My Twitter Favorites


Don’t wait. The time will never be just right...

Monday, September 22, 2014

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் - 2013

நடப்பு நிகழ்வுகள் (1 டிசம்பர்)

1.       திரிபுரா மாநில தேர்தலில் நாட்டில் முதல் முறையாக “பிவிசி தேர்தல் புகைப்பட அடையாள அட்டைகள்” (PVC Electoral Photo Identity Cardஅறிமுகப்படுத்தப்பட்டது. 
2.       போர்த்துகீசிய படமான 'Beatriz's War” IFFI 2013 இல் “கோல்டன் பீகாக் விருது”( Golden Peacock Award) பெற்றது
3.       எச்ஐ வி / எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்த டிசம்பர் 1, 2013 அன்று உலக எய்ட்ஸ் தினம்(World AIDS Day) அனுசரிக்கப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் (2 டிசம்பர்)

1.       ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையில் இந்தியா முதல் இடத்தை பிடித்தது.

2.       சீனா சாங்கி-3 என்ற ஆளில்லா விண்கலத்தை சந்தரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவியது.

3.       எகிப்து நடிர்க்கான புதிய அரசியலமைப்பை “எகிப்தின் அரசியலமைப்பு குழு ஒப்புதல் வழங்கியது.

4.       அடிமை முறை ஒழிக்கப்பட்டு சர்வதேச தினமாக(International Day for Abolition of Slavery) டிசம்பர் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

5.       இந்தியாவை சேர்ந்த பிவி சிந்து “மகாவ் ஓபன் பேட்மிண்டன்”(Macau Open Badminton) ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.

நடப்பு நிகழ்வுகள் (3 டிசம்பர்)

1.       3 டிசம்பர் 2013 அன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2013 ஆம் ஆண்டுக்கான எல்ஜிசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி,)இன் “பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதை”( People’s Choice Award) வென்றார் சச்சின்க்கு அடுத்த படியாக இந்த விருதை பெரும் இரண்டாவது வீரர் தோனி  ஆனார்.

2.       இந்தியா 3 டிசம்பர் 2013 அன்று பிரித்வி-II ஏவுகணையை ஒடிசா , பலசோர் (Balasore) மாவட்டத்தில் உள்ள “சாந்திப்பூர்” (Chandipur)  இல் இருந்து  வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

3.       இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit2013-14ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 52 பில்லியன் டாலர்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவிகிதம் குறைந்தது.

4.       எத்தியோப்பியாவை சேர்ந்த மராத்தான் வீரர்கள் 2013 டிசம்பர் 1 ம் தேதி  புனேவில் நடைபெற்ற 28’வது புனே சர்வதேச மராத்தான் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் வெற்றிபெற்றனர்.

5.       அஞ்சல் துறை(Department of Posts), 2 டிசம்பர் 2013 அன்று “எக்ஸ்பிரஸ் பார்சல் சேவை” (Express Parcel service) மற்றும் “வர்த்தக பார்சல் சேவைகள்” (Business Parcel Services) ஆகிய இரண்டையும் தொடங்கி வைத்து.

நடப்பு நிகழ்வுகள் (4 டிசம்பர்)

1.       உலக ஊழல் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது.
2.       தபோல் முதல் பெங்களூரு வரையில் கெயில் இந்தியா லிமிடெட் ஆல் 1000 கிமீ க்கு பதிக்கப்பட்ட எரிவாயு குழாயை பிரதமர் நாட்டிக்கு அற்பனித்தார்.
3.       பீகார் அரசு மாவோயிஸ்டுகலுக்காக  புதிய சரணடைய மற்றும் புனர்வாழ்வு கொள்கையை அறிவித்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (5 டிசம்பர்)

1.   பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC4 டிசம்பர் 2013 அன்று வரும் 2014 ஆம் ஆண்டு தற்போது நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யும் எண்ணெய் அளவு (30 மில்லியன் பீப்பாய்கள்) உற்பத்தி செய்ய முடிவு செய்து உள்ளன.

