்றடைவது கடினமான பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (19 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   அப்டிலஜிஸ் பெளட்ஃபிலிகா அவர்கள் அல்ஜீரியாவின் ஜனாதிபதியாக தொடர்ந்து நான்காவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
2.   அதிக உள்ளடக்கத்தை கொண்ட மாங்கனீஸ் கோவாவில் உள்ள செளுலிம் நீர்த்தேக்கத்தில் உள்ளது என்று அம்மாநில பொதுப்பணி துறை (PWD) மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
3.   ஒரு மாபெரும் ஜோதி இந்திய ஆன்மீக தலைவர் சினமாய் குமார் கோஸ் அவர்களின் நினைவாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் 17 ஏப்ரல் 2014 அன்று வெளியிடப்பட்டது.
4.   ரஷ்யாஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் (அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்)ஆகிய நாடுகள் உக்ரைன் நெருக்கடியை குறைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஒப்பந்தம் 17 ஏப்ரல் 2014 அன்று ஜெனீவாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (20 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   ஐ.பி.எல். முறைகேடுகளை விசாரிக்க ஆர்.கே.ராகவன்ஜே.என். பட்டேல்ரவி சாஸ்திரி பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
2.   நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க பொறியாளர் ஜான் சி ஹூபோல்ட்தனது 95-ஆவது வயதில் காலமானார்.
3.   ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா 11 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (21 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் மும்பையில் 18 ஏப்ரல் 2014 அன்று பொது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்க்கு சாண்டாக்ராஸ்-செம்பூர் இணைப்பு சாலை (SCLR) என பெயரிடப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 3.45 கி.மீ. ஆகும்.
2.   ஹிலாரி கிளின்டன் அவர்கள் எழுதிய “Hard Choices” என்னும் புத்தகம் ஜூன் 2014 இல் வெளியிடப்பட உள்ளது.
3.   “ஹாக்கி இந்தியா” 19 ஏப்ரல் 2014 அன்று ஜூனியர் ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் மூத்த பயிற்சியாளர் ஹர்ரேந்தரா சிங் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4.   ரிச்மண்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் ராகேல் கிரின்ஹாமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
5.   ஃபார்முலா-கார் பந்தயத்தின் சீன கிராண்ட் ப்ரீ போட்டியில் மெர்சிடிஸ் அணி வீரரான பிரிட்டனின் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் இந்த சீசனில் தொடர்ந்து மூன்று சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன் மலேசிய மற்றும் பஹ்ரைன் கிராண்ட் ப்ரீ பட்டங்களை அவர் வென்றிருந்தார்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (22 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   உலகம் முழுவதும் உள்ள அனைவர்க்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் 22’ ஏப்ரல் 2014 அன்று சர்வதேச பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.
2.   17 ஏப்ரல் 2014 அன்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை (Massachusetts Institute of Technology - MIT) சேர்ந்த விஞ்ஞானி உலகின் முதல் மிதக்கும் அணு உலையை வடிவமைத்து உள்ளனர்.
3.   கர்நாடக இசைக்கலைஞர் மாதங்கி சத்தியமூர்த்தி அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டிற்க்கான “சுப்புலட்சுமி விருது” வழங்கப்பட்டுள்ளது.
4.   இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வங்க தேசத்தில் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நாட்டைச் சேர்ந்த நிதோல் நிலோய் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
5.   உச்ச நீதிமன்றம் ஐபிஎல் 2013 இல் நடந்த சூதாட்டத்தை விசாரணை செய்ய  நீதிபதி முட்கல் அவர்களின் தலைமையில் குழு ஒன்றை நியமித்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (23 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   பூட்டானில் உள்ள திம்புவில் நீர் மின் திட்டங்களை மேற்கொள்ள இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
2.   ரயில் கால அட்டவணைகளை கண்காணிக்க ரயில்வே துறை புதிய மொபைல் பயன்பாடு மென்பொருள் ஒன்றை தொடங்கியுள்ளது.
3.   மேற்கு ஆஸ்திரேலியாவில் விஞ்ஞானிகள் 22 ஏப்ரல் 2014 அன்று ஒரு புதிய கனிமத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்க்கு பெயர் “Putnisite” என்று வைக்கப்பட்டுள்ளது.
