My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Wednesday, September 10, 2014

நடப்பு நிகழ்வுகள் - மார்ச் 2014

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (1 மார்ச் 2014)░░▒▓███
  1. மத்திய அமைச்சரவை கோலாரில் ஒரு புதிய ரயில் பெட்டி உற்பத்தி பிரிவை தொடங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 500 ரயில் பெட்டிகள் வருடத்துக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அளவிற்கு இந்த தொழிற்சாலை இருக்கும்.
  2. டாக்டர் இந்து ஆனந்த் எழுதிய “Akbar – The Aesthete” என்ற புத்தகத்தை துணை ஜனாதிபதி அவர்கள் வெளியிட்டார். இந்த புத்தகம் முகலாய காலத்தின் நுண்ணிய ஓவியங்களின் விளக்கங்களை கூறுகிறது.
  3. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மத்திய பிரதேச மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது மற்றும் இது மாநிலத்தில் உள்ள மொத்தம் 75 சதவீத மக்களுக்கு பயன்பெறும் வகையில் இருக்கும்.
  4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலைநாட்கள் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
  5. மழை மற்றும் பனிப்பொழிவை முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் செயற்கைக் கோளை ஜப்பான் ஏவியது. இச்செயற்கைக் கோள் அமெரிக்க உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்
  6. 32 அணிகள் பங்கேற்கும் 4-வது தேசிய ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டி வரும் 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கர்நாடகம் மாநிலம் மைசூரில் நடைபெறவுள்ளது
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (2 மார்ச் 2014)░░▒▓███
  1. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டி தரைவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.. ஆசிய கோப்பையில் பங்களாதேஷ் அணியை வென்றதால் இந்த இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.
  2. வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மதல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  3. சவுரப் சந்திரா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
  4. ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் இருப்பவர்களது டிக்கெட் ஆர்ஏசி-க்கு வரும்போதுஅதை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுத்தியது
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (3 மார்ச் 2014)░░▒▓███
  1. ரோஜர் பெடரர் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தாமஸ் பெர்டிச்யை விழ்த்தி வெற்றிப் பெற்றார். இவர் இந்த கோப்பையை ஆறாவது முறையாக வெல்கிறார்.
  2. ஒன்பது வடக்கு மாநிலங்களில் வாழும் ஜாட் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு ஓ.பி.சி. மத்திய பட்டியலில் கீழ்சலுகைகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
  3. இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி தெலுங்கானா மாநில உருவாக்க கொண்டுவந்த தெலுங்கானா மசோதாவில்கையெழுத்திட்டார்.
  4. 86 வது ஆண்டு ஆஸ்கார் விருது 2014 இல் சிறந்த படத்திற்க்கான விருதை “12 Years A Slave of Steve McQueen”  என்ற படம் பெற்றது.
  5. சிந்து சமவெளி நாகரிகம் காலநிலை மாற்றத்தின் காரணமாக தன் அழிந்திருக்கும் என்று சமிபத்திய ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்களுக்கு மேலும் மாதம் அவகாசம் அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (4 மார்ச் 2014)░░▒▓███
  1. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி K.T. தாமஸ் மார்ச் 3, 2014 அன்று லோக்பால் குழு தலைவர் பொறுப்பை ஏற்கமறுத்துவிட்டார்.
  2. ஜஸ்வந்த் சிங்  “India at Risk – Mistakes, Misconceptions and Misadventures of security policy” என்ற புத்தகத்தை மார்ச் 3, 2014 அன்று வெளியிட்டார்.
  3. ஹைதெராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் Natco Pharmaceuticals என்னும் நிறுவனம் 3 மார்ச் 2014அன்று இஸ்ரேலை சேர்ந்த  Teva Pharmaceuticals  க்கு எதிராக ஒரு காப்புரிமை வழக்கில் வெற்றி பெற்றது.
  4. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வருடாந்திர பில்லியனர்கள் பட்டியலில் உலக பணக்காரர்களில் பில் கேட்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
  5. சிறுபான்மையினர்க்கான உயர் கல்வி நிறுவனங்களுக்கான நாலந்தா  திட்டத்தை சிறுபான்மை விவகார அமைச்சகம் தொடங்கிவைத்துள்ளது.