2.   ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் சமீபத்தில் கொடிய கொசுக்களால் பரவும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

3.   வரும் 2014 ஆம் ஆண்டு நடைபெறயுள்ளது FIFA  கால்பந்து உலக கோப்பையில் பயன்படுத்தப்படும் பந்தை அடிடாஸ் நிறுவனம் 3 டிசம்பர் 2013 அன்று ரியோ டி ஜெனிரோ, பிரேசில் வெளியிட்டது அந்த பந்திற்கு புருஸ்கா (Brazuca) என்று பெயர் வைத்து உள்ளனர்.


நடப்பு நிகழ்வுகள் (6 டிசம்பர்)

1.       8 ஆசியா எரிவாயு பங்குடமை மாநாடு(Asia Gas Partnership SummitAGPSபுது தில்லியில் டிசம்பர் 3 மற்றும் 4தேதிகளில் நடைபெற்றது.

2.       சுஷ்மா சிங் அடுத்த தலைமை தகவல் ஆணையரக (Chief Information Commissioner) நியமிக்கப்பட்டுள்ளார்.

3.       தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, 95 ஆவது வயதில் டிசம்பர் 6, 2013 அன்றுஇறந்தார்.

4.   சல்வடோர் டி பாஹியா, பிரேசிலில் நடைபெற்ற FIFA நிர்வாக குழு கூட்டத்தில் வரும் 2017 ஆம் ஆண்டு நடிபெருள்ள 17 வயது கீழ் உள்ளவர்களுக்கான FIFA உலக கோப்பையை இந்தியாவில் நடத்த தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (7 டிசம்பர்)

1.       சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து தினம் உலகம் முழுவதும் டிசம்பர் 2013 7 அன்று அனுசரிக்கப்பட்டது.

2.       இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஏடிஎம் பயன்படுட்டுவதர்க்கான கட்டணமாக மாதத்திற்கு ரூ 6உயர்த்த முடவு செய்யப்பட்டு உள்ளன.

3.       ஐநா பாதுகாப்பு குழுவிற்கு நிரந்தரம் இல்லாத உறுப்பினராக ஜோர்டான் நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

4.       அஹ்மத் உசுமகு (Ahmet Uzumcu ) OPCW யின் டைரக்டர் ஜெனரலாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

5.       9வது உலக வணிக அமைப்பு மாநாடு பாலிஇந்தோனேஷியாவில் நடந்து முடிந்தது.

நடப்பு நிகழ்வுகள் (8 டிசம்பர்)

1.       மிஸ் வெனிசுலா, Alyz Henrich மிஸ் எர்த் 2013 ஆக தேர்ந்துதெடுக்கப்பட்டார்.

2.       அலி ஒஸ்மான் தாஹா சூடான் துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

3.       ஆயுதப்படைகளின் கொடி நாள், நாடு முழுவதும் அனுசர்க்கப்பட்டது.

4.   டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் அகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்லியை தவிர மற்ற மூன்று மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை அமைக்கிறது.

நடப்பு நிகழ்வுகள் (9 டிசம்பர்)

1.       பெங்களூருவில் நடைபெற்ற 29 ஜூனியர் இளைஞர் தேசிய சாம்பியன்ஷிப் (Junior Youth National Championship)போட்டியில் கேரளா முதல் இடத்தை படித்தது.

2.       ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் 400000 வயதான ஒரு மனித எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட பழைய டிஎன்ஏ வை டிகோடெட் செய்து உள்ளனர்.

3.       சர்வதேச ஊழல் தடுப்பு தினம் (Anti-Corruption Day) டிசம்பர் 9 ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

4.       தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சி யை தில்லியின் மாநில கட்சியாக அங்கீகரித்தது.

5.       அடுத்த மூன்று வருடங்களுக்கான இந்திய அணியின் ஸ்பான்சர் உரிமையை ஸ்டார் இந்தியா பிரைவட் லிமிடட் பெற்றுள்ளது சஹாரா நிறுவனத்தின் கோரிக்கையை தகுதியற்றது என பிசிசிஐ நிராகரித்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (10 டிசம்பர்)

1.       ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷி போட்டியில் சித்ரா வெண்கலம் வென்றார்.