4.   உலக புவி நாள் 22 ஏப்ரல் 2014 கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலக மாசுபாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பயன்படுத்தப்பட்டு பழுதான அனைத்து மின்னணு சாதங்களையும் திரும்ப பெற்று மறு சுழற்சிக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (24 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   மத்திய அரசு 23 ஏப்ரல் 2014 அன்று லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் உடனடி முடிவை எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2.   3 ஏப்ரல் 2014 அன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்காக (ASEAN) இந்தியாவின் முதல் தூதராக சுரேஷ் குமார் ரெட்டி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.   ஸ்ரீ பத்மநாபர் கோவில் கணக்கை தணிக்கை செய்ய முன்னாள் சி.ஏ.ஜி.வினோத் ராய் அவர்களின் மேற்பார்வையின் கீழ் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4.   உலக பொருளாதார மன்றம் (WEF), உலக தகவல் தொழில்நுட்ப அறிக்கை 2014 யை வெளிட்டுள்ளது. அதில் 148 நாடுகளில் இந்திய 83 வது இடம் பெற்றுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (25 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   வேலையற்ற தென் ஆப்பிரிக்க இளைஞர்கள் பயன் பெரும் வகையில் இந்தியா பிரிட்டோரியாவில் ஒரு புதிய கல்வி திட்டத்தை தொடங்கி அதன் முலம் அவர்களுக்கு பயிற்சி வழங்குகிறது.
2.   கூகிள் பிளஸ் உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்த இந்தியாவை சேய்ந்த விக் Gundotraஅவர்கள் 24 ஏப்ரல் 2014 அன்று கூகிள் நிறுவனத்தில் இருந்து பதவி விலகினார்.
3.   சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), விமான பயணிகள் தங்கள் பயணத்தின் போது கையடக்கமான மின்னணு சாதனங்களை விமானத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
4.   இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் 24 ஏப்ரல் 2014 அன்று “டத்தோ அலெக்ஸ் லீ விருது 2013” யை ஆசிய ஸ்குவாஷ் சம்மேளனத்தின் (ASF) வழங்கியது. இந்த விருது 2013 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்பட்டது.
5.   ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகில் முதல் முறையாக தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை உருவாக்கியுள்ளது. 
6.   துபையின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டலின் ஹெலிபேடில் (ஹெலிகாப்டர் இறங்கு தளம்) திருமண விழாக்கள் நடத்த அந்த ஹோட்டல் அனுமதி வழங்கியுள்ளது.இந்த ஹோட்டல் உலகிலேயே அதிக அளவில் புகைப்படம் எடுக்கப்பட்ட கட்டடமாகும். 60 மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலின் ஹெலிபேடானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 212 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (26 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   உலக மலேரியா தினம் உலகம் முழுவதும் 25 ஏப்ரல் 2014 அன்று அனுசரிக்கப்பட்டது. 2014 மற்றும்2015 ஆம் ஆண்டுகளின் கருப்பொருள் (theme) என்னவென்றால் “எதிர்கால முதலீடு மற்றும் மலேரியாவை ஒழிப்பது” (Invest in the future. Defeat malaria).
2.   டைம் இதழ் 24 ஏப்ரல்2014 அன்று உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 நபர்களின் பட்டியலை .வெளிட்டது. அதில் இந்தியாவில் இருந்து நரேந்திர மோடிஅரவிந்த் கெஜ்ரிவால்எழுத்தாளர் அருந்ததி ராய்கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
3.   தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.07% வாக்குகளும்குறைந்தபட்சமாக தென் சென்னையில் 60.4% வாக்குகளும் பதிவாகின. தருமபுரியில் அதிகபட்சமாக 81.58% ஆண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
4.   உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை 26 ஏப்ரல் 2014 (சனிக்கிழமை) ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பாலாசூர் கடற்கரை ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஐந்து நிமிட இடைவெளியில் இருமுறை செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கின.
5.   டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்எழுத்தாளர் ருஷ்கின் பாண்ட்கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ இன்று வழங்கினார்.
6.   டாடா நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு பங்குகளை விற்றுவிட்டு வெளியேற ஜப்பானின் டோகோமோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (27 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   முன்னாள் போப்பாண்டவர்கள் 23-ம் ஜான்இரண்டாம் ஜான் பால் ஆகியோர் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.கத்தோலிக்க திருச் சபை வரலாற்றில் முதல்முறையாக இரண்டு போப்பாண்டவர்களுக்கு ஒரே நேரத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
2.   நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாதனது பழைய விமானங்களை குத்தகைக்கு (லீஸ்) விட்டு வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளது.