  6. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முறையில் மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
  7. திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச வீரப் பெண்மணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதை மிஷெல் ஒபாமா வழங்கவுள்ளார்.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (5 மார்ச் 2014)░░▒▓███
  1. கேரளா ஆளுநர் தனது பதவி விலகலை இந்திய ஜனாதிபதியிடம்  சமர்ப்பித்ததை அடுத்து டெல்லியின் முன்னால் முதல்வர் ஷீலா தீட்சித்தை கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. அஞ்சல் அலுவலகங்கள் வைக்கப்படும் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின்  வட்டி விகிதத்தை அரசு 0.2 சதவீதம் என்ற அளவிற்கு உயர்த்தி உள்ளது. இது  ஏப்ரல் 1, 2014 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. 4 மார்ச் 2014 அன்று அசாம் மாநிலம் “குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை” அனுசரித்தத இந்தியாவின் முதல் மாநிலமாகமாறியது. அதே போல் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு தினம் நவம்பர் 19 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும்கடைபிடிக்கப்படுகிறது.
  4. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதிதுறை அதிகாரி (CFO) பீட்டர் ஒபென்ஹெமர் 2014 மார்ச் 4 அன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
  5. முன்றாவது BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) உச்சி மாநாடு மியான்மாரில்நடைபெற்றது. இதில் இந்திய, தாய்லாந்து, பங்களாதேஷ், நேபால், பூட்டான், மியான்மார், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் பங்குபெற்றனர்.
  6. சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அறிவித்த சுற்றுசூழலுக்கு முக்கிய பகுதிகளில்(Ecologically Sensitive Areas) 2014மார்ச் 4 எல்லைகளை குறித்து கேரள அரசு பரிந்துரைகளை ஏற்று அதன் எல்லைகளை மாற்றி அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  7. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான "நோட்டா பட்டன்" நாடாளுமன்றத் தேர்தலில் அமல்படுத்தப்படுகிறது.
  8. 2013-14-ம் நிதியாண்டுக்கு வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8.75% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் சுமார் கோடி பேர் பலனடைவர்.
  9. இணையச் சேவையை உலகின் அனைத்துப் பகுதி மக்களும் எளிதாகவும் இலவசமாகவும் பெற வசதியாக அவுட்டர்நெட் திட்டத்தை நியூயார்க்கின் ஊடக மேம்பாட்டு முதலீட்டு நிதியம் செயல்படுத்தவுள்ளது.

███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (6 மார்ச் 2014)░░▒▓███
  1. பிரிட்டிஷ் நாட்டு லண்டனை சேர்ந்த Great Ormond Street Hospital (GOSH) and University College விஞ்ஞானிகள் 2014 மார்ச் 4:இல் உடல் கொழுப்பில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனிதனில் காதுகள் மற்றும் மூக்கைமீண்டும் உருவாக்கும் வழிமுறைகளி கண்டுபிடித்துள்ளனர்.
  2. 6 மார்ச் 2014 அன்று உலகில் உள்ள அனைவருக்கும் பல் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில்உலக பல் மருத்துவர் தினம் அனுசரிக்கப்பட்டது.
  3. சமீபத்திய ஆய்வின் அடிப்படையில் புரதம் நிறைந்த உணவு நிறைய சாப்பிடுவது  புற்றுநோய் ஏற்ப்படும் காரணிகளை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர். இது நாள் ஒன்றுக்கு 20 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமம் ஆகும் என்று விஞானிகள் கூறுகின்றனர்.
  4. இந்தியா மற்றும் நேபால் ஆகிய நாடுகள் 2014 மார்ச் 6 முதல் இரண்டு வார இராணுவ பயற்சியை நேபாலில் உள்ளRupandehi மாவட்டத்தில் Saljhandi என்னும்  இடத்தில் தொடங்கியுள்ளது. “Ex-Surya Kiran Drills VI” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த கூட்டு பயற்சியை நேபால் இராணுவ மேஜர் ஜெனரல் விக்டர் SJB ராணா தொடங்கிவைத்தார்.
  5. வடக்கு தில்லி மாநகராட்சி 2014 மார்ச் 6 ஆம் தேதி பெண்களுக்கு என்று ஒரு புதிய சுகாதார திட்டம் “Stri Swasthya Suraksha Yojna” வை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் கிராமப்புற பகுதிகளில் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வாழும் மக்களுக்கு அரசின் சேவைகளை கொண்டு சென்று சேர்ப்பது ஆகும்.
  6. தமிழ்நாடு ஆண்கள் அணி மற்றும் ரயில்வே பெண்கள் அணி 5 மார்ச் 2014 அன்று கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் நடைபெற்ற XXVII பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டியில் பட்டங்களை வென்றனர்.