2.       மத்திய அமைச்சரவை குழு வெள்ளத்தில் பதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்துக்கு 7346 கோடி ரூபாய் வழங்கஒப்புதல் வழங்கியது.

3.       மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

4.       இந்தியாவின் முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் “ரஞ்சன் மாதாய்” (Ranjan Mathai இங்கிலாந்துக்கான, இந்திய உயர் ஆணையராக(High Commissioner) பதவியேற்றார்.

5.       பெப்சிகோ இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

6.       சிகப்பு விளக்கு (red beacon) பொருத்திய வண்டிகளை அரசியல் துறை சம்பந்தமானவர்கள் மற்றும் உயர் அதிகரிகள் மற்றும் பயன்படுத்தவண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

7.       மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உத்தரப்பிரதேசம் மொத்த ஏற்றுமதியில் 40% அளவு ஏற்றுமதி செய்கிறது.

8.       ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க கொடுக்கும் அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு  நீண்ட கால ஒத்துழைப்பு உடன்படுக்கையில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன.

நடப்பு நிகழ்வுகள் (11 டிசம்பர்)

1.       இந்திய முழுவதும் புதிதாக 22 சிபிஐ நீதிமன்றங்களை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 மாதம் காலக்கெடு விதித்துள்ளது.

2.       விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு 2013 ஆம் ஆண்டுக்கான “எகனாமிக் டைம்ஸ்யின் வாழ்நாள் சாதனையாளர் விருது(Economic Times Lifetime Achievement Award வழங்கப்பட்டது.

3.       அமெரிக்க யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா அடியில் உள்ள சூப்பர் எரிமலை முந்தைய மதிப்பீடுகள் விட 25மடங்கு பெரியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

4.       27 வது தென் கிழக்கு ஆசிய விளையாட்டு  போட்டிகள் டிசம்பர் 112013 அன்று மியான்மாரின் புதிய தலைநகரானநைப்யிடவ் (Naypyidaw, தொடங்கியது.

5.       மைசூரின் கடைசி ஆட்சியாளர் ஸ்ரீகாந்ததத்த நரசிம்மராஜா உடையார் உயிர் இறந்தார்.

6.       பண்ருட்டி ராமச்சந்திரன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

7.       இந்தியா ஏற்றுமதி நவம்பர் 2013 ல் 586 சதவிதமாக வளர்ந்துள்ளது மற்றும் இருக்குமதி 163 சதவீதம் என்ற அளவு சரிந்துள்ளது.

8.       ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக்காக சேர்ந்து பனியாற்றுள்ளன.

9.       CO2 ஐ விட 7000 மடங்கு சக்தி பசுமை இல்ல வாயுவை டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

10.   இந்தியாவில் ஓரின சேர்க்கையை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (12 டிசம்பர்)

1.       ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் Unbreakable was unveiled என்ற சுயசரிதைநாவலை வெளிட்டார்.

2.       சோச்சி (Sochi)ரஷ்யாவில் 2014 ஆம் ஆண்டு நடைபெறயுள்ள குளிர்கால ஒலிம்பிக் இல் இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் குழு அனுமதி வழங்கியது.

3.       இஸ்ரேல்ஜோர்டான், பாலஸ்தீனிய நாடுகள் செங்கடல்(Red Sea) முதல் டெட் கடல்(Dead Sea) உள்ள நீரை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டன.

4.       அண்டார்டிகா வில் இதுவரை பூமியின் பதிவாகத குளிரான வெப்பநிலை -947C பதிவானதை நாசா வின் செயற்கைக்கோள் முலம் கண்டுபிடிக்கப்பட்டது.

5.      இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி சிங்வி (GS Singhvi டிசம்பர், 11 2013 அன்று ஓய்வு பெற்றார்.

நடப்பு நிகழ்வுகள் (13 டிசம்பர்)

1.       கிழக்கு பகுதியின் இராணுவ தளபதியான உள்ள லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்(Dalbir Singh Suhag), இந்திய இராணுவத்தின் துணை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர் டிசம்பர் 312013 அன்று பதவி ஏற்றுக்கொள்கிறார்.