3.   உச்ச நீதிமன்றத்தின் 41-ஆவது தலைமை நீதிபதியாக ராஜேந்திர மல் லோதா (64) 27 ஏப்ரல் 2014அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.இப் பொறுப்பை வகித்துவந்த பி. சதாசிவம் 26 ஏப்ரல் 2014 அன்று ஓய்வுபெற்றதையடுத்துஉச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஆர்.எம். லோதாஇந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி வரை அப் பதவியில் இருப்பார்.
4.   பாலசோர்: எதிரி நாட்டு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை  நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணையை இந்தியா  வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஒடிசாவின் பாலசோரில் இருந்து100 கி.மீ தொலைவில் உள்ள வீலர்  தீவில் செயல்பட்டு வரும் ஏவுகணை தளத்தில் 27 ஏப்ரல் 2014அன்று பிரித்வி  டிபன்ஸ் வேக்கில்’ ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. 
5.   தென்கொரியாவில் நிகழ்ந்த படகு விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் ஜங் ஹாங் ஓன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (28 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையை தவிர்த்து நோக்கியா மொபைல் வர்த்தக பிரிவு அனைத்தையும்  கையகப்படுத்தி முடிந்தது விட்டது.
2.   “ஆதிபன்” அவர்கள் ஷார்ஜாவில் நடைபெற்ற ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.
3.   தென் கொரியா விஞ்ஞானிகள் “வெள்ளி நானோவயர்ஸ்” சார்ந்த நானோ கைவிரல் அடையாள பதிவை உருவாக்கியுள்ளனர்.
4.   மைசூர் உயிரியல் பூங்காவில் இருந்த இந்தியாவின் ஒரே கொரில்லா “போலோ” சுவாச தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக இறந்தது. அயர்லாந்தின் டப்ளின் மிருகக்காட்சி சாலை இந்த கொரில்லாவை இந்தியாவிற்கு பரிசு வழங்கியது.
5.   உலகின் வயதான மனிதன், Arturo Licata தனது 111 வயதில் இறந்தார். அவர் 28 பிப்ரவரி 2014 அன்று உலகின் வயதான மனிதன் என்று கின்னஸ் உலக சாதனைகள் விருது வழங்கப்பட்டது.
6.   இந்தியரானசுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால் இந்த ஆண்டு ஆசிய பகுதிக்கான 'கிரீன் நோபல்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால்சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் நடத்தி வந்த நிலக்கரிச் சுரங்கத்தை மூடியதன் மூலம் இந்த விருதை பெற்றுள்ளார்.
7.   பஹ்ரைன் நாட்டின் முதல் பெண் விமானியான யாஸ்மீன் ஃபிரைடூன் முதன் முதலாக அந்நாட்டின் பயணிகள் விமானத்தை இயக்கியுள்ளார்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (29 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   ராஜீவ் சூரி அவர்கள் நோக்கியா கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
2.   இந்திய கோல்ப் வீரர் “அனிரபன் லஹரி” அவர்கள் 28 ஏப்ரல் 2014 அன்று வெளியான உலக கோல்ஃப் தரவரிசை பட்டியலில் 67 வது இடத்தை பிடித்துள்ளார்.
3.   28 ஏப்ரல் 2014 அன்று ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்தியாவில் இருந்து  அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நான்கு காய்கறிகள் இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது. தடை விதித்துள்ள நான்கு காய்கறிகள் – கத்திரிக்காய், கிழங்கு, பாகற்காய், புடலை ஆகும்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (30 ஏப்ரல் 2014) ░░▒▓██
1.   முதல் முறையாக 29 ஏப்ரல் 2014 அன்று விஞ்ஞானிகள் சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு (CO2) ஆகியவையை பயன்படுத்தி சூரிய ஜெட் எரிபொருளை உருவாக்கியுள்ளனர். “சூரியஜெட்” என்ற இந்த திட்டதத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) நிதியுதவி வழங்கியது.
2.   கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கையை நேரடியாக 24 மணி நேரத்துக்குள்போலீஸ் அதிகாரிகள் பதிலாக மாஜிஸ்ட்ரேட் முன் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
3.   லண்டன் 29 ஏப்ரல் 2014 அன்று “ .london “ என்ற புதிய வலைத்தளத் டொமைன் பெயரை பெற்றுள்ளது. இது 2014 கோடை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.   உலக பொருளாதாரத்தில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்திலிருந்த இந்தியாஆறு ஆண்டுகளில்3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்திலும்அதற்கு மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன.இந்த வரிசையில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2011-ஆம் ஆண்டு 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.அமெரிக்க பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில்சீனாஇந்தியா,இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக உள்ளது.

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....