  7. மிகக்குறைந்த செலவில் வாழ்வதற்கு ஏற்ற பெருநகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. இப் பட்டியலில் டெல்லிக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (7 மார்ச் 2014)░░▒▓███
  1. சீனா 2014 மார்ச் 6 ஆம் நாள் இந்திய எல்லையில் உள்ள குஇன்காய்-திபெத் வரை தனது Xigaze ரயிலை நீட்டிக்கஅறிவித்துள்ளது.
  2. Center for the AIDS Program of Research (CAPRISA) யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி வைரஸ் கிருமியை அழிப்பது மற்றும் அதன் பெருக்கத்தை கட்டுபடுத்தக்கூடிய ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர்.
  3. ராகலே வெங்கட் ராகுல் 6 மார்ச் 2014 ஆம் தேதி அன்று நடைபெற்ற 16 ஆசிய இளைஞர் பளு தூக்குதல்சாம்பியன்ஷிப் இரண்டாவது நாள்  போட்டியில் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை வென்றார்.
  4. சீனா தனது இராணுவ தேவைக்கான செலவு தொகையை 12.2 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்த்தி உள்ளது.
  5. ரஷ்ய கூட்டமைப்புடன் இணைய உக்ரைனின் கிரிமியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களின் கருத்தை அறிய வரும் மார்ச் 16-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் கிரிமியா முடிவு செய்துள்ளது.
  6. உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு முறையை இந்திய கணினி நிபுணர் அனில் ஜெயின் கண்டுபிடித்துள்ளார். அவர் தற்போது மிக்ஸிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழு 3டி விரல்ரேகை பதிவு முறையை உருவாக்கியுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (8 மார்ச் 2014)░░▒▓███
  1. 7 மார்ச் 2014 அன்று சவுதி அரேபியா அரசு, Muslim Brotherhood, al-Nusra Front, Hezbollah and the Islamic State of Iraq and Syria (ISIS) jihadist ஆகிய முன்று குழுக்களை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்துள்ளது.
  2. இந்திய-அமெரிக்க பொறியாளர் ஆபிரகாம் பனிகோட், அமெரிக்க இராணுவத்திற்க்காக “ஜீரோ பிரஷர்” டயர்களை 7மார்ச் 2014 அன்று உருவாக்கியுள்ளார்..
  3. சர்வதேச மகளிர் தினம் 2014 மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  4. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசிய அரசுக்குச் சொந்தமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தென் சீனக் கடல் பகுதியில் விழுந்து மூழ்கியது.
  5. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பயிர்களை வணிக ரீதியில் சாகுபடி செய்ய அனுமதி தரப்படவில்லை என சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (9 மார்ச் 2014) ░░▒▓███
  1. Unique Identification Authority of India” வின் தலைவர “நந்தன் நிலேகனி” 9 மார்ச் 2014 அன்று பெங்களூரில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
  2. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்ட ஆறு நபர்களுக்கு “ஸ்திரீ சக்தி புரஸ்கார்” விருதை இந்திய ஜனாதிபதி அவர்கள் வழங்கினர்.
  3. மார்ச் 9 2014 அன்று நடைபெற்ற 68 வது  தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்  இறுதி போட்டியில் மிசோரம் அணி, ரயில்வே அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது  சந்தோஷ் டிராபியை வெற்றி பெற்றது.
4.   நாடாளுமன்றத்தில் அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தி இன்டர்-பார்லிமென்ட் யூனியன்” என்ற அமைப்பு சார்பில் உலக நாடுகளின் நாடாளுமன்றங் களில் அதிக பெண் உறுப்பினர் கள் கொண்ட நாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப் படுகிறது. நடப்பாண்டு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. ஆப் பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (10 மார்ச் 2014) ░░▒▓███
1.   அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நடந்தஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரிக்கும் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் குஷ் ஷர்மா வெற்றி பெற்றார்
2.   சீனாமார்ச் 92014 அன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பனிப்புகை எதிர்ப்பு ஆளில்லா விமானத்தை சோதனை செய்துப்பார்த்தது.
3.   இந்தியா 2013-14 ஆம் நிதியாண்டில் துபாயின் மிக பெரிய எண்ணெய் வணிகம் செய்யாத பங்குதாரராக விளங்குகிறது.
4.   ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதி மார்ஷல் முகமது காசிம் பாகிம் மார்ச் 92014 அன்று இறந்தார்.
5.   இந்திய எழுத்தாளர் பங்கஜ் மிஸ்ரா “விண்ட்ஹாம் காம்ப்பெல் இலக்கியம் பரிசு 2014 (Windham Campbell Literature Prize 2014)” யை வெற்றி பெற்றார்.