2.       Scientists created the biological robots or biobots powered by sperm in the Institute for Integrative Nanosciences in Dresden, Germany.

3.       இந்தியா,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுடன் இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துக்கொண்டது.

4.       பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பின்தங்கியா பகுதிகளுக்கான மானிய நிதிக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு(Cabinet Committee on Economic Affairs) ஒப்புதல் அளித்துள்ளது.

5.       பங்களாதேஷ் நாட்டை சார்ந்த அப்துல் காதர் முல்லா 22:01 உள்ளூர் நேரப்படி டாக்கா மத்திய சிறைச்சாலையில்டிசம்பர் 122013 அன்று தூக்கிலிடப்பட்டார்.


நடப்பு நிகழ்வுகள் (14 டிசம்பர்)

1.       ஈரான் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்வெளிக்கு இரண்டாவது முறையாக குரங்கை அனுப்பி மற்றும் அதனை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

2.       மும்பை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் கிருஷ்ணா ஐயர், வால் மார்ட் இந்தியவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.       துக்ளகாபாத் இல் நடந்த 57 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மல்லிகா மற்றும் பிரகாஷ்ஆகியோர் தங்க பதக்கங்களை வென்றனர்.

4.       மத்திய அமைச்சரவை 12, டிசம்பர் 2013  ஆம் தேதி மாற்றுத்திறனளிகளுக்கான உரிமைகள் மசோதா- 2011(Rights of Persons with Disabilities Bill, 2011) வுக்கு ஒப்புதல் வழங்கியது.

5.       முசாபர்நகர் கலவரங்கள் நடந்த பின்னர் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் இறந்த குழந்தைகள் பற்றி விசாரணை செய்ய உபி அரசு உயர் மட்ட குழு ஒன்றை அமைத்தது.

6.       ஐசிசி வழங்கும் “இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்” விருதை புஜாரா வென்றார்.

நடப்பு நிகழ்வுகள் (15 டிசம்பர்)

1.       இந்தியா குரு நானக் தேவ் மைதானத்தில் லூதியானா, பஞ்சாப் இல் கபடி உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானை 48-39 என்று தோற்கடித்து கோப்பையை வென்றது.

2.       சீனாவின் முதல் சந்திர விண்கலம் நிலவில் தரையிறங்கியது.

3.       இர்ஃபான் கான், “துபாய் சர்வதேச திரைப்பட விழாவில்” சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

4.       சிஸ் ராம் ஓலா, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் உடல்நல குறைவினால் குர்கான்ஹரியானாவில் இறந்தார்.

நடப்பு நிகழ்வுகள் (16 டிசம்பர்)

1.       1971 போரில் பாக்கிஸ்தான் மீது இந்தியா இராணுவ வெற்றியை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் 2013 டிசம்பர் 16 அன்று விஜய் திவாஸ் (Vijay Diwas) அனுசரிக்கப்பட்டது.

2.       ஹர்ஷ் குமார் பஹன்வால (Harsh Kumar Bhanwala ), நபார்டு வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

3.       சீனப்படைகள் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (LACசேர்த்து சம்பர் (Chumar) பகுதியில்ஐந்து இந்திய எல்லை காவலர்களை தடுத்து நிறுத்தினர்.

4.       நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து இருந்த 'ஒற்றுமை ஓட்டம்(Run for Unity ) நடைபெற்றது.

5.       CVR ராஜேந்திரன் டிசம்பர், 13 2013 அன்று ஆந்திர வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

6.       ஜெர்மனி ஆண்கள் ஹாக்கி அணி ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை 2013 யை வென்றது.

நடப்பு நிகழ்வுகள் (17 டிசம்பர்)

1.       டிசம்பர் 16, 2013  அன்று மத்திய அமைச்சரவை குழு இனவாத வன்முறை தடுப்பு மசோதா 2013 வுக்கு ஒப்புதல் வழங்கியது.

2.       தவறான முறையில் பந்துவீச்சிய ஷேன் ஷில்லிங்போர்ட்யை (Shane Shillingford) ஐசிசி சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

3.       சிலி ஜனாதிபதி தேர்தலில் மிசேல் பசிலேற் (Michelle Bachelet ) வெற்றிபெற்றார்.

4.       தில்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் பரிந்துரைத்துள்ளார்.

5.       இந்திய ஸ்குவாஷ் வீரர் மகேஷ் மன்கோங்கர் (Mahesh Mangaonkar) டிசம்பர் 2013 16 ம் தேதி சுலோவாக்கிய (Slovakian) தலைநகர் பிராடிஸ்லாவாவில் (Bratislava) நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றார்.

நடப்பு நிகழ்வுகள் (18 டிசம்பர்)

1.       சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப்பட்டது.

2.       2013 ஆம் ஆண்டு சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு  இந்திய அணியில் முன்னால்அணித்தலைவர் கபில் தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

3.       உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாலஸ்லேமியா சோதனை கருவியை இம்முனோ புற்றுநோய் தேசிய நிறுவனத்துடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இனைந்து வெளியிட்டது.

4.       பாராளுமன்றத்தில் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு வலுவான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தவை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

5.       ராண் உற்சவம், குஜராத் மாநிலத்தில் ஒரு கலாச்சார திருவிழா- கட்ச்யில்(Kutch)  தொடங்கியது.

6.       தென் இந்தியாவின் 1st உயரமான கிரிக்கெட் ஸ்டேடியம் வயநாடு, கேரளாவில் தொடங்கப்பட்டது.

7.       ஜப்பான் அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு துறை செலவை 5அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

8.       மார்த்தாண்ட வர்மா, திருவாங்கூர் அரச குடும்பத்தின் தலைவர் 92 வயதில் காலமானார்.

9.       மொத்த பணவீக்க நவம்பர் 2013 ல் 752 சதவீதமாக அதிகரித்துள்ளது.

10.   அங்கேலா மேர்க்கெல்(Angela Merkel) மூன்றாவது முறையாக ஜெர்மனின் Secretary) வேந்தர்ராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பு நிகழ்வுகள் (19 டிசம்பர்)

1.       இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஆன பண பரிமாற்று ஒப்பந்தம் 15 பில்லியன் டாலர்களில் இருந்து 50பில்லியன் டாலர் என்று அதிகரித்துள்ளது.

2.       பிரெஞ்சு நாட்டை சார்ந்த அல்ஸ்ட்ரோம்(Alstom) நிறுவனம்,  பிஹெச்இஎல் நிறுவனத்துடன் 125 மில்லியன் யூரோமதிப்புக்குரிய பாகங்கள் மற்றும் சேவைகளை 1000 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி புதிய அனல் மின்சார திட்டத்துக்கு வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளது.

3.       தேவயாணி கோப்ரகாடே, ஐக்கிய நாடுகளுடைய இந்தியாவின் நிரந்தர  உறுப்பினராக மாற்றப்பட்டார்.

4.       இந்தியாஆசிய பசிபிக் ஜூனியர் கோல்ப் சாம்பியன்ஷிப் முதல்முறையாக வென்றுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (2௦ டிசம்பர்)

1.       அண்டார்டிகாவில், சீனா தனது நான்காவது ஆராய்ச்சி நிலையம், தைஷன் (Taishan)  யை திறந்தது.

2.       Cabinet Committee on Economic Affairs (CCEA) அரசிற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரி படுக்கையில் இருந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றுவதற்கு Coal India Ltd (CIL)க்கு அனுமதி வழங்கியுள்ளது.

3.       கனரா வங்கி நியூயார்கில் தனது கிளையை திறக்க உரிமம் பெற்றது.

4.       சர்க்கரை தொழில் துறைக்கு 6600 கோடி ரூபாய் கடன் வழங்க Cabinet Committee on Economic Affairs (CCEA)  ஒப்புதல் அளித்துள்ளது.