6.   விராத் கோஹ்லி 9 மார்ச் அன்று வெளியிடப்பட்டது சமீபத்திய ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையில் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
7.   உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் 9மார்ச் 2014 அன்று திறக்கப்பட்டது.


███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (11 மார்ச் 2014) ░░▒▓███
1.   எம்.பி. க்கள் மற்றும் எம்.எல்.ஏ. க்கள்  மீதான கிரிமினல் வழக்குகளை ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதன் கீழ் உள்ள நீடிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.   மத்திய அரசு 10 மார்ச் 2014 அன்று அடுத்த 20 ஆண்டுகளில் 200 குறைந்த செலவு விமான நிலையங்களை உருவாக்க அறிவித்துள்ளது. இது இரண்டாம் நிலை மற்றும் முன்றாம் நிலை நகரங்களை இணைக்கும் நடைவடிக்கை ஆகும்.
3.   கடந்த ஒரு வாரமகா மகாராஷ்டிரா மாநிலத்தில் பேயும் ஆலங்கட்டி புயலால் அந்த மாநிலத்தில் 11 லட்சம் ஹெக்டேரில் பயிர் செய்யப்பட்டிருந்த ரபி பருவ பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த சேதத்தின் மதிப்பு 5000 கோடி இருக்கும் என்று அம்மாநில விவசாய துறை கூறியுள்ளது.
4.   நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ10 மார்ச் 2014 அன்று வரும் 2017 க்குள் தேசிய கொடியை மற்ற வாக்கெடுப்பு நடத்த திட்டத்தை அறிவித்துள்ளார். தற்போது உள்ள தேசிய கோடி காலனி ஆட்சிகாலத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்று பல குடிமக்கள் கூறியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5.   உலக நீளமான விமானம் “Airlander” பிரிட்டனில் உள்ள CardingtonBedfordshire இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விமானம் “Hybrid Air Vehicles Ltd” என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
6.   இரண்டு ரஷியன் விண்வெளி வீரர் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர்  2014 மார்ச் 11 அன்று பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கஜகஸ்தானுக்கு பூமிக்கு திரும்பினர். அவர்கள் ஆறு மதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தனர்.
7.   டெல்லி முன்னால் முதல்வர் ஷீலா தீட்சித் அவர்களைகேரள ஆளுநராக திருவனந்தபுரத்தில் கேரள உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி டாக்டர் மஞ்சுளா செல்லூரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
8.   குவைத்டில் நடந்த 7 வது ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த “ஹீந சித்து” தங்க பதக்கத்தை வென்றார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (12 மார்ச் 2014) ░░▒▓███
1.   “மிசேல் பசிலேற்” அவர்கள் சிலியின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார்.
2.   நேபால் அரசு சுற்றுலாவை உயர்த்த தனியார் நிறுவனங்களுக்கு இமயமலை சிகரங்களையும் குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ளது.
3.   பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிக்க 11 மார்ச் 2014 அன்று “U & Me Against Dengue” என்ற பன்முக தேசிய பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
4.   ஐரோப்பிய ஆணைக்குழு உக்ரைன் 11 பில்லியன் யூரோ மதிப்புள்ள கடன் வழங்க அறிவித்துள்ளது.
5.   வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97 சதவீதம் வாக்குப் பதிவனது என்று அரசு செய்தி நிறுவனம் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளது.
6.   தொடர்ந்து மாதங்களாக ஏறுமுகம் கண்டு வந்த இந்திய ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய ஏற்றுமதி 3.67 சதவீதமாகக் குறைந்தது. பிப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட ஏற்றுமதி வருமானம் 2,568 கோடி டாலராகும். அதே சமயம் தங்கம் இறக்குமதி செய்வது குறைந்ததால் ஏற்றுமதி-இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (13 மார்ச் 2014) ░░▒▓███
1.   ஐபிஎல் 2014 போட்டிகள் யூஏஈபங்களாதேஷ் மற்றும் இந்தியாவில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு தர முடியாது என்று கூறியதன் விளைவாக இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
2.   சோம மோன்டல் (Soma Mondal) மார்ச் 12, 2014 அன்று தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் (National Aluminum Company Ltd (NALCO)) இன் வர்த்தக பிரிவின் முதல் பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
3.   நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலத்தில் இந்தியாவில் முதல் முறையாக பிளாஸ்டிக் புகைப்பட தேர்தலில் அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கின்றன
4.   அலாஸ்காவில் கண்டுஎடுக்கப்பட்ட 70 மில்லியன் வயதான படிமத்தை ஆராச்சி செய்த விஞ்ஞானிகள் அது புதிய வகை டைனோசர் இனம் என்றும் மற்றும் டி-ரெக்ஸ் வகை டைனோசர்க்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
5.   உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை அன்று (மார்ச் 13, 2014) ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டது. 2014 உலக சிறுநீரக தினத்தின் கருப்பொருள் (theme) “Chronic Kidney Disease (CKD) and aging” ஆகும்.