5.       கிழக்கு அண்டார்டிகாவில் கிம்பர்லைட் பாறைகளில் வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6.       பால் வீதி யை ஆராய்ச்சி செய்ய பிரஞ்சு கயானாவில் இருந்து “கையா செயற்கைக்கோளை”( Gaia satellite) ஐரோப்பா ஏவியது.

7.       பினாக ஏவுகணையை (Pinaka rocketsபலாசோர் அருகே சாந்திப்பூர்  கடல் தளத்தில் இருந்து இந்தியாவெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது.

நடப்பு நிகழ்வுகள் (21 டிசம்பர்)

1.       இந்திய விஞ்ஞானிகள் நீரிழிவு நோய்க்கான இன்சுலின் “பில்” (Pill) யை உருவாக்கியுள்ளனர்.

2.       பைலின் புயல்(Cyclone Phailin) தாக்கத்தை திறம்பட கையண்டடற்காக ஒடிசா அரசை ஐக்கிய நாடுகள் சபைபாராட்டியுள்ளது.

3.       பொலிவியா நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் Tupak Katari விண்ணில் செலுத்தப்பட்டது.

4.       தேர்தல் ஆணையம் “ஆம் ஆத்மி கட்சியை” மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கியது.

5.       உஷா சங்வான்(Usha Sangwan), எல்ஐசியின் முதல் பெண் நிர்வாக இயக்குனரக நியமிக்கப்பட்டார்.

6.       அமைச்சரவை குழு ஆசியான் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.

7.       நான்காம் தலைமுறை போர் விமானம் LCA தேஜாஸ் இரண்டாம் செயல்பாடு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.

8.       PH பரேக் (PH Parekh) உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பு நிகழ்வுகள் (22 டிசம்பர்)

1.       இங்கிலாந்து வேகப்பந்து விச்சாளர் கிரேம் ஸ்வான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு பெறப்போவதாகஅறிவித்தார்.

2.       ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் பெப்சி நிறுவனத்தின் இந்தியாவின் மிக  பெரிய ஆலை அமையயுள்ளது.

3.       Abdiweli Sheikh Ahmed சோமாலிய நாட்டின் பிரதமராக அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (23 டிசம்பர்)

1.       அணு ஆயுதங்களை தங்கி சென்று தாக்கவல்ல அக்னி-III ஏவுகணை, ஒடிசா கடற்கரை அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

2.       நாசாவால் செவ்வாய்க்கு அனுப்பட்ட கிரியாசிட்டி ரோவரின் (rover Curiosity)மென்பொருள் மேம்பட்டப்படுள்ளது.

3.       அசாம் அரசு, தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் சமூகத்தினருக்கு 100 கோடி ரூபாய் தொகுப்பை தொகையை அறிவித்துள்ளது.

4.       மனிதனுக்கு முதல் முறையாக செயற்கை இதயம் டிசம்பர் 182013 அன்று பாரிஸ் நகரில் உள்ள Georges Pompidouமருத்துவமனை பொருத்தி வெற்றி கண்டுள்ளது.

5.       சவுதாரி சரண் சிங் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக டிசம்பர் 232013 அன்று நாடு முழுவதும் கிசான் திவஸ்(Kisan Diwas) அனுசரிக்கப்பட்டது.

6.       வர்த்தக தடைகளை குறைப்பதற்கு மற்றும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை கவனிப்பதற்கும், இந்தியா மற்றும் நேபால் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டன.

7.       சின்னம்மை தடுப்பூசி உருவாக்கிய Michiaki Takahashi  ஜப்பானில் உள்ள ஒசாகாவில்  23 டிசம்பர் 2013 அன்றுஇறந்தார்.

8.       டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட் வீழ்த்தி நான்காவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜாகிர் கான் பெற்றார்.

நடப்பு நிகழ்வுகள் (24 டிசம்பர்)

1.       மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியம் நேரடி வங்கிகணக்கில் செலுத்தும் முறை விரைவில் தொடங்கப்படுள்ளது.

2.       நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 52% தொட்டுவிட்டது என்று Credit Rating Information Services of India Limited 24டிசம்பர் 2013 அன்று கூறியுள்ளது இது வகுத்த இலக்கை விட 040% அதிகம் ஆகும்.

3.       மிகைல் கலாஷ்நிகோவ் (Mikhail Kalashnikov), ஏகே 47 துப்பாக்கியை கண்டுபிடித்தவர் 23 டிசம்பர் 2013 அன்று தனது 94 வது வயதில் இறந்தார்.

4.       தேசிய நுகர்வோர் உரிமை நாள் டிசம்பர் 24 ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

5.       ஹைதெராபாத் உயர் நீதிமன்றம், இரண்டு தெலுங்கு நடிகர்கள் (actor cum producer Mohan Babu and actor Brahmanandam )தங்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விருதுகளை தவறாக பயன்படுத்தியதற்காக அதனை திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஆணை இட்டுள்ளது.

6.       சித்தார்த் பிர்லா, Xpro இந்தியா லிமிடெட் தலைவர் Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) இன் தலைவராக பொறுப்பேற்க்குள்ளார்.

7.       வினோத் குமார் துக்கல், முன்னாள் உள்துறை செயலாளர் மணிப்பூர் ஆளுநரக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8.       தேசிய பேட்மிண்டன் சாம்பியன் ஒற்றையர் பிரிவில் சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பட்டம் வென்றனர்.

9.      British Safety Council for health and safety works at the airport என்ற அமைப்பு விமான நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை சிறப்பாக நிர்வகித்ததர்க்கு ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு(RGIA) Sword of Honour என்ற விருதை கொடுத்துள்ளது இந்த விருதை பெரும் முதல் இந்திய விமான நிலையம் இது ஆகும்.


நடப்பு நிகழ்வுகள் (25 டிசம்பர்)

1.       அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருது பெரும் 102 விஞ்ஞானிகளில்  இரண்டு அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானிகள் (Karunesh Ganguly & Hardeep Singh) பெயரையும் அறிவித்துள்ளார் ஜனாதிபதி பராக் ஒபாமா.

2.       துப்பாக்கி சுடும் வீரர் ரோஞ்சன் சோதி (ronjan sodhi), தில்லி நடைபெற்ற 57 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  தங்கம் வென்றார்.

3.       தென் ஆப்ரிக்கா வீரர் காலிஸ் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு தன் டெஸ்ட் போட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

4.       கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், எகிப்து அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கும், முஸ்லீம் சகோதரத்து ( Muslim brotherhood) அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

5.       பனாரஸ் இந்து பல்கலைகழகத்தை நிறுவிய பண்டித் மேடம் மோகன் மாளவியாவின் 152 வது பிறந்த நாள் 25 டிசம்பர் 2௦13 அன்று கொண்டாடப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் (26 டிசம்பர்)

1.       தீபிகா குமாரி 34 வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷி பட்டத்தை வென்றார்.

2.       62 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க ஆக்ஸிஸ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

3.       இந்தியா இஸ்ரேலிய பராக் ஏவுகணை கொள்முதல் செய்ய விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.

4.       இந்திய தடகள சம்மேளனம்(Athletics Federation of India ஊக்கமருந்து பயன்படுத்தியது காரணமாக ஆறு மாநிலங்கள் மற்றும் 14 விளையாட்டு வீரர்களை தடை செய்துள்ளது.

5.       அசோக் லவாசா, புதிய சிவில் விமான போக்குவரத்து செயலாளரரக நியமிக்கப்பட்டுள்ளார்.

6.       சிபிஐ மேலும் சுயாட்சி வழங்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் சிபிஐ இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் சட்டபிரிவின் அமைப்பை வைத்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (27 டிசம்பர்)

1.       அமைச்சரவை, எம்டிஎன்எல் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

2.       அரவிந்த் ரஞ்சன், மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (Central Industrial Security Forceபுதிய தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.

3.       JNசௌதிரி (JNChaudhary), தேசிய பாதுகாப்பு படையின் (National Security Guardபுதிய தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.