6.   வேட்பாளர்கள் தரப்பில் செய்யப்படும் செலவுகளை கண்காணிக்கும் பணியில் 700 இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
7.   மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் இரண்டு மணி நேரம் (அதாவது 11 மணி நேரம் நடைபெறும்) அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
8.   முன்னாள் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (14 மார்ச் 2014) ░░▒▓███
  1. 13 மார்ச் 2014 அன்று பாங்காங்கில் நடைபெற்ற 1 வது ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் வில்வித்தை சாம்பியன்ஷி போட்டியில் அணி நிகழ்வுகளில் இந்திய வில்வித்தை வீரர்கள் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர்.
  2. பல வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வகையில் இயற்றப்பட்ட புதிய தேர்தல் சட்டத்துக்கு சிரியா பாராளுமன்றம் ஒருமனதாக அனுமதி வழங்கியுள்ளது.
  3. இந்திய ரிசர்வ் வங்கி வணிகம் தொடர்பான பணம் பரிவர்த்தனையை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
  4. நந்தன் நிலேகனிஇந்திய தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையம் தலைவர் பதவியிலிருந்து 13 மார்ச் 2014 அன்று விலகினார். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
  5. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க வலியுறுத்திஉச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்கும்படிதேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
  6. அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (15 மார்ச் 2014) ░░▒▓███
  1. ஆராய்ச்சியாளர்கள் சூரிய விட்டத்தை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். HR 5171Aஎன்று பெயரிடப்பட்டுள்ள அந்த நட்சித்திரம் 12000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதன் புகைபடத்தை மார்ச் 12, 2014  அன்று வெளியிட்டனர்.
  2. ஐஓசி தனது 10% பங்கான 5340 கோடி ரூபாயை “oil India limited” மற்றும் ஓஎன்ஜிசி விற்பனை செய்துள்ளது.
  3. 2014 மார்ச் 14 அன்று சச்சின் டெண்டுல்கர் தலைமுறை கிரிக்கெட் வீரர் என ESPNCricinfo வழங்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  4. என்டிபிசி ஜார்க்கண்டில் உள்ள அதன் கரன்புரா அனல் மின் திட்டத்திற்கு 14366,58 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
  5. 6-வது மக்களவைக்கான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.
  6. உலகின் முதல் சூரிய சக்தி கழிவறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக் கழிவறை வரும் 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
  7. நாட்டின் பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.68 சதவீதமாகக் குறைந்தது. கடந்த மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (16 மார்ச் 2014) ░░▒▓███
  1. ஐசிசி உலக டி20 உலக கோப்பை போட்டிகள் பங்களாதேஷில் மார்ச் 16, 2014 அன்று தொடங்கியது. இது வது டுவென்டி -20 உலக கோப்பை கிரிக்கெட் ஆகும்.
  2. இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI), பிப்ரவரி 2014 இல் 8.10% ஆக குறைந்துள்ளது.
  3. இந்தியா அரசு தனது 11 வது ஐந்தாண்டு திட்டத்தின் படிரூபாய் 4500 கோடியை பூட்டான் நாட்டுக்கு உதவி தொகையாக கொடுத்துள்ளது. இது பூட்டான் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க உதவியாக இருக்கும்.
  4. திருமதி மிசேல் பசிலேற் (62) இரண்டாவது முறையாக சிலி ஜனாதிபதி பதவியேற்றார்.
  5. டேம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்கொடிய வகை பாக்டீரியாக்களை அழிக்கும் ஒரு புதிய வகை ஆண்டிபயாடிக், "Oxadiazoles", யை உருவாக்கியுள்ளனர்.
  6. நான்காம் காலாண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி. ரங்கராஜன் தெரிவித்தார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (17 மார்ச் 2014) ░░▒▓██
  1. ஸ்பானிஷ் நாட்டின் கேபிள் நிறுவனமான “ஓனோ” வை  10 பில்லியன் டாலற்கு வோடபோன் நிறுவனம் வங்கியுள்ளது.
  2. NMPT (மங்களூர் துறைமுகத்தின்) புதிய தலைவராக “P.C.பரிதா” அவர்கள் மார்ச் 15 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்க்கு முன்பு அவர் ஜனவரி 2011 முதல் சென்னை துறைமுகத்தின் துணை தலைவராக செயல்பட்டு வந்தார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (18 மார்ச் 2014) ░░▒▓██
  1. உலக தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஜோகோவிக் 16 மார்ச் 2014 அன்று கலிபோர்னியாவில் நடைபெற்ற இந்தியனா வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் இறுதி போட்டியில் ரோஜர் பெடரரை விழ்த்தி வெற்றிபெற்றார்.
  2. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்17 மார்ச் 2014 அன்று கிரிமியாவை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.
  3. இந்தியா 2014 ஆம் ஆண்டிற்க்கான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தின் அந்தஸ்துக்கு படானாவில் உள்ள ராணி-கீ-வாவ்குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் உள்ள  “கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்” (GHNP)ஆகியவையை பரிந்துரை செய்துள்ளது.
  4. 2014 மார்ச் 17 ம் தேதி அன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) 15 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட 30000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுத்திகரிப்பு நிலையத்தை குஜராத்தில் உள்ள முந்திராவில் அமைக்க அறிவிப்பை வெளிட்டுள்ளது.
  5. 17 மார்ச் 2014 அன்று வெளியிடப்பட்டது சர்வதேச ஆயுத கொள்முதல் தரவரிசியில் பாக்கிஸ்தான் மற்றும் சீனாவை விட மூன்று மடங்கு அதிகமாக இந்தியா இறக்குமதி செய்கின்றது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையை வெளிட்டுள்ளது.
  6. 17 மார்ச் 2014 அன்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (MIT) மாணவர் “Andrew Marchese” மீன் போன்று நீந்தக்கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (19 மார்ச் 2014) ░░▒▓██
  1. மைக்ரோசாப்ட் வெளியிட்டது அறிக்கையில் தீங்கிழைக்கும் ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  2. உக்ரைனின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கிரிமியா நிலப்பகுதியில் உள்ள உக்ரைன் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை திரும்ப பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
  3. இந்திய நிலக்கரி நிறுவனம்(Coal India) தொழில்நுட்பம் அல்லாத பணியில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு பெரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (20 மார்ச் 2014) ░░▒▓██
  1. R.S.சர்மாஜார்க்கண்ட் அரசு தலைமை செயலாளர் அவர்களால் ராஞ்சியில் செபியின் (SEBI) உள்ளூர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
  2. 2014 மார்ச் 19 ம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஐந்து தனியார் வங்கிகளுக்குதங்கம் இறக்குமதி செய்வதற்க்கான 80:20 என்ற திட்டத்தை நீட்டித்துள்ளது.
  3. மலேரியா ஒட்டுண்ணிகலை கொல்லக்கூடிய HSP90 என்ற ஒரு புதிய மூலக்கூறை ஜெனீவா பல்கலைக்கழகத்த்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  4. விலங்குகளுக்கு பொருத்தக்கூடிய செயற்கை இதயத்தை Ali Khademhosseini தலைமையில் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
  5. “அதிதி கன்னா” லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் முதல் பெண்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (21 மார்ச் 2014) ░░▒▓██
  1. 2014 மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) நான்கு 15 நிமிட பகுதிகளில் உள்ளடக்கிய60 நிமிட புதிய வகை ஹாக்கி விளையாட்டை அறிமுகம் செய்துள்ளது.
  2. டாக்டர் கே.சி. சக்ரவர்த்தியின்இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் 2014 மார்ச் 20 இல் பதவி விலகினார். தனது பதவி காலம் முடிவதற்கும் முன்று மாதம் இருக்கும் நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
  3. மின்வணிக நிறுவனமான ibibo Group பெங்களூர் சார்ந்த பேருந்துகளை கண்காணிக்க “YourBus.in” என்ற சேவையை தொடங்கியுள்ளது.
  4. சிரியாவில் படுக்கிவைக்கப்பட்டுள்ள இரசாயன ஆயுதங்கள் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு நீக்கப்பட்டது என்று OPCWஅறிவித்ததுள்ளது.
  5. தென் ஆப்பிரிக்க அரசு பள்ளிகளில் கர்ப்பிக்கப்படும்  அதிகாரபூர்வமான பாடங்களாக ஐந்து இந்திய மொழிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து இந்திய மொழிகளில் தமிழ், இந்தி, குஜராத்திதெலுங்குஉருது ஆகிய மொழிகள் இருக்கின்றன.
  6. சர்வதேச வன தின நாள் 2014 மார்ச் 21 ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சர்வதேச வன தினத்தின் கருப்பொருள் “Celebrating Forests for Sustainable Development” ஆகும்.