4.       இங்கிலாந்து 2030 ஆம் ஆண்டில் ஜெர்மனியை முந்தி ஐரோப்பாவின் மிக பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகும் என்று Centre for Economic and Business Research (CERB)  அறிக்கை அளித்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (28 டிசம்பர்)

1.       சீனா நாட்டின் ஒரு குழந்தை கொள்கை திட்டத்தில் சில விதிகளை தளர்த்தி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2.       மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் ஹைதெராபாத்தில் 26 டிசம்பர் 2013 அன்று “கார்டியன்” என்ற தனது புதியபாதுகாப்பு மென்பொருள் ஒன்றை ஆறுமுகம் செய்துள்ளது.

3.       முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) ஒரு பயங்கரவாத அமைப்பு என்று எகிப்து அறிவித்துள்ளது.

4.       இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority of Indiaசர்வதேச சிவில் விமான போக்குவரத்துஅமைப்பிடம் (International Civil Aviation Organization) “TRAINAIR PLUS “ என்ற அங்கீகார சான்றிதழ் மற்றும் உறுப்பினர்ஆவதற்கு கொடுக்கப்படும் உலோக வில்லையை(plaque) பெற்றுள்ளது.

5.       இந்தியா மற்றும் அமெரிக்க 2013 டிசம்பர் 27 ம் தேதி அன்று 101 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆறு சி 130J சூப்பர்ஹெர்குலஸ் விமானம் வாங்க, ஒப்பந்த செய்துகொண்டன.

6.       சீனாவின் Beidou நேவிகேசன் சிஸ்டம் இலவசமாக அதன் அண்டை நாடுகளுக்கு நேவிகேசன் சிஸ்டம் வழங்க முடிவுசெய்துள்ளது.

 நடப்பு நிகழ்வுகள் (29 டிசம்பர்)

1.       தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் 2012-13 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த மதிப்பீடு பெற்றுள்ளது.

2.       முன்னால் டென்னிஸ் வீரர் ஸ்டீபன் எட்பெர்க், ரோஜர் பெடரர் பயிற்சி அணியில் சேரயுள்ளார்.

நடப்பு நிகழ்வுகள் (30 டிசம்பர்)

1.       விஞ்ஞானிகள் சூப்பர்நோவாCassiopeia A வில் இருந்து முதல் முறையாக பாஸ்பரஸ்யை கண்டுபிடித்துள்ளனர்.

2.       ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கூட்டுறவு வங்கி சேவையின் நிர்வாக இயக்குனரக பிரதீப் குமார்நியமிக்கப்பட்டுள்ளார்.

3.       தமிழ்நாடு அரசு குடிசையில் வாழும் மக்களுக்கு இலவச CFL விளக்கு வழங்கும் திட்டத்தை தொடங்குயுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் (31 டிசம்பர்)

1.       ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார்க்கு ஹரியானா அரசு மல்யுத்த பயற்சி பள்ளி அமைக்க 8 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளது.

2.       அஷ்ரப் ஜெஹான், பாகிஸ்தான் தேசிய ஷாரியா நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான பதவி ஏற்றார்.

3.       தேவேந்திர குமார் பதக், எல்லை பாதுகாப்பு படையின் (BSF) சிறப்பு டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4.       சீனா பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்துள்ளது.

5.       8 வது Financial Stability Report (FSR) யை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளிட்டுள்ளது.

6.       இந்தோனேசிய அரசு உலகின் அரிய விலங்கான ஜாவா காண்டாமிருகங்களை பாதுகாக்க புதிய சரணாலயம்அமைக்க போவதாக அறிவித்துள்ளது.

7.       2014 ஆம் ஆண்டிற்க்கான சர்வதேச பெட்ரோலிய மாநாடு புது தில்லி நடைபெற்றது.

8.       அனுரா பூஷன் துபாய்க்கான இந்திய தூதரக ஜெனரலாக பொறுப்பேற்றனர்.

No comments:

Post a Comment

Please suggest your valuable comments here....