  7. உலக கவிதைகள் நாள் 2014 மார்ச் 21 அன்று அனுசரிக்கப்பட்டது. இது 1999 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ 30 ஆவது மாநாட்டில் மார்ச் 21 ஆம் தேதி உலக கவிதைகள் நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  8. இந்திய பத்திரிகையாளர் Shubhranshu Choudhary அவரகளுக்கு பிராந்திய செய்தி சேவைக்காக 20 மார்ச் 2014 அன்று “டிஜிட்டல் செயல் விருது” வழங்கப்பட்டது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (22 மார்ச் 2014) ░░▒▓██
  1. இயற்பியலாளர் ராஜேஷ் கோப்குமார் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான அறிவியல் ஆராய்ச்சிக்காக பிர்லா அறக்கட்டளை வழங்கும் ஜி.டி. பிர்லா விருது வழங்கப்பட்டது.
  2. இந்திய அரசு 2014 மார்ச் 21  அன்று ஆக்ஸிஸ் வங்கியில் உள்ள அதன் 9 சதவீதம் பங்குகளை அகற்றிக்கொண்டது.
  3. உலக தண்ணீர் தினம் 2014 மார்ச் 22 அன்று அனுசரிக்கப்பட்டது
  4. பிக் ஹோஸ்உலகின் மிக பெரிய தொலைக்காட்சி2014 மார்ச் 21 ஆம் தேதி  ஃபோர்ட் வொர்த்அமெரிக்கவில் நடைபெற்ற டெக்சாஸ் மோட்டார் ஸ்பீட்வே முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (24 மார்ச் 2014) ░░▒▓██
  1. ஆண்டி மரினோ எழுதிய நரேந்திர மோடி சுயசரிதை 2014 மார்ச் 24 அன்று வெளியிடப்பட்டது.
  2. கிரேட்டர் நொய்டாவில் புத்த சர்வதேச சர்க்யூட் நடைபெற்ற டாடா, T1 பிரைமா டிரக் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில் Castrol Vecton அணியை சேர்ந்த  ஸ்டுவர்ட் ஆலிவர் வெற்றிபெற்றார்.
  3. அடோல்ஃபோ சுவாரசின்ஸ்பெயின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் 2014 மார்ச் 23 அன்று இறந்தார்.
  4. அசாம் அரசு தந்தத்திற்காக காண்டாமிருகங்கள் கொல்லப்பாடுவதை தடுக்க அதன் தந்தத்தின் அளவை குறைப்பது (trimming) குறித்து மக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (25 மார்ச் 2014) ░░▒▓██
  1. இந்தி எழுத்தாளர் கோவிந்த் மிஸ்ரா அவர்கள் சரஸ்வதி சம்மான் 2013 ஆம் ஆண்டிற்க்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  2. குடிமக்கள் அரசாங்க சேவைகளை பெற ஆதார் அட்டையை கட்டாயம் பெறவேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்ட அணையை திரும்ப பெற வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
  3. இலாப நோக்கற்ற குழுவான வந்தனா அறக்கட்டளை மும்பையில் AQUATM யை தொடங்கியது. AQUATM என்பது தண்ணீர் வழங்கும் இயந்திரம் ஆகும். இந்த தண்ணீர் வழங்கும் இயந்திரம் 1 ரூபாய் விலையில் 1 லிட்டர் தண்ணீர் வழங்கும்.
  4. 2014 மார்ச் 24 ம் தேதி இந்திய வங்கி மும்பையில் உடனடி பணம் பரிமாற்ற (IMT) திட்டம் தொடங்கி உள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (26 மார்ச் 2014) ░░▒▓██
  1. இந்திய துப்பாக்கி தொழிற்சாலை “Nirbheek” என்ற எடைகுறைந்த துப்பாக்கி அறிமுகப்படுத்தியது. இது பெண்கள் தங்களுக்கு ஏற்ப்படும் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது.
  2. மூன்றாவது தேசிய புகைப்படம் எடுத்தல் விருதுகள் வழங்கும் விழா புது தில்லி நடைபெற்றது. இதில் 13 சிறந்த புகைப்பட கலைஞர்களுக்கு இதில் விருது வழங்கப்பட்டது. இந்தியா தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் இந்த விருதை வழங்கினர்.
  3. மூன்றாவது அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாடு 24 மற்றும் 25 மார்ச் 2014 ஆகிய  தேதிகளில் ஹேக்நெதர்லாந்தில் நடைபெற்றது.
  4. இந்தியா நொய்டாவில் 26 மார்ச் 2014 அன்று நடைபெற்ற 3 வது தெற்காசிய எறிபந்தாட்டம் போட்டியில் பாக்கிஸ்தானை தோற்கடித்தது இந்திய வெற்றிபெற்றது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (27 மார்ச் 2014) ░░▒▓██
  1. ஆராய்ச்சியாளர் கே ராமகிருஷ்ணா ரெட்டி அவர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள அக்கம்பல்லியில் பண்டைய மனிதர்கள் வாழ்ந்த குகைகளை கண்டுபிடித்துள்ளார்.
  2. WHO மற்றும் இந்திய அரசு இனைந்து அழிவில் விளிம்பில் உள்ள காண்டாமிருகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க IRV2020 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  3. காற்று மாசுபாடுவதன் காரணமாக உலகத்தில் 2012 ஆம் ஆண்டில் 7 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர என்று WHOகணக்கிட்டுள்ளது.
  4. Indian Computer Emergency Response Team (CERT-In) 26 மார்ச் 2014 அன்று Dendroid என்ற ஸ்மார்ட்போன் வைரஸ் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (28 மார்ச் 2014) ░░▒▓██
  1. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டியோடார் டிராபி கிரிக்கெட் போட்டி-2014 இல் மேற்கு மண்டலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் வடக்கு மண்டலத்தை தோற்கடித்தது வெற்றிபெற்றது.
  2. இந்திய வம்சாவளியை சேர்ந்த கோபால் ராவ் 27 மார்ச் 2014 அன்று இங்கிலாந்து ட்விட்டர் பரிசு பெற்றார்
  3. WHO போலியோ இல்லா நாடு என்று இந்தியாவிற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. தென் கிழக்கு பகுதியில் உள்ள போலியோ இல்லா 11 நாடுகளில்  இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  4. உச்ச நீதிமன்றம் Manual Scavengers Act (மனிதனின் கழிவுகளை மனிதன் அகற்றும் தடை சட்டம்) யை செயல்படுத்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.
  5. இந்திய நறுமண பொருட்கள் ஏற்றுமதியில்டிசம்பர் 2013 இல் இருந்து ஏப்ரல்  மாதம் வரை 41 சதவீதம் அதிகரித்துள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (29 மார்ச் 2014) ░░▒▓██
  1. Jens Stoltenberg அவர்கள் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்வதன் முலம் குறை பிரசவம் 10 சதவீதம் அளவிற்கும் குறையும் என்று ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. சுனில் கவாஸ்கர் அவர்களை உச்ச நீதிமன்றம் 2014 மார்ச் 28 ஆம் தேதி பிசிசிஐயின் இடைக்கால தலைவராக நியமித்துள்ளது.
  4. வானியல் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வளையங்கள் கொண்ட முதல் சிறிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். “Charkilo” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த கிரகம் சனி மற்றும் யுரேனஸ் கோள்களுக்கு இடையே உள்ளது.
███▓▒░░நடப்பு நிகழ்வுகள் (31 மார்ச் 2014) ░░▒▓██
  1. உலக அளவில் தரவரிசியில் இரண்டாம் இடத்தில் உள்ள துப்பாக்கி சுடும்  வீராங்கனை ஹீனா சித்து அமெரிக்காவில் நடைபெற்ற ISSF உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.
  2. இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) , தில்லியை சேர்ந்த அம்பர் ஸ்ரீவஸ்தவா  அவர்கள் ஹீமோகுளோபின் அளவை சோதிக்க TrueHb Hemometer என்ற கருவியை உருவாக்கியுள்ளார்.
  3. எர்த் ஹவர் உலகம் முழுவதும் 29 மார்ச் 2014 அன்று அனுசரிக்கப்பட்டது.
  4. 2014 மார்ச் 30 ஆம் தேதி அன்று சிகாகோ பல்கலைக்கழத்தின் கல்வி சார்ந்த மையம் தில்லியில் திறக்கப்பட்டது.
  5. சர்வதேச நாணய நிதியம்அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய 18 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கடன் வழங்க ஒப்பு கொண்டார்.
  6. லூயிஸ் ஹாமில்டன் மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றார்.
  7. ஜோகோவிக் 30 மார்ச் 2014 அன்று நடாலை தோற்கடித்து தனது நான்காவது மியாமி மாஸ்டர்ஸ் பட்டத்தை வெற்றி பெற்றார்.
  8. பி.எச்.இ. எல் உத்தரகண்ட்ல் 125 கோடி ரூபாய் மதிப்புள்ள நீர்மின் சக்தி திட்டத்துக்காண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....